பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.
ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
முகத்தின் அழகினை கெடுக்கும் கருவளையங்கள் நிறைந்தரமாக நீங்க ஆரஞ்சு பழத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- ஆரஞ்சு- 1
- தயிர்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சு சாறு, தயிர் எடுத்துக் கலந்துக்கொள்ளவும்.
பின் இதனை கண்களுக்கு அடியில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் நிரந்தரமாக நீங்கும்.
2. தேவையான பொருட்கள்
- ஆரஞ்சு- 1
- மஞ்சள்- ½ ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சு சாறு, மஞ்சள் தூள் மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் கலக்கவும்.
இதை கண்களுக்குக் கீழே தடவி 5 முதல் 10 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிட குளிர்ந்த நீரால் கழுவவும். !
No comments:
Post a Comment