Total Pageviews

Tuesday, February 25, 2020

குறைந்த உழைப்பு அதிக ஊதியம் ! எங்கே செல்கிறார்கள் இளைஞர்கள்? எப்படி உள்ளது இளைஞர் சமூகம்?

குறைந்த உழைப்பு அதிக ஊதியம் !  எங்கே செல்கிறார்கள் இளைஞர்கள்? எப்படி உள்ளது இளைஞர் சமூகம்?

இன்றைய இளைஞர்கள் மிக திறமைசாலிகள். இலகுவாக புரிந்து கொள்ளும் திறமை படைத்தவர்கள். குறைந்த உழைப்பு அதிக ஊதியம் ! பெறுகிறார்கள்! புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள் ! புரியாததை புரியவில்லை என்று தயங்காமல் சொல்லக்கூடியவர்கள் !

கல்வியில் நிரம்ப முன்னேறியுள்ளார்கள். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்து விட்டதால் உலகில் பல்வேறு நாடுகளில் பணி செய்கிறார்கள். மாறுபட்ட சூழலில் வாழ்வதை சிரமமாக நினைப்பதில்லை.பழகி் கொள்கிறார்கள். அவர்களின் ஆற்றல் அளப்பரியது. நிறைய திறமைகள். கடின உழைப்புக்கும் தயாராக உள்ளார்கள்.ஆண்களும் பெண்களும் இவற்றில் சரிசமமாக உள்ளனர். இவையெல்லாம் நமது இளைஞர்கள் பற்றிய நல்ல செய்திகள்.

 கெட்ட செய்திகளும் உண்டு.

புகை பழக்கம், போதை பழக்கம் உள்ளவர்கள் அதிகரிக்கும் அபாயம் தெரிகிறது!

செல்போன் மோகம் அதிகரித்ததால் தடம்புரண்டு போகும் அவல நிலை!

    உடல் ஆரோக்கியம் பற்றி அக்கறை இல்லை!

    விளையாட்டில் ஆர்வம் இல்லை!

விளையாட்டுக் குழுக்கள் இல்லை. விளையாட்டுப் போட்டிகளும் இல்லை!

 சுயநலம் பெருகி விட்டது!

நிறைய இளைஞர்கள் குடிக்கிறார்கள் என்ற செய்தி தினம் தினம் வந்து கொண்டே உள்ளது!

சுற்று சூழலும் அதற்கு முக்கிய காரணம். முன்பெல்லாம், டீ குடிக்க வச்சிக்கோ என்று செலவுக்கு கொடுப்பார்கள். இப்போது அது கட்டிங்க்கு என்று மாறி கொண்டுள்ளது. மக்களிடத்தில் இறைவனை பற்றிய அச்சம் இருக்கிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது. வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒழுங்கு முறைகள் ஒழுக்கத்துடன் கூடிய கலாச்சார விழுமியங்கள் காலாவதியாகிவிடுமோ?

இருபது ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது சூழல்?

இளைஞர்களிடையே கல்வி கற்கும் ஆர்வம் உருவாகிக்கொண்டிருந்தது.. என்றாலும் பட்டதாரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.பத்தாம் வகுப்பு படித்து விட்டால் பயணம் போய்விடுவார்கள்.
 
திறமைகளும் சுமார்தான்.. தயங்கி தயங்கி பேசுவார்கள்..தொழில்நுட்ப அறிவு மிக குறைவு.. ஆனாலும் நல்லவர்கள் நிறைய இருந்தார்கள். தவறு செய்ய பயப்படும் சூழல் இருந்தது. சிகரெட் பிடிப்பதே ஒளிந்து கொண்டுதான் என்ற நிலை.. உள்ளூர் டீக்கடையில் டீ குடிப்பது கூட கௌரவ குறைவு என்று நினைத்தவர்களும் உண்டு. பெரியவர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள். வாலிபால், பேட்மிட்டன், கிரிக்கெட் விளையாட்டுக்களில் ஆர்வமாக கலந்து கொண்டார்கள். ஊர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்.  கல்வியும் மற்ற திறமைகளும் குறைவாகத்தான் இருந்தது.

இப்போதைய தேவை !

அன்றைய இளைஞர்களிடத்தில் இருந்த ஆக்கபூர்வமான விஷயங்களோடு இன்றைய இளைஞர்களிடம் உள்ள ஆற்றல், திறமைகளை இணைத்தால் அருமையான தன்மைகள் உடையவர்களை கற்பனையில் பார்க்க முடிகிறது. எனவே இப்போதைய தேவை, திறமைகளுடன் கூடிய நல்ல இளைஞர்கள். இளைய சமுதாயத்தை ஆய்வு செய்யும் போது வெறுமனே அவர்களை குற்றம் சாட்டுவதை தவிர்த்து, அவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை தெளிவு படுத்தல் வேண்டும்.

 இளைஞர்களே! உங்கள் வாழ்க்கை பற்றி தொலைநோக்கோடு சிந்தியுங்கள்!

ஆரோக்கியம் தான் ஒரு மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளிலேயே உன்னதமானது. மிகப்பெரிய சொத்து. ஆனால் அதன் அருமை அது இல்லாத போதுதான் தெரிகிறது. எனவே ஆரோக்கியம் பேணுங்கள்! ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அனைத்தையும் தவர்த்திடுங்கள்! உடல் ஆரோக்கியமாய் இருப்பதற்கு நல்ல உணவு அவசியம்!  உள்ளம் ஆரோக்கியமாய் இருக்க நல்ல எண்ணங்கள் அவசியம்.

 கெட்ட பழக்கம் வேண்டாம்!

விளையாட்டாக செய்ய ஆரம்பிக்கும் தவறுகள் பிற்காலத்தில் விடமுடியாத கெட்ட பழக்கமாகி விடுகிறது. புகைபிடிக்கும் பெரும்பாலோர் அப்படித்தான் சொல்கிறார்கள். இன்று சிகரெட்டால் நுரையீரலில் குணப்படுத்தமுடியாத நோயால் அவதிப்படுவோர், மதுவால் கல்லீரலில் கடுமையான பாதிப்புக்கு ஆளானோர், சூதாட்டத்தி்ல் பெரும் செல்வத்தை இழந்தவர்களெல்லாம் முதலில் ஜாலிக்காகவும் டைம்பாசுக்காகவும் தான் ஆரம்பித்திருப்பார்கள். எனவே ஜாலிக்காக என்று எதை செய்ய நினைத்தாலும் சற்று யோசியுங்கள்.

உங்களை நம்பி ஒரு குடும்பம் உள்ளது !
 
உங்கள் மீது பாசமும் நேசமும் கொண்டவர்கள் உங்களையே நம்பியுள்ள நெஞ்சங்களையும் ஒரு கணம் மனதில் கொண்டு வாருங்கள் !.
 
திறமைகளை வளருங்கள் !

தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இளமைக் காலத்தில் நாம் வளர்த்துக் கொள்ளும் திறமைகள் நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு பலன் தரக்கூடியது!

நட்பு வட்டம்

நல்ல நண்பர்கள் ஒருவருக்கு அமைந்துவிட்டால் அதைக் கொண்டு ஏராளமாய் சாதி்க்க முடியும்.அதேசமயம் கெட்ட நண்பர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். எனவே நண்பர்கள் வேண்டும், அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்.

நேரந்தவறாமை !

ஒவ்வொரு காரியமும் குறிப்பி்ட்ட நேரத்தி்ல் நிறைவேற்றப்பட வேண்டும்.காலந்தாழ்ந்து செய்யும் வேலைகள் உரிய பலன் தராது.எனவே நேரந்தவறாமை மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய திறமை.

பேசும் திறன் !

பேசும்போது தெளிவாக, தன்மையாக பேச வேண்டும். அதே சமயம் நிதானமாக நம் எண்ணங்களை புரிய வைக்க வேண்டும்.

மற்ற மொழிகற்றல்!

எல்லோர்க்கும் அவரவர் தாய் மொழி மீது அலாதி பிரியம். என்றாலும் கூடுதல் மொழி கற்றுக் கொள்வதால் அனேக நன்மைகள் உண்டு. அடுத்த மொழி கற்பதை ஒரு சுமையாகக் கருதாமல் மகிழ்ச்சியோடு கற்றுக் கொள்ளுங்கள். அது நிச்சயம் கை கொடுக்கும்.

சுத்தம் பேணுதல்!
 
நம்முடைய இருப்பிடத்தையும், உடைகளையும் பொருட்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இது சுகாதாரம் மட்டுமன்றி, நம்மீது பிறர்க்கு நன்மதிப்பை ஏற்படுத்தும்.

உங்கள் ஓய்வு நேரம் ஆக்கபூர்மானதாக அமையட்டும் !

இதுபோன்ற இன்ன பிற தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள ஓய்வு நேரத்தை பயன்படுத்துங்கள்.

பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது..

பிள்ளைகள் மீது பெற்றோர்களின் கண்காணிப்பு மிக அவசியம். நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களில், ஒரு தவறுக்கான சூழல் ஏன் உருவானது என பார்க்கும்போது கண்காணிப்பு இல்லை என்பதே பதிலாக வருகிறது. எனவே பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது எந்த அளவு பாசம் வைத்துள்ளீ்ர்களோ அந்த அளவு கண்காணிப்பும் அவசியம்.

நேர்மறை எண்ணங்கள் (positive approach)

உங்கள் பிள்ளைகள் திறமையானவர்களாக நல்லவர்களாக வருவார்கள் என்று நீங்கள் உறுதியாக நம்புங்கள்.

பெற்றோர்கள் !
பிள்ளைகள் மீது நம்பிக்கை வையுங்கள்! நல்லவர்களாக வருவார்கள். நல்ல பண்பாடு, பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுங்கள்!

நமது வாழ்வில் ஆனந்தம் என்றும் தங்கும்!

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...