Total Pageviews

Tuesday, June 10, 2025

மனிதம் பற்றிய உளவியல் தகவல் !

 மனிதம் பற்றிய உளவியல் தகவல்!



1. ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம்.

2. அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.

3. எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ 'மிஸ்' பண்றீங்களாம்.

4. குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர்.

5. நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம்.

6. உங்கள் மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம்.

7. சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம்.

8. மிக விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள் தானாம்.

9. முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் - ஒன்று, அவர்களுக்குள் காதல் இருக்கிறது. இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை.

10. இது கொஞ்சம் சங்கடமான விஷயம் - யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம்.

11. ஒருவர் ஒரு விடயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக்கூறி விவாதிப்பவரானால் அதை அவர் செய்திருக்கலாம் என்று
 உளவியல் கூறுகிறது.

12. ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் (ஆரம்ப உளவியல் பிரச்சினைக்கு உள்ளாக போகின்றார்) என்று அர்த்தம். 

13. ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருதமுடியும். அவர் அந்த பதற்றத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும்.

14. ஒருவர் அதிகாலையில் எழும்புபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விடயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விடயங்களும் காத்திருக்கும்.

15.  ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாரானவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

16. ஒருவர் அடிக்கடி Mobile phone யை பார்த்துக் கொண்டிருப்பது or Mobile சத்தம் *(Notification tones) கேட்டால் உடனடியாக அதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படிருக்கின்றார். என்று அர்த்தம்.

17. ஒரு மனிதன் ஆகக்குறைந்தது 6மணித்தியாளங்கள் ஆழ்நிலையில் உறங்க வேண்டும். (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்) இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது.

18. ஒருவர் அதிகமாக  Negative Thoughts ( முடியாது/கிடைக்காது/இயலாது) கதைப்பவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுப்பட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். இவர்களே அதிகம் Negative Thoughts கதைப்பவராக இருப்பார்.

Wednesday, June 4, 2025

பருவத்தே திருமணம் செய்ய வேண்டியதின் அவசியம்! 

  


 

இல்லறமே நல்லறம்; அதுவே அனைத்து அறத்திற்கும் அடிப்படை! 

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்; பருவத்தே பயிர் செய்!

திருமண வயது வந்த ஆண், பெண் இளைஞர்களே வணக்கம்! 

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்; அதை உருவாக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. 

உங்களுக்கு 22 வயதுக்கு  மேலாகிவிட்டதா? 

"விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்!", என்ற விருப்பத்துடன் உங்களது வளமான வாழ்க்கையை கற்பனை செய்யுங்கள்; கனவு காணுங்கள்;  அதற்கான செயல் திட்டங்களை உருவாக்கி வெற்றி அடையுங்கள். 

அரசு வேலை வாங்கி, வீட்டுமனை வாங்கி, வீடு கட்டிய பிறகு திருமணம் செய்யலாம் என்று நினைத்தால் 40 வயதாகிவிடும்;  அப்பொழுது நீங்கள் நினைத்த  எல்லாம்  இருக்கும்; ஆனால்,  வசதிகளை அனுபவிக்க இளமை இருக்காது; தீர்க்க இயலாத சிக்கல்களுக்கும், வெளியவே வர இயலாத மன உளைச்சல்களுக்கும் உள்ளாகும் நிலை ஏற்படும். கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! 

நீங்கள் விரும்பும் வசதிகள் அனைத்தும் எதிர்காலத்தில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது; அவைகள் அனைத்தையும் உங்கள்  தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் அடைய முடியும்; ஆனால் இழந்த இளமை மீண்டும் கிடைக்காது. 

உயிர்களுக்கு  பொறுப்பையும், கடமையையும், உரிமையையும் உணர்த்துவதற்காக கடவுள் (இயற்கை) கொடுத்த பருவம்தான் இளமைப் பருவம்;  இந்தப் பருவம் தான் பல உன்னதமான உறவுகளை உருவாக்கும் பருவம். 

சரியான பருவத்தில் திருமணம் செய்து, உன்னதமான உறவுகளை உருவாக்கும் கடவுளின் (இயற்கையின்) கட்டளையை நிறைவேற்றிய புண்ணியத்தை அடையுங்கள். 

எனவே, 

இளைஞர்களே!  இளம் பெண்களே! 



எதில் வேண்டுமானாலும் தாமதிக்கலாம்; திருமணத்தில் தாமதம் செய்யாதீர்கள்; உடனே உன்னதமான திருமண பந்தத்தில் நுழைந்து, அது கொடுக்கும் அற்புதங்களை, வாழ்க்கையின் பிரம்மாண்டங்களை அனுபவியுங்கள். 

பெற்றோர்களே!


உங்களது பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து உங்கள் மகன்களுக்கு, மகள்களுக்கு சரியான பருவத்தில் திருமணம் செய்துவைத்து வளமான சமுதாயத்தை உருவாக்குங்கள். 

உங்களது குடும்ப, சமுதாயக் கடமையை நிறைவேற்ற,  ஆலோசனை வழங்கவும், வழி காட்டவும் எப்பொழுதும் தாய் உள்ளத்துடன் எந்த எதிர்பார்ப்புமின்றி சேவை செய்கிறது;  பயன் பெறுங்கள். 
 

Thursday, May 29, 2025

சொத்துக்காக சண்டை வருவது ஏன் ?

 


 பணம், பதவி என்று வரும்போது ! உறவுகள் மறப்பது வரலாறு.!

அண்ணனை தம்பி கொன்று ஆட்சிக்கு வந்தது ! நமக்கு தெரியும் தானே!

 சொத்துக்காக மகன், பெற்றவரை வெறுப்பது !

உடன் பிறந்தவர்கள் சண்டை இடுவது  என்பது  மனித இயல்பு  தானே!

எல்லோருக்கும் எதிர்பார்ப்பு உண்டு! 
எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடையும் போது பிரச்சனை சண்டை, கருத்து 
வேறுபாடு வரத்தான் செய்யும் ! 

பங்காளிகள் என்றால் பகையாளிகள் தான் என்றாகி விட்டது!

 இப்போது உடன் பிறப்பு மகளிரும் அடக்கம். சொந்த சொத்துப்பிரச்சனை !

சமூக உயர்வு தாழ்வு, (சாதி விட்டு சாதிக் கல்யாணம்) !

அகங்காரம் !

ஆணவம் !

தான்தான் முதன்மைப்பெற்றவன் என்ற இறுமாப்பு !

வறட்டு கௌரவம் !

நல்லோர்கள் சகாவாசமின்மை !

வஞ்சகம்!

சூழ்ச்சி  !

பொறாமை !

 கபடம் !

 நம்பியோரைகெடுத்தல் !

பழிவாங்கும் நோக்குடன் செயல்படுதல் !

இவைகள் மற்றும் பல காரணங்கள். !

 

வாழ்க்கையின் அர்த்தம் என்ன ?

பரஸ்பர அன்பு, 

மரியாதை,

நல்லனவை ஏற்றல், 

அல்லனவை நீக்குதல், 

உறவை விடபணம் தான் பெரிது என்ற எண்ணம் இல்லாமை!

 நல்லொழுக்கம் ,

சான்றோர் அறிவுரைப்படி வாழ்தல், 

பிறரைப் பார்த்து பொறாமைப் படாமல் முன்னேற்றம் காணல், 

போன்றவற்றை கடைபிடித்து, 

விட்டு கொடுக்கும் மனப்பான்மை,

 ஆகியவை பலன்தரும். 

சமூகம் திருத்தகூடிய சூழ்நிலைகள் உருவாக்கப் பட வேண்டும்!

வாழ்க்கையில் முக்கியமானது என்ன?

            


 

 எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்மைத் தாங்கி பிடிக்கும் நம்  பெற்றோர்!

  • உலக பிரச்சனைகளை எதிர்கொள்ள நல்ல உடல்நலம்!
  • நம் இன்ப துன்பங்களை பகிர ,சில உண்மையான நண்பர்கள்!
  • எல்லோருக்கும் தேவைப்படுகிற,அன்பு. !
  • எல்லாமும் எளிதில் கிடைத்துவிடாது என்பதை உணர்த்தும் பொறுமை. !
  • தேவைகளை நிறைவு செய்ய பணம் !
  • மேற்கூறியதை பெற கடின உழைப்பு !
  • என்ன கவலை வந்தாலும் முகத்தில் காட்டும் அழகான சிரிப்பு !
  • பசியைப் போக்கும் உணவு!
  • நம்மைப் போன்ற வாழ்க்கை இல்லாதவர்க்கு நம்மால் முடிந்த உதவி !
  • படுத்தவுடன் வரக்கூடிய தூக்கம் !
  • நாளைய நாள் நல்லதாக அமையும் என்ற நம்பிக்கை!

 30 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு

    1. நிம்மதியான காலை வேளை.
    2. சத்தம் இல்லாத ஆபீஸ் வேலை
    3. உண்மையான உயர் அதிகாரி
    4. மாலை நேர வியர்வை
    5. குழந்தையின் அணைப்பும் முத்தமும்
    6. எப்பொழுதும் சாலை ஓரத்தில் கீரை விற்கும் பாட்டி. [எப்பிடி இருக்கம்மா என்ற கேள்வி]
    7. கடினமான நேரங்களில் வரும் மன உறுதியுடன் கூடிய பிடிவாதமான முடிவுகள்.
    8. மனைவியின் புன்னகை!
    9. சாயங்கால வானம்!
    10. சூடான தேநீர் !
    11. இந்தியாவின் வெற்றி !
    12. பழைய நண்பனை திடீர் என சாலையில் பார்ப்பது !
    13. இன்னும் இருக்கு…

"மனிதம்"

 "மனிதம்" என்பது தமிழில் ஒருவரின் மனித இயல்பு, தார்மீகம், அல்லது கருணை ஆகியவற்றைக் குறிக்கும் சொல்லாகும். "மனித நேயம்" என்ற சொற்றொடர் ஒருவரின் பிறர் மீது காட்டும் அன்பு, பாசம் மற்றும் கரிசலைக் குறிக்கும். "மனிதம்" என்ற சொல் ஒருவரின் உள்மன இயல்பைக் குறிக்கும்போது, "மனித நேயம்" ஒருவரின் செயல்களாக வெளிப்படும்.

  • மனிதம் (Manitham):
     
    மனித இயல்பு, தார்மீகம், பண்பாடு, அல்லது ஒருவரின் உள்மன இயல்பைக் குறிக்கும். ஒருவரின் இயல்பான குணாதிசயங்களைக் குறிக்கும்போது "மனிதம்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. 
  • மனித நேயம் 
    பிறர் மீதான அன்பு, பாசம், கருணை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் செயல்கள். "மனித நேயம்" ஒருவரின் பிறர் மீதான செயல்கள் மற்றும் அணுகுமுறைகளைக் குறிக்கும். 
     
     எடுத்துக்காட்டு:
  • ஒரு நபர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் அன்பும், பாசமும் காட்டுவதைக் குறிக்கும்போது, அது "மனித நேயம்" எனப்படுகிறது. மேலும், அந்த நபர் ஒரு கஷ்டப்படும் நபருக்கு உதவுவதையும், மற்றவர்களுடன் நல்ல முறையில் பழகி நடப்பதையும் "மனிதம்" எனலாம்.
      

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி சீர்காழி கோவிந்தராஜன் ஐயா பாடிய ""மனிதன் பிறக்கும் போது இருந்த குணம் போகப் போக மாறுது" பாடல் பொருத்தமான பதிலாகும்.. 

    உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம்.

    எதையும் உருப்படாமல் செய்வது குரங்கின் குணம்..

    ஆற்றில் இறங்குவோரை கொல்வது முதலை குணம்..

    ஆனால் இத்தனையும் மொத்தமாய் சேர்ந்து வாழுதடா மனித குணம்.

    """மனிதனுக்கு ஏறும் போது ஒரு புத்தி__இறங்கும்போது ஒரு புத்தி"""

    இதன் பொருள் புரியும் என்று நினைக்கிறேன்..


  • Wednesday, May 28, 2025

    Double Income No Kids என்பதன் சுருக்கமே 'டிங்க்', செலவுகளுக்கு அஞ்சி குழந்தை பெறுவதை தவிர்க்கும் தம்பதிகள் அதிகரித்து வருவது ஏன்?

     செலவுகளுக்கு அஞ்சி குழந்தை பெறுவதை தவிர்க்கும் தம்பதிகள் அதிகரித்து வருவது ஏன்?

    வாழ்க்கை முறை, குழந்தைகள், திருமணம், இந்தியா, சமூகம்                                                            குழந்தைகள் இல்லாதது தங்களது வேலை அல்லது தொழில் வாழ்க்கையில் வெற்றி பெற உதவுகிறது என 'டிங்க்' வாழ்க்கை முறையை விரும்பும் தம்பதிகள் கூறுகிறார்கள்.

    இந்திய சமூகத்தில் திருமணங்களுக்கு எந்தளவு முக்கியப் பங்கு உண்டோ, அதைவிட அதிக முக்கியத்துவம் 'குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்' என்பதைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. திருமணம் என்பதே குழந்தைகள் பெறத்தான் என்ற எண்ணம் பிரதானமாக இருக்கும் சமூகங்களுக்கு, DINK (டிங்க்) எனும் விஷயம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

    Double Income No Kids என்பதன் சுருக்கமே 'டிங்க்', ஒரு குடும்பத்தில் இரண்டு வருமானங்கள் இருந்தாலும் அல்லது கணவன்- மனைவி என இருவரும் வேலை செய்தாலும், குழந்தைகள் பெற்றுக் கொள்வதைத் தள்ளிப் போடுவது அல்லது பெற்றுக் கொள்ளவே வேண்டாம் என்ற முடிவை எடுப்பதுதான் 'டிங்க்'.

    இவ்வாறு வாழும் தம்பதிகளிடையே செலவழிக்கக்கூடிய வருமானம் (Disposable Income), அதாவது வரிகள் மற்றும் அத்தியாவசிய செலவுகள் கழிந்த பிறகு, கையில் மீதமிருக்கும் வருமானம் அதிகமாக இருக்கும் என்பதால் பலரும் இதை விரும்புகிறார்கள் என சில ஆய்வுகள் கூறுகின்றன.

    குறிப்பாக, மில்லனியல் (1980 முதல் 1990களின் நடுப்பகுதி வரையிலான காலகட்டத்திற்குள் பிறந்தவர்கள்) மற்றும் ஜென் Z (1997 முதல் 2012 வரையிலான காலகட்டத்திற்குள் பிறந்தவர்கள்) தலைமுறையைச் சேர்ந்த 23% பேருக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லை என ஒரு ஆய்வு கூறுகிறது.

    உளவியல் தாக்கங்கள் என்ன?

    வாழ்க்கை முறை, குழந்தைகள், திருமணம், இந்தியா, சமூகம்

    மதுரையைச் சேர்ந்த பிரியா 2000களின் தொடக்கத்திலேயே இந்த 'டிங்க்' வாழ்க்கை முறையைப் பின்பற்றியவர்.

    "நானும் எனது கணவரும் காதலிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே, குழந்தை வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தோம். மதுரைதான் பூர்வீகம் என்றாலும், நாங்கள் இருவரும் படித்தது, அதன் பிறகு வேலை செய்தது வெளிநாட்டில் என்பதால் இருவருக்குமே அந்த மனநிலை இருந்தது.

    ஆனால், 40 வயதைக் கடந்த பிறகு, வாழ்வில் ஒரு வெறுமையை உணரத் தொடங்கினோம். சொந்த ஊருக்குத் திரும்பினோம். ஆனாலும் அந்த வெறுமையைக் கடக்க முடியவில்லை. அதன் பிறகுதான், ஒரு பெண் குழந்தையை சட்டப்பூர்வமாகத் தத்தெடுக்கலாம் என்ற முடிவை எடுத்தோம். இப்போது குழந்தையின் சிரிப்பைப் பார்க்கும்போது, இந்த முடிவை முன்னரே ஏன் எடுக்கவில்லை என்று அடிக்கடி யோசிக்கிறேன்," என்கிறார் பிரியா.

    இந்தக் கட்டுரையின் முன்பகுதியில் குறிப்பிட்ட பியூ ஆய்வு மையத்தின் ஆய்வில் கலந்துகொண்ட 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில், 26% பேர் 'முதுமையில் தங்களை யார் கவனித்துக் கொள்வார்கள் என்பது பற்றிய கவலை' தங்களுக்கு இருப்பதையும், 19% பேர் தங்களுக்கு தனிமை குறித்த பயம் இருப்பதையும் ஒப்புக்கொண்டனர்.வாழ்க்கை முறை, குழந்தைகள், திருமணம், இந்தியா, சமூகம் 

    'டிங்க்' வாழ்க்கை முறையின் இத்தகைய உளவியல் பாதிப்புகள் குறித்துப் பேசிய கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் மருத்துவர் பூர்ண சந்திரிகா, தன்னிடம் மனநல ஆலோசனைக்கு வரும் சில தம்பதிகளில், "கணவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இருக்கும், ஆனால் மனைவிக்கு இருக்காது. சில நேரம் இதற்கு நேர்மாறாகவும் இருக்கும்" என்று கூறினார்.

    "அதற்கு வேலை, தற்போதைய பொருளாதாரச் சூழலை அப்படியே பராமரிக்க வேண்டும் என்ற கவலை போன்ற பல காரணங்களை அவர்கள் சொல்வார்கள். சிலர் இதற்காகவே விவாகரத்து வரை கூடச் செல்வார்கள்" என்கிறார். 

    அதே நேரம், பிள்ளைகளைப் பெற்று வெளிநாட்டிற்கு படிப்பு அல்லது வேலைக்காக அனுப்பிவிட்டு, தன்னிடம் மனநல ஆலோசனைக்காக வரும் பெற்றோர்களும் உண்டு என்கிறார் அவர்.

    "எனக்குத் தெரிந்து ஒருவர், நல்ல பொருளாதார நிலையில் இருக்கிறார். ஆனால் அவருடைய மகன், வேலைக்காக அமெரிக்கா சென்றவர் 5 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்தியா வருகிறார்.

    இவரோ ஒரு ஓய்வு பெற்றவர்களுக்கான சமூகத்தில் (Retirement society) வசிக்கிறார். எனவே இதில் சரி தவறு எனக் கிடையாது. முழுக்க முழுக்க ஒருவரின் தனிப்பட்ட விருப்பமே" என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா. 

    Tuesday, May 27, 2025

    மதுரைக்கு 2025-ல் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    மதுரைக்கு 2025-ல் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணிகள் வருகை கணிசமாக உயர்ந்துள்ளது.


    சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்
    மதுரை ஒரு முக்கிய சுற்றுலா தலமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. கோயில்களைத் தாண்டி, கலாச்சாரம், உணவு, பாரம்பரியம் ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். உணவு சார்ந்த பயணமும் அதிகரித்துள்ளது. இதை ஊக்குவிக்கும் வகையில், மதுரை மாநகராட்சி உணவுத் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளது.



    உள்நாட்டுப் பயணிகள் வருகை
    மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2024-ல் அதிகரித்துள்ளது. மாவட்ட சுற்றுலாத் துறையின் தகவல்படி, 2023-ல் 57,564 ஆக இருந்த வெளிநாட்டுப் பயணிகள் வருகை, 2024-ல் 98,770 ஆக உயர்ந்துள்ளது. உள்நாட்டுப் பயணிகள் வருகை 2.5 கோடியில் இருந்து 2.74 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு சுற்றுலா தலங்களில் மதுரை முக்கிய இடத்தை பிடித்துள்ளது.


    கலாச்சாரம், உணவு மற்றும் பாரம்பரியம்

    மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் திருமலை நாயக்கர் மஹால் போன்ற இடங்களுக்கு அதிக கூட்டம் வந்தாலும், சுற்றுலாத் துறையின் போக்கு மாறி வருகிறது. ஆன்மீகத்தை மட்டும் இல்லாமல், கலாச்சாரம், உணவு மற்றும் பாரம்பரியம் போன்ற விஷயங்களிலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    கோயில்களுக்கு மட்டும் சென்று திரும்பி விடுவார்கள்

    இது தொடர்பாக மூத்த அரசு அங்கீகரித்த சுற்றுலா வழிகாட்டியான நாகேந்திர பிரபு கூறுகையில், "முன்பு, பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கோயில்களுக்கு மட்டும் சென்று திரும்பி விடுவார்கள். இப்போது, வரலாற்று நடைபயணங்கள், பழைய சந்தைகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் கீழடி போன்ற தொல்பொருள் தளங்களைப் பற்றியும் கேட்கிறார்கள்" என்றார்.



    உள்நாட்டுப் பயணிகள் வருகை

    மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டுப் பயணிகள் வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிக வெளிநாட்டுப் பயணிகள் வருகின்றனர். வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை சற்று அதிகரித்துள்ளது.

    பயணத்தின் மீது அதிக ஆர்வம்
    இது தொடர்பாக மதுரை லாட்ஜ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.எஸ். கண்ணன் கூறுகையில், ஹோட்டல் அறைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகமாக உள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் அறைகள் நிரம்பி வழிகின்றன என்றார். "கடந்த சில ஆண்டுகளில், மக்களின் செலவு செய்யும் பழக்கம் பயணத்தின் மீது அதிக ஆர்வம் காட்டுகிறது" என்று அவர் கூறினார்.

    மதுரை ஒரு மையமாக உள்ளது
    மேலும், "ராமேஸ்வரம், காரைக்குடி, கன்னியாகுமரி மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களுக்குச் செல்ல மதுரை ஒரு மையமாக உள்ளது. சிறந்த சாலை மற்றும் ரயில் வசதிகள் இருப்பதால், பலர் இங்கு தங்கி மற்ற இடங்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.


    ஜிகிர்தண்டா
    மேலும் உணவு சார்ந்த பயணம் ஒரு முக்கிய அம்சமாக மாறியுள்ளது. சுற்றுலா தொகுப்புகளில் உள்ளூர் உணவு வகைகளை சுவைக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. கறி தோசை, மட்டன் பிரியாணி மற்றும் ஜிகிர்தண்டா போன்ற பிரபலமான உணவுகளைப் பலரும் விரும்பி சுவைக்கிறார்கள்.

    உணவு வகைகளை ஆராய்வதில் அதிக ஆர்வம்
    மதுரையை சேர்ந்த சுற்றுலா ஆலோசகர் வசந்த் ராஜன் கூறுகையில், "நகரின் உணவு வகைகளை ஆராய்வதில் அதிக ஆர்வம் உள்ளது. எங்கள் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் உள்ளூர் மக்கள் அடிக்கடி செல்லும் இடங்களைப் பற்றி கேட்கிறார்கள். உணவு காணொளிகள் மற்றும் சமூக ஊடக மதிப்புரைகள் இந்த ஆர்வத்தை தூண்டுகின்றன" என்றார். தற்போது இவர் உணவு சுற்றுலாவையும் வழங்கி வருகிறார்.

    கோயில் வளாகங்களில் ஆண்டுதோறும் உணவுத் திருவிழா
    இந்த மாற்றத்தை உணர்ந்து, மாவட்ட நிர்வாகம் மதுரையை யுனெஸ்கோ (UNESCO)வின் "கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க்"கின் கீழ் ஒரு உணவு நகரமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதற்காக, கோயில் வளாகங்களில் ஆண்டுதோறும் உணவுத் திருவிழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மதுரை மாநகராட்சி தனது ஆண்டு பட்ஜெட்டில் மாட்டுத்தாவணி அருகே உணவு தெருவை உருவாக்கவும் நிதி ஒதுக்கியுள்ளது.


    மதுரை முக்கிய சுற்றுலா தலம்
    சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், மதுரை ஒரு முக்கியமான சுற்றுலா தலமாக வளர்ந்து வருகிறது. கலாச்சாரம், உணவு மற்றும் பாரம்பரியம் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதால், மதுரை அனைத்து வகையான பயணிகளுக்கும் ஒரு சிறந்த இடமாக இருக்கும்.






    டாக்டர் கோபி ! இந்தக் காலத்தில் இப்படியும் சில டாக்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.!

     இ ந்தக் காலத்தில்  இப்படியும் சில டாக்டர்கள்  இருக்கத்தான் செய்கிறார்கள். டாக்டர் கோபி. அவரது மனைவி டாக்டர் ஹேமப்பிரியா.  மதுரையில் மருத்து...