Total Pageviews

Saturday, September 28, 2019

மதுவினால் உண்டாகும் பிரச்னைகள்:

நம்மில் பலர் இன்பம் அனுபவிக்க  வேண்டும் என மதுபானம் அருந்துகின்றனர்!

உண்மையில் மது இன்பம் அல்ல ! துன்பம் ! துன்பமே! கட்டிங்க் அடிப்பவனுக்கு 4 மணி நேரத் துன்பம் !  குவாட்டர் அடிப்பனுக்கு 8 மணி நேரத் துன்பம் !

 ஆனால் சிலருக்கோ குடிப்பது தீவிர பிரச்னையாக மாறலாம் !

உண்மையில் சாராய மதுபானம், கஞ்சா மற்றும் ஹெராயினை விட அதிக தீங்கு விளைவிக்கும். மது ஒரு அமைதியூட்டி, அடிமைப்படுத்தும் தன்மையுடையது, விபத்து மற்றும் உடல்நலக்கோளாறுகளால் பல மருத்துவமனை சேர்க்கைகளுக்கு காரணமாகும்.

சாதாரணமாக மது அருந்த வேண்டும் என்றால் ஓன்றுக்கு மேற்ப்பட்ட நபர்கள்  ஒன்றினைதந்துதான் குடிக்க செல்லுகின்றனர். எனவே குடிப்பவருடன் சகவாசம் வேண்டாம். இலவசமாக மது கிடைத்தாலும் குடிக்க மாட்டேன் என மன உறுதியுடன் இருந்தால் நல்லது.போதையால் எற்படும் சிற்றின்பத்தை விரும்பாமல் இருப்பது நல்லது ! மது  - நாட்டிற்க்கும் வீட்டிற்க்கும், உடல், மனது, சிந்தனை, செயல்பாடு ஆகியவற்றிற்க்கு கேடாக உள்ளது.

மதுவினால் உண்டாகும் பிரச்னைகள்:

அளவுக்கு அதிகமாக குடிப்பது, தவறான இடத்தில் அல்லது தவறான நேரத்தில் குடிப்பது பல பிரச்னைகளுக்கு காரணமாகும். மது உங்களின் மதிப்பீடும் தன்மையை பாதிக்கும் ஆதலால் நீங்கள் இயல்பாக சிந்தனைகூட செய்யாத விசயங்களை செய்வீர்கள். மதுவினால் ஆபத்துகளை குறைவாக உணர்வீர்கள் ஆதலால் நீங்கள் எளிய இலக்காவீர்கள். நீங்கள் பெரும்பாலான சமயங்களில் சண்டை, வாதங்கள்,  பணப்பிரச்னைகள், குடும்ப துன்பங்கள் அல்லது அக்கணத்தில் உந்தப்பட்டு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவீ்ர்கள். மது வீடு, சாலை, நீர் நிலைகள் மற்றும் விளையாட்டு களங்களில் ஏற்படும் விபத்துகளுக்கு காரணமாகும்.

மதுவினால் உண்டாகும் உடல்நலக்கோளாறுகள்:

அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் தீவிர நீட்டிப்பு (Hangovers), வயிற்று வலி, இரத்த வாந்தி, மயக்கமடைதல் மற்றும் மரணம் நேரிடலாம். மிகவும் அதிகமாக நீண்ட காலம் குடிப்பதால் கல்லீரல் நோய் மற்றும் சில வகையான புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும். 

மதுவினால் உண்டாகும் மனநலக்கோளாறுகள்:

நாம் மதுபானத்தை சந்தோஷமாக இருப்பதற்காக குடிக்கிறோம் என்று நினைத்தாலும் மிகையான குடி மனச்சோர்வை கொண்டுவரக்கூடும். தற்கொலை செய்துகொள்ளும் பலருக்கு குடிப்பழக்கம் இருப்பதுண்டு. மது ஞாபகமறதி மற்றும் மூளை பாதிப்பை உண்டாக்கும். அது குரல் மற்றும் சத்தங்களை கேட்க வைக்கும் - இவ்வனுபவம்  மிகவும் இனிமையற்றதாகவும் விடுபட கடினமானதாகவும் இருக்கும்.

எச்சரிக்கை அறிகுறிகள்:

கீழே குறிப்பிட்டுள்ளவை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கும் சில எச்சரிக்கை அறிகுறிகளாகும்.

  • குடிக்காமல் இயல்பாக இருக்க இயலாதது அல்லது குடிக்காமல் ஒரு நாளை தொடங்க முடியாமல் இருத்தல்.
  •  
  • குடித்து முடித்த சில மணி நேரத்தில் வேர்வை, நடுக்கம் மற்றும் மனப்பதட்டம் ஏற்படுதல்.
  •  
  • அதிகமாக குடித்தாலும் போதை இல்லாமல் இருப்பது
  •  
  • அதே விளைவைப்பெற மேலும் மேலும் குடிக்க நேரிடும்
  •  
  • குடியை நிறுத்த முயன்றாலும் முடியாமல் போதல்
  •  
  • வேலை, குடும்பம் மற்றும் உறவுகள் குடியினால் பாதிக்கப்பட்டாலும் உங்கள் குடிப்பழக்கம் தொடரும்
  •  
  • உங்களுக்கு “நினைவக வெற்றிடங்கள்” (Memory blanks) ஏற்படும் அதனால் சில மணி நேரங்களுக்கு அல்லது நாட்களுக்கு என்ன நடந்தது என்று நினைவில் இருக்காது   

மதுவினால் வரும் பிரச்னைகளை கையாள்வது:

நீங்கள் உங்களுடைய அல்லது  உங்கள் நண்பரின் குடிப்பழக்கத்தைப் பற்றி கவலைப்பட்டால் உடனடியாக மாற்றங்களை செய்யவேண்டும். உடல்நலத்தை பாதிப்பதற்கு முன் மிக எளிதாக குடியை குறைத்து கொள்ளலாம், குடிப்பழக்கம் கைமீறிவிட்டால் சிரமமாகிவிடும்.

முதல் படி:

உங்கள் குடிப்பழக்கத்தை ஒரு நாட்குறிப்பில் குறியிடுங்கள் - நீங்களே உங்கள் குடியின் அளவைக் கண்டு வியந்து போவீர்கள் மற்றும் இது உங்கள் குடியை குறைக்க ஊக்குவிக்கும். நண்பரிடமோ அல்லது உறவினரிடமோ உங்கள் திட்டங்களைப்பற்றி பேசுவது உதவி செய்யும். பிறரிடம் பேசுவதற்கு வெட்கப்படாதீர்கள். மிகவும் உண்மையான நண்பர்கள் உதவ சந்தோஷப்படுவார்கள் - அவர்களும் சில நேரம் உங்களைப்பற்றி கவலை கொண்டிருப்பதை உணர்வீர்கள்.

உதவி பெறுவது:

உங்கள் குடிப்பழக்கத்தை மாற்றுவது கடினமாக இருந்தால் மருத்துவரிடம் பேச முயற்சி செய்யலாம் அல்லது உள்ளூர் மது அமைப்பிடமிருந்து ஆலோசனை பெறலாம். குடியை குறைக்க முயல்கையில் மிதமிஞ்சிய நடுக்கமோ, அமைதியற்ற நிலையோ குடிப்பழக்கத்தை நிறுத்த தடையானால் உங்கள் மருத்துவர் குறுகிய காலத்திற்கு சில மருந்தளித்து உதவமுடியும். இதற்கு பின்னும் குடிப்பழக்கத்தை மாற்றுவது சிரமமாக  இருந்தால் உங்களுக்கு சிறப்பு உதவி தேவைப்படும்.

பழக்கத்தை மாற்றுதல்:

நாம் அனைவரும் ஒரு பழக்கத்தை மாற்ற சிரமப்படுவோம். குறிப்பாக அப்பழக்கம் நம் வாழ்வின் ஒரு பெரும்பகுதியாய் இருக்கும் பொழுது. இந்த பிரச்னை தீர மூன்று வழிகள் உண்டு

  • பிரச்னை உள்ளது என்பதை உணர்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல்
  •  
  • பழக்கத்தை மாற்ற உதவி பெறுதல்
  •  
  • ஒருமுறை மாற்றங்கள் செய்ய தொடங்கியபின் அவற்றை தொடர்ந்து செய்தல்

குடிப்பவர் எவராயினும் அவருக்கு மது சார்ந்த பிரச்னைகள் உண்டாகலாம் - சிலர் எல்லாவற்றையும் இழக்க நேரிடும் - மது வீடற்ற நிலைக்கு முக்கிய காரணமாகும். சிலருக்கு வெறும் ஆதரவு மற்றும் பேசுவது மட்டுமே போதுமானாலும் மற்றவருக்கோ வேலைக்கு செல்ல, ஏதோ ஓரிடத்தில் வாழ மற்றும் உறவு முறைகளை தொடங்க  நீண்ட கால உதவி தேவைப்படும்.

குடிப்பழக்கத்தை கண்காணிப்பது மிகவும் கடின உழைப்பாயினும் இறுதியில் அது உங்கள் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் மாற்றங்களை உண்டு பண்ணி பலனளிக்கும்.

சுகாதாரம், தூய்மை பற்றிய விழிப்புணர்வு !

நமது நாட்டில் பெருகி வரும் சுகாதார சீர் கேட்டினால் நாம் நினைத்தே பார்த்திராத அளவுக்கு விதவிதமான நோய்கள் பரவி வருகின்றன.

பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், டெங்கு, மூளை காய்ச்சல், சிக்குன் குனியா என்று பல விதமான நோய்கள் படையெடுத்துள்ளன.

இவற்றில் சிக்குன் குனியா நோய் இப்போது இல்லை என்பது சற்று ஆறுதல் தரும் செய்தி. இருபது வருடங்களுக்கு முன்பு இந்த நோய் வேகமாகப் பரவி அநேகம் பேரை பலி வாங்கியதை அறிவோம்.

இவற்றை தவிர, என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத சில காய்ச்சல்களுக்கு 'மர்மக்காய்ச்சல்' என்று மருத்துவ உலகம் பெயரிட்டு விடுகிறது.

மேற்கண்ட நோய்கள் சிலவற்றுக்கு மருத்துவ உலகம் இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. இதனால் நோயின் தீவிரத்திற்கு ஆளாகுபவர்கள் தப்பிப் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இவ்வித நோய்கள் பெரும்பாலும் சிறுவர்களையும் வயதானவர்களையுமே தாக்குகின்றன. காரணம், இவர்கள் நோயின் தாக்கத்திற்கு ஈடு கொடுக்கக் கூடிய உடல் திறனும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டவர்களாக இல்லாததால் உயிரிழக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

பெரும்பாலும் மழைக்காலத்தில் மட்டுமே தோன்றக் கூடிய இந்நோய்கள், கடும் கோடையிலும் தோன்றுகின்றன.

மற்ற மாநிலங்கள் எப்படியோ, தமிழகத்தை பொருத்த வரை சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை என்கிற நிலையே உள்ளது. வரும் முன் காப்பதற்கான நடவடிக்கைகளோ, வந்த பின்பு முழு வீச்சில் களம் இறங்கி களையும் போக்கோ சுகாதாரத் துறையிடம் காணப்படுவதில்லை.

சமூக ஆர்வலர்களும், ஊடகங்களும் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனக் குரல் எழுப்பிய பின்னரே சுகாதாரத்துறை விழித்துக் கொள்கிறது. ஆனால் அதேசமயம் ஒட்டு மொத்தமாக சுகாதாரத் துறையையும் அரசையும் குறை சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சுகாதார சீர் கேட்டிற்கு மக்களாகிய நாமும் காரணமாகிறோம்.

பொது இடங்களில் சிறு நீர் கழிப்பது, எச்சில் உமிழ்வது, குப்பைகளை போடுவது போன்ற சுகாதாரச் சீர் கேடுகளை அன்றாடம் அரங்கேற்றி வருகிறோம்.

துர்நாற்றம் வீசாத பேருந்து நிலையங்களை பார்ப்பது அரிது. கழிப்பறை வசதி இருந்தும் அதை பயன்படுத்தாமல் பேருந்து நிலையத்தைச் சுற்றி, திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் ஆண்கள் அதிகம். போதிய கழிப்பறை வசதி இல்லை என்கிற குற்றச்சாட்டும், கழிப்பறைகள் சுத்தம் சுகாதாரத்துடன் இல்லை என்கிற கருத்தும் பரவலாக உள்ளது.

பாரதப் பிரதமரின் 'தூய்மை இந்தியா' திட்டத்தால் ஓரளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு வந்தாலும் பெரும்பாலான மக்களுக்கு இன்னும் அந்த உணர்வு வரவில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்கிற வேறுபாடு இல்லை. 
 people cleaning in building
இன்னும் சொல்லப்போனால் மெத்தப் படித்தவர்களிடையேதான் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லை எனலாம். அல்லது விழிப்புணர்வு இருந்தும் பொது இடங்களில் அசுத்தம் செய்வது பற்றிய குற்ற உணர்வு இல்லாமையும் மற்றும் ஒருவித அலட்சியப் போக்கும் இவர்களிடையே காணப்படுகிறது.

இதன் காரணமாக விதவிதமான நோய்களை நாமே வலிய வரவழைத்துக் கொள்கிறோம்.

நீர் நிலைகள், மழை நீர்க் கால்வாய்கள், வடிகால்கள் போன்றவற்றில் பிளாஸ்டிக் குப்பைகளை போடுவதால் மழைக் காலத்தில் அடைப்பு ஏற்பட்டு தேங்கும் நீரோடு கழிவு நீரும் கலந்து கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது.

இதேபோன்று கழிவு நீர் கால்வாய்களில் வீசி எறியும் பிளாஸ்டிக் குப்பைகள் கழிவு நீரை தடுத்து தேக்கத்தை ஏற்படுத்தி கொசு உற்பத்திக்கு இடம் கொடுக்கிறது.

திறந்த வெளியில் சிறு நீர் கழிப்பது நோய் பெருக காரணமாவதோடு சுற்றுச் சூழலுக்கும் ஊறு விளைவிக்கிறது.

'இங்கு சிறு நீர் கழிக்காதீர்கள்' என்று எச்சரிக்கை பலகை வைத்தும் மீறுபவர்கள் மீது அபராதம் விதித்ததாக சரித்திரமே இல்லை. குப்பையை எரிப்பதால் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா மட்டுமின்றி புற்று நோயும் வருவதற்கு வாய்ப்புண்டு என்று மருத்துவ உலகம் கூறுகிறது.

ஆனால் யார் இதைப் பற்றி கவலைப்படுகிறார்கள்? குப்பையை எரிப்பது சட்டப்படி குற்றம் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. சில இடங்களில் மாநகராட்சியே குப்பை கிடங்கை தீ மூட்டி எரித்து, வான் உயரத்திற்கு புகை மண்டலத்தை உருவாக்கி அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளுக்கும் பாதசாரி மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த பாதிப்பை உண்டாக்குகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அரசு நிர்வாகமே சுகாதாரச் சீர் கேடு விளைவித்தால் சமூகத்தில் எப்படி விழிப்புணர்வு வளரும்?

அடுத்து சாலையோர தின்பண்ட கடைகளும், விரைவு உணவகங்களும் புற்றீசல் போல் பெருகி வருகின்றன. இவற்றில் தயாரிக்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரம் பற்றி சரியாக அறியாமல் வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

woman in black pants sitting on white ladder சுத்தம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வும் அக்கறையும் இல்லாதுபோனால் அடுத்த தலைமுறைக்கு நாம் நோய்களைத்தான் கொடுத்து விட்டுப் போவோம்.

சுகாதாரத்தை நாம் வசிக்கும் இடத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். முதலில் நமது இருப்பிடத்தைச் சுற்றி குப்பை கூளங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சுகாதாரம், தூய்மை பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே வளர்ந்துவிட்டால் நோய்கள் வராமல் தற்காத்துக் கொள்வதோடு மருத்துவமனை பக்கம் செல்ல வேண்டிய அவசியமும் இருக்காது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அல்லவா!


Thanks to Dinamani.com

பில்லி சூனியம் என்றால் என்ன?

பில்லி சூனியம் என்றால் என்ன?

தீய சக்திகளின் துணையோடும் அமானுஷ்ய சக்திகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டும், சமூகத்திற்கு எதிரான, துன்பம் தரக்கூடிய செயல்களைச் செய்தல் எனலாம்.

பானமாடி என்றால் என்ன?
இயற்கைக்கு மாறான அமானுஷ்ய சக்தியுள்ள சிலரால், சமுதாயத்திலுள்ள மற்றவர்களைத் துன்பப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை.

சமுதாயத்தில் பாதிக்கப்படுபவர்கள்

  • சமுதாய ரீதியாக, பொருளாதார ரீதியாக, ஏழ்மை நிலையில் உள்ளோர், பெண்கள், ஆதிதிராவிடர், மலைவாழ் இனத்தவர் மற்றும் பின்தங்கிய வகுப்பினர்.
பானமாடி குறித்த அச்சத்திற்குக் காரணங்கள்
  • கலாச்சார நம்பிக்கை
  • சமுதாய நிலை
  • அடக்கப்படுதல் மற்றும் ஒடுக்கப்படுதல்
  • கல்வியறிவின்மை
  • அறியாமை
  • போதிய மருத்துவ வசதியின்மை
  • அரசியல் மற்றும் சமுதாயப்பகை
  • திருமண/தனிப்பட்ட பிரச்சனைகள்
  • உளவியல்
  • அமானுஷ்ய மற்றும் தீய சக்திகள் குறித்த நம்பிக்கை
  • மூட நம்பிக்கை
பானமாடி குறித்த நம்பிக்கைக்குக் காரணங்கள்
  • வறுமை 80 சதவீதம்
  • கல்வியறிவின்மை 80 சதவீதம்
  • அசைவின்மை 90 சதவீதம் (அதாவது முன்னேறிய இடங்களுக்குச் செல்லாது தன் கிராமத்திலேயே இருத்தல்)
  • ஆரோக்கியமின்மை 80 சதவீதம்
  • அடக்கப்படுதலும் ஒடுக்கப்படுதலும் 70 சதவீதம்
  • மூடநம்பிக்கைகள் மற்றும் மந்திரங்களின் மீதுள்ள நம்பிக்கை 95 சதவீதம்.
சூனியக்காரியாக அல்லது மாந்திரீகவாதியாக நம்பப்படுபவர் யார்?
  • அசாதாரணமான, வித்தியாசமான நடத்தையுள்ளவர்
  • கிராமத்திற்குப் புதியவர்
  • சமுதாயத்தில் அல்லது குடும்பத்தில் பகையுள்ளவர்கள்
  • மற்றவர்களுக்குப் புரியாமல் எதையாவது உச்சரித்துக் கொண்டே இருப்பவர்.

மாந்திரீகவாதி அல்லது சூனியக்காரர் என்று சந்தேகப்படுபவரை துன்புறுத்தும் முறைகள்

  • தனிப்பட்டவருக்கோ அல்லது குடும்பத்துக்கோ அபராதம் விதித்தல்
  • அடித்தல்
  • பற்களைப் பிடுங்குதல்
  • நாக்கு மற்றும் காதுகளைத் துண்டித்தல்
  • கை கால்களை முறித்தல்
  • அழகைச் சிதைத்தல்
  • சமுதாயத்தை விட்டு ஒதுக்கி வைத்தல்
  • இருப்பிடத்தையும் விளை நிலத்தையும் விட்டு பலவந்தமாக வெளியேற்றுதல்
  • கிராமத்தை விட்டு விரட்டப்படுதல்
  • அவர்களுடைய சொத்துக்களை ஆக்கரமித்தல்
  • பொய்யான குற்றச்சாட்டு
  • உறவினர்களைத் துன்புறுத்துதல்
  • உயிரோடு எரித்தல்
  • மனரீதியாகத் துன்புறுத்தல்
இச்சமுதாயக்கேட்டை சீராக்கும் வழிகள் அல்லது பானமாடி குறித்து விழிப்புணர்வு ஏற்பாடுகள்
  • உடல்நலம் பேணுதற்குரிய வசதிகளை கிராமப்புறங்களில் அதிகரித்தல்
  • நடமாடும் மருத்துவக் குழு
  • பானமாடி நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து உடனடி சிகிச்சை அளித்தல் மற்றும் பானமாடி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • மனநல மருத்துவர், மருத்துவ சமுதாய சேவகர்களை மண்டல தலைமையகத்தில் நியமித்தல்
  • சமுதாய, பொருளாதார மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள்
  • கிராமப்புறங்களில் தொடர்பு சாதனங்களை (தொலைதொடர்பு சாதனங்கள் மற்றும் போக்குவரத்து) அதிகப்படுத்துதல்
  • அரசு சாரா தொண்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்துதல்
  • கிராமப்புறங்களில் அதிக அளவில் பள்ளிகளை ஏற்படுத்துதல்
  • முறையான / முறைசாரா கல்வியளித்தல்
  • பானமாடிக்கு எதிரான பாடங்களைப் பள்ளிப்பாடங்களில் சேர்த்தல்
  • பானமாடிக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை ஏற்படுத்துதல்
  • பானமாடி குற்றங்களை மற்றவர் அறியும்படி செய்தல்
  • குற்றங்கள் செய்வோரைக் கடுமையாக தண்டித்தல்
  • விழிப்புணர்வு உண்டாக்க ஊடகங்களைப் பயன்படுத்துதல்
  • பானமாடி குறித்த நம்பிக்கைகளை வளர்க்கும் தொலைக்காட்சித் தொடர்களையும் திரைப்படங்களையும் தடைசெய்தல்
  • அறிவியல் சார்ந்த பயணங்கள் மற்றும் மேஜிக் நிகழ்ச்சிகளை ஊக்குவித்தல்
  • இளம் பெண்களுக்கும் பெண்களுக்கும் விழிப்புணர்வை உருவாக்குதல்
  • கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு
  • பானமாடியினால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்தல்

மூடநம்பிக்கைகளை நீக்குதலில் அரசின் பங்கு

  • விஞ்ஞான வளர்ச்சியை ஆதரித்தல்
  • மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல்
  • பானமாடிக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவித்தல்
  • உறுதியான நிலையினை அரசாங்கம் பின்பற்றுதல்

தொடர்புடைய மூலாதாரங்கள்

பானமாடி குறித்த நரசிம்மையா விசாரணைக்குழு ஏற்படுத்தப்பட்டது.

கர்நாடக சட்ட ஆலோசனைக் குழு, இந்தப் பிரச்சனையைக் குறித்து விசாரிக்க ஒரு குழுவினை உருவாக்கியது.


சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரான முனைவர் பி. இராமையா அவர்கள், பானமாடி குறித்த விசாரணைக் குழுவின் தலைவராக இருந்தார். அவர் சமர்ப்பித்த அறிக்கையில், பானமாடி, பில்லி, சூனியம் என்றெல்லாம் ஒன்றுமே இல்லை. நீண்டகால மூட நம்பிக்கைகளும், அச்சத்தையும், அழிவையும் தரக்கூடிய வதந்திகளுமே பில்லிசூனியம் குறித்த நம்பிக்கையை, பயத்தை, மக்களிடையே உருவாக்குகிறது என்று தெளிவாகக் கூறியுள்ளார்.


Thanks to: http://ta.vikaspedia.in

எலக்ட்ரிக் வாகனங்களும், பொதுவான சந்தேகங்களும்...

எலக்ட்ரிக் வாகனங்களும், பொதுவான சந்தேகங்களும்...

பேட்டரி வாகனங்கள் பற்றிய புரிதல், மக்களிடையே மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஆனால் அதுபற்றிய சந்தேகங்கள் மட்டும் ஏராளமாக இருக்கின்றன.

எதற்காக பேட்டரி வாகனங்களை வாங்க வேண்டும்?, அதை பெட்ரோல்-டீசல் வாகனங்களை போல பயன்படுத்த முடியுமா?, சார்ஜ் செய்வது சுலபமா?, பெட்ரோல்-டீசல் வாகனங்களை விட, எலக்ட்ரிக் வாகனங்கள் லாபமா?, இந்திய பொருளாதாரத்திலும், இளைய தலைமுறையினரின் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றங்களை கொண்டுவருமா?... போன்ற பல கேள்விகள் நம் மனதிலும் எழுவதுண்டு. அப்படி பொதுமக்கள் முணுமுணுக்கும் சந்தேக கேள்விகளுக்கு, ‘கூகுள்’ தேடலின் மூலம் விடை காண முயன்றிருக்கிறோம்.

* ஏன் மாறவேண்டும்?

‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ என்பது மிகமுக்கிய காரணமாக இருந்தாலும், பொருளாதார நெருக்கடியும், பேட்டரி வாகனங்களுக்கான தேவையை அதிகப்படுத்தியிருக்கிறது. கச்சா எண்ணெய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற-இறக்கங்கள், அதன் கொள்முதலில் இருக்கும் சர்வதேச சிக்கல்கள், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு என பெட்ரோல்-டீசலுக்கு ஏராளமான கெடுபிடிகள் உருவாகியிருப்பதால், இந்திய அரசாங்கம் பேட்டரி வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்க தொடங்கி இருக்கிறது. அதேசமயம், வெப்பமயமாதலை தவிர்க்கும் பார்முலாவாகவும், எலக்ட்ரிக் வாகனங்கள் கருதப்படுகின்றன.

* சாத்தியமா?

சாத்தியமாக்கவேண்டிய முயற்சிதான். ஏனெனில் இதை சீன மக்கள், சாத்தியமாக்கியிருக்கிறார்கள். அமெரிக்கர்களை விட, இருமடங்கு எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கெடுத்துள்ளனர். உலகளவில் அதிகளவிலான எலக்ட்ரிக் வாகனங்கள் உலாவருவதும் சீனாவில்தான். அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா, நார்வே, ஜப்பான், இங்கிலாந்து என எலக்ட்ரிக் வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியல் நீள்கிறது.

நாம் இன்றிலிருந்து தொடங்கினால் கூட, 2025-ம் ஆண்டில் எரிபொருளை புறக்கணிக்கும் நாடுகளின் பட்டியலில் இணைந்துவிடமுடியும்.

* வளரும் நாடான இந்தியாவிற்கு பொருந்துமா?

புதுமைகளை விரும்பும் இந்தியர்களும், எலக்ட்ரிக் வாகனங்கள் மீது ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியாவில் காட்சிப்படுத்தப்படும் பேட்டரி வாகனங்களையும், சந்தைப்படுத்தப்படும் வண்டிகளையும் ஆர்வமுடன் வாங்கி பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் புனே, டெல்லி ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ரிவோல்ட்’ எலக்ட்ரிக் பைக்கின் முன்பதிவு, தொடங்கிய சில மணிநேரங்களிலேயே முடிந்துவிட்டது.

இந்தியாவில் நிலவும் எரிபொருள் விலையேற்றமும், பேட்டரி வாகனங்கள் மீதான வரவேற்பை அதிகப் படுத்துகிறது. சமீபகாலமாக இந்தியாவில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதால், பேட்டரி வாகன திட்டம் விரைவிலேயே வெற்றி பெறும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

* மக்களுக்கு என்ன பயன்?

சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கைகளின்படி எலக்ட்ரிக் வாகனங்கள் பெட்ரோல்-டீசல் வண்டிகளை விட, அதிகளவில் ‘மைலேஜ்’ தருவது நிரூபணமாகி இருக்கிறது. அதேசமயம், பெட்ரோல்-டீசல் விலை மற்றும் மின்சார விலை, மைலேஜ் விஷயங்களை ஒப்பிட்டு பார்த்தால், எலக்ட்ரிக் வண்டிகள் லாபகரமானதாகவே தோன்றுகின்றன.

உதாரணத்திற்கு, பெட்ரோல் வாகனம் ஒன்று 5 லிட்டர் பெட்ரோலில், 100 கிலோமீட்டர் ஓடுகிறது என்றால், எலக்ட்ரிக் வாகனத்தில் 100 கிலோமீட்டர் மைலேஜ் பெற, 10 கிலோவாட்ஸ் (10 யூனிட்) மின்சாரமே போதுமானதாக இருக்கிறது. அப்படி என்றால், 5 லிட்டர் பெட்ரோல் விலையையும், 10 யூனிட் மின்சார விலையையும் ஒப்பிட்டு பார்த்தால், குறைந்தது இரண்டு மடங்கு லாபம் கிடைப்பது தெளிவாகிறது.

* இருமடங்கு லாபம் எப்படி சாத்தியமாகிறது?

மின்சார வாகனங்களில் மின்சாரம் என்பது மெக்கானிக்கல் ஆற்றலாக மாற்றப்படுகிறது. இங்கே, பேட்டரி, மோட்டார், பியூஸ் மற்றும் கண்டக்டர் போன்ற இடங்களில் சில ஆற்றல் வீணாகி நமக்கு 80 சதவீதம் மெக்கானிக்கல் எனர்ஜியாக கிடைக்கும்.

பெட்ரோல் வாகனங்களை எடுத்துக்கொண்டால் கெமிக்கல் எனர்ஜியில் இருந்து வெறும் 35 சதவீதம் மட்டுமே நமக்கு மெக்கானிக்கல் எனர்ஜியாகக் கிடைக்கிறது. அதனால்தான், எலக்ட்ரிக் வாகனங்களில் இருமடங்கு ‘மைலேஜ்’ சாத்தியமாகிறது.

* நடுவழியில் பேட்டரி தீர்ந்து போனால்?

இது கொஞ்சம் தலைவலியான பிரச்சினைதான். சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில், எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ள பெட்ரோல் பங்க் போன்று ஏராளமான சார்ஜிங் பாய்ண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் அங்கு இந்த பிரச்சினை குறைவு. ஆனால் பேட்டரி வாகன பயன்பாட்டில், இந்தியா வளர்ந்து வரும் நாடு என்பதால், இத்தகைய சார்ஜிங் பாய்ண்டுகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு, புனே போன்ற இடங்களில் சார்ஜிங் பாய்ண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

எலக்ட்ரிக் வாகனங்களும், பொதுவான சந்தேகங்களும்...அதேசமயம், பேட்டரி நடுவழியில் தீர்ந்து போனால், அதையும் சமாளிக்க சீனர்கள் மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுதான், ‘ஸ்டெப்னி பேட்டரி’. கார்களில் இருக்கும் ஸ்டெப்னி சக்கரங்களை போல, முழுவதும் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வைத்து கொள்ளும் பழக்கத்தையும் கடைப்பிடிக்கிறார்கள். மேலும் ‘ரோட் அசிஸ்ட்’ எனப்படும் சாலையோர வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அதாவது பேட்டரி வாகன நிறுவனங்களே, வண்டி நடுவழியில் நிற்கும் இடத்திற்கு சென்று, ஸ்டெப்னி பேட்டரிகளை வழங்கும் திட்டமும், அங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

* ‘மாசு கட்டுப்பாடு’ உண்மைதானா?

அமெரிக்க அரசு நடத்திய ஆய்வில் மின்சார கார்களுக்கு மின்சாரம் தயாரிக்கும்போது உருவாகும் கார்பன் டை ஆக்சைடு, கச்சா எண்ணெயில் இருந்து பெட்ரோல்-டீசல் எடுத்துப் பயன்படுத்தும் ஐ.சி. என்ஜின் கார்களைவிடக் குறைவாகவே இருப்பதாகக் கூறியுள்ளது. அதனால் மாசு குறைக்கப்படுகிறது. இதன்மூலம் ஓசோன் படலத்தின் ஆயுள் காலத்தையும், பூமியில் நிலவும் ஒழுங்கற்ற வெப்பநிலையையும் கட்டுப்படுத்த முடியும். மேலும் பூமியின் பசுமையையும், தக்கவைத்து கொள்ளமுடியும்.

* பொறியியல் மாணவர்களுக்கு என்ன பயன்?

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் போன்ற துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கும், பட்டயப்படிப்புகளை முடித்தவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் பிரகாசமாகின்றன.

பேட்டரி தயாரிப்பு, பேட்டரி வாகன தயாரிப்பு, திட்டமிடல், உதிரி பாக தயாரிப்பு, தொழிற்சாலை பணிகள் வாயிலாக ஆட்டோமொபைல் தொழில்துறை மீண்டும் புத்துணர்ச்சி பெற வாய்ப்பிருக்கிறது.

டெஸ்லா, லெக்சஸ்... போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும், இந்தியாவில் சந்தை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதால், பொறியியல் மாணவர்கள், ஒருசில கூடுதல் பயிற்சியுடன் வேலைவாய்ப்பை பெறலாம்.



வீட்டிலேயே சார்ஜ் போடலாம்

எலக்ட்ரிக் பைக்குகளை பொறுத்தவரையில், அதை நம் வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்ளலாம். அதற்கான வசதிகளையும், ஏற்பாடுகளையும் எலக்ட்ரிக் பைக் நிறுவனங்களே ஏற்படுத்தி கொடுக்க திட்டமிட்டிருக்கின்றன.

நிறுவனங்களை பொறுத்து, 4 மணிநேரம், 6 மணிநேரம், 8 மணிநேரம்... என சார்ஜ் செய்யும் நேரம் மாறுபடுகின்றன. இரவு தூங்கும் நேரத்தில் சார்ஜ் செய்தால், காலை வேலைக்கு செல்ல எலக்ட்ரிக் பைக் தயாராகிவிடும். அதேசமயம் எலக்ட்ரிக் கார்களுக்கு, சோலார் வசதியுடன் கூடிய பார்க்கிங் வசதிகளும் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. அதனால் கார்களை பார்க்கிங்கில் நிறுத்தும் போதெல்லாம், சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம்.

Thanks to dailythanthi.com

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...