Total Pageviews

Saturday, December 8, 2018

பேரீச்சம் பழத்தின் மகத்துவங்கள் !

இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

தினமும் குறைந்தது 10 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

* பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும் புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிரறந்துள்ளது.

* பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

* பேரிச்சம் பழம் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் புருக்டோஸ் போன்றவை நிறைந்துள்ளன. அதிலும் தினமும் பேரிச்சம் பழத்தை பாலுடன் சேத்து உட்கொண்டு வந்தால், உடலின் சோம்பேறித்தனம் நீக்கப்பட்டு, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

* பேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இதனை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

* ஆராய்ச்சியாளர்கள், பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால், அதனை அன்றாடம் ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவதாக தெரிவித்துள்ளனர்.

* பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

* பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை இரத்த சோகை உள்ளவர்கள் உட்கொண்டு வருவது நல்லது.

* மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், பேரிச்சம் பழத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.

* பேரிச்சம் பழம் தாம்பத்யத்தில் நீண்ட சிறப்பாக செயல்பட உதவும். அதற்கு இரவில் படுக்கும் போது ஆட்டுப் பாலில் ஒரு கையளவு பேரிச்சம் பழத்தை ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பாலுடன் சேர்த்து அரைத்து, தேன் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும்.

* ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாவதற்கு பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் போதும். நிச்சயம் குண்டாகலாம். அதுமட்டுமின்றி, ஆல்கஹால் குடித்து உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பேரிச்சம் பழம் உதவும்.

பேரீச்சைப் பழத்தின் நன்மைகள்:

கண்பார்வை தெளிவடைய:

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு:

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆண்களுக்கு:
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.

சளி இருமலுக்கு:

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க:

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

பேரிச்சம் பழங்களையும் தேங்காயும் காலை உணவாகத் தொடர்ந்து உண்டு வந்தால் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடமிருக்காது. எல்லாவிதமான எலும்பு வலிகளையும் குறைக்கும். எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள்கூட தேங்காயுடன் பேரிச்சம்பழங்களைக் கலந்து உண்டு வந்தால் விரைவில் குணமடையும்.
பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

அருந்தமிழ் மருத்துவம் 500 !

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

மூளைக்கு வல்லாரை !
முடிவளர நீலிநெல்லி !
ஈளைக்கு முசுமுசுக்கை !
எலும்பிற்கு இளம்பிரண்டை !

பல்லுக்கு வேலாலன் !
பசிக்குசீ ரகமிஞ்சி !
கல்லீரலுக்கு கரிசாலை!
காமாலைக்கு கீழாநெல்லி!

கண்ணுக்கு நந்தியாவட்டை!
காதுக்கு சுக்குமருள் !
தொண்டைக்கு அக்கரகாரம்!
தோலுக்கு அருகுவேம்பு !

நரம்பிற்கு அமுக்குரான் !
நாசிக்கு நொச்சிதும்பை!
உரத்திற்கு முருங்கைப்பூ!
ஊதலுக்கு நீர்முள்ளி!

முகத்திற்கு சந்தனநெய்!
மூட்டுக்கு முடக்கறுத்தான்!
அகத்திற்கு மருதம்பட்டை!
அம்மைக்கு வேம்புமஞ்சள்!

உடலுக்கு எள்ளெண்ணை!
உணர்ச்சிக்கு நிலப்பனை!
குடலுக்கு ஆமணக்கு!
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே!

கருப்பைக்கு அசோகுபட்டை!
களைப்பிற்கு சீந்திலுப்பு!
குருதிக்கு அத்திப்பழம்!
குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை!
வெள்ளைக்கு கற்றாழை!
சிந்தைக்கு தாமரைப்பூ!
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை!

கக்குவானுக்கு வசம்புத்தூள்!
காய்ச்சலுக்கு நிலவேம்பு!
விக்கலுக்கு மயிலிறகு!
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி!

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்!
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்!
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ!
வெட்டைக்கு சிறுசெருப்படையே!

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை!
சீழ்காதுக்கு நிலவேம்பு!
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்!
நஞ்செதிர்க்க அவரிஎட்டி!

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்!
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்!
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்!
பெருவயிறுக்கு மூக்கிரட்டை!

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்!
கழிச்சலுக்கு தயிர்சுண்டை!
அக்கிக்கு வெண்பூசனை!
ஆண்மைக்கு பூனைக்காலி!

வெண்படைக்கு பூவரசு கார்போகி!
விதைநோயா கழற்சிவிதை!
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி!
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு!

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்!
கரும்படை வெட்பாலைசிரட்டை!
கால்சொறிக்குவெங்காரபனிநீர்!
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே!

உடல்பெருக்க உளுந்துஎள்ளு!
உளம்மயக்க கஞ்சாகள்ளு!
உடல்இளைக்க தேன்கொள்ளு!
உடல் மறக்க இலங்கநெய்யே!

அருந்தமிழர் வாழ்வியலில்!
அன்றாடம்சிறுபிணிக்கு!
அருமருந்தாய் வழங்கியதை!
அறிந்தவரை உரைத்தேனே!!

Wednesday, November 14, 2018

சந்தோசம் எங்கே? எதில் இருக்கிறது?

சந்தோஷம் எங்கே? எதில் இருக்கிறது?

மனித வாழ்வின் நோக்கமே சந்தோசமாக வாழ வேண்டும் என்பதே!

சந்தோஷம் எதில்இருக்கிறது, எங்கே இருக்கிறது ?

சந்தோஷம் என்பதே ஒரு மாயை !

இன்பம், துன்பம், சந்தோசம், துக்கம் போன்றவைகள் நமது மன நிலையை பொறுத்து தான் அமைகின்றது!

 சந்தோசம் என்பது ஆரோக்கியம்!

 சந்தோசம் என்பது அறிவு !

சந்தோசம் என்பது ஆற்றல் !

சந்தோசம் என்பது வீடு !

சந்தோசம் என்பது பொருள் !

சந்தோசம் என்பது அதிகாரம் !

சந்தோசம் என்பது அந்தஸ்த்து !

சந்தோசம் என்பது பணம் !

சந்தோசம் என்பது பதவி !

 சந்தோசம் என்பது நிம்மதி !

சந்தோசம் என்பது இவற்றில் சில அல்லது பல இருப்பதாக கருதினாலும்!

உண்மையான  சந்தோசம்  என்பது ஆரோக்கியமான உடல்நிலையுடன்  மன நிம்மதியாக இருப்பதுதான் !

நோய் வாய்பட்டு உடல் நலம் திரும்பப்பெறும் போது போது ஆரோக்கியம் சந்தோஷமாக தெரிகிறது!

உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும்போது வேறு எதிலோ சந்தோசம் இருப்பதாக தேடி அலைக்கிறோம் !

உண்மையில் இவைகள் தரும்  சந்தோஷம் தற்காலிகமானதே!
திலும் எல்லாவற்றிலும் சந்தோசம் அடைய திருப்தியான மனநிலையில் தான் தேவைப்படுகிறது!

ஒய்வு பெற்றவர்களை கேளுங்கள் அல்லது  வேலை தேடுபவர்களை கேளுங்கள் வேலை எவ்வளவு சந்தோஷம் தரும் என்று சொல்லுவார்கள் !

வேலையில் இருப்பவர்களை கேளுங்கள் வேலை துக்கத்தை தருவதாகவே சொல்லுவார்கள்!

அவ்வப்போது கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவிக்காமல்,

தன்னிடம் இல்லாத பொருளுக்காக வருந்தமடைவதே மனித பண்பாக மாறிவிட்டது!

தன்னிடம் இருப்பதை எண்ணி சந்தோசம் அடைபவனே சந்தோஷமான மனிதன்!

 பல்லுகுச்சி கூட பல்லில் பொருள் மாட்டிக்கொண்டு எடுக்கும் போது சந்தோஷத்தை தருகிறது!


ஒன்றை பெறுவதிலோ வைத்திருப்பதிலோ சந்தோசம் கிடைப்பதில்லை!

உண்மையில் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தான்  சந்தோசம் நிறைந்து உள்ளது. 

நீங்கள் உங்களையே சந்தோஷப்படுத்திகொள்ளும் வழிதான் அது!

எனவே சின்னசின்ன விஷயங்களில் எங்கே எப்போது கிடைத்தாலும் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவியுங்கள்! ஆராயாதீர்கள்!  சந்தோஷத்தை தள்ளிப்போடாதீர்கள் அப்புறம் சந்தோசம் என்ற ஓன்று உங்கள் வாழ்வில் வராமலேயே போயிவிடகூடும்!

நீங்கள் எண்ணுவதைவிட காலம் குறைவாகவே உள்ளது

நீங்கள் சந்தோஷமாக இல்லாமல் இருக்க ஏதோ ஒரு காரணத்தைத் தேடி அலையாதீர்கள் சந்தோசம் திருப்தியான மன நிலையில்தான் உள்ளது என்பதை உணருங்கள் எனவே என்றும் எப்போதும் சந்தோஷமா இருக்க முயற்சியுங்கள்!

மனதிற்கு பயிற்சி கொடுங்கள்!

நிம்மதியான வாழ்க்கைக்கு 20 வழிகள்!




நீங்கள் விரும்பக்கூடிய வாழ்க்கை கிடைக்கவில்லையென்றால், கிடைத்த வாழ்க்கையை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளுங்கள். 

அது, வாழ்க்கையில் மன நிம்மதியையும், அமைதியையும் ஏற்படுத்தும். கிடைத்த வாழ்க்கையை சரியான முறையில் பயன்படுத்த தவறும்போது, நிம்மதியை இழக்கக்கூடிய சூழல்கள் ஏற்படும்.

எந்த ஒரு பொருளையும் உருவாக்கிட சில வழிமுறைகள் உண்டு. அதேப்போல நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திட சில வழிமுறைகளை கடைப்பிடித்தால் நாமும் நிம்மதியாக வாழலாம். அதற்கு கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

1. மற்றவர்கள் எதிர்பார்ப்பதைவிட நிறைவாகவும், அன்புடனும் செய்திடுங்கள்.

2. நீங்கள் எழுதிய முதல் கவிதையை பாதுகாத்திடுங்கள்.

3. மற்றவர்களுக்காக வாழ்ந்திடாமல், உங்களுக்காக வாழ்ந்திடுங்கள்.

4. மற்றவர்களிடம் உண்மையான அன்புடன் பழகிடுங்கள்.

5. இருப்பதை கொண்டு திருப்தி கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

6. பிறருக்கு உதவி செய்யும் எண்ணத்தை அதிகப்படுத்துங்கள்.

7. நீங்கள் விரும்பியதை உங்களுடைய நண்பருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

8. உங்களை நேசித்துப் பழகுங்கள்.

9. அடுத்தவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு நீங்கள் சஞ்சலப்படாதீர்கள்.

10. உங்களுடைய இலக்கில் தெளிவாக இருங்கள். அதை அடைய எப்பொழுதும் முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

11. மலர்ந்த முகத்துடன் பேசுங்கள்.

12. எப்பொழுதும் நேர்மறையாக சிந்தித்துப் பழகுங்கள்.

13. கடந்த காலத்தை மறந்து, நிகழ் காலத்தில் வாழப் பழகுங்கள்.

14. நல்ல உடைகளை அணியுங்கள்.

15. கடினமான விஷயங்களை, இலகுவாக்கி செய்யுங்கள்.

16. எந்த ஒரு விஷயத்தையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்கள்.

17. சிறு சிறு தோல்விகளை படிப்பினையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

18. அடுத்தவர்களாக மாற நினைக்காதீர்கள்.

19. எக்காரணத்திற்காகவும் உங்களுடைய சுய மரியாதையை இழக்காதீர்கள்.

20. அன்பான சூழ்நிலையில் வாழ்ந்திடுங்கள்.

Wednesday, August 15, 2018

துளசியை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும்*


ஒரு தாவரத்தை உண்ணும்போது, அதில் நோய் நீக்கும் தன்மை இருந்தால், அதை மூலிகை என்று கூறுகிறோம். அம்மூலிகைகளில் உணவாக சமைத்து உண்டபிறகு மருந்தாகும் தாவரத்தை கீரை என்கிறோம். அதே போன்று சமைக்காமல் பச்சிலையாக மருந்தாகும் தாவரத்தை பச்சிலை மருந்து என்று குறிப்பிடுகிறோம்.

உண்ணாமல் தாவரத்தின் காற்றுபட்டால் நோய் நீங்கும் தாவரத்தை தெய்வ மூலிகை என்கிறோம். அப்படி எண்ணற்ற தாவரங்களின் காற்றுப்படுவதால் நோய் நீங்குவதோடு, அவை தரும் அதிகப்படியான உயிர்காற்றான பிராண வாயுவால் உயிரினங்கள் உயிர் வாழ முடிகிறது.

அத்தகைய தாவரங்களில் ஒன்றுதான் துளசி. இதன் காற்றுப்பட்டாலே நோய் நீங்கும். அதிகளவில் பிராணவாயுவை உண்டு பண்ணி தருவது துளசி.


இத்துளசியை வீடுகளில் வைத்து பெண்கள் அவற்றை சுற்றி வருவதை பார்க்க முடியும். அப்படி சுற்றி வரும்போது, பெண்களுக்கு அதிகளவு பிராணவாயு கிடைக்கிறது. இதனால் மூச்சுத் திணறல் உண்டாகாமலும், நோய் வராமலும் துளசி பாதுகாக்கிறது.

இது தமிழ், சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளில் துளசி என்றும், கன்னடத்தில் விஷ்ணு துளசி என்றும் அழைக்கப்படுகிறது. துளசியில், துளசி, கருந்துளசி, செந்துளசி, நாதுளசி என நான்கு வகை உண்டு. இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இதை அப்படியே சாப்பிடக்கூடாது.

துளசியில் இனி துளசி என்றால் 21 இலைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மிளகு சேர்த்து மைய அரைக்க வேண்டும். பிறகு வெள்ளைத்துணியில் வைத்து பிழிந்து இரண்டு அல்லது மூன்று துளிகள் மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வாரம் ஒரு நாள் தொடர்ந்து காலையில் கொடுத்தால் நுரையீரல் மற்றும் அது சம்பந்தமான நோய்கள் வராது.

துளசி இலையில் ஒன்பது மிளகு வைத்து அரைத்து மூன்று நாள் சாப்பிட்டால் பேய் சொறி என்கிற தோல் அலர்ஜியை போக்கும். இதே இலையில் ஐந்து மிளகு வைத்து அரைத்து பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தில் மூன்று, நான்கு, ஐந்தாவது நாட்களில் மூன்று நாள் சாப்பிட்டால் மாதகால வயிற்று வலியை போக்கும்.

இதையே திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையென்றால், மூன்று நாள் வீதம் மூன்று மாதங்களுக்கு கொடுத்தால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும். துளசியில் ஏழு மிளகு சேர்த்து நன்றாக அரைத்து சாறெடுத்து, அதை வெள்ளைத்துணியில் நனைத்து நீண்டநாள் ரணம், புண் ஆகியவற்றின் மீது தொடர்ந்து ஐந்து நாள் வைத்து வந்தால் புண் ஆறிவிடும்.

விஷக்கடிகளுக்கு ஒன்பது மிளகு வைத்து அரைத்து தினமும் காலை ஏழுநாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விஷம் முறியும். தோல் வெடிப்பு, தலையில் பொடுகு, சொறி, தலைப்புண், மீசை மீது ரணம், தாடிப்புண் போன்றவை சரியாகும். துளசியுடன், இரண்டு மிளகு அளவு புதினா உப்பு, ஐந்து மிளகு ஆகியவற்றை அரைத்து, மூன்று நாளைக்கு கொடுத்தால் பக்கவாதம், ஜன்னி, ஈர சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

மேலும் துளசியுடன் ஐந்து மிளகு, மூன்று மிளகு அளவு மஞ்சள் தூளும் சேர்ந்து அரைத்து மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் மூச்சு பயிற்சி (யோகாசனம்) போன்றவைகளுக்கு உகந்தது. நீர் உடல் குறையும். இதே துளசியுடன் மூன்று மிளகு, போதிய கற்கண்டுடன் அரைத்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

இப்படி துளசியின் மருத்துவ குணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதனால் தான் கோவில்களில் தீர்த்தத்துடன் துளசி உள்ளதோடு பல வீடுகளில் வணங்குவதற்குரியதாகவும் துளசி செடி விளங்குகிறது. ஆனால், துளசியை மட்டும் தனியாக உட்கொள்வதால் பக்கவிளைவுகள் ஏற்படும்.

நோய்கள் என்றால் என்ன?

நோய்கள் என்றால் என்ன?

நமது உடலில் இயற்கையாகவே 3 சக்திகள் உள்ளன.

இயங்கு சக்தி. -32 %

செரிமானசக்தி- 32 %

நோய் எதிர்ப்பு சக்தி - 36 %

காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால்,அந்த செரிமான சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% ஆக மாறி விடும்....மேலும் நாம் ஓய்விலிருந்தால்...இயங்கு சக்தியின் அளவான 32%... நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 % ஆக மாறி காய்ச்சல் விரைவில் குணமாகி விடும்.

இப்போ சொ
ல்லுங்க சாதாரண காய்ச்சலுக்கெல்லாம் ஆண்டிபயாடிக் வேணுமா?

நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்து விடும் அல்லது வெளியேற்றிவிடும். இந்த செயல் முறையின் போது (Process) நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்.

எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன?

நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை /கிருமிகளை தும்மல் மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச்செயல்முறை நிகழும் போது நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.

இதன்மூலம் நமது உடலுக்கு பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.

இவற்றை நாம் வியாதி என புரிந்துக் கொள்ளும் போது, ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும் சுரப்பியை வேலை செய்ய விடாமல் தடுத்துவிடுகிறோம்.

இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் / கிருமிகள் நம் சுவாசப் பாதையில் தங்கிவிடுகிறது.

இந்த சூழ்நிலையில் நமது உடலில் சைனஸ் (Sinus) என்னும் சுரப்பி, நிணநீர் (Lympathic Fluid) மூலம் நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில் ஈடுபடும். இந்த செயல்முறையின் போதுதான் நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running Nose) ஏற்படும். இதையும் வியாதி என புரிந்துகொள்ளும் நாம் அவற்றை தடுக்க மருந்துக்களை உட் கொள்கிறோம்.

இதனால் தான் மூக்கடைப்பு ஏற்பட்டு கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற சுரந்த நிணநீர் (Lympathic Fluid) நமது முகத்திற்குள் தேங்குகிறது.

இவற்றை தான் நமது உடல் கண்ணீர் மூலமும் வெளியேற்றும். இந்த நீரைத்தான் பலர் கண்களில் நீர் தானாகவே வடிகிறது என கூறுவார்கள்.
 
பல காலமாக தேங்கிய இந்த நீரானது
திட வடிவமாக (Solid) மாறுகிறது.

இதைத் தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis (Sinus Infection) என்று அழைக்கிறோம்.

இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க நமது உடலானது காய்ச்சல் செயல் முறையை நிகழ்த்தும். நாம் காய்ச்சலையும் வியாதி எனக்கருதி அதையும் தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid) மூலம் வெளியேற்ற முடியாதபோது நமது உடல் சளியின் (Mucus) மூலம் வெளியேற்ற முயற்சி செய்யும்.
 
இந்த சளியானது நமது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் உள்ள கழிவுகளை அதனோடு சேர்த்துக் கொண்டு நமது மூக்கின் மூலம் வெளியேறிவிடும். இந்த சளியையும் நாம் வியாதி எனக் கருதி மருந்துக்களை உட்கொண்டு தடுத்து விடுகிறோம். அந்த மருந்துகள் சளியை கட்டியாக மாற்றி நமது தொண்டையில் படியச்செய்யும்.
 
அவ்வாறு படியும் கழிவுகள் தான் நமக்கு வறட்டு இருமல் மற்றும் குறட்டை ஏற்பட அடிப்படை காரணங்கள்.

வறட்டு இருமலுக்கு நாம் சிரப் (Syrup) வடிவில் மருந்துக்களை உட் கொள்ளுவோம். அப்போது நமது தொண்டையில் படிந்த காய்ந்த சளியானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து நமது நுரையீரலில் (Lungs) படிந்துவிடும். இவ்வாறு நமது நுரையீரலின் சிற்றறைகள் அடைபடும் போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் தடை படும்.

இந்த நிலையை தான் மூச்சிறைப்பு (Short Breath / Wheezing) என்று அழைக்கிறோம்.

இதுவே பெருவாரியான சிற்றறை களில் அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் மிகக் குறைந்த அளவே இருக்கும்.

அப்போது இந்த மூச்சிறைப்பு அடிக்கடி ஏற்படும். இந்த நிலையை தான் ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.
 
பொதுவாக நாம் ஓடும்போது நம் உடலுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படும். அப்போது நாம் சுவாசம் முழுமையாக இல்லாமல் வேகமாக இருக்கும். இந்த நிலையில் குறைவான நேரத்தில் அதிக மூச்சுக் காற்றை சுவாசிப்போம் அது தான் மூச்சிறைப்பு. நாம் அமர்ந்து கொண்டு இருக்கும்போது உடலுக்கு அதிகமாக காற்றோட்டம் தேவைப்படும் நேரங்களில் குறைவான சிற்றறைகள் மட்டுமே திறந்திருக்கும் பட்சத்தில் இத்தகைய தொரு நிகழ்வு ஏற்படும்.

பெரும்பகுதியான சிற்றறைகள் கழிவு களால் மூடப்பட்டதே இதற்கு அடிப்படை காரணம். இதை தான் கழிவுகளின் தேக்கம் வியாதி; கழிவுகளின் வெளியேற்றல் குணம் என்று கூறுகிறோம்.

இப்போதும் ஒருவருக்கு ஏன் ஆஸ்துமா (Asthma) நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறியாமல் ஸ்டீராய்டு (Steroid) மருந்துக்களை கொண்டு இன்ஹேலர் (Inhaler) மற்றும் நேபுளேசர் (Nebulizer) வடிவில் தற்காலிக நிவாரணம் பெறுகிறோம். பல காலமாக தேங்கிய இத்தகைய கழிவுகள் திட வடிவம் (Solid State) பெறுகிறது.
 
இப்போதும் காய்ச்சல் மூலம் இவற்றை கரைக்க நமது உடலானது முயற்சி செய்யும், நாம் இந்த முறையும் காய்ச்சலை வியாதி எனக் கருதி. மருத்துகளை உட்கொண்டு அவற்றை தடுத்துவிடுகிறோம்.

பின்னர் தேங்கிய திடக் கழிவுகளுக்கு காசநோய் (T.B Tuberculosis) என பெயர் சூட்டுகிறோம். பின்னர். இதற்கும்நாம் மருந்துக்களை உட் கொள் கிறோம். அந்த திடக் கழிவுகளை கரைக்க முயற்சி மேற்கொள்ளும் போது வலி ஏற்படும். நமது நுரையீரலில் வலி ஏற்படுகிறது என்று பரிசோதனை மேற்கொள் வோம். அப்போதுபயாஸ்பி (Biospy) எடுத்து புற்றுநோயா (Cancer) என சோதிப்பார்கள். Biospy என்றால் அந்த திடக்கழிவில் இருந்து மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா என சரிபார்ப்பார்கள்.

கழிவின் தேக்கத்தில், எங்கு இருந்து ரத்த ஓட்டம் வரும்? எனவே இதை புற்றுநோய் கட்டி என்று கூறிவிடுவர். இது தான் நுரையீரல் புற்றுநோய் (Lungs Cancer) என்று அழைகப்படுகிறது.

எனவே நமது உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்து கொள்வதே ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!
 
"நம் கையில் இருக்கும் ஒரு பொருளை உலகில் வேறு எங்கு தேடினாலும் கிடைக்காது"
 
ஏனென்றால் அந்த பொருள்
 
இருக்கும் இடத்தை விட்டுவிட்டு இல்லாத இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக இன்றைய தினத்தில் நாம் நமது ஆரோக்கியத்தை ருத்துவ மனைகளில் தேடுகிறோம்.

நம் சுவாச பாதையில் தேங்கும் கழிவுகளை நம் உடம்பானது எவ்வாறு
வெளியேற்றும்?

# தும்மல், 

# மூக்கு ஒழுகுதல்,
 
# சளி,
 
# இருமல்
 
# காய்ச்சல் மூலமாக
 
வெளியேற்றும்.

இவற்றை நாம் வியாதி என கருதி அதை தடுக்க முயற்சிக்கும்போததான் இந்த கழிவுகள் தேங்கி இருக்கும் இடத்திலேயே நமது உடலால் கட்டியாக்கப்படும். பிறகு நமது உடலின் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்போது காய்ச்சல் என்கிற செயல்முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்த கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும் எரித்துவிடும்.

காய்ச்சலை ஏற்படுத்த போதுமான சக்தி இல்லாதபோது நமது உடலின் எஞ்சிய சக்தியை கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சி க்கும் போது அந்த இடத்தில் வலி ஏற்படும். சிலநேரம் நமது எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இல்லை யென்றால் நமது உடலின் இயக்க சக்தி தேவைப்படும். அப்போதுதான் தலை வலி ஏற்படும். தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம்.

அதற்குதான் தலைவலி ஏற்படுகிறது.

யாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு எடுக்கிறார் களோ அவர் களுக்கு ஒரு போதும் புற்றுநோய் வருவதில்லை.

யாரெல்லாம் காய்ச்சலுக்கு மருந்து களின்றி மற்றும் பசிக்க வில்லை என உணவின்றி ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர் களுக்கு Typoid, Jaundice, Chicken Guniya, Coma (விபத்துக்களால் ஏற்ப்படும் Coma அல்ல), புற்றுநோய் (Cancer), ரத்த புற்றுநோய் (Blood Cancer) போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதில்லை.

இவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக இருந்து விட்டு வியாதிகள் பெருகி விட்டது என கூறுகிறோம்.

நமது உடலின் அடிப்படையை கற்றுக் கொண்டு மருந்துகளின்றி ஆரோக்கிய மாக வாழ்வோம்.
 
🌸 நன்றி :    அகத்தியர் தாசன்

Tuesday, August 14, 2018

மதுரையில் இயங்கி வரும் முதியோர் இல்லங்கள்!




Old Age Homes Madurai Christian Seva Sangam Trust
kennet garden,

Alagapan nagar,
Paandiyan nagar

Madurai
Cell :098430 52242

Sri kaamakodi Mahalingam old Age Home
58, Hanumar Koil Padithurai Rd, 

Simmakal, 
Madurai, Tamil Nadu 625001
போன: 0452 262 0920.

Arulmigu Subramaniyaswamy Thirukovil old Age Home
Sannithi Street, 

Thiruparankundram, 
Madurai, Tamil Nadu 625005
போன: 099424 75476.

INBA ILLAM
முகவரி: 42, G.S.T. Road, Pasumalai, Madurai, Tamil Nadu 625004
போன: 0452 237 1311

ARAVIND OLD AGED HOME
246, Vasuki Nagar, 2nd street, 

Valluvar Colony , PNT Nagar Main Road
098941 18005.

ஆகாஷ் வயது கவனிப்பு இல்லம்
முதியோர் இல்லம்
2/428, Kadachanenthal to Othakadai Road,
 Kottagaimedu Main Rd
0452 242 4730

Rajaji Home For The Aged
முதியோர் இல்லம்
098421 33954

மதுரா கன்ன முதுமை வீட்டில் முதியோர் இல்லம்
6-3/23,moovendhar nagar,1ststreet,
viswanathapuram
098422 34035

Mahatma Old Age Home
முதியோர் கவனிப்பு
0452 267 9676

Monday, July 30, 2018

ஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள 8 யோசனைகள்!

  மீப காலமாகவே ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதற்கேற்ப, அது தொடர்பான மோசடி களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில்,  ஆன்லைன் பரிவர்த்தனையின்போது, விஷயம் தெரியாதவர்கள் மட்டுமல்ல, நன்கு விஷயம் தெரிந்தவர்கள்கூட மோசடியில் சிக்கிக்கொள்ளும் நிலைமையே தற்போது உருவாகியிக்கிறது. ஆன்லைன் மோசடிகளிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான எட்டு யோசனைகள் இங்கே...
பாதுகாப்பினை அதிகப்படுத்துங்கள்

 உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களில் பாதுகாப்பு அம்சங்களை அவ்வப்போது அப்டேட் செய்யுங்கள். வைரஸ்கள் மற்றும் மால்வேர் புரோகிராம்கள்மூலமாக மோசடிகள் நடப்பதைத் தடுக்க சிறந்த வழி உங்கள் கணினியின் அடிப்படைச் செயல் பாடுகள், இணையதள பிரவுசர்கள் மற்றும் செக்யூரிட்டி சாஃப்ட்வேர்கள் போன்றவற்றைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்டேட் செய்யுங்கள்.

சிறந்த ஆப்களைப் பயன்படுத்துங்கள்

ஆன்லைன் மற்றும் பேங்கிங் மோசடிகளைத் தடுக்கும் வகையிலான சிறந்த ஆப்களைப் பயன் படுத்துங்கள். இத்தகைய ஆப்கள், உங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் பயன்பாட்டை அனுமதிக்கவோ அல்லது அனுமதிக்காமல் தடுக்கவோ செய்யக் கூடியவை. மேலும், குறிப்பிட்ட தொகைக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளைத் தடுத்துவிடும்.

ஆன்லைன் வர்த்தகம், ஏ.டி.எம்-கள், பி.ஓ.எஸ் டெர்மினல்கள் அல்லது வெளிநாட்டுப் பரிவர்த்தனைகள் போன்றவற்றில் கார்டுகளைப் பயன்படுத்தும்போது, அதற்குரிய பயன்பாட்டு சேனல்களைக் கட்டுப்படுத்தும்.

இணையதளத்தைக் ஆராயுங்கள்

பிரபலமில்லாத இணைய தளங்களில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்வதைத் தவிருங்கள். நீங்கள் ஷாப்பிங் செய்யும் இணையதளம், ஒரு நிறுவனமாக நிறுவப்பட்டது தானா என்பதை அறிய, அந்த நிறுவனத்தின் பெயரை இணைய தளத்தில் ‘டைப்’ செய்து, அந்த நிறுவனத்தின் பெயர் வருகிறதா எனப் பாருங்கள்.

பொது வைஃபை... உஷாராக இருங்கள்

ரயில் நிலையங்கள், மால்கள், தங்கும் விடுதிகள் போன்ற இடங் களில் உள்ள பொதுவான வைஃபை இணைப்புகளைப் பயன்படுத்தும்போது மற்றவர்கள் உங்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், உங்கள் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போன்களில் உள்ளே நுழையவும் முடியும். எனவே, ஆன்லைன் மூலமாக நீங்கள் பணம் செலுத்தப் போகிறீர்கள் என்றால், பாதுகாப் பான தனிப்பட்ட இணையதள இணைப்பு மூலமாகச்  செய்யுங்கள்.
கண்காணிப்பு முக்கியம்

கிரெடிட் கார்டை கடை யிலோ,  உணவு விடுதியிலோ பயன்படுத்துகிறீர்கள் என்றால், கார்டிலுள்ள விவரங்களை மற்றவர்கள் அறிந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஸ்கிம்மர் கருவியைப் பயன்படுத்தி, கார்டில் உள்ள விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது என்பதால், உங்கள் கண்முன்பே ஸ்வைப் செய்யுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

வெளிநாட்டுப் பரிவர்த்தனை வேண்டாம்

வெளிநாட்டில் இருக்கும்போது மட்டுமே சர்வதேசப் பரிவர்த் தனைக்கான செயல்பாட்டை அனுமதியுங்கள். வெளிநாட்டுப் பரிவர்த்தனையில், அந்த கார்டு நமக்கு உரியதுதானா என்பதை உறுதி செய்யும் அடையாளச் சரிபார்ப்புத் தேவையில்லை என்பதால், மோசடிப் பேர்வழிகள் உங்கள் கார்டைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எளிதில் தவறாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். உங்கள் பெயர், கார்டு எண், காலாவதி தேதி மற்றும் சி.வி.வி எண் போன்ற கார்டு விவரங் களை ஹேக்கர்கள் பெற்று விட்டால், உங்கள் கார்டை அவர் கள் எளிதில் தவறாகப் பயன்படுத்த முடியும். எனவே, உங்கள் கார்டில் உள்ள சர்வதேசப் பரிவர்த்தனைக் கான செயல்பாட்டை  அனுமதிக்காதீர் கள். நெட்பேங்கிங் மூலம் இந்தச் செயல்பாட்டைத் தடுக்க முடியும்.

பிரைவசி பாலிசியைப் படியுங்கள்

பிரைவசி பாலிசியைக் (privacy policy) கவனமாகப் படியுங்கள். எந்தவொரு ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் முன்னரும் அந்த இணையதளத்தின் பிரைவசி பாலிசியைக் கவனமாகப் படியுங்கள். தாங்கள் சேகரிக்கும் தனிநபர்களின் தகவல்களை அந்தத் தளம் எவ்வாறு பாதுகாக் கிறது என்பது குறித்து அதன் கொள்கைகளில் சொல்லப் பட்டிருக்கும்.

தேவை, வலுவான பாஸ்வேர்ட்

வலுவான பாஸ்வேர்டை உருவாக்கிக்கொள்ளுங்கள். பாஸ்வேர்டு மாற்றும்போது அதனை கேப்பிட்டல் மற்றும் ஸ்மால் ஆகிய இருவகை எழுத்துகள், எண்கள், சிறப்பு எழுத்துகள் போன்றவற்றின் கலவையாக உருவாக்குங்கள்.

- பா.முகிலன்

Thanks to Nanayavikatan

விரல்களில் ஏற்பட்ட புண் - விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!



சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷

மேலும் விபரங்கள் கீழே.!
👇👇👇👇👇👇👇👇👇👇

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு மருத்துவாிடம் சென்றால்,

சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

காலில்
புண் இருந்தால் காலை துண்டித்து விடுவதும்,

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள்,

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.

🙌இதற்கு கண்கண்ட மருந்து🙌

ஆவாரம்_இலை:👌
👍👍👍👍👍👍

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிர்ந்தால் பலரின்
கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.!

Saturday, July 28, 2018

பெண்ணே!! கவனமாக இருப்பாயா...?


பெண்ணே!! பாவப்பட்ட பெண்ணே!!

கழிப்பறையில் கவனம்...!


குளியறையில் கவனம்...!
 

படுக்கையறையில் கவனம்...!

பள்ளியறையில் கவனம்...!


அலுவலகறையில் கவனம்...!
 

கோவில் கருவறையில் கவனம்...!
 

பேருந்து பயணத்தில் கவனம்...!
 

இரயில் பயணத்தில் கவனம்...!
 

பாலூட்டும் அறையில் கவனம்...!
 

மருத்துவறையிலும் கவனம்...!
 

ஆடை மாற்றும் அறையிலும் கவனம்...!
 

நீ பெண் என்று தெரிந்து கொண்டால்
 

தாயின் கருவறையிலும் கவனமாக இரு,
 

பெண்ணே நீ கடந்து போகும்
 

பாதையை கவனிப்பாயா...?
 

சில
 

காம வெறிநாய்களின் கண்களை
 

கண்காணித்து கொண்டு இருப்பாயா...?
 

பெண்ணின் கவனத்திற்க்கான பதிவு இல்லை...!
 

ஆணின் அவமானத்திற்க்கான பதிவு...!
 

அப்பான்னு நினைச்சேன்
 

அசிங்கமாய் தொட்டான்....!
 

சகோதரன்னு பழகினேன்
 

சங்கட படுத்தினான்......
 

மாமான்னு பேசினேன்
 

மட்டமாய் நடந்தான்......!
 

உறவுகள் அனைத்தும்
 

உறவாடவே அழைக்கின்றன.....!
 

பாதுகாப்பை தேடி
 

பள்ளிக்கு சென்றேன்.....!
 

ஆசிரியனும் அரவணைத்து
 

மறுக்காதே மதிப்பெண் குறையும் என்றான்.....!
 

நட்பு கரமொன்று நண்பனாய்
 

தலைகோதி தூங்கென்றான்.....!
 

மரத்த மனம் மருண்டு சுருண்டு
 

தூங்கையில் கைபேசியில் படமெடுத்தான்
 

அவனும் ஆண்தானே .....!
 

கதறி அழுது கடவுளிடம் சென்றேன்
 

ஆறுதலாய் தொட்டு தடவி
 

ஆண்டவன் துணையென்றான் பூசாரியான்..!
 

அலறி ஓடுகிறேன்..எங்கே போவேன்?
 

சமத்துவம் வந்ததென சத்தமாய் கூறுகின்றனர்....!
 

பெண்னை பெண்ணாக பார்க்காமல்
மனிதராய் பார்ப்பது எக்காலம்?


பாவிகளின் பாலியல் வன்முறை என்று ஓயுமோ??


#பாலியல் வன்முறைக்கு எதிராக எல்லாரும் இதை ஷேர் பண்ணுங்கள் நட்புகளே.....!

Thursday, July 12, 2018

முழங்கால் வலி-பிரண்டையால் குணமாகும்

"முழங்கால் வலி அதிகமாக இருக்குது"



கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள் எங்கம்மா ஏர் உழும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம்! அதையே இங்கு செய்தோம்.

பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை..

அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும். இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன்.

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்...

பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து..

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பை கவனிக்கவும் உலகிலேயே கடினமான பொருள் வைரம் தானே அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ........

இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்!

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு:

1) பச்சரிசி அதிகமானால்:-
இரத்த சோகை நோய் உண்டாகும்.

2) அச்சுவெல்லம் அதிகமானால்:-அஜீரணம் உண்டாகும்.

3) பலகாரம் அதிகமானால்:-
வயிற்று வலி ஏற்படும்.

4) இஞ்சி அதிகமானால்:-
மென் குரலும் இறுக்கமாகும்.

5) பழைய சோறு, கஞ்சி அதிகமானால்:-

வாய்வு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்.

6) தேங்காய் அதிகமானால்:
-
சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்.

7) மாங்காய் அதிகமானால்:-

வயிறு கட்டும், சளி வளரும், இடுப்புவலி வரும், பித்தம் அதிகமாகும்.

8) கோதுமையை பித்த உடம்புள்ளவர்கள் அதிகம் உண்டால்:-
வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்.

9) பாதாம் பருப்பு அதிகமானால்:-
வாய் சுவை மாறும், பித்தம் அதிகமாகும், வயிறு மந்தமாகும்.

10) முற்றிய முருங்கை அதிகம் சாப்பிட:-

வாய்வு, சளி ஏற்படும்.

11) எருமைப்பால் அதிகம் குடிக்க:-
கிட்னி கல், அறிவு மங்கும்.

12) மிளகு:-
உடம்பில் சக்தி இல்லாதவர்கள் அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.

13) மிளகாய் அதிகமானால்:-
வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.

14) காபி அதிகமானால்:-

கை நடுங்கும், பித்தம் அதிகமாகும், கண் எரியும், நெஞ்சு உலரும், ஆண்மை கெடும்.

15) டீ அதிகமானால்:-
உடல் நடுங்கும், கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்.

16) எலுமிச்சை அதிகமானால்:-
பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.

17) எள்ளு அதிகமானால்:-
பித்தம், செரியாமை உண்டாகும்.

18) உப்பு அதிகமானால்:-
எலும்பு உருக்கும், விந்தை குறைக்கும்!

19) வெங்காயம் அதிகமானால்:-
தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்.

20) குங்குமப்பூ அதிகமானால்:-
மதியழிக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தையின் உறுப்புகளை கோணலாக்கும்.

21) வெள்ளைப் பூண்டு அதிகமானால்:-
ரத்தம் கொதித்து பொங்கும், கரு அழிக்கும், குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்.
Photo

மனஅழுத்தம், உடல் சூடு பிரச்சினைகளுக்கு தீர்வு !




மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..!!! உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.


மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்…


வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.
மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.


மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.

தலைவலிக்கு 8 பாட்டி வைத்திய குறிப்புகள் :-




தலைவலி எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதிகமான மன அழுத்தம் காரணமாகவே பெரும்பாலும் தலைவலி ஏற்படுகிறது.

இருப்பினும் குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை, அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் தலைவலி ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தலைவலிக்கு பாட்டி வைத்தியம் :

* கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.

* வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும். தலைவலி தீரும்.

* கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

* கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

* 2 மிளகை எடுத்து அதை சிறிது தேங்காய் எண்ணெயை விட்டு நன்கு அரைத்து நெற்றியில் தடவி பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

* கடுகுத்தூள், அரிசி மாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்றுப் போட த‌லைவ‌லி குறையும்.

* புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

* டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...