தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியம். தூக்கமின்மையால் ஒருத்தர் அவதிபடுகிறார் என்றால் அதை போன்ற ஒரு மனம் சார்ந்த சித்ரவதை வேறு எதுவும் கிடையாது.
ஒருவர் பசியுடனும் தாகத்துடனும் இருந்தாலும் தூக்கம் வராது.
ஒருவர் பசியுடனும் தாகத்துடனும் இருந்தாலும் தூக்கம் வராது.
மனிதனுக்கு மனதில் துக்கம் இருந்தால் தூக்கமற்றுப் போகும்.
தூக்கமற்று இருப்பது என்பது மிக பெரிய கொடுமை.
ஒருவருக்கு நல்ல தூக்கம் இருக்கும்போது புத்தி நல்ல கூர்மையாக வேலை செய்கிறது.
தொடர்ந்து ஒருவர் சாதரணமாக தூங்க வேண்டிய அளவிற்கு கூட தூங்க முடியாமல் போகும்போது பல வித உடல் குறைபாடுகளுக்கு ஆளாகின்றார்.
தூக்கமற்று இருப்பது என்பது மிக பெரிய கொடுமை.
ஒருவருக்கு நல்ல தூக்கம் இருக்கும்போது புத்தி நல்ல கூர்மையாக வேலை செய்கிறது.
தொடர்ந்து ஒருவர் சாதரணமாக தூங்க வேண்டிய அளவிற்கு கூட தூங்க முடியாமல் போகும்போது பல வித உடல் குறைபாடுகளுக்கு ஆளாகின்றார்.
எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகுதல், ஞாபக சக்தியை இழத்தல், நம்பிக்கை இழத்தல், பள்ளி மாணவர்களாக இருந்தால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகுதல் போன்ற குறைபாடுகள் தூக்கமின்மையால் உண்டாகும்.
தூக்கமின்மையால் மக்கள் அவதி படும்போது நிறைய தவறுகள் செய்கின்றனர். விபத்துக்கள் அதிகரிக்கின்றன. ஒரு நாளைக்கு 5 மணி நேரம் குறைவாக தூங்குபவர்கள் தான் அதிக பட்சமாக சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதுமட்டும் அல்லாது மற்றவர்களிடம் விரோத மனப்பான்மையுடன் பழகுதல், சக ஊழியர்களிடம் தேவை இல்லாமல் சண்டை போட்டு கொள்வது, மது பழக்கத்திற்கு அடிமையாகுதல், உடல் எடை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சரியான முடிவுகள் எடுக்கும் தன்மையை இழத்தல் போன்ற பல பிரச்சனைகள் தூக்கமின்மையால் உண்டாகிறது என்று ஆராய்சிகள் தெரிவிக்கின்றது.
போதுமான அளவு தூக்கம் ஒருவருக்கு இருக்கும்போது அவருடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. சக்கரை வியாதி தோன்றுவதற்கு வாய்ப்பில்லாமல் போகின்றது. வேலை பார்க்கும் இடத்தில் சிறப்பாகவும் பாதுகாப்பகவும் வேலை செய்வதற்கு ஏதுவாகிறது. இதயம் சார்ந்த வியாதிகளில் இருந்தும், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்தும் விடுபடுவதற்கும் வாய்ப்பு உருவாகிறது.
சரி, தூக்கமின்மையால் அவதிபடும் ஒருவர் தியானம் செய்வதின் மூலம் பலன் பெற முடியுமா?
நிச்சயம் முடியும், என பல ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.
தூக்கமின்மைக்கு பெரும்பான்மையானவர்கள் கூறும் காரணம் மனதில் அலை மோதும் பல வித எண்ணங்கள். இந்த எண்ணங்கள் அவர்களை தூங்க விடாமல் அவதியுற செய்யும்.
ஒரு சில நிமிடங்கள் செய்யப்படும் தியானத்தின் மூலம் அவர் மனதில் குமிந்துள்ள தேவை இல்லாத எண்ணங்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்போது அங்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டு நல்லபடியாக தூங்க முடியும்.
தியானம் என்பது ஒருவருடைய நினைவுகளை கட்டுபட்டுத்தகூடிய அருமையான பயிற்சியாகும்.
ஒருவருடைய நினைவுகள் தேவையான அளவிற்கு மட்டும் கட்டு படுத்தபடும்போது மன குழப்பம், மன சோர்வு, கவலைகள் போன்றவற்றுக்கு இடம் இல்லாமல் போகிறது. அப்படி இடம் இல்லாமல் போகும்போது ஒருவருக்கு தூக்கம் என்பது ஒரு பிரச்னை இல்லாமல் போய் விடுகிறது.
தூக்க மாத்திரைகளை கொண்டு ஒருவர் தூங்கும்போது தற்காலிக தீர்வுதான் கிடைக்குமே ஒழிய தூக்கத்திற்கான நிரந்தரமான தீர்வு கிடைக்காது. மேலும் தொடர்ந்து தூக்க மாத்திரைகளை உபயோகிக்கும்போது நாளடைவில் தூக்க மாத்திரை இல்லாமல் தூங்க முடியாது என்ற நிலையும் ஏற்படும். மேலும் உடல் சம்பந்தமான பக்க விளைவுகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் தியானம் செய்யும்போது தூக்கம் இல்லாமைக்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுகிறது. அதனால் உடலுக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.
தூங்கும் போது உடல் ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளது. உடலில் உள்ள பாகங்களும் தேவையான அளவு ஓய்வு எடுத்து கொள்கின்றன. அப்படி ஓய்வெடுத்து கொள்ளும்போது மனித இதயமும் தேவையான அளவு ஓய்வில் இருக்கிறது. இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் ரத்த அழுத்தத்தின் அளவும் 20% to 30% குறைகிறது. அப்படி ரத்தத்தின் அழுத்தம் குறையும்போது மனித மூளையும் சூடாவது தவிர்க்கபடுகிறது.
தியானம் செய்யும்போது தூக்கத்தினால் கிடைக்கும் ஓய்வுக்கு நிகரான சக்தி உடலுக்கு கிடைக்கின்றன ..
தூக்கத்தின் போதுதான் உடல் வளர்ச்சிக்கு தேவையான harmone கள் உற்பத்தி செய்ய படுகின்றன. சரியான தூக்கம் இருந்தால்தான் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி ஆகும். இது போன்று உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும், cancer போன்ற வியாதிகளை தடுக்கும் அல்லது எதிர்க்கும்விதத்தில் உதவி செய்கின்றன.
தியானம் செய்யும்போதும் தூக்கத்திற்கு இணையான ஓய்வு கிடைப்பதால்
உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி செய்யபடுவதற்கு தியானமும் ஒரு காரணம் ஆகிறது.
ஓர் இரவு முழுவதும் உங்களால் தூங்காமல் இருக்க முடியுமா? யாராக இருந்தாலும் சான்சே இல்லை என்ற பதில்தான் வரும்.
ஆனால், உலகில் 7 முதல் 18 சதவீதம் பேர் தூங்க முடியாமல் தவிப்பதாகவும் இவர்களில் 3 முதல் 13 சதவீதம் பேர் தூக்கம் மற்றும் மன அமைதிக்கான மாத்திரைகளை உட்கொண்டால்தான் உறங்க முடிகிறது என்றும் அறிவிக்கிறது மருத்துவ ஆய்வு.
ஒரு நாளில் 7 முதல் 10 மணி நேரம் தூங்கினால், உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். அது குறைந்தாலோ, கூடினாலோ ஏதோ ஒரு நோய்க்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்பதை உணர்ந்து உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது. குழந்தைகள் அதிகம் தூங்குவதையோ, முதியவர்கள் மிகக்குறைவாக தூங்குவதையோ பிரச்னையாக கருதத் தேவையில்லை.
குழந்தைகள் 16 மணி நேரம் வரை கூட உறங்குவார்கள். முதியவர்கள் 4 மணி நேரம் ஆழ்ந்து தூங்கினாலே, அது அவர்கள் வயதுக்கு நல்ல தூக்கம்தான்.