மனதைத் தயார் செய்திடலாம் .
கட்டுப்படுத்த முடியாத மனதை விட மோசமான எதிரி யாரும் இல்லை மனிதருக்கு.
கரைகளைத் தாண்டும் முதலைகளும், கட்டுப்பாடுகளைத் தாண்டும் மனங்களும் தங்கள் பலத்தை இழக்கின்றன.
மனம் இயங்கும் போது இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி மகிழ்ச்சி, இகழ்ச்சி இவற்றை வழங்குகிறது.
மனம் இயக்கமற்று இருக்கும் போது தெளிவு, ஞானம், பேரானந்தம் ஞானத்தையும் கடந்த நிலை ஏற்படுகிறது.
விழுவதற்கு உங்கள் கால்கள் முடிவு செய்தால், எழுந்து ஒடுவதற்கு உங்கள் மனதை தயார் செய்யுங்கள்.
விழுவது உங்கள் கால்களாக இருந்தால். எழுந்து
ஓடுவது உங்கள் மனமாக இருக்கட்டும்.
ஆயிரம் ரூபாயில் ஆனந்தம் கண்டவனும் உண்டு.
பத்தாயிரம் ரூபாய் பத்தாது என்று சொன்னவனும் உண்டு.
நீங்கள் எடுக்கும் முடிவில் தான் எல்லாம் உள்ளது.
நொடிகளும், நிமிடங்களும் முக்கியமாகும்.
வாழ்வின் போராட்டங்களை எதிர் கொள்பவர்களுக்கு.
அமைதியும் நிறைவும் தவழும்.
1.அன்புதான்
2.பாராட்டுதான்
3.இருப்பதை நினைத்து சந்தோஷப்படுவதுதான்
நன்றி ஏன் சொல்ல வேண்டும்.
1. பெற்றுள்ளதை உணர்வதற்காக!
2. இன்னும் தேவையானதைப் பெறுவதற்காக!
3. இருக்கும் நல்லதைத் தக்க வைப்பதற்காக!
நன்றியை எப்படி எல்லாம் வெளிப்படுத்தலாம்!
1. மனப் பூர்வமாக/உணர்வு பூர்வமாக வெளிப்படுத்த வேண்டும்.
2. நல்ல வார்த்தைகளாலும், நல்ல செயல்களாலும் வெளிப்படுத்தலாம்.
3. நன்றி உணர்வையும் உங்களையும் பிரிக்க முடியாதபடி, நீங்கள் பெறப்போகும் ஒன்றிற்கு, பெற்றுவிட்ட உணர்வோடு வெளிப்படுத்தலாம்.
நன்றியை எதற்கு எதற்கெல்லாம் சொல்லலாம்.
1. பிறந்ததிலிருந்து இதுநாள்வரை வளமோடு வைத்திருக்க உதவும் இயற்கைக்கும், மனிதர்களுக்கும்!
2. நம் உயிரை வைத்திருக்கும் ஆரோக்கியமான உடலுக்கும், உடலிலுள்ள உறுப்புகளுக்கும் !
3. இதுநாள் வரை பெற்ற ஆசீர்வாதங்களுக்கும், இனி பிரபஞ்சப் பேராற்றல் தரப்போகும் நன்மைகளுக்கும்!
🔸 நன்றியுணர்வோடு இருப்பதால்
என்ன பலன்கள் கிடைக்கும்
1. முதலில் அமைதியும், திருப்தியும் கிடைக்கும்
2. நீங்கள் தேவையானதாக நினைப்பதைவிட, உங்களுக்குத் தேவையானது எதுவோ அதுவெல்லாம் கிடைக்கும்!
3. . வாழ்வின் வளங்கள் அனைத்தும் பெற்றதான மனம் உணர்கின்ற வாய்ப்பு கிடைக்கும்.
No comments:
Post a Comment