Total Pageviews

Tuesday, August 23, 2022

Positive Thinking என்றால் என்ன? செயலிலும் நேர்மை, எண்ணங்களிலும் நேர்மை !

 


நேர்மறை எண்ணம்.

எதையும் Negatie ஆக  யோசிக்காமல், இருப்பது.

செயலிலும் நேர்மை, எண்ணங்களிலும் நேர்மை!

சுயநலம் மட்டும் கருதாமல் சமூக நலம் காக்கும் எண்ணங்களும் இந்த catagoryயே என்றேன்.

புரியவில்லையே"என்றார்.

சில வித்தியாசமான examples சொல்கிறேன். எளிதாக புரியலாம்.

1) பறவையை பிடித்து கூட்டில் அடைப்பதை விட, மரம் ஒன்று நட்டால் எண்ணற்ற பறவைகள் கூடுகட்டுமே என்று யோசித்து செயலில் இறங்குதல்.

2) ஒருவருக்கு உதவும் போது பணம் மட்டும் இல்லாமல், அவரே உழைத்து வாழ்க்கையை சிறப்பாக நடத்த வழி உள்ளதா என்று யோசித்தல்.

3) நம்மை காயப்படுத்துவர்களை திருப்பி எப்படி அடிக்கலாம் என்று யோசிக்காமல், ஒதுங்கி கொண்டு, நாம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடல்.

4) இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் ok. இதிலிருந்து என்ன பாடம் கற்றோம் என்று ஆராய்தல்.

5) வெற்றி மேல் வெற்றி வரும் போது, ஆணவத்தோடு என் முயற்சி என்று எண்ணாமல், இறைவனும் நம்மோடு பயணிக்கிறார் என்று அமைதி காத்தல்.

6) உடல் நலமில்லாத வரை காணும் போது, அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று மனதார எண்ணுதல்.

7) நம்மை சுற்றி இருப்போர், நமக்கு கடமைகளில் உதவுவோர், நமக்கு நல்லது நினைப்போர், அனைவரும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துதல்.

8) தெருவில் செல்லும் போது, நம்மை கடக்கும், வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் etc etc வாழ்த்துதல்!

9) ஹோட்டலுக்கு செல்கிறோம். உணவு அருந்தி விட்டு புறப்படும் போது பரிமாறியவர்க்கு டிப்ஸ் உடன், புன்னகையோடு Thank you சொல்லி பாருங்கள். அவர் அகமும் முகமும் மலரும்.

10) வீட்டில் நமக்கு உதவியாக இருக்கும் Servantsயும், நம்மை நம்பி வருகிறார்கள் என்று கனிவோடு நடத்துதல்.

சொல்லிக் கொண்டே போகலாம்." என்றேன்.

புரிந்தது " என்றார் நண்பர்.


No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...