Total Pageviews

Monday, February 24, 2020

மனித மனம் எதை விரும்புகிறது ?

மனித மனம் எதை விரும்புகிறது ?

*‘உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எதை முதலில் சொல்லட்டும்’ என்றான் மகன்*.

*‘நல்ல செய்தியை முதலில் சொல்லு’ – அம்மா*

*‘உன் பொண்ணுகிட்ட அடிக்கடி சொல்லுவியே,*

*'எப்படியாவது தனிக்குடித்தனம்' போயிடுன்னு’–*

*அதே மாதிரி தனிக்குடித்தனம் போயிட்டாளாம்*.

*‘
மகிழ்ச்சி ! ரொம்ப மகிழ்ச்சி ! .

*இப்ப தான் மனச்சுமை குறைஞ்சது! 

ஏதோ கெட்ட செய்தினு சொன்னியே, அது என்ன?’*

*‘நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போறதுன்னு முடிவு எடுத்திட்டோம்’*

*அம்மாவிற்கு அதிர்ச்சி !

*மனச் சுமை கூடியது. முகம் இறுகியது. நடந்தது ஒரே வகை சம்பவம். ஆனால் மனம் ஒன்றை விரும்புகிறது. மற்றதை சுமையாக பார்க்கிறது*.

*1. மனிதனை ஆட்டுவிப்பது மற்றவர்களோ சம்பவங்களோ என்பதை விட அவரவர் மனமே என்பது தான். தனக்கொரு நியதி; பிறருக்கு வேறு நியதி! – என்ற மனநிலையே. மன அழுத்தத்தின் அடிப்படை நடுநிலை மனமே மகிழ்ச்சியைத் தரும்*.

*2. மனிதநேயம்: பிறரையும் தன்னைப் போல நேசிப்பதே மனித நேயம். பிறர் துன்பத்தின் பங்கு கொண்டு பகிர்ந்து கொள்வது மனதை வளப் படுத்தும்*.

*3. கோப உணர்வு மன அழுத்தத்தை உண்டாக்கும். கோபத்தினால் மனக் குழப்பமும், தவறான முடிவுகளும், அதைத் தொடர்ந்து இழப்புகளும் ஏற்படும். கோபத்தின் போது உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப் படுகின்றன. கோபத்தை வெல்வதே மன அழுத்தத்தை வெல்லும் வழி*.

*4. தாழ்வு மனப்பான்மை வந்து விட்டால் மனிதனின் வாழ்க்கையும் தாழ்ந்து விடும். ஒவ்வொரு மனிதனுக்கு தனித் தன்மை உண்டு. யாரும் யாருக்கும் தாழ்ந்தவரல்ல. ஒருவரின் உடந்தையில்லாமல் அவரை யாரும் தாழ்த்த முடியாது. தாழ்ந்தவன் என்று மனம் ஏற்கும் வகையில் தாழ்வு உண்டாகாது*.

*5. பிரச்சனைகள் வாழ்வின் அங்கம். பிரச்சனை இல்லா வாழ்க்கை வெறுமனான வாழ்க்கையாகி விடும். பிரச்சினைகளை எதிர்கொள்வதும் ஏற்றுக் கொள்வதும், சமாளிப்பதும் மன வலிமையைத் தரும்*.

*6.பொறுமை இல்லாதவர்கள் எளிதில் மன அழுத்தம் அடைவர். பொறுமையுடன் பேசுகின்ற, செயல் படுகின்ற, மனநிலை உண்டாகி விட்டால் பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விடும்*.

*7. “நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் என்றோ எனக்கு சித்தபிரமை பிடித்திருக்கும்” என்றார் காந்தி. கலகலவென வாய்விட்டு சிரித்தால் மனம் மென்மையாகும்*.

*8. மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று இணைபிரியாத்து. மனம் வளமானால் உடல் வளமாகும். உடல் வளமானால் மனம் வளமாகும்*.

*9. உழைப்பு, ஓய்வு, உறக்கம், உணவு போன்ற அனைத்தும் சரியான அளவில் இருந்தால் மன அழுத்தம் வராது*.

*10. வேலைகளை தாமதப்படுத்துதல், பிரச்சனைகளை அதிகமாக்கி மன அழுத்தத்தை உண்டாக்கும். அவ்வப் போது செயல்படுகின்ற மனநிலை மகிழ்ச்சியை பெருக்கும்*.

*11. பய உணர்வுகளை பலருடைய மன அழுத்தத்தின் காரணம். நாம் பயப்படு கின்ற பெரும்பாலான அம்சங்கள் நடப்பதில்லை. பயத்தை எதிர் கொள்வதே அதை வெல்ல உதவும்*.

*12. மனதில் ஒருநாளைக்கு 50 ஆயிரம் வரை சிந்தனைகள் உண்டாகும். அவற்றை எந்த அளவிற்கு குறைத்து கொள்கிறோமோ அதற்கேற்ப மன அமைதி கிடைக்கும். ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டும் கவனம் செலுத்துதல் மனதை ஒரு முகப்படுத்தும் வழி*.

*13. பிறரைப் பற்றிய வெறுப்பான மனநிலையே பலரை மன அழுத்தத் திற்கு ஆளாக்குகின்றன. ஒரே கருவில் உருவாகிய இரட்டை குழந்தை களுக்கு கூட ஒருமித்த கருத்துதான் இருக்கும் என்பது சாத்தியமில்லை. ஆகையால், மனிதனுக்கு மனிதன் விருப்பு வெறுப்புகள் இருப்பது நியதி. அதை ஏற்றுக் கொண்டு அவரவரை அவரவர் மனவீட்டில் வாழ விடு வதே சிறந்த அணுகுமுறை*.

*14. கடமையை சரியாக செய்பவருக்கு மன அழுத்தம் குறைவு*.

*15. சரியான நேர நிர்வாகம் இல்லாதவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள். எது முக்கியம், எது அவசரம் என்பதை அறிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல் பட்டால் சிறந்த முறையில் நிர்வாகம் செய்ய முடியும்*.

*மன உளைச்சல் அடைந்தவர்கள் அதற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகளை ஆய்ந்து செய்தல் அவசியம்*.
(ச.க.ம.)

*16. நோய்கள் வரக் கூடாது என்பது நம் விருப்பம். ஆனால் நோய்களுக்கு நம் மீது விருப்பமுண்டு. ஆகவே நோய் வராமல் தடுக்கும் வழிகளை கடைபிடித்து, அப்படியே நோய் வந்து விட்டால், கலங்கி விடாமல் அதை குணப்படுத்தும் வழிகளில் இறங்கி விட வேண்டும்*.

*17. நல்ல புத்தகம் நல்ல நண்பனை விடவும் உயர்ந்தது. நல்ல நூல்களை படிப்பதன் மூலம் அறிந்திராத பல விசயங்களை அறிந்து மகிழ்வுடன் வாழ முடியும்*.
*வாழ்வியல் நூல்கள் மன அழுத்தத்தை வெல்ல உதவும்*.

*18. உடற்பயிற்சி ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. நாள் தோறும் தவறாது 30 நிமிடங்களாவது உடற் பயிற்சி செய்தால் எண்டார்பின் என்ற ஹோர்மோன் சுரந்து இரத்தத்தில் கலந்து உடலின் ஆற்றலைப் பெருக்கும்*.

*19. யோகாசனம்: தினமும் சுமார் 30 நிமிடங்கள் செய்கின்ற பிராணயாமம் உள்ளிட்ட யோக பயிற்சிகள் சுவாசத்தை சீராக்குவது மட்டுமல்லாமல் இதயத் துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் உடலின் எல்லா உறுப்புகளையும் சீராக செயல் பட உதவும்*.

*20. மனதின் தீய சிந்தனைகள், பல தீய சூழ்நிலைகள், பிற மனிதர்களின் தவறான தாக்கங்கள் மன அமைதியை குறைக்கும். சுமார் 15 நிமிடங்களுக்கு செய்கின்ற தியானம் மனதை சுத்தப் படுத்த உதவும். மனத்தினை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள் வோம். இன்பம் துன்பம் ஆகியவற்றை சரிசமமாக உணர்ந்து செயல் படுவோம்*.

*மன அமைதியுடன் வாழப் பழகிக் கொள்வோம்*.

*பொறுமையைவிட மேலான தவ முமில்லை*

*திருப்தியை விட மேலான இன்பமு மில்லை*

*இரக்கத்தை விட உயர்ந்த அறமு மில்லை*

*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*
  
*முக மலர்ச்சி யோடும், நம்பிக்கை யுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*  

2 comments:

  1. நல்ல பதிவு. எல்லா சிந்தனைகளும் அருமை. முதல் வருகை தொடர் வருகையாகட்டும்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஏழு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது மனித மனம் எதை விரும்புகிறது ? பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  2. பின்பற்றப்படவேண்டிய அருமையான கருத்துகள்.

    ReplyDelete

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...