ஒரு காவல் நிலையம்..
மிகவும் பரபரப்பான ஒரு நாள்..
ஒடுக்கிய கண்கள் அழுக்கு வேஷ்டி ஜிப்பா என ஒரு முதியவர் உள்ளே நுழைகிறார்..
ஒரு மணிநேரம்.. யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தனர்..
வெளி செல்ல வந்த காவலர் என்ன வேண்டும் என கேட்க..
அய்யா!! நான் ஏழை விவசாயி.. என்னிடம் இருந்த பசு மாடு காணாமல்
போய் விட்டது.. அது வாழ்வாதாரம்..
5,6 நாட்கள் ஆகி விட்டது.. தேடி அலைந்து கிடைக்கவில்லை.. அதை கண்டு பிடித்து கொடுக்க வேண்டும் என்று பிராது கொடுக்க வந்தேன்..
காவலர் ஏட்டையாவை காட்டி அவரிடம் சொல்லும் படி கூறி சென்று விட ஏட்டையா டேபிள் அருகில் செல்ல அவரும் என்ன என்று கேட்டார்
அவரிடம் மறுபடியும் முதலில் இருந்து…
இருய்யா.. எஸ். ஐ வரட்டும்.. அப்படி ஓரமா நில்லு.
மேலும் இரண்டு மணி நேரம்..
எஸ். ஐ வர மற்றவர்கள் பார்த்து விட்டு எஸ். ஐ கிளம்பும் நேரம் அவர் முன் நிற்க அவர் யாருய்யா நீ என..
அய்யா நான் ஒரு விவசாயி.. மறுபடி முழுகதை..
அவர் மனுஷன் காணாமல் போறதையே கண்டு பிடிக்க முடியவில்லை..
நீ மாட்ட கண்டு பிடித்து தர சொல்றே..
என கூற அய்யா அது தான் என் ஒரே ஆதாரம் என்று கூற
ஏட்டுவிடம் இந்த ஆளுகிட்ட எழுதி வாங்கி அனுப்பி விட என்று கூறிட..
அவரும் நடந்ததை ஒரு பேப்பரில் எழுதி ஓர மாக வைத்து விட்டு எதிரில் உள்ள கடையில் 6 டீ கொண்டு வர சொல்லு..
அப்படியே பேப்பர் பேனா கர்பன் வாங்கி வா!!!
என கூற அவர் ஜிப்பா பையை துலாவி 32 ரூபாயை எடுத்து டேபிளின் மேல் வைக்க..
சரி நீ ஊருக்கு போய் ஒரு 50 ரூபாய் வாங்கி வா..
என கூற அய்யா எனக்கு யாரும் கடன் தர மாட்டார்கள்..
என்று கூற.. ஓரமாய் நில்லு என்று சொல்ல..
ஏறக்குறைய உள்ளே நுழைந்து 8 மணி நேரம் ஆகி விட்டது..
பிறகு ஏட்டு அவரை கூப்பிட்டு கைநாட்டு வை என கூறி உள்ளார்..
ஏட்டு டேபிள் அருகே வந்தவர் டேபிளில் இருந்த பேனாவை எடுத்து கைஎழுத்து இட்டு தன் ஜிப்பா பையில் இருந்து வட்ட சீல் எடுத்து பிராதின் பின் பக்கம் குத்தி விட்டு அங்கு கிடந்த சேரில் போய் அமர்ந்து விட்டார்..
ஏட்டு க்கு ஒன்றும் புரியாமல் முழித்து பிராதின் பின் புறம் பார்க்க கைகால் தந்தி அடிக்க தடுமாற்றத்துடன் எழுந்து நிற்க அதை பார்த்த காவலர்களிடம் பரபரப்பு தொற்றிக் கொள்ள
அடுத்த பத்து நிமிடம்..
அனைத்து காவல் அதிகாரி களும் ஆஜர்..
வந்தவர் யார் தெரியுமா???
அன்றய பிரதமர்..
அவரின் அலுவலகத்தில் கிடைக்க பெற்ற
அஞ்சல் அட்டை. வாரம் இரண்டு முறை..
ஐயா!! எனது வாழ்வாதரமான மாடு காண வில்லை.. தேடி தர காவல் நிலையத்தில் பிராதை வாங்காமல் கேவலமாக நடத்துகிறார்கள் என்று எழுதி இருந்தது..
அதை கண்டு வருந்தியவர் தான் அந்த காவல் நிலையம் சென்று கலங்க அடித்தவர்..
விவசாயிகள் தோழன் அய்யா சரன்சிங் அவர்கள்..
கண்ணில் பட்ட காணோளி..
எப்படி பட்ட மகாத்மா க்கள் இருந்த இந்தியா.
மறைக்க பட்ட வரலாறுகள்..
மக்கள் மன்றத்தில் வைக்க பட வேண்டும்..