வாழ் வாதாரம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் நிதி நிலைத்தன்மையை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய கூறாகும். இது ஒரு நபரின் வருமானத்தை மேலாண்மைப் படுத்துவதை, செலவுகளை கட்டுப்படுத்துவதை, சேமிப்பை உருவாக்குவதை, மற்றும் பணப் புழக்கத்தை மேம்படுத்துவதை உள்ளடக்கியது. வாழ்வாதாரம் ஒரு நபரின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
வாழ்வாதாரத்தின் முக்கிய நோக்கங்கள்:
- நிதி நிலைத்தன்மையை உருவாக்குதல்
- பணப்புழக்கத்தை மேம்படுத்துதல்
- வருமானத்தை மேலாண்மைப்படுத்துதல்
- செலவுகளை கட்டுப்படுத்துதல்
- சேமிப்பை உருவாக்குதல்
வாழ்வாதாரம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒரு நபரின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
வாழ்வாதாரம் என்பது மக்களின் திறன்கள், சொத்துக்கள், வருமானம் மற்றும் வாழ்க்கைத் தேவைகளைப் பாதுகாக்கத் தேவையான செயல்பாடுகளை உள்ளடக்கியது.
பணம் பத்தும் செய்யும் என்பதும் தெரியும், பணம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்பதும் தெரியும்.
சுயமரியாதையுடன் வாழ அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இறக்கும் வரை பொருள் தேவைப்படுகிறது.
அந்த காலத்திலேயே திருவள்ளுவர் கூறி விட்டார். "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை " அப்புறம் என்ன? நாம் இந்த உலகில் கௌரவமாக வாழ வேண்டும் என்றால் பணம் தான் உங்களை முன்னிருத்தும். பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்குமாம். அப்புறம் நாம் மட்டும் என்னவாம்?
பணமே பிரதானம் இல்லை இதை சொல்ல குறைந்தபட்சம் தேவையான அளவு பணம் சம்பாரித்த பின்பு தான் கூறமுடியும். அதன் பொருளை மற்றவர் உணர முயல்வர். நான் தெருவில் வாழும் பட்சத்தில் இதை கூற, கேட்க கூட யாரும் இருக்க மாட்டார்கள்.
அடுத்தவர்களை விடுங்கள் நானே நினைப்பேன் நம்மால் சம்பாரிக்க முடியவில்லை அதனால் தான் பணம் பிரதானம் இல்லை என கூறுகிறோமோ. அனுபவிக்காமல் ஒன்றை பற்றி கருத்து கூற முடியுமா.
சரி மற்ற பணக்காரர்களின் வாழ்வை கண்டு தெரிந்துகொண்டேன். தீக்குள் விரல் வைத்தால் சுடும் என்பதை அனுபவித்துத்தான் அறியவேண்டுமா, அறிவு இருந்தால் போதாது என விவாதம் செய்யமுடியும். இதற்க்கு யாரெல்லாம் பணக்காரர்கள் என்று தெரியவேண்டும்.
டாடாவும் பணக்காரர் தான் விஜய் மல்லையா ஏழை இல்லை. இங்கு யார் பணக்காரர் 1500கோடி தன் சொந்த சேமிப்பு பணத்தை கொரொனா காலத்தில் கொடையாக அரசாங்கத்திற்கு தந்தவர் டாடா. சுமார் ஒவ்வொரு இந்தியனுக்கும் 11+ரூபாய்…
முதலில் பணம், பணக்காரன், எனது தேவையின் அளவு போன்றவற்றை பற்றிய புரிதல் வேண்டும். அதிக பணம் சம்பாரிப்பது குற்றமோ இல்லை பாவமோ இல்லை. எப்படி சம்பாத்தியம் செய்கிறோம் என்பது மிக முக்கியம். இதைவிட அதி முக்கியம் அவ்வாறு ஈட்டிய பணத்தை என்ன செய்கிறோம் என்பது தான்.
என்னை பொருத்தவரை வாழ்க்கைக்கு பணம் முக்கியம். பணமே வாழ்க்கை அல்ல. 40 வயதில் நான் பணம் ஈட்டியபோது பெற்ற சந்தோசத்தைவிட என் குடும்ப கடமைகளை (என் சுற்றமும் நட்பும் சரியாக செலவு செய்தான் என அளவிடும் வகையில்) நிறைவேற்றிய பின்பு தற்போது போது கிடைக்கிறது.
நாம் யாரிடமும் நம் தேவைகளுக்கு கையை கட்டிக்கிட்டு இருக்க வேண்டாம் என்றால்…..,அவர்கள் எது செய்தாலும் ஜால்ரா போடாம இருக்க வேண்டும் என்றால்….. கண்டிப்பாக நமக்கு பணம் தேவை… மற்றபடி அதிகம் பணம் இருப்பவனை இந்த சமூகமும் உறவுகளும் மதிக்கிறது என்பது ஒரு மிகப்பெரிய பொய்.
அதிகம் பணம் இருப்பவனிடம் இந்த சமூகமும் உறவுகளும் தங்களது வாலை சுருட்டிக் கொண்டு இருக்கும் என்பது வேண்டுமானால் உண்மை…
பணத்திற்காக கிடைக்கும் மரியாதை என்பது உண்மையான மரியாதை கிடையாது… நாம் கடைசி காலத்தில் நாய் படாதபாடு படுவதற்கு மற்றும் நம் குடும்பம் நம்பிக்கை துரோகம் போன்றவற்றை சந்திப்பதற்கும் இது போன்ற மரியாதையை எதிர்பார்ப்பதுதான் காரணம்….
பணம்தான் நமக்கு மரியாதை கொடுக்கும் என்பது தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டு கொள்வது போன்றது….
நல்லவர்களை மதியுங்கள்….
எந்த பிரச்சினை வந்தாலும் கவலை படாமல் நமக்காக குரல் கொடுக்கும் உறவுகளை நேசியுங்கள்…
நமக்கு ஒன்று என்றால் நம்மை விட்டுக் கொடுக்காம இருக்கும் உறவுகளை பாராட்டுங்கள்…
அதை விட்டுவிட்டு அதிக பணம் வைத்து இருப்பவனை மட்டும் மதித்து உங்கள் குடும்பம் நாசமாக வழி தேட வேண்டாம்…
வெறும் பணத்தை மட்டும் வைத்துக்
கொண்டு எந்த பிரச்சனை வந்தாலும் காதில் போடாம செல்லும் பணக்கார உறவுகள் தேவை இல்லை.
No comments:
Post a Comment