Total Pageviews

Wednesday, June 26, 2024

பருவத்தே பயிர் செய்! இளமையில் திருமணம் செய்!

 

30 வயதை கடந்தும் திருமணம் இல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்மகன்கள்
உள்ளார்கள். இதற்கு சொத்து மதிப்பே காரணம்...

 அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து விவசாய தோட்டம் 7 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும்,

 அவரே சென்னை, பெங்களூர் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும்,

 வீட்டுக்கு ஒரே பையனா இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.
 

அப்புறம் இதெல்லாம் இருந்தாலும் தோற்றத்தில் திரைப்பட நடிகர்கள் விஜய் அஜித் அவர்கள் போல்.

1995 வரை திருமண செய்தவர்கள்
சொத்து...

#தகுதி பார்த்து இருந்தால் தான் திருமணம் செய்வேன் என்று சொல்லி இருந்தால் இந்த தலைமுறையே இருந்து இருக்காது,

இதில் இப்ப என்ன பிரச்சனை என்றால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் திருமண வயதை கடந்தும் ஆணும் பெண்ணும் அதிகமாக இருப்பது தான்,

 இதன் விளைவு என்ன என்று பார்ப்போம்...

1979 வரை ஒவ்வொரு கிராமத்திலும்
பலருக்கு 10  குழந்தைகள், எட்டு குழந்தைகள், குறைந்தது 5 குழந்தைகளை சர்வசாதாரனமாக பெற்று கொண்டார்கள்,

1980 க்கு பின் 100 யில் 90 குடும்பம் இரண்டு குழந்தைகள்..

எங்காவது ஒரு சில குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உண்டு,
1990 க்கு பின் ஒரே குழந்தை தான்,

2000 க்கு பின் ஒரு குழந்தைதான் என்பது எழுதப்படாத தீர்ப்பாக மாறிவிட்டது,

ஆனால் 2010 க்கு பின் ஒரு குழந்தையாவது வேண்டும்
இறைவா என்று போகாத கோவிலும் இல்லை, பார்க்காத மருத்துவமும்  இல்லை, என்ற நிலையில் உள்ளோம்.

 இதற்கு அறிவியல் ஆயிரம் காரணம் சொல்லலாம்,
ஆனால் முதல் காரணம் ஆரோக்கியம்,

👉1979 வரை பெண்ணுக்கு 16, ஆணுக்கு 19 யில் திருமணம்.

உணவு : ராகி, கம்பு, சோளம்.

👉1989 க்கு மேல் பெண் 17 ஆண் 21,

உணவு : அரிசி,

1992 க்கு மேல் பெண் 18 ஆணுக்கு 24.

உணவு: பட்டை தீட்டப்பட்ட அரிசி,

👉2000 க்கு மேல் பெண் 25, ஆண் 30 க்குள்.

உணவு: துரித உணவு,

👉2010 க்கு மேல்

உணவு: மைதா மாவில் தயாரித்த உணவு.

 வெள்ளை சர்க்கரை பயன்பாடு அதிகம்,

தரம் குறைந்த எண்னெய் என மனித இனம் நோய் மற்றும் மலட்டுத்தன்மையின் தாக்கத்தில் இருக்கிறோம்,

இந்நிலையில்
28 க்கு மேல் 35 வரையில் பெண் அதிகளவில் இருக்கிறார்கள்,

ஆண்கள் 30 முதல் 40 வயது வரை உள்ளார்கள்,

வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்,

திருமணத்துக்கு முன் ஏழையாக இருந்து, பிற்காலத்தில் பணம் புகழ்பெற்ற மனிதர்கள் ஏராளம்,

முதலில் சொத்து சுகம் என வாழ்ந்து,
திருமணம் முடிந்து சில ஆண்டுகளில்
ஏழ்மைக்கு வந்தவர்கள் அதிகம்,

எனவே வரும் காலம்! 


இப்படி தான் இருக்கும் என்று தீரமானம் செய்யாமல், நல்லதை மற்றும் நினைத்து மனங்கள் பிடித்தால் மணம் செய்யலாம்.

இதை வெறும் தகவலாக படித்துவிட்டு போக வேண்டாம்.

தயவுசெய்து
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் !

 குடும்பம் என்பது எவ்வளவு முக்கியம் !


அதற்கு பணம் தேவைதான் ஆனால், பணத்தால் வாழ்க்கையை இழந்து விடக்கூடாது,

நல்லொழுக்கம் உள்ள மாப்பிள்ளையா, பெண்ணா என கண்டறிந்து மணம் முடியுங்கள்.

Monday, June 24, 2024

எதுவும் நிரந்தரமில்லை !

  எதுவும் நிரந்தரமில்லை !




இங்கு எதுவும் நிரந்தரம் கிடையாது. வாழும் வரை நமக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது.பதவி,பட்டம்,
அதிகாரம், பொருள், பணம், புகழ், மனைவி, மக்கள், வீடு, வாசல், தோட்டம், துரவு ஏனைய அனைத்துமே நிரந்தரம் இல்லை. ஏன் நமது பெயரும் கூட அப்படித் தான்.

இவை சில நாள் மட்டும் நம்மோடு.பின் வேறொருவரோடு. நம்மை விட்டுச் சொல்லாமல் சென்று விடும்.

நாட்கள் செல்லச் செல்ல நம்மை இவ்வுலகம் மறந்து விடும். காற்று உள்ளே இருக்கும் வரை தான் உடல். காற்று வெளியே போய் விட்டால் நாம் பிணம்.

சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின் மேல் உள்ள பனித்துளிகள் தான் நாம்..இந்த சொற்ப வாழ்வு நிரந்தரம் என்று மயங்காதீர்கள்..

சொத்து, சுதந்திரம், அதிகாரம், பேர், புகழ் எல்லாமே, கண்மூடி கண் திறக்கும் வரை தான்.

சாவி கொடுத்தால்  குரங்கு பொம்மை. ஆடும்.. டமாரம் தட்டும்.. தலையை ஆட்டும்,விசை இருக்கும் வரை தான் வேலையே செய்யும்..

ஒரு காவல்காரன். வழக்கம் போல் தப்பட்டை அடித்துக் கொண்டு நடுநிசியில் ”ஜாக்கிரதை” ‘’ஜாக்கிரதை’’என்று கத்திக் கொண்டே போவான்…
ஒருநாள் அவசரமாக வர வேறு ஒரு ஊருக்கு போக வேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் பிள்ளை செய்ய வேண்டியதாயிற்று….

அவன் பிள்ளை கொஞ்சம் வேள்வி ஞானம் உள்ளவன். இரவில் அவன் தப்பட்டை அடித்துக் கொண்டு ''ஜாக்கிரதை,ஜாக்கிரதை'' என்று சொல்லிக் கொண்டு தகப்பன் வேலையை செய்தான்…
அடுத்த நாள் ராஜாவே அந்தக் காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான்.அந்தப் பையனைப் பார்க்கத் தான் வந்தான்.

”ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ?, இங்கேயே தண்டனையைக் கொடுத்து நிறைவேற்றுவாரோ .? காவல்காரன் மிகவும் நடுங்கினான்….

ஆனால் ராஜா அந்தப் பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தான்? எதற்காக?.

முதல் நாள் இரவு பையன், ” ஜாக்கிரதை. ஜாக்கிரதை” என்று அப்பாவை போல் சும்மா கத்திக் கொண்டு போகவில்லை..

சில வார்த்தைகள் சொன்னது தான் ராஜாவை மயக்கியது. அந்த வாக்கியங்கள் இவை தான்……

அடே தூங்கு மூஞ்சி, விழித்துக் கொள்ளடா. அப்பன் என்னடா , தாயும் என்னடா, அண்ணன் என்னடா, தம்பி என்னடா, காசும் பொய்,வீடும் பொய் சொந்தமும் இல்லை, பந்தமும் இல்லை,. எல்லாம் மாயை..

இதை எல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள். பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், வாழ்வே சோகம், மாயம், விழித்துக் கொள் ஜாக்கிரதை….

ஆசையும், பாசமும், கோபமும், பேராசையும் திருடர்களப்பா . உன் உள்ளே இருக்கும் ஞானம் எனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தைத் திருடுபவர்கள்.

விளக்கு எடுத்துக் கொண்டு வெளியே திருடர்களைத் தேடாதே..  உனக்கு உள்ளே ஒளிந்து இருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள்,
ஜாக்கிரதை ஜாக்கிரதை…

மனக்கோட்டை கட்டுபவர்கள் நாம். நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள்,
இளமை, வாலிபம் நிரந்தரமல்ல..

நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிப் போய் எறிந்தாகி விட்டது. மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை,

இதில் நீ என்ன? நான் என்ன?, எல்லாமே மாயை.. விழித்துக் கொள், ஜாக்கிரதை, ஜாக்கிரதை,.

ஆம்.,தோழர்களே..

"உங்கள் புகழை, உங்கள் பதவியை, அதிகாரத்தை
ஒரு போதும் நம்பாதீர்கள்"
இது எதுவுமே நிரந்தரம் கிடையாது".

ஏற்றம் வரும் போதே மாற்றமும் நிகழும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்...✍🏼🌹


Saturday, June 22, 2024

வாழ்க்கையில் இருந்து நீக்குதலின் மூன்று நிலைகள் !

வாழ்க்கையில் இருந்து நீக்குதலின் மூன்று நிலைகள்:- ....

 1] 60 வயதில்,  பணியிடம் உங்களை நீக்குகிறது           [Retirement!]....


 உங்கள் தொழில் வாழ்க்கையின் போது நீங்கள் எவ்வளவு வெற்றி பெற்றவராக இருந்தாலும் அல்லது சக்தி வாய்ந்தவராக இருந்தாலும் சரி, நீங்கள் சாதாரண மனிதராக திரும்புவீர்கள்....

 எனவே, உங்கள் கடந்தகால வேலையிலிருந்து மேன்மைக்கான மனநிலையையும், உணர்வையும் பற்றிக்கொள்ளாதீர்கள்,.... உங்கள் ஈகோவை விடுங்கள், இல்லையெனில் உங்கள் நிம்மதியை இழக்க நேரிடும்!....

 2] 70 வயதில், சமூகம் படிப்படியாக உங்களை நீக்குகிறது.....

 நீங்கள் சந்தித்து பழகிய நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் எண்ணிக்கை குறைகிறது...., உங்கள் முன்னாள் பணியிடத்தில் யாரும் உங்களை அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்கள்....
 
ஏனென்றால் இளைய தலைமுறைக்கு உங்களைத் தெரியாது, நீங்கள் இதைப் பற்றி சங்கடமாக உணரக்கூடாது!....

3] .... 80/90 
வயதில், குடும்பம் உங்களை மெதுவாக நீக்குகிறது....


  உங்களுக்கு நிறைய குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் இருந்தாலும்,


 பெரும்பாலான நேரங்களில் நீங்கள் உங்கள் துணையுடன் அல்லது தனியாகத்தான் வாழ்வீர்கள்....

உங்கள் பிள்ளைகள் எப்போதாவது வருகை தந்தால், அது அன்பின் வெளிப்பாடாகும்..., எனவே அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் பிஸியாக இருப்பதால், அடிக்கடி வரா மலிருப்பதை குறை கூறாதீர்கள்!....

90-க்குப் பிறகு, பூமி உங்களை அழிக்க விரும்புகிறது!!!....


 இந்த நேரத்தில், சோகமாகவோ துக்கப்படவோ வேண்டாம்....

 ஏனென்றால் இதுதான் வாழ்க்கை முறை, இறுதியில் அனைவரும் இந்த வழியைத்தான் பின்பற்றுவார்கள்!....

எனவே, நம் உடல் இன்னும் திறமையாக இருக்கும்போதே, வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்!....

உங்களுக்கு விருப்பமானதை உண்ணுங்கள், விரும்புவதை குடித்து விளையாடுங்கள் மற்றும் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்!.....

நினைவில் கொள்ளுங்கள்:-....
 உங்களை நீக்காத ஒரே விஷயம் வாட்ஸ்அப் குழு மட்டும்தான்!....


 🙂😃😁...
 எனவே, குழுவில் அதிகம் தொடர்பு கொள்ளுங்கள்....,


 ஒரு வணக்கம் சொல்லுங்கள்...., உங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்...., மகிழ்ச்சியாக இருங்கள், வருத்தப்பட வேண்டாம்!....


எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கபழகுங்கள்,,,,


👍🚩🙏
[மூத்த குடிமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது....]
💐👌🏽💐👌🏽💐👌🏽💐👌🏽💐

Friday, June 21, 2024

இந்திய அரசியல் அமைப்பின் முரண்பாடுகள்! மும்பை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.கே. ஸ்ரீவஸ்தவா!

 

மும்பை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.கே. ஸ்ரீவஸ்தவா புதுசாக கண்டுபிடித்த, தற்போதைய இந்திய அரசியல்  அமைப்பின் முரன்பாடுகளை குறிப்பிடுகிறார் 😰😰😳

😰😰சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம், பெரும் புள்ளிகள், அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா? நீங்களே முடிவு செய்யுங்கள்:

✒️🥨 1. ஒரு குடிமகன் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது.
ஆனால், தலைவர் விரும்பினால், அவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து தேர்தலில் போட்டியிடலாம்.

✒️🥨 2. ஒரு குடிமகன்  சிறையில் இருந்தால் வாக்களிக்க முடியாது.
ஆனால் ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு தலைவரோ சிறையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம்.

✒️🥨 3. ஒரு சாதாரண மனிதன் ஏதாவது ஒரு சிறிய குற்றத்திற்காக சிறைக்கு சென்றால்  கூட அவனுக்கு வாழ்நாள் முழுவதும் அரசு வேலைக்கு தடை விதிக்கப்படும்,
ஆனால், கொலை அல்லது பாலியல் பலாத்காரம் போன்ற பெரிய குற்றம் செய்யும் தலைவன் எத்தனை முறை சிறையில் இருந்தாலும், அவர் தேர்தலில் தாராளமாக போட்டியிடலாம், அவர் பிரதமராகவும் அல்லது  ஜனாதிபதியாக கூட போட்டியிடலாம். எந்த தடையும் இல்லை.

🥨✒️ 4.  ஒரு சாதாரண மனிதன் வங்கியிலோ, அரசாங்கத்திலோ அல்லது தனியார் கம்பெனியிலோ, ஒரு சுமாரான வேலையைப் பெற, பட்டதாரியாக இருக்க வேண்டும்.
ஆனால், அரசியல்வாதி கட்டைவிரல் ரேகை வைக்கும் படிப்பறிவே உள்ளவராக இருந்தாலும், அவர் இந்தியாவின் நிதி அமைச்சராகவோ பிரதமராகவோ இருக்க முடியும். அவர் பள்ளிக்கே சென்றதில்லை என்றாலும், நாட்டின் கல்வி அமைச்சராகலாம்.

✒️🥨 5. ஒரு குடிமகன், இராணுவத்தில் சேர குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும். ஒரு சிப்பாயாக வேலை பெற, நீங்கள் 10 கிலோமீட்டர் ஓடி காட்ட வேண்டும்.
ஆனால் அரசியல்வாதி படிப்பறிவில்லாதவராகவும், உடல் ஊனமுற்றவராலவும், மற்றும் 90 வயதானவராக இருந்தாலும், அவர் பாதுகாப்பு அமைச்சராக இருக்கலாம், அந்த இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு கட்டளையிடலாம்.

🥨✒️அவருக்கே எதிராக  எத்தனை வழக்குகள் இருந்தாலும், ஒரு தலைவர் காவல்துறை, அல்லது உள்துறை அமைச்சராகவே இருக்கலாம்.

🥨✒️ஒரு அரசு ஊழியர் 30 முதல் 35 ஆண்டுகள் சேவைக்குப் பிறகும் ஓய்வூதியம் பெற நிபந்தனைகளும், காலவரையும் உண்டு.

🥨✒️ஆனால் ஒரு எம் எல் ஏ, எம்பி சேவை செய்வதாக சொல்லி பதவிக்கு வந்து,  5 வருடம் லஞ்சம்,  ஊழல் மற்றும்  எத்தனை அராஜகம் செய்தாலும், எந்த நிபந்தனையும், கால வரையும் இன்றி வாழ்னாள் முழுதும் ஓய்வூதியம் கிடைக்கும்,

🥨✒️ இதில் அனைவருக்கும் எங்கே ஒரே நீதி இருக்கிறது?
இந்த அமைப்பு மாற்றப்பட  வேண்டுமா, இல்லையா?

🥨✒️தலைவர் மற்றும் மக்கள் இருவருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டுமா, இல்லையா?.

🥨✒️இந்த செய்தியை அனுப்புவதன் மூலம் நாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்த தயவுசெய்து உங்கள் ஆதரவை வழங்கவும்.

🥨✒️நீங்கள் முன்வரவில்லை என்றால் எந்த தலைவரையும் குற்றம் மட்டுமே சொல்லாதீர்கள்.
ஆம், உங்கள் இழப்புக்கு நீங்களும் பொறுப்பு ஆவீர்கள்.

🥨✒️திரு. டி.கே. ஸ்ரீவாஸ்தவா,
தலைமை அரசு வழக்கறிஞர்,
பம்பாய் உயர் நீதிமன்றம், பம்பாய்.

Monday, June 17, 2024

திருமண விருந்தில் வயதானவர்களுக்கு பந்தியில் இடஒதுக்கீடு!

 பந்தியில் இடஒதுக்கீடு !.

திருமண விருந்தில் பார்த்தேன்.

வயதானவர்களுக்கு 

(Senior citizens) மட்டும் என்று  ஒரு வரிசை தனியாக இருந்தது.

அங்கேயே ஒரு நபர் நின்று கொண்டு, வயதானவர்களை மட்டும் அந்த வரிசையில் அனுமதித்து கொண்டிருந்தார்.

விளக்கம் கேட்டதற்கு, முதியவர்கள் சுகர், மூட்டு வலி போன்றவற்றால் அதிக நேரம் நின்று பந்தியில் இடம் பிடிப்பது சிரமம். Buffetலும் நின்று கொண்டே சாப்பிடுவது சிரமமாக இருக்கும். Buffet அருகே அமர்ந்து சாப்பிட டேபிள், சேர் போட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் எழுந்து சென்று வரிசையில் நின்று உணவு வாங்குவது சிரமம்.

அது போக இவர்கள் சற்று மெதுவாக சாப்பிடுவார்கள்.

மற்றவர்கள் பந்தியில் வேகமாக சாப்பிட்டு விட்டு இலையை மூடும் போது, இவர்களும் அவர்களோடு சங்கடத்துடன் சரியாக உணவருந்தாமல் இலையை மூட வேண்டி வரும்.

இவைகளை தவிர்க்கவே, அவர்களுக்கு தனி வரிசை என்றார்.

இந்த சிந்தனையை உயிர் தந்தவருக்கு பாராட்டுக்கள்...

நல்ல முயற்சி.திருமணங்களில்  எல்லோரும் கடைபிடிக்கலாம்!

Monday, June 10, 2024

Life Certificate ! வீட்டிலிருந்தே உயிர் வாழ் சான்றிதழ்!

 

தபாலில் பென்ஷன்தாரருக்கு சூப்பர் வசதி! வீட்டிலிருந்தே வாழ்நாள் உயிர் வாழ் சான்றிதழில் !

சென்னை: ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெற வேண்டு மானால், ஒவ்வொரு வருடமும் வாழ்க்கை சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.. அந்தவகையில், ஓய்வூதியம் தொடர்பான விதிகளை EPFO ​​எளிமைப்படுத்தியுள்ளது.  

ஊழியர்கள்:

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், ஓய்வூதியம் பெறுவதற்காக ஆண்டுதோறும் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

 அதேபோல, மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.. நேரில் சென்று உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க, ஓய்வூதியதாரர்கள் ஏராளமான சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தபால் துறை: இவைகளை தவிர்க்கவே, தவிர்க்க தபால் துறையின் மூலம் சமீபத்தில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது..

 அதன்படி தபால் துறையின் கீழ் செயல்படும், இந்தியா POST PAYMENTS [போஸ்ட் பேமெண்ட்ஸ்] வங்கி ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது

இதற்கு சேவை கட்டணமாக ரூ.70- தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் நம்பர், செல்போன் நம்பர், ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கை விரல் ரேகையை பதிவு செய்தாலே போதும்..  

 அடுத்த சில நிமிடங்களிலேயே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். ஓய்வூதியதாரர்கள்: டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, www.ccc.cept.in என்ற இணையத்தள முகவரி மூலம் அல்லது postinfo என்ற செயலியை பதிவிறக்கம் செய்து சேவை தொடர்பான கோரிக்கையை பதிவு செய்யலாம்

  மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மட்டுமின்றி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களும், இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது. உயிர்வாழ் சான்றிதழ்: இந்நிலையில், மாநில அரசு ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஜூலை 1ம் தேதி முதல் 30 செப்டம்பர் 30ம் தேதி வரை, அவர்களது வீட்டு வாசலிலேயே, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

https://ccc.cept-gov.in/covid/request.aspx > service request >IPPB Jeevan Pramaan மற்றும் Whatsapp 8904893642 (Business Account) எனவே மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது!

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...