அன்பு என்பது !
அன்பு என்பது தெய்வமானது !
அள்ளி அள்ளி கொடுத்தபோதும் குறைவில்லாதது....
அன்பு என்பது !
அன்பு என்பது தெய்வமானது !
அள்ளி அள்ளி கொடுத்தபோதும் குறைவில்லாதது....
வாழ்க்கை வேடிக்கையானது, நீங்கள் ஒன்றுமில்லாமல் வருகிறீர்கள், பிறகு நீங்கள் எல்லாவற்றிற்கும் போராடுகிறீர்கள், பிறகு எதுவுமில்லாமல் போகிறீர்கள்.
இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் இழக்கவும் ஏதுமில்லை. தொலைக்கவும் ஏதுமில்லை. உரிமை கொண்டாடவும் ஏதுமில்லை. உங்கள் உடலும் கூட உங்களுக்கு சொந்தம் இல்லை.
கவலை இல்லையெனில் மனிதனும் இல்லை. சூழ்நிலைகள் மாறும் போது பலரது வார்த்தைகள் மாறும். சிலரது வாழ்க்கையும் மாறும்.
ஆகவே எதற்கும் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. இருக்கும் வரை உங்கள் வாழ்வை சிறப்பாக வாழ்ந்துவிட்டு செல்லுங்கள்.
வாழ்வில் ஒழுக்கமும் நேர்மையும் இருந்து விட்டால் செய்யும் செயல் அனைத்திலும் அழகும் கலையுணர்வும் வந்து விடுவதை உங்களால் காண முடியும்.
மனமே கடவுளின் இருப்பிடம் அதை தூய்மையாக வைத்திருப்பது உங்கள் கடமை.
சில நேரங்களில்
பிறர் உங்களை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை.
நல்ல சக்தியும் புத்தியும் கடவுள் உங்களுக்கு அளித்திருக்கிறார்.அதன் மூலம் நீங்கள் நற்செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்.
உண்மையான அன்பை மற்றவர்களுடன் பகிருங்கள். அது பல மடங்காக உங்களுக்கு வேறு விதங்களில் திரும்ப கிடைக்கும்.
இந்த மாய உலகில் மாறாத ஒன்று மாற்றங்கள் மட்டுமே.
எந்த மாற்றங்களிலும் மாறாத ஒன்று எல்லாம் வல்ல இறைவனின் அன்பும் ஆதரவும் மட்டுமே என்று நினைவில் கொள்ளுங்கள்.✍🏼🌹
வாழ்க்கையை நன்றாக புரிந்து கொள்ள மூன்று இடங்கள் உள்ளன: ரத்தன் டாடா !
*₹8,85,56,75,90,000/- மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருந்த ரத்தன் டாடாவின் மரணத்திற்கு முந்தைய கடைசி வார்த்தைகள்...*
வணிக உலகில் வெற்றியின் உச்சத்தை அடைந்துள்ளேன். மற்றவர்களின் பார்வையில் என் வாழ்க்கை ஒரு சாதனை. இருப்பினும், வேலையைத் தவிர எனக்கு மகிழ்ச்சி இல்லை. பணம் என்பது நான் பயன்படுத்தும் உண்மை.
இந்த நேரத்தில், மருத்துவமனை படுக்கையில் படுத்து, என் வாழ்நாள் முழுவதையும் நினைவில் வைத்துக் கொள்ளும்போது, நான் பெருமைப்பட்ட அடையாளமும் பணமும் மரணத்திற்கு முன் பொய்யாகவும் மதிப்பற்றதாகவும் மாறிவிட்டன என்பதை உணர்கிறேன்.
உங்கள் காரை ஓட்டுவதற்கு அல்லது பணம் சம்பாதிப்பதற்கு நீங்கள் ஒருவரை வாடகைக்கு எடுக்கலாம். ஆனால், கஷ்டப்பட்டு சாவதற்கு யாரையும் வேலைக்கு அமர்த்த முடியாது.
இழந்த பொருள்கள் கிடைக்கலாம். ஆனால் தொலைந்தால் கண்டுபிடிக்க முடியாத ஒன்று இருக்கிறது - அதுதான் "வாழ்க்கை".
வாழ்க்கையின் எந்த கட்டத்தில் இருந்தாலும், காலப்போக்கில் இதயம் நின்றுவிடும் நாளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
உங்கள் குடும்பம், மனைவி மற்றும் நண்பர்களை நேசியுங்கள்...🙏 அவர்களை நன்றாக நடத்துங்கள், அவர்களை ஏமாற்றாதீர்கள், ஒருபோதும் நேர்மையற்றவர்களாகவோ அல்லது துரோகமாகவோ இருக்காதீர்கள்.
நாம் வயதாகி, புத்திசாலியாக மாறும்போது, 300 அல்லது 3000 அல்லது 2-4 லட்சம் மதிப்புள்ள கடிகாரத்தை அணிவது - எல்லாமே ஒரே நேரத்தை பிரதிபலிக்கிறது என்பதை படிப்படியாக உணர்கிறோம்.
நம்மிடம் 100 அல்லது 500 ரூபாய் பர்ஸ் இருந்தாலும் - உள்ளே இருக்கும் அனைத்தும் ஒன்றுதான்.
5 லட்சம் மதிப்புள்ள காரை ஓட்டினாலும் சரி, 50 லட்சம் மதிப்பிலான காரை ஓட்டினாலும் சரி. பாதையும் தூரமும் ஒன்றுதான், நாம் ஒரே இலக்கை அடைகிறோம்.
நாம் வசிக்கும் வீடு, அது 300 சதுர அடியாக இருந்தாலும் சரி, 3000 சதுர அடியாக இருந்தாலும் சரி - தனிமை எல்லா இடங்களிலும் ஒன்றுதான்.
உங்கள் உண்மையான உள் மகிழ்ச்சி இந்த உலகத்தின் பொருள்களிலிருந்து வரவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
நீங்கள் முதல் வகுப்பில் பறந்தாலும் சரி, எகானமி வகுப்பிலா இருந்தாலும் சரி, விமானம் கீழே விழுந்தால், நீங்களும் கீழே இறங்குவீர்கள்.
எனவே.. உங்களுக்கு நண்பர்கள், சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன், நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள், சிரிக்கிறீர்கள், பாடுகிறீர்கள், மகிழ்ச்சி மற்றும் துக்கத்தைப் பற்றி பேசுகிறீர்கள், அதுதான் உண்மையான மகிழ்ச்சி!
மறுக்க முடியாத வாழ்க்கை உண்மை:
பணக்காரர் ஆவதற்காக உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்காதீர்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொடுங்கள். அவர்கள் வளரும்போது, பொருள்களின் விலையை அல்ல, மதிப்பை அறிவார்கள்.
வாழ்க்கை என்றால் என்ன?
வாழ்க்கையை நன்றாக புரிந்து கொள்ள மூன்று இடங்கள் உள்ளன:
- மருத்துவமனை
- சிறை
- சுடுகாடு
ஆரோக்கியத்தை விட சிறந்தது எதுவுமில்லை என்பதை மருத்துவமனையில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
சுதந்திரம் எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை சிறையில் நீங்கள் காண்பீர்கள்.
சுடுகாட்டில் வாழ்க்கை ஒன்றுமில்லை என்பதை உணர்வீர்கள்.
இன்று நாம் நடக்கும் நிலம் நாளை நமதாக இருக்காது.
இனிமேல் கண்ணியமாக நடந்துகொள்வோம், பெற்ற பெற்றோருக்கு நன்றி செலுத்துவோம்.
இந்தச் செய்தியை வேறொருவருடன் பகிர்ந்து கொள்ள முடியுமா? மேலும் எனது பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், எனது உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், எனது சமூகம், எனது நாடு அனைவரையும் நான் நேசிக்கிறேன்.
அனைவருக்கும் ஆசிகள் கிடைக்கட்டும்.
அனைவரும் நலமாக இருக்கட்டும்.
எதிர்பார்ப்புகள் வேறு
எதார்த்தங்கள் வேறு
இரு வேறு விசயங்களை
ஒரே தட்டில் வைத்து எடை
போடுவது நமது தவறு.
பேசும்போது அறிந்தவற்றையே திரும்பக் கூறுகிறோம்...
ஆனால், கேட்கும்போதோ புதிதாக ஒன்றை அறிய வாய்ப்பிருக்கிறது.
எனவே, குறைவாகப் பேசி, நிறைய கேட்போம்.
தண்ணீர் கீழ் நோக்கிப் பாய்வதால்
தாழ்ந்ததும் இல்லை !
நெருப்பு மேல்நோக்கி எரிவதால்
உயர்ந்ததும் இல்லை!
இயல்புகள் வெவ்வேறு.
குடும்பம் என்கிற அமைப்பு
கொஞ்சம் குறைபாடுகளும், அதிக நன்மைகளும் வாய்ந்தது என்பது சமூகவியல் துறையில் ஆழம் கண்டவர்களின் கணிப்பு.
உலகப்புகழ்பெற்ற ஒரு சிறுகதை.
கணவனிடம் ‘வாட்ச்’ இருந்தது.
அதற்கு தங்கத்தில் செயின் வாங்க கணவனுக்கு ஆசை. ஆனால், பணமில்லை. அவன் மனைவிக்கு மிக அழகான கூந்தல். அதை முடித்து வைக்க, ‘தங்க கிளிப்’ வாங்க ஆசை. ஆனால், வசதியில்லை. !
முதல் திருமண ஆண்டுவிழாவில்,
இந்த வாட்சை வைத்து என்ன செய்ய என்று விற்று விட்டு, மனைவி கூந்தலுக்கு தங்க கிளிப் வாங்கி வந்தான் கணவன்.
ஆனால், தன் அழகான கூந்தலை வெட்டி, விற்று விட்டு கணவன் வாட்சுக்கு செயின் வாங்கி வந்திருந்தாள் மனைவி. ஒருவருக்காக மற்றவர், கஷ்டப்பட தயாராகும்போது அங்கு அன்பு வலுவடைகிறது. நம்மை கஷ்டப்படுத்தியவர்கள் யாரையும் நமக்கு பிடிப்பதில்லை. நமக்காக கஷ்டப்பட்ட யாரையும் நாம் வெறுப்பதில்லை.
கணவன்- மனைவிக் கிடையிலான உறவு சுமுகமாக இருக்க வேண்டும். பெற்றோர்-பிள்ளைகளுக் கிடையிலான பாசம் பலமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் தமக்கிடையே ஒருமித்த உணர்வுடன் இருக்க வேண்டும்.
இதையே நாம் இனிய உறவுகள் என்போம். குடும்பம் என்பது ஒரு தனிச்சொல்லாயினும்
அதைப் பிரித்துப் பார்க்கும்போது
அதில் ‘’கொடு இன்பம்’’ என்கின்ற தொனி ஒலிக்கிறது. எனவே, இன்பத்திற்குப் பஞ்சமில்லாத உறவுகளின் சங்கமமே குடும்பம் எனப்படும்.
பாதைகளற்ற பயணத்தில் அனுபவங்களே பாதங்கள்.
தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா போன்ற உறவுகள் பயணித்த பாதையில் அவர்களின் பாதச் சுவடுகளை அடியொற்றி நாம் நடத்தும் இந்த வாழ்க்கைப்பயணம் எவ்வளவு சுவாரஸ்யமானது.
திருக்கடையூரில் எண்பது வயதுத் தாத்தாவுக்கும் எழுப்பத்தைந்து வயதுப் பாட்டிக்கும் பேரன் பேத்திகள் சூழ எண்பதுக்கு எண்பது நடைபெறுவதை உலகில் வேறு எந்தப் பகுதியில்
காண முடியும்.
குடும்பம் அனைவருக்கும் நிழல் தரும் ஆலமரம் மட்டுமன்று. ஆண்டாண்டு காலமாய் நீண்ட மரபுகளைத் தாங்கும் காலமரமும் கூட.
நிம்மதி என்பது
இருப்பதில் திருப்தி படுவது
தானே தவிர.
இல்லாததிலும் இழந்ததிலும்
தேடுவதல்ல.
அறிவுரை இலவசமாக
கிடைத்தாலும்
அனுபவம் பட்டால்தான்
புரியும்....
ஒரு அரை லிட்டர் நீர் அருந்துங்கள் .அடுத்து சிறுநீர் எப்போது கழிக்கிறீர்கள் என குறியுங்கள் .(அடக்கிவைக்கக்கூடாது.சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்ததும் கழித்துவிட்டு வேண்டும் )
உடனே மறுபடியும் அரை லிட்டர் நீர் அருந்துங்கள். மறுபடியும் சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடன் கழித்துவிடுங்கள் இப்படியே உங்கள் வேலை கெடாமல் இதனை 3 நாள்கள் தொடர்ந்து செய்யுங்கள்
முதல் முறை நீர் அருந்தி நீர் கழிக்க எவ்வளவு நேரம் ஆனதோ அதில் பாதி இரண்டாம் முறை , இரண்டாம் முறை ஆன நேரத்தில் பாதி மூன்றாம் முறை என இருந்தால் உங்கள் சிறுநீரகம் ஆரோக்கியமானது.
உதாரணமாக 1 time 60 மினிட்ஸ் 2 time 30 மினிட்ஸ் 3 தடவை 15 minutes என நீர் வெளியேற வேண்டும்.
இதில் தவறு இருந்தால் இயற்கையாகவே சரி செய்யலாம் .
ஆனால் ஒன்று ஒரு சிறுநீரகம் மெல்ல மெல்ல கெட்டுப்போக எத்தனை காலம் அகின்றதோ அதே காலம் அது இயற்கையாகவே சரி செய்ய எடுத்துக்கொள்ளும்.
உங்களது சிறுநீரகம் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டியது அவசியம். தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்தாலே உங்களது சிறுநீரகம் சரியாக செயல்பட தொடங்கிவிடும்.
உங்களது சிறுநீரகத்தை சுத்தம் செய்ய அதிக கவனம் தேவைப்படுகிறது என்றால், நீங்கள் புரோட்டின் குறைவான உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். சிக்கன், மீன் போன்றவற்றை உண்ணாமல் இருக்க வேண்டும்.
அதோடு, காபி, சாக்லேட் மற்றும் பிற கால்சியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் ஆசிட்டை உருவாக்கும் பொருட்களை சாப்பிடுவதை தடுக்க வேண்டியது அவசியம்.
குதிரைவாலியை நாம் நமது அன்றாட உணவு முறையில் அதிகமாக சேர்த்துக்கொள்வதில்லை. இது சிறுநீரக கல் மற்றும் சீறுநீரகத்தை சுத்தம் செய்ய பெரிதும் உதவுகிறது.
வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப்பழம் ஆகியவை சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உகந்த பழங்களாகும்.
மெக்னீசியம் சிறுநீரக கற்களை வளரவிடாமல் தடுக்கிறது. மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரக கற்களின் வளர்ச்சியை தடுக்க முடியும். கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா, ஒட்ஸ் மீல் போன்றவற்றில் மெக்னீசியம் அதிகம் உள்ளது.
கவனம் தேவை ! விழிப்புணர்வு பதிவு !
(கணக்கு தொடங்கி மூன்று மாதம் முடிந்தால் தான் முழுப்பணமும் கொடுப்பார்களாம்.)
இதை யார் இவ்வளவு மெனக்கெட்டு செய்திருப்பார்கள்?. இதனால் அவர்களுக்கு என்ன லாபம்?. இதுபோன்ற சந்தேகங்களுடன் பிரபல வக்கீலுடன் கலந்து பேசியபோது பல அதிர்ச்சியான செய்திகளை அறிய முடிந்தது!.
வழக்கறிஞர் கூறியதாவது.
இவரது ஆதார் காப்பியையும், அதிலிருந்த கையெழுத்தையும் போர்ஜரி நபர் கைப்பற்றியதோடுஇவரது புகைப்படத்தையும் சேகரித்திருக்கிறார். பின் அந்த வங்கியில் இருக்கும் யாரோ ஒரு அதிகாரியின் கூட்டு முயற்சியோடு இந்த கணக்கு தொடங்கப் பட்டிருக்க வேண்டும். வங்கியில் இருக்கும் அந்த கருப்பு ஆடுதான் இங்கே மிக முக்கியமான குற்றவாளி. இந்த கணக்கின் மூலம் சிவில் 100% சரியாக இருந்தால், பிராப்பர்ட்டி செக்யூரிட்டி இல்லாமல் குறைந்தது ரூ. ஐந்து லட்சம் வரை கடன் பெறமுடியும். அப்படி வாங்கிய கடனை ஒரு தவணை கூட கட்ட மாட்டார்கள். பின் இவருக்கு தகவல் வரும்போதுதான் இந்த விவரங்களே தெரியவரும்.
இப்போது இவர் இந்த வங்கி கணக்கை முடிக்காமல் இருந்திருந்தால் இந்த வங்கியின் மீது மூன்று வகையான வழக்கு தொடர்ந்திருக்க முடியும். மிகப்பெரிய தொகையை நஷ்டஈடாக பெற்றிருக்க முடியும். இதையெல்லாம் தெரிந்ததால்தான் இவரது வங்கி கணக்கை உடனடியாக முடித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது போன்ற தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்து கொள்ள நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நமது ஆதார் ஜெராக்ஸ் காப்பி , பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்றவற்றை எங்கும் விட்டு வைக்காதீர்கள். ஜெராக்ஸ் கடையில் நகல் எடுக்கும் போது கவனமாக இருப்பதோடு, போட்டோ ஸ்டூடியோவில் கனிணியில் சேகரிக்கும்போது டெலிட் செய்யும்படி வலியுறுத்தல் அவசியம். குறிப்பாக உங்கள் கையொப்பம் இட்ட பேப்பர்களை வெளியிடங்களில் தவற விட்டுவிடாதீர்கள் என்றார்.
"எப்படியெல்லாம் உலகம் மாறிக்கொண்டு வருகிறது பாருங்கள். எதில்தான் கவனம் வைப்பது? யாரைத்தான் நம்புவது?. இறைவா மக்களை காப்பாற்று."!
வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...