கொட்டித்தீர்த்த
மழைக்குப் பின் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் அறவே மழையில்லை. நிலத்தடி
நீர் வற்றிவிட்டது. மரங்கள் பெருமளவு வெட்டப்பட்டதால் நிழல், குளிர் இல்லா
நிலையில் வறட்சி, வெப்பம் இவற்றின் உச்சம்; கடுமை!
கோடைத் தொடக்கமே கொடுமையாக, கடுமையாக இருப்பதால், உச்சக்கட்ட கோடையின்போது தாங்கமுடியாத தகிப்பு கட்டாயம் இருக்கும். எனவே, இப்போதிருந்தே நாம் எச்சரிக்கையாக, பாதுகாப்பான சில செயல்பாடுகளில் இறங்க வேண்டியது கட்டாயம்.
பருத்தி ஆடை: குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கோடை முடியும் வரை பருத்தித் துணிகளை இறுக்கமின்றி தளர்வாக உடுத்த வேண்டும். மொத்தமான, செயற்கையான ஆடைகளை அறவே தவிர்க்க வேண்டும்.
தலைப்பாதுகாப்பு: தொப்பி அல்லது குடையால் கட்டாயம் தலையில் வெய்யில் தாக்காமல் காக்க வேண்டும். குழந்தைகளை காலை 9 மணிக்கு பின்பும் 5 மணிக்கு முன்பும் வெளியில் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். நேரடியாக சூரியச் சூடு தலையில் தாக்கினால் மூளைப் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.
குடிக்கும் பானம்: ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். மிகவும் குளிர்ந்த நீரைப் பருகக் கூடாது. பிரிட்ஜில் வைத்த நீரைக் கட்டாயம் பருகக் கூடாது. பனிக்கட்டி (அய்ஸ்) சேர்த்து நீர் அல்லது பானங்கள் பருகக் கூடாது. உடல் கொதிப்பேறி இருக்கும் நிலையில் அதிகக் குளிர்ச்சியாய் குடித்தால் நரம்பு பாதிக்கப்படும். சூடான கண்ணாடியில் குளிர்ந்த நீரை ஊற்றினால் கண்ணாடி வெடிக்கும். அதுபோல்தான் உடலும் பாதிக்கப்படும். எனவே, அதிகக் குளிர்ச்சியுடன் குடிக்கக் கூடாது.
நீர்மோர்: அதிகம் தண்ணீர் கலந்த மோரில் இஞ்சி, எலுமிச்சைச் சாறு, கருவேப்பிலை, கொத்தமல்லி கீரை கலந்து பருகுவது நல்லது.
சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் மோருடன் வெள்ளரிப் பிஞ்சு: வெள்ளரிப் பிஞ்சை சிறு துண்டுகளாக்கி அதை மோரில் போட்டு சிறிது உப்பு கலந்து நன்குக் கலக்கி நாள்தோறும் முற்பகல் 11.30 மணிக்கும், பிற்பகல் 4 மணிக்கும் மென்று சாப்பிட வேண்டும். இது சூடு தணிக்கவும், தாகம் தீர்க்கவும் உதவுவதோடு, நமது சிறுநீரகம் பாதிக்கப்படாமல் இருக்க பெரிதும் உதவும். சிறுநீர்க் கடுப்பு வராது. வெய்யிலில் சிறுநீரகம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. எனவே, இது கட்டாயம்.
உணவு: காரம், புளிப்பு, உப்பு, கொழுப்பு நிறைந்த உணவு கூடவே கூடாது. பழங்கள், கீரை, காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இளநீர்: இதற்கு இணையான பானம் எதுவும் இல்லை. தினம் ஒரு இளநீர் அல்லது நான்கு நுங்கு சாப்பிட வேண்டும். செயற்கைக் குளிர்பானங்கள்; பழச்சாறுகளை அறவே சாப்பிடக் கூடாது. அவை முழுக்க முழுக்க நலத்திற்குக் கேடானவை. நாகரிக வேட்கையில் இவற்றைப் பருகக் கூடாது.
மாதுளை: வெய்யிலுக்கு மிகவும் உகந்த பழம் மாதுளை. தினம் ஒரு மாதுளை எல்லோரும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
தர்பூசணி, கொமுட்டி பழங்கள்: இவை இரண்டும் ஒரே வகைதான். சுத்தமான கலப்படமில்லா தர்பூசணி வெய்யிலுக்கு மிகவும் ஏற்றது, மலிவானது. கட்டாயம் சாப்பிட வேண்டும்.
பானைநீர்: மண்பானை வாங்கி அதை மணல்மேட்டில் வைத்து பானையில் நீர் ஊற்றி குளிந்£ பின் அதைப் பருகுவது வெய்யிலுக்கு ஏற்றது.
சந்தனம்: உடலுக்கு மெல்லியதாக தூய சந்தனத்தைப் பூசிக் கொள்ளலாம்.
சோற்றுக் கற்றாழை: வெய்யிலுக்கு சோற்றுக் கற்றாழை அரிய உணவு. இது மேற்பூச்சிக்கும் மிகுந்த பயன்தரும்.
சோற்றுக் கற்றாழையை பிளந்து அதிலுள்ள சோற்றை எடுத்து, அதை 7 முறை அலசி அதனுடன் தேன் சேர்த்து உண்ண வேண்டும். இது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும். பெண்களுக்கு மிகவும் உகந்தது.
சிறுநீர்: கோடையில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வராது. அதனால் கழிக்காமல் இருப்பது தப்பு. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழிக்க வேண்டும்.
இயற்கை நிழல்: கோடையில் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பதைவிட தோப்பு, பூங்கா என்று இயற்கை நிழலில் இருப்பது உகந்தது. குறிப்பாக வேப்ப மரம், புங்க மரம், ஆலமரம், மாமரம் போன்றவற்றின் நிழல் உடலுக்கு மிகவும் ஏற்றது.
புளிய மரம், கருவேல் மரம், முருங்கை மரம் போன்றவற்றின் நிழலைத் தவிர்க்கவும்.
பதனீர்: பனையின் பாளையிலிருந்து கிடைக்கும் பதனீர் கோடைக்கும், உடலுக்கும் ஏற்றது. தூய்மையான பதனீர் என்பதை உறுதிசெய்து பருகவும்
ஜ¦னி வேண்டாம்: ஜீனியைத் தவிர்த்து வெல்லம் அல்லது பனைவெல்லத்தைப் பயன்படுத்த வேண்டும். ஜீனி உடல்நலத்திற்குக் கேடு பயக்கும். ஜீனியை எவ்வளவு தவிர்க்க முடியுமோ அவ்வளவு உடல் நலத்திற்கு நல்லது. வெல்லமும், பனைவெல்லமும், உடலுக்கு நலம் தந்து, இரும்புச் சத்தை ஏராளமாய் தரும். இனிப்புக்கு வெல்லத்தை மட்டுமே பயன்படுத்துங்கள். ஜீனி வேண்டாம்.
டீ, காபி வேண்டாம்: வெய்யில் நேரத்தில் டீ, காபி வேண்டாம். அப்படியே பருகினாலும் அதிக சூட்டில் பருக வேண்டாம்.
புகை வேண்டாம்: புகைப் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வெய்யில் காலத்தில் புகைப்பதைப் போன்ற கொடிய செயல் வேறு இல்லை.
இருமுறை குளிக்கவும்: பொதுவாக இருமுறை குளிப்பது நல்லது. கோடையில் கட்டாயம் குளிர்ந்த நீரில் இருமுறை குளிக்க வேண்டும்.
நீரை வீணாக்கக் கூடாது: கோடையில் தண்ணீர்ப் பஞ்சம் கடுமையாய் இருக்கும். எனவே, தண்ணீரைக் சிக்கனமாகப் பயன்படுத்தவும்.
அம்மையைத் தடுக்கும் வேம்பும் மஞ்சளும்: வெய்யில் காலத்தில் அம்மை நோய் வரும். எனவே, ஒருபிடி வேப்ப இலையுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நீர் ஊற்றி, நீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து 10 மில்லி அளவு அச்சாற்றைப் பருகினால் அம்மை வராது. வந்தாலும் விரைவில் குணமாகும்.
அம்மை வந்தால் இ¬ தினம் மூன்றுவேளை பருக வேண்டும். சாற்றின் அடியில் தங்கும் மஞ்சள் படிவை உடலில் பூசவேண்டும்.
பேயம்பழம் சாப்பிட வேண்டும்: அம்மைக்கு உகந்த பழம் பேயம் பழம். தவறாது தினம் நான்கு பழம் சாப்பிட வேண்டும்.
வெய்யிலில் விளையாடக் கூடாது: காலை 9 மணிக்கு பிறகும் மாலை நான்கரை மணிக்கு முன்பும் விளையாட வேண்டாம். இளைஞர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.
கம்புக் கூழ்: வெய்யில் காலத்திற்கு கம்புக் கூழ் மிகவும் ஏற்றது. சின்ன வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு கம்புக் கூழ் சாப்பிட்டால் சுவையும் சுகமும் ஏற்படும்.
இரவு மிகுந்த சோற்றில் நீர் ஊற்றி அதில் சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு காலையில் சோறு, நீர், வெங்காயம் மூன்றையும் சேர்த்து உண்டால் நாள் முழுக்க வெம்மையைத் தாங்கும், உடல் குளிர்ச்சியடையும்.
மணத்தக்காளி: உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியூட்டுவதில் மணத்தக்காளி சிறந்தது. எனவே, வாரம் மூன்று நாள் இதை உணவில் வேர்க்கவும்.
கீழாநெல்லி: மஞ்சள்காமாலை வருவதை இது தடுக்கும். எனவே, கீழாநெல்லி கீரையை கூட்டு செய்து இரண்டு உருண்டை சோற்றில் பிசைந்து வாரம் ஒருமுறை சாப்பிடவும்.
வெந்தயம்: ஒரு ஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து தினம் சாப்பிட்டால் உடலுக்குக் குளிர்ச்சி. சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

No comments:
Post a Comment