Total Pageviews

Friday, November 1, 2024

நிம்மதி என்பது இருப்பதில் திருப்தி படுவது தானே தவிர. இல்லாததிலும் இழந்ததிலும் தேடுவதல்ல.

எதிர்பார்ப்புகள் வேறு
எதார்த்தங்கள் வேறு
இரு வேறு விசயங்களை
ஒரே தட்டில் வைத்து எடை
போடுவது நமது தவறு.

பேசும்போது அறிந்தவற்றையே திரும்பக் கூறுகிறோம்...


ஆனால், கேட்கும்போதோ புதிதாக ஒன்றை அறிய வாய்ப்பிருக்கிறது.
 

எனவே, குறைவாகப் பேசி, நிறைய கேட்போம்.

தண்ணீர் கீழ் நோக்கிப் பாய்வதால்
தாழ்ந்ததும் இல்லை !
நெருப்பு மேல்நோக்கி எரிவதால்
உயர்ந்ததும் இல்லை!
இயல்புகள் வெவ்வேறு.

குடும்பம் என்கிற அமைப்பு
கொஞ்சம் குறைபாடுகளும், அதிக நன்மைகளும் வாய்ந்தது என்பது சமூகவியல் துறையில் ஆழம் கண்டவர்களின் கணிப்பு.

உலகப்புகழ்பெற்ற ஒரு சிறுகதை.

கணவனிடம் ‘வாட்ச்’ இருந்தது.
அதற்கு தங்கத்தில் செயின் வாங்க கணவனுக்கு ஆசை. ஆனால், பணமில்லை. அவன் மனைவிக்கு மிக அழகான கூந்தல். அதை முடித்து வைக்க, ‘தங்க கிளிப்’ வாங்க ஆசை. ஆனால், வசதியில்லை. !


முதல் திருமண ஆண்டுவிழாவில்,
இந்த வாட்சை வைத்து என்ன செய்ய என்று விற்று விட்டு, மனைவி கூந்தலுக்கு தங்க கிளிப் வாங்கி வந்தான் கணவன்.

ஆனால், தன் அழகான கூந்தலை வெட்டி, விற்று விட்டு கணவன் வாட்சுக்கு செயின் வாங்கி வந்திருந்தாள் மனைவி. ஒருவருக்காக மற்றவர், கஷ்டப்பட தயாராகும்போது அங்கு அன்பு வலுவடைகிறது. நம்மை கஷ்டப்படுத்தியவர்கள் யாரையும் நமக்கு பிடிப்பதில்லை. நமக்காக கஷ்டப்பட்ட யாரையும் நாம் வெறுப்பதில்லை.

கணவன்- மனைவிக் கிடையிலான உறவு சுமுகமாக இருக்க வேண்டும். பெற்றோர்-பிள்ளைகளுக் கிடையிலான பாசம் பலமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் தமக்கிடையே ஒருமித்த உணர்வுடன் இருக்க வேண்டும்.

இதையே நாம் இனிய உறவுகள் என்போம். குடும்பம் என்பது ஒரு தனிச்சொல்லாயினும்
அதைப் பிரித்துப் பார்க்கும்போது
அதில் ‘’கொடு இன்பம்’’ என்கின்ற தொனி ஒலிக்கிறது. எனவே, இன்பத்திற்குப் பஞ்சமில்லாத உறவுகளின் சங்கமமே குடும்பம் எனப்படும்.

பாதைகளற்ற பயணத்தில் அனுபவங்களே பாதங்கள்.
தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா போன்ற உறவுகள் பயணித்த பாதையில் அவர்களின் பாதச் சுவடுகளை அடியொற்றி நாம் நடத்தும் இந்த வாழ்க்கைப்பயணம் எவ்வளவு சுவாரஸ்யமானது.

திருக்கடையூரில் எண்பது வயதுத் தாத்தாவுக்கும் எழுப்பத்தைந்து வயதுப் பாட்டிக்கும் பேரன் பேத்திகள் சூழ எண்பதுக்கு எண்பது நடைபெறுவதை உலகில் வேறு எந்தப் பகுதியில்
காண முடியும்.

குடும்பம் அனைவருக்கும் நிழல் தரும் ஆலமரம் மட்டுமன்று. ஆண்டாண்டு காலமாய் நீண்ட மரபுகளைத் தாங்கும் காலமரமும் கூட.
 

 நிம்மதி என்பது
இருப்பதில் திருப்தி படுவது
தானே தவிர.
இல்லாததிலும் இழந்ததிலும்
தேடுவதல்ல.

அறிவுரை இலவசமாக
கிடைத்தாலும்
அனுபவம் பட்டால்தான்
புரியும்....

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...