மின்சார இரு சக்கர வாகனங்களின் விலை!
ஆட்டம் 1.0 - 25 கிமீ வேகத்தை வழங்குகிறது.
ஐதராபாத் நகரை மையமாக கொண்டு செயல்படும் ஆட்டோ மொபைல் பிரைவேட்
லிமிடெட் (Atumobile Pvt Ltd) என்னும் நிறுவனம், புதிய லோ-ஸ்பீடு மின்சார
பைக் ஒன்றை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மின்சார
பைக்கிற்கு ஆட்டம் 1.0 (Atum 1.0) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த ஆலையில் ஒரு ஆண்டுக்கு 15,000 மின்சார பைக்குகளை உற்பத்தி செய்ய
முடியும். தேவைப்பட்டால் இன்னும் 10,000 பைக்குகளை அதிகமாக தயாரிப்பதற்கான
வசதிகளையும் அந்த ஆலை பெற்றுள்ளது. ஆட்டம் 1.0 மின்சார பைக்கானது,
ஐசிஏடி-யால் (ICAT - International Centre for Automotive Technology)
அங்கீகரிக்கப்பட்ட லோ-ஸ்பீடு மின்சார வாகனம் ஆகும்.
அதாவது இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டர்கள் என்ற அளவில்
கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆட்டம் 1.0 மின்சார பைக்கை பதிவு செய்ய
தேவையில்லை. அத்துடன் இதனை ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமமும் தேவைப்படாது.
இந்த மின்சார பைக்கில் லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு
வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரத்திற்கும்
குறைவாகவே ஆகும்.
எலக்ட்ரிக் பைக் 2 ஆண்டு பேட்டரி உத்தரவாதத்துடன் வருகிறது, மேலும் இது உள்நாட்டு பகுதிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மின்சார பைக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 100 கிலோ
மீட்டர்கள் வரை தாராளமாக பயணம் செய்ய முடியும். 2 ஆண்டுகள் பேட்டரி
வாரண்டியுடன் இந்த மின்சார பைக் வருகிறது. அத்துடன் பல்வேறு வண்ண தேர்வுகள்
வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக் முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு சுமார் 1 யூனிட்
மின்சாரத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்!
அதே சமயம் பெட்ரோலில் இயங்க கூடிய பைக்குகள் என்றால், 100 கிலோ மீட்டர்கள்
ஓட்டுவதற்கு சுமார் 80-100 ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், எரிபொருள் செலவை
கட்டுப்படுத்த விரும்பும் நபர்களுக்கு இது நல்ல தேர்வாக அமையும். இந்த
மின்சார பைக்கின் விலை வெறும் 50,000 ரூபாய் மட்டும்தான்.
ஆட்டம் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஆட்டோ மொபைல் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் வம்சி கடாம் கூறுகையில், “3 வருட கடின உழைப்பு மற்றும் பயணத்திற்கான நிலையான வழியை அறிமுகப்படுத்தும் பார்வைக்குப் பிறகு, ஆட்டம் 1.0 ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவை ஒரு நிலையான மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புள்ள தேசமாக மாற்றுவதற்கான எங்கள் பெரிய உறுதிப்பாட்டில் ஆட்டம் 1.0 ஒரு முக்கியமான மைல்கல் என்று நாங்கள் நம்புகிறோம். ”
ஆட்டம் 1.0 6 கிலோ எடை கொண்ட சிறிய பேட்டரி பேக் உடன் வருகிறது.
No comments:
Post a Comment