Total Pageviews

Sunday, March 28, 2021

நடைப்பயிற்சியின் பயன்கள்


👬💞 1) நடைப்பயிற்சியில் 70 மடங்கு பிராணசக்தி உடலில், திசுக்களில் அதிகம் கிரகிக்கப்படுகிறது. நடக்கும்போது (ஆக்ஸிஜன்) நிமிடத்திறகு 27 லிட்டர் காற்று தேவைப்படுகிறது.Staff in hand, the Mahatma walked every day of his life... | Hindustan Times

 

👬💞 2) பிராணசக்தி அதிகரிப்பதால் இரத்தம் சுத்தம் பெறுகிறது. சுழற்சி வேகம் அதிகரிக்கிறது & அளவும் அதிகரிக்கிறது.

 

👬💞 3) தேவையற்ற இரத்தக் கழிவுகள் வெளியேறுகிறது. வியர்வை மூலம் கொழுப்புக்கழிவுகள், உப்புகள் வெளியேற்றப்படுகிறது. உடல் துர்நாற்றம் குறைகிறது.

 

👬💞 4) நுரையீரல், அதில் உள்ள சிற்றரை திசுக்கள், நல்ல நலம் பெறுகின்றன. சுவாசம் சீர்படுவதுடன் மேம்படுகிறது.

 

👬💞 5) இதயத்தின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இதயத் திசுக்கள் வலிமை பெறுகின்றன.

 

👬💞 6) பசியின்வேகம், பசித்தன்மை, தாகம் ஜீரணம் இவைகள் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. மேம்படுத்தப்படுகிறது. தன் மயமாதல் சிறப்படைந்து எலும்பு, திசுக்களில் சேரும் சத்துக்கள் அதிகரிக்கின்றன.

 

👬💞 7) எலும்புகள், தசைகளில் திசைவுகள் குறைந்து புதிய வலுவும், வனப்பும் பெறுகின்றன.

 

👬💞 8) அதிக உடல் எடை, பருமன், சதைக் கோளங்கள் இலகுவாக, இயல்பாக, ஆபத்தில்லாமல், இணக்கமாக, எளிமையாக குறைய நடைப் பயிற்சியில் மாத்திரமே சாத்தியம் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.

 

👬💞 9) அதிக தேவையில்லாத கொழுப்பை குறிப்பாக எல்.டி.எல் லிஞிலி கொலஸ்ராலை குறைத்து சீர்படுத்தி ஹச்.டி.எல். பிஞிலிஐ அதிகரித்து இதயத் திசுக்களுக்கு ஓய்வுதர துணைபுரிகிறது. நமது இரத்தத்தில் எல்.டி.எல் அளவு 100 மி.கி. மேல் இருக்கக் கூடாது.

 

👬💞 10) நமது முதுமை, திசு அழிவு குறைந்து புதிய செல்கள் உருவாகி இளமை மேம்படுகிறது.

 

👬💞 11) தொப்பை, தொங்கு சதை, பிதுங்கு சதைகள், இடுப்புச் சதைகள் மெதுவாக குறைய ஆரம்பிக்னிற்ன. உடல் கட்டழகு அடைகிறது.

 

👬💞 12) நீரழிவு அன்பர்களுக்கு நடைபயிற்சிதான் ஒப்பற்ற மருந்து எனலாம். எந்த அளவு சர்க்கரை நோயின் தாக்கம் உள்ளதோ அதற்கேற்ற தூரம் தினமும் நடந்திட வேண்டும்.


👬💞 13) பொதுவாக அனைத்துப் பிணிகளும் நடைப்பயிற்சியால் மட்டுப்படுவதுடன் கட்டுப்படுகிறது. மருந்து மாத்திரைகளின் தேவைகளை உடனடியாகக் குறைக்கிறது.

 

👬💞 14) நமது மெட்டாபாலிசம் அளவு சிறப்புற்று உடலில் வெப்பசக்தி (கலோரி) உற்பத்தி, பயன்பாடு மிகவும் அதிசயதக்க அளவில் கூடுகிறது.

 

👬💞 15) கால்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து கால்வலி, பாதவலி குறைந்து நரம்பு முறுக்கு, இரத்த அழுத்த தடைநீங்கி புதுசக்தியைப் பெறுகிறது.


👬💞 16) தினமும் காலையில் நீர் குடித்து பின் சிறிது தூரம் நடந்தாலே எப்படிப்பட்ட கடின மலச்சிக்கலும் விலிகிவிடும். மூலநோயும் குறைய ஆரம்பிகிறது.

 

👬💞 17) சுவாச அடைப்பை சரிசெய்கிறது. சைனஸ், ஒற்றை தலைவலி, சரியாகி நுரையீரலில் காற்று சென்று வரும் அளவை பல மடங்கு பெருக்குகிறது.

 

👬💞 18) நடக்கும்போது பசியின்மை விலகுகிறது. உணவின் ருசி மிகுந்திடும்.

 

👬💞 19) இரத்த அழுத்தம், மாரடைப்பு அன்பர்களும் சுகம் அடைகின்றனர்.

 

👬💞 20) மனச்சுமை, மனஅழுத்தம், உறக்கமின்மை போன்றவற்றில் இருந்து இலகுவாக, இயல்பாக, இனியமைகா நிவாரணம் கிட்டுகிறது.

 

👬💞 21) மனதில் ஒரு இணக்கம், இயல்புநிலை, ஆனந்தம், உற்சாகம், உத்வேகம் பீறிட்டு வரும் அற்புத சுகத்தை அறிந்திட, அனுபவிக்க நீங்களும் நடங்கள் & பிறருடன் சேர்ந்து நடங்கள். தினமும் நடங்கள். விரும்பி நடங்கள். மகிழ்ச்சியாக நடங்கள்.

Thursday, March 18, 2021

Electric bike Atum 1.0 - Rs.50,000/- only மிக குறைவான விலையில் மின்சார பைக்!

மின்சார இரு சக்கர வாகனங்களின் விலை!
The electric bike comes with a 2-year battery warranty and is claimed to be developed using indigenous parts.
ஆட்டம் 1.0 - 25 கிமீ வேகத்தை வழங்குகிறது.

ஐதராபாத் நகரை மையமாக கொண்டு செயல்படும் ஆட்டோ மொபைல் பிரைவேட் லிமிடெட் (Atumobile Pvt Ltd) என்னும் நிறுவனம், புதிய லோ-ஸ்பீடு மின்சார பைக் ஒன்றை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மின்சார பைக்கிற்கு ஆட்டம் 1.0 (Atum 1.0) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ஆலையில் ஒரு ஆண்டுக்கு 15,000 மின்சார பைக்குகளை உற்பத்தி செய்ய முடியும். தேவைப்பட்டால் இன்னும் 10,000 பைக்குகளை அதிகமாக தயாரிப்பதற்கான வசதிகளையும் அந்த ஆலை பெற்றுள்ளது. ஆட்டம் 1.0 மின்சார பைக்கானது, ஐசிஏடி-யால் (ICAT - International Centre for Automotive Technology) அங்கீகரிக்கப்பட்ட லோ-ஸ்பீடு மின்சார வாகனம் ஆகும்.

அதாவது இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆட்டம் 1.0 மின்சார பைக்கை பதிவு செய்ய தேவையில்லை. அத்துடன் இதனை ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமமும் தேவைப்படாது. இந்த மின்சார பைக்கில் லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.

எலக்ட்ரிக் பைக் 2 ஆண்டு பேட்டரி உத்தரவாதத்துடன் வருகிறது, மேலும் இது உள்நாட்டு பகுதிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த மின்சார பைக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர்கள் வரை தாராளமாக பயணம் செய்ய முடியும். 2 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் இந்த மின்சார பைக் வருகிறது. அத்துடன் பல்வேறு வண்ண தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக் முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு சுமார் 1 யூனிட் மின்சாரத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்!
 
 அதே சமயம் பெட்ரோலில் இயங்க கூடிய பைக்குகள் என்றால், 100 கிலோ மீட்டர்கள் ஓட்டுவதற்கு சுமார் 80-100 ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், எரிபொருள் செலவை கட்டுப்படுத்த விரும்பும் நபர்களுக்கு இது நல்ல தேர்வாக அமையும். இந்த மின்சார பைக்கின் விலை வெறும் 50,000 ரூபாய் மட்டும்தான்.
100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்! மிக குறைவான விலையில் மின்சார பைக்! எவ்ளோனு தெரிஞ்சா வாங்க துடிப்பீங்க

ஆட்டம் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​ஆட்டோ மொபைல் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் வம்சி கடாம் கூறுகையில், “3 வருட கடின உழைப்பு மற்றும் பயணத்திற்கான நிலையான வழியை அறிமுகப்படுத்தும் பார்வைக்குப் பிறகு, ஆட்டம் 1.0 ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவை ஒரு நிலையான மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புள்ள தேசமாக மாற்றுவதற்கான எங்கள் பெரிய உறுதிப்பாட்டில் ஆட்டம் 1.0 ஒரு முக்கியமான மைல்கல் என்று நாங்கள் நம்புகிறோம். ”

ஆட்டம் 1.0 6 கிலோ எடை கொண்ட சிறிய பேட்டரி பேக் உடன் வருகிறது. 

Wednesday, March 17, 2021

மின்சார வாகனங்களின் தேவை!

மனிதனின் அன்றாட செயல்பாடுகள் சுற்றுசூழலை பாதிப்படைச் செய்து கொண்டு இருக்கின்றன. சுற்றுசூழல் சீர்கேட்டில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

பசுமை இல்ல வாயுக்கள் புவிவெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக உள்ளன. பெட்ரோலிய பொருட்களால் இயங்கும் வாகனங்கள் இவ்வாயுக்களை அதிகளவு வெளியிடுகின்றன.

எனவே பெட்ரோலிய பொருட்கள் கொண்டு இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்குப் பதிலாக மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த மின்சார வாகனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன. அவை சுற்றுசூழலில் எந்த வகையான தாக்கத்தை உண்டாக்குகின்றன. அவற்றின் நிறை குறைகள் பற்றிப் பார்க்கலாம்.

 
மின்சார கார்

மின்சார கார் என்பது மின்சாரத்தை எரிபொருளாகக் கொண்டு இயங்கக் கூடியது. இதில் மின்சாரத்தை சேமிக்க பாட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பாட்டரிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மின்சாரத்தை மின்மோட்டர்கள் எடுத்துக் கொண்டு காரினை செயல்பட வைக்கின்றன. இதில் பயன்படுத்தப்படும் பாட்டரிகள் மீண்டும் ரீஜார்ஜ் செய்யக் கூடியவை.
 

மின்சார வாகனங்களின் குறைகள்

மின்சார வாகனங்களின் வேகம் மற்றும் செல்லும் தூரம் ஆகியவற்றின் அளவானது குறைவாக உள்ளது.

இவை ஒலியில்லாமல் செல்வதால் சில நேரங்களில் விபத்திற்கு வழிவகுக்கிறது.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டினால் மின்தேவையின் அளவு அதிகரிக்கிறது. மின்பற்றாக்குறை உள்ள இடங்களின் இவ்வாகனங்களின் பயன்பாடு கேள்விக் குறியாகிறது.

 
மின்சார காரினால் சுற்றுசூழலில் ஏற்படும் தாக்கம்

மின்சார கார்கள் இயங்கத் தேவையான மின்சாரமானது இயற்கை மூலங்களான சூரியன், காற்று ஆகியவற்றிலிருந்து பெறப்படும்போது சுற்றுசூழல் பெரியளவில் பாதிக்கப்படுவதில்லை.

சூரிய சக்தி மூலம் மின்சார கார் ரீசார்ஜ் செய்தல்

 நிலக்கரியின் மூலம் மின்சாரம் பெறப்பட்டால், அவ்விடங்களில் மின்சார கார்கள் மறைமுக சுற்றுசூழல் பாதிப்பை பெரிய அளவில் ஏற்படுத்துகின்றன.

அதாவது அதிக மின்சார தேவையின் காரணமாக அனல்மின் நிலையங்களிலிருந்து அதிக அளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன.

இவ்விடங்களில் பெட்ரோலிய பொருட்கள் கொண்டு இயங்கும் வாகனங்கள் ஏற்படுத்தும் காற்று மாசுபாட்டைவிட மின்சார கார் மறைமுகமாக அதிகளவு காற்று மாசுபாட்டை உண்டாக்குகிறது.

மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் பாட்டரிகளின் கழிவு நீக்கம் சுற்றுசூழலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஏனெனில் இக்கார்களில் பயன்படுத்தப்படும் பாட்டரிகளில் காரீயம், நிக்கல், காப்பர் மற்றும் லித்தியம் போன்ற கடின உலோகங்கள் உள்ளன. இவற்றின் கழிவுநீக்கம் சுற்றுசூழலுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

மின்சார வாகனங்களில் பாட்டரிகள் மறுசுழற்சி செய்யப்பட்டும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

மின்சார வாகனங்களில் பயன்படுத்தும் பாட்டரிகளின் மூலப்பொருட்கள் மிகக்குறைந்த அளவே மண்ணில் இயற்கையாக கிடைக்கின்றன.

இம்மூலப்பொருட்களைப் பெறுவதற்காக சுரங்கங்கள் ஆழமாகத் தோண்டப்படுகின்றன. மேலும் மூலப்பொருட்களை தனியே பிரித்தெடுக்க வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சுற்றுசூழல் பாதிப்படைகிறது.

நவீன அறிவியலின் முன்னேற்றத்தால் மின்சார வாகனங்களுக்கான மின்சாரம் சூரியன், காற்று மற்றும் அணுமின் நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து அதிகளவு கிடைக்கப்படும்போது மின்சார வாகனங்கள் சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானவையாக இருக்கும்.

மின்சார வாகனங்களின் பாட்டரிகள் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் முறையாக கழிவுநீக்கம் செய்யப்படும் போதும், மறுசுழற்சி செய்யப்படும்போதும் அது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

நவீன அறிவியல் முன்னேற்றத்தால் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத மின்சார வாகனங்களின் பயன்பாடு வருங்கால சந்ததியருக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
மின்சார கார் ரீசார்ஜ் செய்தல்

முதல் நடைமுறை மின்சார கார் 1880-ல் உற்பத்தி செய்யப்பட்டது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மின்சார கார் பிரபலமடைந்தது.


சுற்றுச்சூழலில் பசுமை இல்ல வாயுக்களின் தாக்கம் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் பாட்டரிகளின் முன்னேற்றம் ஆகியவற்றின் காரணமாக 2008-ம் ஆண்டு முதல் மின்சார வாகனங்கள் மீண்டும் பிரபலமடையத் துவங்கிவிட்டன.

மின்சார வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயு மாசுக்கள் மிகவும் குறைவு அல்லது இல்லை என்றே கூறலாம்.

பாட்டரிகள் ஆரம்பத்தில் அதிக விலையைக் கொண்டிருந்தன. தற்போதைய நவீன அறிவியலின் காரணமாக மின்சார வாகனங்களின் பாட்டரிகளின் விலை குறையத் துவங்கியுள்ளது.

இக்காரணங்களால் தற்போது மின்சார வாகனங்கள் பிரபலமடையத் துவங்கியுள்ளன.

 
மின்சார வாகனங்களின் நிறைகள்

மின்சார வாகனங்கள் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுவதில்லை. எனவே காற்று மாசுபாடு குறைக்கப்படுகிறது.

பெட்ரோலிய எரிபொருட்கள் இவ்வகை வாகனங்களுக்கு தேவையில்லை என்பதால் வற்றும் வளமான எண்ணெய் வளம் குறிப்பிட்ட அளவு பாதுக்கப்படுகிறது.

இவை சத்தம் எழுப்புவது இல்லை. எனவே சுற்றுசூழலில் ஒலி மாசுபாடு குறைக்கப்படுகிறது.

blue and black bmw m 3 coupeமின்சார காரில் பயணம் செய்யும்போது விபத்துக்கள் ஏற்பட்டால் காரில் உள்ள காற்று பைகள் விரிவடைந்து மின்மோட்டார்களுக்கு மின்சாரம் செல்வது தடை செய்யப்படுகிறது. இதனால் கோர விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன.

 

Wednesday, March 3, 2021

தேடல் உள்ளவரை உங்கள் வாழ்வில் ருசியிருக்கும்!

 

மனிதனாக பிறந்த நாம் அனைவரும் வாழ்க்கையில் எதையாவது ஒன்றை தேடி கொண்டிருக்கிறோம். 

உதாரமாக படிப்பதற்கு நல்ல கல்லூரியை தேடுகிறோம்.

படித்தவுடன் வேலையை தேடுகிறோம்.

வேலையில் சேர்ந்தவுடன் பொருளை தேடுகிறோம்.

கொஞ்சம் பொருள் கிடைத்தவுடன் வரன் தேடுகிறோம்.

திருமணதிற்கு பிறகு நிம்மதியை தேடுகிறோம்.

 இறுதியில் ஆன்மீக தேடலுடன் வாழ்க்கை முற்று பெறுகிறது.

தேடல் இல்லாத வாழ்க்கை தேங்கி போன குட்டை மாதிரி.

நீங்களும் கிணற்றில் போட்ட கல்லு போல ஒரே இடத்தில் இருந்து விடாதீர்கள். 

அப்படி இது வரை படிச்ச படிப்பு போதும், சேர்த்து வச்ச காசு போதும் என்று இருந்து விடாதீர்கள். 

மேற்கொண்டு அறிவையும் பொருளையும் தேடி கொண்டிருங்கள்.

மேலும் அதனை மற்றவருக்கு பயன்படும் படி செய்யுங்கள்.

சும்மா இருக்காதீங்க.....

அப்படி சும்மா இருந்த கூட, கூகிள் சென்று நல்ல விஷயமா தேடி பாருங்கள் !

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் என்று வைரமுத்து சொல்லி இருக்காரு.

Monday, March 1, 2021

தனியார் நிறுவன ஊழியரின் பென்சன் கணக்கீடு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி!

பல மடங்கு உயரும் பி.எஃப் பென்ஷன்! செ.கார்த்திகேயன். Thanks to Vikatan.com

`வருங்கால வைப்பு நிதித் திட்டத் தின்கீழ் (EPFO) வரும் அனைத்து ஊழியர்களும் பென்ஷன் பெறுவதற்கு உரிமை உண்டு’ என்ற கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. உச்ச நீதிமன்றம் தந்திருக்கும் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், தனியார் நிறுவன ஊழியர்களின் ஓய்வூதியத்தொகையை வருங்கால வைப்புநிதி ஆணையம்  கணக்கிட்டால், அது பலமடங்கு உயரும். இதனால் அரசு ஊழியர்களைப்போல, தனியார் ஊழியர்களும் பல ஆயிரம் ரூபாயை பென்ஷனாக பெறும் நிலை உருவாகும். 



பல மடங்கு உயரும் பி.எஃப் பென்ஷன்!

இதுவரை 8.33% மட்டுமே

பொதுவாக, ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவரின் சம்பளத்திலிருந்து வருங்கால வைப்புநிதியாக (EPF) 12%, நிறுவனத்தின் சார்பில் 12% சேர்த்து வருங்கால வைப்புநிதித் திட்டத்தில்  டெபாசிட் செய்யப்படும். ஆனால், நிறுவனத்தின் பங்களிப்பில் 3.67% மட்டுமே வருங்கால வைப்புநிதித் திட்டத்துக்கு (EPF) அளிக்கப்படும். மீதமுள்ள 8.33% `பணியாளர் ஓய்வூதியத் திட்டம்’  (EPS) என அழைக்கப்படும் பென்ஷன் திட்டத்தின் பங்களிப்பாக டெபாசிட் செய்யப்படும்.

1.9.2014-ம் தேதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தங்களின்படி, அடிப்படைச் சம்பளம் (Basic Salary) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) ஆகிய இரண்டும் சேர்த்து மாதம் 15,000 ரூபாய்க்கும் குறைவாக மொத்த சம்பளம் உள்ளபோது, பணியாளர்கள் ஓய்வூதியத்துக்கான பங்களிப்பு பிடிக்கத் தேவை யில்லை எனக் கூறப்பட்டது. அதனால், நிறுவனத்தின் 12% பங்களிப்பும் வருங்கால வைப்பு நிதிக்கணக்கில்தான் வரவுவைக்கப்பட்டது. இதனால் மாதம் 15,000 ரூபாய்க்குள் சம்பளம் வாங்குபவர்கள் பென்ஷன் பெற முடியாத சூழல் உருவானது.

உச்சவரம்பு இனி கிடையாது!

மேலும், 1.9.2014-ம் தேதிக்குப்பிறகு புதிதாக வேலையில் சேர்பவர்களும், பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமை இல்லாதவர்கள் என்கிற நிபந்தனையை வருங்கால வைப்புநிதி ஆணையம் கடந்த 2018-ல் அறிவித்திருந்தது. வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் திட்டங்களில் இருக்கும் இந்த வேறுபாட்டை எதிர்த்து, கேரளா உயர் நீதிமன்றத்தில் பணியாளர்கள் சார்பில் கடந்த 2018-ல் வழக்கு தொடரப்பட்டது.
பல மடங்கு உயரும் பி.எஃப் பென்ஷன்!

இந்த வழக்கினை விசாரித்த கேரளா உயர் நீதிமன்றம், ‘ரூ.15,000 ரூபாய் என வரம்பு எதுவும் பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கக்கூடாது. வருங்கால வைப்புநிதித் திட்டத்தின்கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும்  ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்துக்குப் போன ஆணையம்

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து, வருங்கால வைப்புநிதி ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மாற்றுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை’ என்று கேரளா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து, வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது. இதன்படி, கடந்த 1.9.2014 அன்று கொண்டுவரப்பட்ட  வருங்கால வைப்புநிதித் திட்டத்தின் திருத்த மசோதா, மாற்றி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் நடைமுறைக்குச் சரிவருமா, இதில் இருக்கும் சாத்தியக்கூறுகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள, வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் (வேலூர் கிளை) உதவி ஆணையர் ஆர். கணேஷிடம் பேசினோம்.

இ.பி.எஸ் டெபாசிட் தொகை அதிகரிக்கும்

``பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டம், 1995-ன் படி, ஒருவருடைய மாதச் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் வருங்கால வைப்புநிதியின் நிறுவனப் பங்களிப்பிலிருந்து 8.33% ஓய்வூதியத் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட வேண்டும்.
பல மடங்கு உயரும் பி.எஃப் பென்ஷன்!

இதற்கான  சம்பள வரம்பு மாதம் 5,000 ரூபாய் என ஆரம்பத்தில் வைக்கப்பட்டு, அதற்கு பி.எஃப் 12% பிடிக்கப்பட்டது. இந்த வரம்பு 6,500 ரூபாயாக அதிகரித்து, தற்போது 15,000 ரூபாயாக உள்ளது. இதில் 12% என்பது ரூ.1,800 பி.எஃப்-ஆகப் பிடிக்கப்படும். இதே அளவு தொகையை நிறுவன மானது பணியாளர்களின் பி.எஃப் கணக்கில் செலுத்தும். இந்த ரூ.1,800-ல் 8.33% அதாவது, ரூ.1,250 ரூபாய் பணியாளர் பென்ஷன் கணக்குக்குச் செல்கிறது.  

தனியார் நிறுவன ஊழியர்களின் பென்ஷன் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வெறும் 15,000 ரூபாயை அடிப்படை ஊதியமாகக் கருதாமல், ஊழியர்கள் ஓய்வுபெறும்போது பெறும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை, உச்ச நீதிமன்றமும் அப்படியே உறுதிசெய்திருக்கிறது. இதனால் தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கு அதிக பென்ஷன் கிடைக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

சுப்ரீம் கோர்ட் கூறியதை  நடைமுறைபடுத்த  வேண்டும் என்றால், பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் நிறுவனத்தின் பங்களிப்பான 12%  தொகையை முழுமையாக பென்ஷன் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்.

இதுதவிர,  பணியாளர்களின் 12%  பங்களிப்பி லிருந்து குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியத் திட்டத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். அப்போதுதான் கூடுதல் தொகையை ஓய்வூதியமாக பணியாளர்களின் ஓய்வின்போது வழங்க முடியும். இதனால் பணி ஓய்வின்போது கிடைக்கும் பி.எஃப் மொத்தத் தொகை குறையும்” என்றார்.

தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதில் குழப்பங்கள் இருப்ப தால், விதிமுறைகள் அனைத்தும் முறைப்படுத்தப் பட்டபிறகு, இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தப்படும் நடவடிக்கையை பி.எஃப் அமைப்பு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் நிறுவன ஊழியர்கள் இந்தத் திட்டத்தின்மூலம் கிடைக்கும் பென்ஷனை மட்டுமே நம்பியிருக்காமல், புதிய பென்ஷன் திட்டத்தில் (NPS) சேர்ந்து, பணம் சேர்த்தால், எதிர்காலத்தில் கூடுதல் பென்ஷன் பெற்று நிம்மதியான வாழ்க்கையை வாழமுடியும் என்பதில் சந்தேகமே இல்லை!

செ.கார்த்திகேயன்

பென்ஷன் தொகை பல மடங்கு உயரும்!

தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், 33 ஆண்டுகள் பணிபுரிந்து கடைசி மாதச் சம்பளமாக ரூ.50,000 பெற்று பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தில் பணம் செலுத்தி வந்திருந்தால், தற்போது இருக்கும் பென்ஷன் திட்டத்தின்படி அவர் ஓய்வுபெற்றபிறகு மாதத்துக்கு ரூ.5,180 பென்ஷன் கிடைக்கும். இனிவரும் காலத்தில் தனியார் நிறுவன ஊழியர்களின் கடைசி முழுச் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் கணக்கிடப்படும்பட்சத்தில், புதிய பென்ஷன் திட்டத்தின்படி, அந்த நபருக்கு ரூ.25,000 ஓய்வூதியம் கிடைக்கும்.

அதே நபர், 30 ஆண்டுகள் பணிபுரிந்து கடைசிச் சம்பளமாக ரூ.50,000 பெற்று, பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தில் பணம் செலுத்தி வந்திருந்தால் புதிய பென்ஷன் திட்டத்தின்படி, அவருக்கு ரூ.22,857 ஓய்வூதியம் கிடைக்கும். 25 ஆண்டுகள் பணிபுரிந்தவராக இருந்திருந்தால், ரூ.19,225 ஓய்வூதியமாகக் கிடைக்கும். அதேபோல, ஒருநபர் தன்னுடைய கடைசிச் சம்பளமாக ரூ.1,00,000 பெற்றிருந்து 33 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், அவருக்கு அதிகபட்சமாக ரூ.50,000 ஓய்வூதியம் கிடைக்கும்!

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...