Total Pageviews

Sunday, November 3, 2024

வாழ்க்கை என்பது !

வாழ்க்கை வேடிக்கையானது, நீங்கள் ஒன்றுமில்லாமல் வருகிறீர்கள், பிறகு நீங்கள் எல்லாவற்றிற்கும் போராடுகிறீர்கள், பிறகு எதுவுமில்லாமல் போகிறீர்கள்.

இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் இழக்கவும் ஏதுமில்லை. தொலைக்கவும் ஏதுமில்லை. உரிமை கொண்டாடவும் ஏதுமில்லை. உங்கள் உடலும் கூட உங்களுக்கு சொந்தம் இல்லை.

கவலை இல்லையெனில் மனிதனும் இல்லை. சூழ்நிலைகள் மாறும் போது பலரது வார்த்தைகள் மாறும். சிலரது வாழ்க்கையும் மாறும்.

ஆகவே எதற்கும் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. இருக்கும் வரை உங்கள் வாழ்வை சிறப்பாக வாழ்ந்துவிட்டு செல்லுங்கள்.

வாழ்வில் ஒழுக்கமும் நேர்மையும் இருந்து விட்டால் செய்யும் செயல் அனைத்திலும் அழகும் கலையுணர்வும் வந்து விடுவதை உங்களால் காண முடியும்.

மனமே கடவுளின் இருப்பிடம் அதை  தூய்மையாக வைத்திருப்பது உங்கள் கடமை.

சில நேரங்களில் 


பிறர் உங்களை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை.

நல்ல சக்தியும் புத்தியும் கடவுள் உங்களுக்கு அளித்திருக்கிறார்.அதன் மூலம் நீங்கள் நற்செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்.

உண்மையான அன்பை மற்றவர்களுடன் பகிருங்கள். அது பல மடங்காக உங்களுக்கு வேறு விதங்களில் திரும்ப கிடைக்கும்.

இந்த மாய உலகில் மாறாத ஒன்று மாற்றங்கள் மட்டுமே.


எந்த மாற்றங்களிலும்  மாறாத ஒன்று எல்லாம் வல்ல இறைவனின் அன்பும் ஆதரவும் மட்டுமே என்று நினைவில் கொள்ளுங்கள்.✍🏼🌹

No comments:

Post a Comment

வாழ்க்கை என்பது !

வாழ்க்கை வேடிக்கையானது, நீங்கள் ஒன்றுமில்லாமல் வருகிறீர்கள், பிறகு நீங்கள் எல்லாவற்றிற்கும் போராடுகிறீர்கள், பிறகு எதுவுமில்லாமல் போகிறீர்கள...