பாதுகாப்பினை அதிகப்படுத்துங்கள்
உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களில் பாதுகாப்பு அம்சங்களை
அவ்வப்போது அப்டேட் செய்யுங்கள். வைரஸ்கள் மற்றும் மால்வேர்
புரோகிராம்கள்மூலமாக மோசடிகள் நடப்பதைத் தடுக்க சிறந்த வழி உங்கள்
கணினியின் அடிப்படைச் செயல் பாடுகள், இணையதள பிரவுசர்கள் மற்றும்
செக்யூரிட்டி சாஃப்ட்வேர்கள் போன்றவற்றைக் குறிப்பிட்ட கால இடைவெளியில்
அப்டேட் செய்யுங்கள்.
சிறந்த ஆப்களைப் பயன்படுத்துங்கள்
ஆன்லைன் மற்றும் பேங்கிங் மோசடிகளைத் தடுக்கும் வகையிலான சிறந்த ஆப்களைப்
பயன் படுத்துங்கள். இத்தகைய ஆப்கள், உங்களின் கிரெடிட் மற்றும் டெபிட்
கார்டுகளின் பயன்பாட்டை அனுமதிக்கவோ அல்லது அனுமதிக்காமல் தடுக்கவோ செய்யக்
கூடியவை. மேலும், குறிப்பிட்ட தொகைக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளைத்
தடுத்துவிடும்.
ஆன்லைன் வர்த்தகம், ஏ.டி.எம்-கள், பி.ஓ.எஸ் டெர்மினல்கள் அல்லது
வெளிநாட்டுப் பரிவர்த்தனைகள் போன்றவற்றில் கார்டுகளைப் பயன்படுத்தும்போது,
அதற்குரிய பயன்பாட்டு சேனல்களைக் கட்டுப்படுத்தும்.
இணையதளத்தைக் ஆராயுங்கள்
பிரபலமில்லாத இணைய தளங்களில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்வதைத் தவிருங்கள்.
நீங்கள் ஷாப்பிங் செய்யும் இணையதளம், ஒரு நிறுவனமாக நிறுவப்பட்டது தானா
என்பதை அறிய, அந்த நிறுவனத்தின் பெயரை இணைய தளத்தில் ‘டைப்’ செய்து, அந்த
நிறுவனத்தின் பெயர் வருகிறதா எனப் பாருங்கள்.
பொது வைஃபை... உஷாராக இருங்கள்
ரயில் நிலையங்கள், மால்கள், தங்கும் விடுதிகள் போன்ற இடங் களில் உள்ள
பொதுவான வைஃபை இணைப்புகளைப் பயன்படுத்தும்போது மற்றவர்கள் உங்களின்
நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், உங்கள் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்
போன்களில் உள்ளே நுழையவும் முடியும். எனவே, ஆன்லைன் மூலமாக நீங்கள் பணம்
செலுத்தப் போகிறீர்கள் என்றால், பாதுகாப் பான தனிப்பட்ட இணையதள இணைப்பு
மூலமாகச் செய்யுங்கள்.
கண்காணிப்பு முக்கியம்
கிரெடிட் கார்டை கடை யிலோ, உணவு விடுதியிலோ பயன்படுத்துகிறீர்கள் என்றால்,
கார்டிலுள்ள விவரங்களை மற்றவர்கள் அறிந்துகொள்ளாமல்
பார்த்துக்கொள்ளுங்கள். ஸ்கிம்மர் கருவியைப் பயன்படுத்தி, கார்டில் உள்ள
விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது என்பதால், உங்கள் கண்முன்பே ஸ்வைப்
செய்யுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
வெளிநாட்டுப் பரிவர்த்தனை வேண்டாம்
வெளிநாட்டில் இருக்கும்போது மட்டுமே சர்வதேசப் பரிவர்த் தனைக்கான
செயல்பாட்டை அனுமதியுங்கள். வெளிநாட்டுப் பரிவர்த்தனையில், அந்த கார்டு
நமக்கு உரியதுதானா என்பதை உறுதி செய்யும் அடையாளச் சரிபார்ப்புத்
தேவையில்லை என்பதால், மோசடிப் பேர்வழிகள் உங்கள் கார்டைத் தங்கள்
விருப்பத்திற்கு ஏற்ப எளிதில் தவறாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். உங்கள்
பெயர், கார்டு எண், காலாவதி தேதி மற்றும் சி.வி.வி எண் போன்ற கார்டு
விவரங் களை ஹேக்கர்கள் பெற்று விட்டால், உங்கள் கார்டை அவர் கள் எளிதில்
தவறாகப் பயன்படுத்த முடியும். எனவே, உங்கள் கார்டில் உள்ள சர்வதேசப்
பரிவர்த்தனைக் கான செயல்பாட்டை அனுமதிக்காதீர் கள். நெட்பேங்கிங் மூலம்
இந்தச் செயல்பாட்டைத் தடுக்க முடியும்.
பிரைவசி பாலிசியைப் படியுங்கள்
பிரைவசி பாலிசியைக் (privacy policy) கவனமாகப் படியுங்கள். எந்தவொரு
ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் முன்னரும் அந்த இணையதளத்தின் பிரைவசி
பாலிசியைக் கவனமாகப் படியுங்கள். தாங்கள் சேகரிக்கும் தனிநபர்களின்
தகவல்களை அந்தத் தளம் எவ்வாறு பாதுகாக் கிறது என்பது குறித்து அதன்
கொள்கைகளில் சொல்லப் பட்டிருக்கும்.
தேவை, வலுவான பாஸ்வேர்ட்
வலுவான பாஸ்வேர்டை உருவாக்கிக்கொள்ளுங்கள். பாஸ்வேர்டு மாற்றும்போது அதனை
கேப்பிட்டல் மற்றும் ஸ்மால் ஆகிய இருவகை எழுத்துகள், எண்கள், சிறப்பு
எழுத்துகள் போன்றவற்றின் கலவையாக உருவாக்குங்கள்.
- பா.முகிலன்
Thanks to Nanayavikatan
No comments:
Post a Comment