Total Pageviews

Wednesday, November 27, 2024

வாழ்க்கையில் விரக்தியில் இருந்து விடுபடுவது எப்படி?

 

மன அழுத்தத்தின் ஒரு வெளிப்பாடு மனவிரக்தி.இனம்புரியாத கவலை, நம்பிக்கையின்மை, விரக்தி போன்ற உணர்வுகள், தனிமையில் அழுவது, சோர்வு, பசியின்மை போன்றவை மன அழுத்தத்தின் வெளிப்பாடுகளாகும்.


 விரக்தி மேலீடும்போது, நமக்கு நெருக்கமான உறவுகளிடம் அல்லது நண்பர்களிடம் நம் கவலைகளை பகிர்ந்து கொள்ளும் போது, மன அழுத்தம் குறைகிறது.

எங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும், என் உறவினர் இவ்வாறு விரக்தியடைந்து, மன சஞ்சலத்தோடு என்னைத் தேடி வரும் போது, அவருக்கு ஆறுதலும் தேறுதலும் கூறுவது என் வாடிக்கை.திரும்பிச்செல்லும்போது, நன்றாக இருப்பதாகக் கூறிச் செல்வார்.

எந்த நேரமும் ஏற்பட்ட பிரச்சினையை எண்ணிக் கலங்காமல், புத்தகம் வாசிப்பில் மனதை செலுத்தலாம்.

வாழ்க்கையில் நடந்த நல்ல நிகழ்வுகளை அசைபோடலாம்.

மனதிற்குப் பிடித்த இடங்களுக்குச் சென்று வரலாம்.முக்கியமாக கோயில், பூங்காக்கள்.இவ்விடங்களுக்கு செல்வதன் மூலம், புதிய காற்றை சுவாசிக்கவும், உடலுக்குப் புத்துணர்ச்சித் தரக்கூடிய நடைப்பயிற்சியும் மனதை இலேசாக்கும்.

மனக் கவலையினால் உடலில் இருக்கும் தசைகள் இறுகும். அதைத் தடுத்து, தசைகளை இலேசாக்கி, உடல் சோர்வடைவதையும் தடுக்கிறது நடைப்பயிற்சி.

பூங்காவில் நடைப்பயிற்சி எனும் போது புதிய நண்பர்கள் அறிமுகம் ஏற்படலாம்.அவர்களோடு அளவளாவும்போது, மனதில் தோன்றிய அழுத்தமும், விரக்தியும் நீங்கி, நம்மையுமறியாமல் மனமகிழ்ச்சி ஏற்படும்.

மனதிற்குப் பிடித்த இசையைக் கேட்கலாம்.மென்மையான இசை , மனதை வேறு சிந்தனைக்குச் செல்வதைத் தடுக்கும்.

தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். தியானத்தின் மூலம் கற்பனையில் இயற்கைக் காட்சிகளைக் காண்பது மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.

கடைகளுக்குச் சென்று, பார்வையிடல், விருப்பப் பொருட்களை வாங்குதல் போன்றவையும் விரக்தியிலிருந்து மனதை உற்சாகத்திற்கு கொண்டு செல்லும்.

வீட்டில் தோட்டம், மாடித்தோட்டம் என்றிருந்தால் அவற்றின் பராமரிப்பில் கவனத்தைச் செலுத்தினாலும் விரக்தி மனப்பான்மை திசைமாறும்.

வீட்டுக் குழந்தைகளோடு விளையாடுதல், வேறு வேலைகளில் ஈடுபடுதலும் இதற்கு தீர்வாக அமையும்.

இந்த உலகில் பிறந்த எல்லோருக்கும் ,எல்லாமே கிடைத்து விடுவதில்லை.

விடை கிடைக்காத கேள்விகளும், தீர்வு கிடைக்காத பிரச்சினைகளும் நிறைய இருக்கின்றன. 

வாழ்க்கை பெரும்பாலும் எதிர்பாராத விளைவுகளை நம்மை நோக்கி வீசுகிறது.

இந்த தருணங்கள் நம்மை மனநிறைவிலிருந்து வெளியேற்றி, புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கின்றன.

கெட்ட எண்ணங்களிலிருந்து விடுபடுவது எப்படி?

உங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம் - நீங்கள் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும்.!

No comments:

Post a Comment

வாழ்க்கையில் விரக்தியில் இருந்து விடுபடுவது எப்படி?

  மன அழுத்தத்தின் ஒரு வெளிப்பாடு மனவிரக்தி.இனம்புரியாத கவலை, நம்பிக்கையின்மை, விரக்தி போன்ற உணர்வுகள், தனிமையில் அழுவது, சோர்வு, பசியின்ம...