Total Pageviews

Tuesday, November 11, 2025

வாழ்க்கை என்பதும் ஒரு ரயில் பயணம் மாதிரிதான்...

 

ஒரு மனிதன்....

எந்தக் குறையும் இல்லை அவனுக்கு...

ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை.

படுத்தால் தூக்கம் வரவில்லை...

சிரமப்பட்டான்...

அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள்.

பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு...

அங்கே ஒரு பெரியவர் இருக்கார்...

போய்ப் பாருங்கள்!"

ஆசிரமத்துக்குப் போனான்...

பெரியவரைப் பார்த்தான்.

ஐயா....

மனசுலே நிம்மதி இல்லே...

படுத்தா தூங்க முடியலே!"

அவர் நிமிர்ந்து பார்த்தார்...

தம்பி...

உன் நிலைமை எனக்குப் புரியுது...

இப்படி வந்து உட்கார்!"

பிறகு அவர் சொன்னார்:

உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது...

தெரிந்தா உன் நிம்மதி போயிடும்!

அது எப்படிங்க?

சொல்றேன்...

அது மட்டுமல்ல...

மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்!

ஐயா நீங்க சொல்றது எனக்கு புரியலே!

புரியவைக்கிறேன்....

அதற்கு முன் ஆசரமத்தில்

விருந்து சாப்பிடு.

வயிறு நிறையச் சாப்பிட்டான்.

பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி,

இதில் படுத்துக்கொள் என்றார்.

படுத்துக் கொண்டான்...

பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்...

கதை இதுதான்:

ரயில் புறப்படப் போகிறது...

அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான் அவன் தலையில் ஒரு மூட்டை...

ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான்.

ரயில் புறப்பட்டது...

தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கிழே இறக்கி வைக்கவில்லை...

எதிரே இருந்தவர் கேட்கிறார்:

"ஏம்ப்பா! எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வாறே?

இறக்கி வையேன்.

அவன் சொல்கிறான்:

"வேணாங்க!

ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும்!

என் சுமையை நான் சுமந்துக்குவேன்!'

பெரியவர் கதையை முடித்தார்.

படுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான்.

ஏன் சிரிக்கிறே?

பைத்தியக்காரனா இருக்கானே...

ரயிலைவிட்டு இறங்கும் போது, மூட்டையைத் தூக்கிட்டு இறங்கினா போதாதா?

அது அவனுக்கு தெரிய வில்லையே

யார் அவன்? இயல்பாக கேட்டான்

நீதான்!"

என்ன சொல்றீங்க?

பெரியவர் சொன்னார்:

வாழ்க்கை என்பதும் ஒரு ரயில்

பயணம் மாதிரிதான்...

பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள்

நிம்மதியாக வாழமுடியாது.

தேவைப்படுகிறது மட்டும் மனசில் வைத்துக்கொள்!

அவனுக்கு தனது குறை மெல்ல

புரிய ஆரம்பித்தது.

🥹"கசப்பான உண்மைகள்"🥹

 🥹"கசப்பான உண்மைகள்"🥹

1. உடன் பிறந்த சகோதரனோ சகோதரியோ, இனிமேல் நம்மால் ஒரு நையா பைசாவிற்குப் பிரயோஜனம் இல்லையென்றால் தானாக விலகி விடுவார்கள் அல்லது நாம் விலக்கப்படுவோம்.

2, வீட்டிற்கு வந்த மருமகள் உ.யிரை கொடுத்து மாமியாரை பார்த்துக் கொண்டாலும், தன் மாமியார் பெற்ற மகளுக்கு என்றும் ஈடாகவே மாட்டாள் (மருமகளின் பெருமை தான் பெற்ற மகளின் ஒரு சிணுங்கலில் (அ) ஒரு சொட்டுக் கண்ணீரில் கரைந்து விடும்)

3. வயதான பெற்றோர் பெரும்பாலும் வசதியுடன் இருக்கும் மகனிடம் இருக்கவே விரும்புவார்கள்.

4. கொட்டி கொடுத்தாலும் அள்ளி அணைத்தாலும், நம் மனைவியோ குழந்தைகளோ ஒரு குறிப்பிட்ட வயதில் 'எனக்கு அப்படி என்ன செய்து கிழிச்சீங்க?.." என்று கேட்காமல் விட மாட்டார்கள்.

5. 70 வயதுக்கு மேல் வாழாமல் இருப்பது உத்தமம். நான் பார்த்தவரை பெரும்பாலான வயதானவர்கள் நாய்படாத பாடு படுகிறார்கள்.

6. உடன் பிறந்த அண்ணன் தம்பியை தவிர, வேறு எந்த நபரும் அடுத்த வீட்டுப் பெண்களைச் சகோதரிகளாக ஏற்றுக் கொள்வதில்லை. இந்த அக்கா மாதிரி, தங்கை மாதிரி எல்லாம் எப்பவுமே நம்பாதீங்க..

7. தோள் கொடுக்கும் உறவுகளை விட, காலை வாரும் உறவுகளே அதிகம். ஒன்று வார்த்தைகளால் அல்லது செயல்களால்.

8. ஒருமுறை பொருளாதாரத்தில் வீழ்ந்த குடும்பம் எவ்வளவு போராடி எழுந்தாலும், நம் உறவினர்கள் அதை முதன்மைப்படுத்திப் பேசாமல் இருக்க மாட்டார்கள். (எப்படியோ கடவுள் அருளால பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தவன் இன்னைக்கு நல்ல நிலைமை'ல இருக்கான்) என்று தான் பேசுவார்கள்.

9. வாழ்க்கையோட சூட்சுமம் புரியும் போது, நமக்கு நடக்க முடியாத அளவுக்கு வயசாகிடும்.. அந்த வயசுல எல்லாம் தெரிஞ்சு எந்தப் பிரயோஜனமும் இல்ல.

10. நாம நல்லா இருக்கணும்னு எந்தச் சொந்தக்காரனும் விரும்ப மாட்டான். (யோசிச்சு பார்த்தா, நாமளும் யாருக்காவது ஒரு சொந்தக்காரனா தான் இருக்கோம்)..

11. பெண்கள் எப்பவுமே #*#÷× ஜென்மங்கள் தான்.. எவ்வளவு படிச்சிருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய பதவியில இருந்தாலும் சரி..

12. முக்கியமா நம்மள பத்தி அதிகமா தப்பா பேசுறது நம்ம அப்பா அம்மா, மேரேஜுக்கு அப்புறம் மனைவி.. வயசான காலத்துல நம்ம பிள்ளைங்க..

50 வயதுக்குப் பிறகு தான் ஒரு பலமான, வளமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்!

 

ஐம்பதில் ஆட்டத்தைத் தொடங்குங்கள்...

இப்போதெல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 

50 வயதுக்குப் பிறகு தான் ஒரு பலமான, வளமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்... 

பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் தான்...

வாழ்க்கையில் 50-ல் ஓரளவு உந்துசக்தி குறைந்து போகும். இனி என்ன என்ற சோம்பேறி சாய்தளம் நம்மை ஆள, அதனால் பல நோய்களும் நம்மை சூழ முற்படும்... 50 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:

புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கும் தேவையான சவால் ஒன்றைக் கையிலெடுங்கள்...

உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கடினமான இலக்கை முன்னிலைப்படுத்தி அதனை நோக்கி நிதானமாக, ஆனால் உறுதியோடு செல்லுங்கள்.!

எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள், புதிய மனிதர்களிடம் பேசுங்கள் !

60 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து முதியோர் அரங்கம் உருவாக்காதீர்கள்!

இளைஞர்களோடு பழகுங்கள். 25 வயதில் இருந்த உத்வேகம் அவர்களிடமிருந்து உங்களுக்கு மீளக் கிடைக்கும்!

அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 50 வயதில் நரையும், திரையும், வழுக்கையும் அழகு தான்!

உலகின் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்கள், நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 50+ காரர்கள் தான் அதிகம்!

பெரும்பாலான இளைஞர்களுடன், ஒத்த கருத்து நண்பர்களுடன் புதிய இடங்களுக்கு, புதிய அனுபவங்களைத் தேடிப் பயணம் செல்லுங்கள்!

வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்! 

திசையறியா ஆர்வமூட்டும் பயணங்கள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு இட்டுச் சென்று துள்ளிக் குதிக்க வைக்கும்!

புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களைத் தேடி நிறைய படியுங்கள். 

உங்கள் மூளைக்கு தீனி போட நிறைய, நிறைய புதிய விஷயங்களைத் தேடிப் படியுங்கள்...

நகைச்சுவைக் கதைகளை, நிகழ்வுகளை, ஒளிமங்களை விரும்பிக் காணுங்கள்...

சிரித்துப் பேசுங்கள், பிறர் சிரிக்கப் பேசுங்கள், உங்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் நிலையாகும்...

விரோதிகளை விலக்குங்கள், ! 

பெருமைக்காரர்களை, பொறாமைக்காரர்களை கால விரயம் கருதி ஒதுக்குங்கள்!

மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் பேணுங்கள், நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி,

சிறு சிறு ஆசனங்கள் தவறாது செய்யுங்கள்...

வாரம் ஒரு முறையாவது உங்கள் இணை மனதினருடன் சிரித்து, மகிழ்ந்து, உண்டு, உறவாடுங்கள்!

மறந்தும் சாய்வு நாற்காலிவாசிகள் பக்கம் ஒதுங்கி விடாதீர்கள், உங்களை அவர்கள் பக்கத்திலேயே படுக்க வைத்து விடுவார்கள்...

பொதுச்சேவையில் நாட்டம் கொள்ளுங்கள். ஏரி, குளம், தூய்மை, சுற்றுச்சூழல், பசுமை, சமூக நேர்மை காத்தலில் ஆர்வம் கொள்ளுங்கள்...

மகன், மகள் மற்றும் குறிப்பாக மருமகளைத் திட்டாதீர்கள்...

முதலில் நம்மைச் சார்ந்தவர்களுக்கு, பின்னர் அடுத்தவர்களுக்கு,உதவி தேவைப்படு பவர்களுக்கு,  ங்களால் இயன்ற வகையில் உதவுங்கள். 

அவர்கள் நன்றியில் உங்களை நீங்களே புதிதாக ரசித்து மகிழ்வீர்கள்...

எப்போதுமே முதல் இன்னிங்சை விட இரண்டாம் இன்னிங்க்ஸ் தான் நாம் வாழ்ந்த வாழ்வின் அர்த்தங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது...

மேற்சொன்ன விஷயங்களை சரியாகச் செய்தால் 50+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை.

மூளையும், மனசும், உடலும் சரியாக இயங்க ஏற்பாடு செய்து விட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வந்து விடப் போகிறது...?

வாழ்க்கை என்பதும் ஒரு ரயில் பயணம் மாதிரிதான்...

  ஒரு மனிதன்.... எந்தக் குறையும் இல்லை அவனுக்கு... ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை... சிரமப்பட்டான்... அவன் மன...