Total Pageviews

Friday, September 27, 2024

ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது ..




பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை


 குறிப்பாக நிலவரைபடம்   FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது


 எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 


FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

 சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள்
**************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*******
1 சென்ட்      – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர்       – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர்       – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட்      – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ்    – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி           – 144 சதுர அடி
1 சென்ட்      – 3 குழி
3 மா              – 1 ஏக்க‍ர்
3 குழி           – 435.6 சதுர அடி
1 மா              – 100 குழி
1 ஏக்க‍ர்       – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி     = ஒரு மா
20 மா        = ஒரு வேலி
3.5 மா       = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர்  = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம்        = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம்     = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

•             10 கோண் = 1 நுண்ணணு

•             10 நுண்ணணு = 1 அணு

•             8 அணு = 1 கதிர்த்துகள்

•             8 கதிர்த்துகள் = 1 துசும்பு

•             8 துசும்பு = 1 மயிர்நுனி

•             8 மயிர்நுனி = 1 நுண்மணல்

•             8 நுண்மணல் = 1 சிறு கடுகு

•             8 சிறு கடுகு = 1 எள்

•             8 எள் = 1 நெல்

•             8 நெல் = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம்

•             6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

•             4 காதம் = 1 யோசனை

•             வழியளவை

•             8 தோரை(நெல்) = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

•             2000 தண்டம் = 1 குரோசம்        21/4மைல்

•             4 குரோசம் = 1 யோசனை

•             71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை

100 ச.மீ                              - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ்                          - 1 ஹெக்டேர்

1 ச.மீ                                  - 10 .764 ச அடி

2400 ச.அடி                       - 1 மனை

24 மனை                         - 1 காணி

1 காணி                            - 1 .32 ஏக்கர்

144 ச.அங்குலம்            - 1 சதுர அடி

435 . 6 சதுர அடி          - 1 சென்ட்

1000 ச லிங்க்ஸ்         -  1 சென்ட்

100 சென்ட்                     - 1  ஏக்கர்

1லட்சம்ச.லிங்க்ஸ்   - 1  ஏக்கர்

2 .47   ஏக்கர்                    - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர்               = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர்                             = 4840 குழி (Square Yard)

100 சென்ட்                     = 4840 சதுர குழிகள்

1 சென்ட்                          = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர்                             = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர்                             = 43560 சதுர அடி

1 குழி (Square Yard)           = 0.8361 சதுர மீட்டர் (Square Meter)

1 ச.மீ(Square Meter)            = 1.190 குழி

1 குழி                                  = 9 சதுர அடி

1 ச.மீ(Square Meter)           = 10.76 சதுர அடி

1 குந்தா (Guntha)             = 121 குழி = 101.17 சதுர மீட்டர்

1 குந்தா (Guntha)             = 33 அடி * 33 அடி = 1089 சதுர அடி

100 குழி                             = ஒரு மா

20 மா                                  = ஒரு வேலி

3.5 மா                                 = ஒரு ஏக்கர்

6.17 ஏக்கர்                        = ஒரு வேலி

16 சாண்                             = 1 கோல்

18 கோல்                           = 1 குழி

100 குழி                              = 1 மா

240 குழி                              = 1 பாடகம்

Thursday, September 26, 2024

வசப்படும் வாழ்க்கை !

 வசப்படும் வாழ்க்கை .



_*நாற்பது  வயதுக்கு மேல் வாழ்க்கையில் தைரியம் என்பது,
நம் கையில் இருக்கும் பணத்தை பொருத்தே அமைகிறது.*_

_*வாழ்க்கையில் பணம் இல்லாமல் மனிதனாக வாழ இயலும்.
 

ஆனால் பணம் ஏதும் இன்றி மனிதர்களிடம் வாழ இயலாது.*_

சாம்பாதித்ததை செலவு செய்த காலம் போய், முதலிலேயே செலவு செய்து விட்டு அதை அடைக்க சம்பாதித்து கொண்டிருக்கிறோம்.

நீங்கள் சம்பாதிப்பது சொத்து இல்லை. அனுபவித்ததுதான் சொத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதிக ஆசை இல்லாதவர்கள் மட்டும் தான் அதிக சந்தோஷத்துடன் வாழ்கிறார்கள்.

 கோபத்தில் மிருகத்தை மிஞ்சுகிறான் மனிதன்..


பாசத்தில் மனிதனை    வாழ்க்கையில் ஒவ்வொரு படிநிலையும்
ஒவ்வொரு ஆசான்...
எந்த படிநிலையும்
வந்தபடியே செல்வதில்லை...
ஏதோ ஒன்றை கற்றுக்கொடுக்கும்,
ஏதோ ஒன்றை
ஏற்கச்சொல்லும்...
கற்றுக்கொள்ளவும்,
ஏற்றுக்கொள்ளவும்
தயாராக இருந்தால்
வசப்படுமே வாழ்க்கை.

வாழ்க்கையில்

வெற்றிபெறும் கலையை  முழுக்க முழுக்க இன்னொருவர் கற்றுத் தர முடியாது. சுயமாக முன்னுக்கு வரும் கலைஞர்கள், வணிகர்கள், தொழிலதிபர்களைப் பார்த்து நீங்கள் முன்னுக்கு வந்த கலையைச் சொல்லிக் கொடுங்கள் என்றால் அவர்கள் சொல்ல மாட்டார்கள். சொல்லித்தரக் கூடாது என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. இது சொல்லித் தர முடியாதது.
 

இது பலருக்கும் புரிவதிவதில்லை.

நடிப்புக் கல்லூரியில் நடிப்பைப் படிப்பாக முடித்த எவரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விஞ்சியது இல்லை. என்ன புரிகிறது ஒன்றை  சொல்லிக் கொடுப்பதை விட கற்றுக் கொள்வதில்தான்  வெற்றி அடங்கியிருக்கிறது.
 

சிவாஜி கணேசன் எந்தக் கல்லூரியிலும் நடிப்பைக் கற்கவில்லை. ஆனால் உலகம் முழுவதிலிருந்து நடிப்பைக் கற்றுக்கொண்டார்.

சொல்லிக் கொடுப்பதில் வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் கற்றுக்கொள்வதில் வேறுபாடு இருக்க முடியும். தனித்தன்மை சுடர்விட முடியும்‌ இதனை புரிந்து கொள்ளாமல் புகழ் பெற்றவர்கள் வெற்றி ரகசியங்களை மறைப்பதாகக் குற்றம் சாட்டுவது தவறு.

சமைத்துப்பார் என்ற புத்தகத்தைக் படித்துச் செய்த சமையலை விட அருமையாக சமைக்கும் அம்மணிகள் ஆயிரக்கணக்கில் உள்ளார்கள். காரணம் அனுபவம் மட்டுமல்ல,பழக்கம் மட்டுமல்ல,மனம் விழித்த நிலை. விவரிக்க முடியாத சக்தியான மனம்  விழித்திருந்தால் நுட்பமான பல கலைகளைச் சுலபமாகத் கற்றுக்கொள்ளும்.

தூக்கத்திலிருந்து விழித்தால் மட்டும் போதாது. மனதும் விழிக்க வேண்டும். மூளையின் சாளரங்களை மூச்சுக் காற்றால்  திறக்கவேண்டும். சொல்லிக் கொடுக்கப்பட்ட செய்திகளை மட்டும் நம்பி ஒருவர் அறிவாளி ஆக முடியாது.

*படிக்காத மேதைகளும் உண்டு. படித்த முட்டாள்களும் உண்டு.
கண்டுபிடித்தால் வெற்றி நிச்சயம்.*

 தடைக்கு விடை கண்டுபிடித்தால்,
நடை போட்டு வெற்றி வரும்.

 எந்த எல்லைக்கும்
போகலாம் என்ற
நிலை இருந்தும்...
தன்னையும் ஓர்
கண்ணியமான
எல்லைக்குள்
நிறுத்தி
வாழ்பவனே...
நல்ல மனிதன்..

கேட்கப்படும்
மன்னிப்பை காட்டிலும்.
ஏற்கப்படும் மன்னிப்பே
மதிப்பு வாய்ந்தது.

Wednesday, September 18, 2024

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

 


நிம்மதி என்றால், எந்த ஒரு குழப்பமும், கவலையும், யோசனையும் இல்லாத நிலை

தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே, நிம்மதியை அடைந்து விடலாம்

தேவையற்ற எண்ணங்களை சுமந்து கொண்டிருந்தால், நிம்மதி என்பது சாத்தியமே இல்லாத ஒன்று

இருப்பதில் சந்தோஷமாக அமைதியாக வாழ்வது நிம்மதி.

இருப்பதில் சந்தோஷமாக இருந் தாலே நிம்மதி.

இருப்பதில் சந்தோசமாக இல்லாமல் இல்லாததை வேண்டி நினைப்பதால் நிம்மதி தொலைகிறது.

இல்லாததை விட்டுவிட்டு இருப்பதில் சந்தோஷமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள் நிம்மதியாக இருக்கும்.

எல்லாம் உங்கள் மனம்தான் காரணம் இல்லாததை எண்ணி அலைந்து நிம்மதியைக் கெடுக்கிறது நீங்கள் அதற்கு அடிமையாக தொலைந்துபோய் இருக்கின்றீர்கள் அதனால் நிம்மதி இருப்பது தெரியாமல் எங்கோ தேடுகிறீர்கள்.

இருக்கும் இடத்தில் இருந்த பொருட்களை வைத்துக் கொண்டு இன்பமாக இருங்கள் நிம்மதி தானாய் தெரியும்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் இருந்தபடியே வாழ கற்றுக்கொள்ளுங்கள் உங்கள் முயற்சி இருக்கட்டும் ஆனாலும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் முயன்றவரை நேர்மையான வழியில் உழைத்து சம்பாதித்து இருப்பதில் சந்தோஷமாக வாழ கற்று உங்கள் நிம்மதியை தொலைக்காமல் இருங்கள்!

மனதில் நிம்மதி, வீட்டில் நிம்மதி, பொருளாதாரத்தில் நிம்மதி எல்லாம் இறைவனை நினைவுக் கூர்ந்து வாழ்வதில் உள்ளது.

 நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

1.ஆரோக்கியமான உடல்

2.திருப்தி அடையும் மனம்

3.நேர்மையாக சம்பாதித்த பணம்

4.அனுசரணையான குடும்பம்

5.ஊக்கப்படுத்தும் துணை

6.உற்சாகம் தரும் நட்பு

7.சரி தவறு கணிக்கும் பக்குவம் !

8.சில சறுக்கல்களைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை !

9.தேவை ஆசை வித்தியாசம் உணர்வது !

10.இறை நம்பிக்கை அல்லது இயற்கையின் மீது நம்பிக்கை !

செல்வம் தான் நிம்மதியா ?

அதுவும் ஒரு காரணம் !

Monday, September 16, 2024

உலகில் உள்ள அனைவருக்குமே "வாழ்க்கை நிரந்தரம் அல்ல" !

 

உலகில் உள்ள அனைவருக்குமே "வாழ்க்கை நிரந்தரம் அல்ல"

இதை தான் கண்ணதாசன் தன் பாடல் வரிகளினால் உணர்த்தியிருக்கிறார்.

எங்கே வாழ்க்கை தொடங்கும்

அது எங்கே எவ்விதம் முடியும்

இதுதான் பாதை

இது தான் பயணம்

என்பது யாருக்கும் தெரியாது!

"வாழ்க்கை நிரந்தரம் அல்ல" என்பதை உணர்த்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இன்று(26-ஜூலை-2021) இணையத்தில் பார்த்த அப்படிப்பட்ட ஒரு செய்தியை இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

இந்த படத்தில் இருப்பவரின் பெயர் தீபா சர்மா.

ராஜஸ்தான் மாநிலம் தலைநகர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர்.

இவர் தனது 38 வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக இமாச்சலப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

பல்வேறு இடங்களுக்குச் சென்ற இவர் சென்ற இடமெல்லாம் புகைப்படங்களை எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்திருக்கிறார்.

அதுபோல தான் 25-ஜூலை-2021 நண்பகல் 12.59 மணிக்கு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நகஸ்டி செக் பாய்ண்டில் நின்று போட்டோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

“இதுதான் இந்திய எல்லையின் கடைசி இடம்.

இங்கு வரை மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த இடத்திலிருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் திபெத்தில் இந்திய எல்லை உள்ளது.

ஆனால் அதனை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது”

என்று தனது கடைசி பதிவை பதிவிட்டுள்ளார்.

இது தான் அவருடைய கடைசி பதிவு என்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த புகைப்படத்தை பதிவிட்ட அடுத்த அரை மணி நேரத்தில் (1.25 மணி) இவர் உயிரோடு இல்லை.

ஹிமாச்சலம் பிரதேசத்தில் உள்ள கின்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள சங்லா பள்ளத்தாக்கில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைகளிலிருந்து ராட்சத பாறைகள் வேகமாக உருண்டு தரை பகுதியை நோக்கி வந்தன.

இந்நிலையில் சங்லா-சிட்குல் சாலையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு டெம்போ ஒன்றும் வந்து கொண்டிருந்தது.அந்த சமயத்தில் பாலத்தின் மீது நிறைய பாறைகள் விழுந்ததால் தரையிலிருந்த பாலம் இடிந்து விழுந்தது.

அந்த நேரத்தில் பாலத்தின் மீது டெம்போவும் இருந்ததால் பாலத்துடன் சேர்ந்து டெம்போவும் கீழே விழுந்து நொறுங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே டெம்போவிலிருந்த ஒன்பது சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.

அதில் தீபா சர்மாவும் ஒருவர்.

"ஜூலை 29 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சுற்றுலா சென்றார்.

மிகவும் மகிழ்ச்சியோடு இந்த பயணத்தை மேற்கொண்டார்.

இந்த பயணத்திற்காக புதியதாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராவும் புது ஸ்மார்ட்போனையும் வாங்கி இருந்தார்.

சிறுவயது முதலே இயற்கையை மிகவும் நேசித்தார்.

இப்போது இயற்கையின் மடியில் சரணடைந்து விட்டார்.

அவரின் ஆத்மா நிம்மதியாக உறங்கட்டும்"

என்று தீபாவின் சகோதரரான மகேஷ் குமார் சர்மா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...