Total Pageviews

Tuesday, May 10, 2022

குற்றங்கள் குறைய !

 

குற்றங்கள் குறையவில்லையே ஏன்?'குற்றங்கள் ஏன் குறையவில்லை' என்ற கேள்வி பலரிடம் எழுகிறது.'குற்றங்களில் ஈடுபடுவோர், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடுகின்றனர்;  

 

எளியவர் மீது விரைந்து பாயும் சட்டம், செல்வாக்குள்ளோர் குற்றங்களைக் கண்டும் காணாமல் இருக்கிறது' என்ற விமர்சனமும் இருக்கிறது

 

சட்டம் - ஒழுங்கைப் பராமரித்து, குற்றத் தடுப்பு பணியில் ஈடுபட வேண்டிய போலீசாரே, சில நேரங்களில், குற்றவாளிகளுக்கு உடந்தையாகச் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது.

 

ஆசையே துன்பத்திற்கு காரணம்!

ஆடம்பரமான உடைகள் அணிவதில் இருந்து, ருசியான உணவுகள், சொகுசு கார்கள், நகைகள், பதவி, பணம், பங்களா, அழகான பெண்கள், புகழ்,  நல்ல பெயற்கும் கூட ஆசை படுபவர்களை, நம்மை சுற்றியும் பார்க்க முடிகிறது. எதற்கும் ஆசை படாதவர்கள் யாரேனையும் பார்ப்பது என்பது கிட்டத்தட்ட நடை முறையில் சாத்தியபடாத ஒன்று என்றே கூறலாம்.

அப்படி "ஆசை" இருந்தால்தான் என்ன? ஆசை தானே, மனிதனை ஒரு இலக்கை நோக்கி அடைய செய்யும் கருவி!. ஆம், ஆசை என்பது ஒரு நல்ல கருவி தான், நம் இலக்குகள் சரியாக இருக்கும் போது மட்டும்... "அத்தனைக்கும் ஆசைப்படு"!

 

ஆனால் ஆசைகள் பரிசுத்தமாய் இருக்கட்டும் என்றும் ஒரு நிபந்தனை!

 

மனிதனுக்கு உயிர் இருப்பதால் வேறு வழியில்லாமல் ஆசை உண்டாகி விடுகிறது அவன் மரணித்து விட்டால் அவனுடனே அவன் ஆசைகளும் மரணித்து விடும் மற்றபடி ஆசை என்பது இயற்கையாகவே நம்முள் இருக்கும் இது புதிதாக உருவாவதில்லை !

அளவில்லாத ”பேராசை” நமது குணங்களை எல்லாம் அழித்துவிடும்…!

உள்ளத்தின்உறுதியோடு கொள்ளும் நியாயமான ”ஆசை” காலப்போக்கில் நிறைவேறாமல் போகாது…!!

எந்தப் பொருளின் மீது அதிக ஆசை இல்லையோ!, அவற்றினால் துன்பம் ஏதும் இல்லை…!!!

“கூடா நட்பு கேடாய் முடியும்

 தனது நண்பர்கள் மனம் நோகக்கூடாது மற்றும் நட்பை இழந்துவிடக் கூடாது என்பதற்காக பலர், நண்பர்கள் செய்யும் தீமைகளை, அவர்களது வற்புறுத்தலின் பேரில் தாங்களும் செய்யத் துணிகின்றனர். நட்பை இதற்கு ஒரு காரணமாக காட்டுகின்றனர். ஆனால் உண்மை நட்பு என்பது ஒருவனை கெடுக்காது இருப்பதுதான்.

எனவே, யார் நல்ல நண்பர் என்பதைக் கண்டுபிடிக்கும் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டும். ஏனெனில் நல்ல நண்பர் என்ற போர்வையில், நம் வாழ்வை கெடுக்கும் எதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சீரிய பண்புகளைக் கொண்ட மனிதர்களிடம் நட்பு பாராட்டவும். உங்களின் நன்மதிப்பை நீங்கள் விரும்பினால், கெட்ட நண்பர்களிடம் சகவாசம் கொள்வதைவிட, தனித்திருப்பதே மேலானது !

நட்பு என்பது ஒருவரின் வாழ்வையே திசைமாற்றும் வல்லமைக் கொண்டதால், அது விஷயத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் தீவிர எச்சரிக்கையும், கவனமும் தேவை!

தீய பழக்கங்களுக்கு அடிமையாக்குதல்!

புகை மற்றும் மதுப் பழக்கம் மட்டுமின்றி, வேறு பல ஒழுக்கக்கேடான விஷயங்களிலும் நமது ஆர்வத்தைத் தூண்டி, ஏதாவது ஒரு பொருந்தாத காரணத்தை சொல்லி, நம்மை அந்த ஆபத்தில் ஈடுபட வைக்கிறார்கள். இதன் மூலம் நாம் நமது கவனத்தை இழப்பதோடு, உயிர்கொல்லி நோய்கள் உள்ளிட்ட சில ஆபத்துக்களுக்கும் ஆளாகிறோம்!

அன்றாட வாழ்க்கையை, இனிதே நகர்த்திச் செல்லத் தேவையான பணத்தை, நேர்மையான முறையில் சம்பாதிக்க வேண்டும் என்ற மன நிலை குறைந்து விட்டது

 

எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உணர்வு, இன்றைய சமுதாயத்தில் மேலோங்கி இருக்கிறது. இது தான், அதிகரித்து வரும் குற்றங்களுக்கான காரணம். இதை உணர்ந்தும், உணராத நிலையில், இன்றைய சமுதாயம் பயணிக்கிறது.

 

குற்றங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டுமானால், குற்றம் செய்வோர் யாராக இருந்தாலும், போலீசாரால் அவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை, உடனடியாக எடுக்கப்படும் என்ற உணர்வு ஏற்பட வேண்டும். குற்றவாளிகள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவர் என்ற நம்பிக்கை மக்களுக்கு வர வேண்டும்.

 

சாலை விதிகளைப் பின் பற்றாமல் வாகனங்களை ஓட்டுவதும், அக் குற்றம் செய்தோர், போலீசாரிடமே அத்து மீறி செயல்படுவதும், தினமும் காண முடிகிறது.

 

சாலையில் பயணிக்கும் பெண்களின் தாலி உள்ளிட்ட, தங்க நகைகளைப் பறித்துச் செல்லும் வழிப்பறி குற்றவாளிகள், பெரும்பாலும் படித்த இளைஞர்கள் தான். உழைப்பின்றி எளிதில் பணம் கிடைப்பதால், வழிப்பறியையே தொழிலாக்கிக் கொண்டுள்ளனர்.

 

 பணத்திற்காக கொலை உள்ளிட்ட குற்றங்களை நிகழ்த்துவோர் பலரும் படித்தவர்கள் தான். பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோரும் படித்தவர்களே. பெருகி வரும், 'சைபர்' குற்றங்களைத் திறமையுடன் செய்பவர்களும் படித்தவர்கள் தான்!

 

தன் கடமையைச் செய்ய, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும், படித்தவர்கள் தான். வறுமையின் காரணமாக, அவர்கள் லஞ்சம் வாங்குவதில்லை. அவர்கள் கற்ற கல்வியும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணி பயிற்சியும், நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்ற உணர்வை, அவர்களிடம் ஏற்படுத்தவில்லை.

 

அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய படிப்பைப் படிப்பது தான், சிறந்த கல்வி என்ற ஒற்றை லட்சியத்தோடு, இன்றைய சமுதாயம் பயணிக்கிறது.

 

வேலை வாய்ப்புக்காக கல்வி கற்பது மட்டுமின்றி, அறிவையும், ஒழுக்கத்தையும் வளர்ப்பதும், கல்வியின் நோக்கமே. இதை, குழந்தைகள் உணரும் வகையில் கல்வி கற்பித்தால், அதுவே, குற்றமற்ற சமுதாயத்தை நோக்கிப் பயணிக்க, வழி வகுக்கும்.

 

நல்லதையும் கெட்டதையும் பெற்றோரிடமிருந்து தான், குழந்தை, முதலில் கற்றுக் கொள்ளத் தொடங்குகிறது. நல்லதையும், கெட்டதையும், குழந்தைக்குப் பெற்றோர் கற்றுக் கொடுத்தால், அக்குழந்தை நல்ல குடிமகனாக வளர்கிறது.ஆனால், இன்றைய சூழலில், பெரும்பாலான பெற்றோர், குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமைய, அதிக அளவில் பொருள் ஈட்ட வேண்டும் என்ற, ஒற்றைக் குறிக்கோளை மையமாக வைத்து செயல்படுகின்றனர்; குழந்தையின் வளர்ச்சியில் அவர்கள், போதிய கவனம் செலுத்துவதில்லை.

 

பெற்றோர் கண்காணிப்பு இன்றி, தடம் புரண்டு, வளரும் குழந்தை, பெற்றோருக்கு மட்டுமின்றி, சமுதாயத்திற்கும் சுமையாக மாறி விடும் நிலையைக் காண முடிகிறது.

 

குடும்பம் உடைந்து, கணவன்  மனைவி தனித்தனியாக வாழும் குடும்பத்தின் குழந்தைகளில் பலர், திசை மாறிய பறவைகளாக, மாறி விடுவதையும் காண முடிகிறது.

 

போலீசாரின் செயல்பாடுகள், பல எதிர் வினைகளையும் சந்திக்கிறது. சட்டத்தைப் பரி பாலனம் செய்யும், போலீசாரின் செயல்பாடுகள் குறித்து, சமூகம் உன்னிப்பாகக் கவனிக்கிறது. இதை உணர்ந்து, நேர்மையான, நியாயமான முறையில், காவல் துறை செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

தண்டனையால் மட்டும், சமுதாயத்தில் இருந்து குற்றங்களை அகற்றி விட முடியாது. குற்றமற்ற சமுதாயத்தை நோக்கிய பயணத்திற்கு, துணை புரிவது

 

1  நேர்த்தியான குடும்பம்;

 

2  ஒழுக்கத்தை வளர்க்கும் கல்வி முறை

 

நல்ல நண்பர்கள்” – இறைவன் கொடுத்த வரம்! கூடா நட்பு கேடாய் முடியும்!

 

    4) நேர்மையான போலீசாரின் செயல்பாடு!

No comments:

Post a Comment

*"அடக்கமாகும் வரை.. அடக்கமாக இரு" என்று உணர்த்தும் 4- நபர்கள்.*

    கவிஞர் வாலி பதிவு செய்த 4- சம்பவங்கள் . *" அடக்கமாகும் வரை ..   அடக்கமாக இரு " என்று உணர்த்தும்         4- நபர்கள...