
வாழும்
நாள்கள் எத்தனை என்று யாரும் கணக்குப் போட்டுக் கொண்டு வாழ முடியாது. சாகற
நாள் தெரிஞ்சா வாழற நாள் நரகமாகிடும்னு சொல்வாங்க. அதனால நாம வாழப்போற
நாள்கள் கொஞ்சமோ, அது நிறையவோன்னு தெரியாது. இருக்குற நாள்கள்ல
அடுத்தவங்களுக்கு உபயோகமா வாழ்ந்துட்டுப் போயிடணும். யாரையும் பொல்லாங்கு
சொல்லாம, நம்மோட கடமையை மட்டும் செஞ்சாலே போதும்.
நாம
இந்த மண்ணுல பிறந்து வளர்ந்து வாழ்ந்ததுக்கான ஏதாவது ஒரு அடையாளத்தை
விட்டுட்டுப் போகணும். அதுதான் நம் பிறவியோட நோக்கம்னு ஒவ்வொருத்தரும்
நினைச்சி மற்றவங்களுக்கு பிரயோஜனமா வாழ்றதுல தான் வாழ்க்கையோட அர்த்தமே
இருக்கு. இருக்குற வாழ்க்கையில நீயா, நானான்னு போட்டி பொறாமை இல்லாம
வாழ்க்கையை நிம்மதியா வாழ்ந்துட்டுப் போகணும்.
நம்மைப்
பார்த்து மற்றவங்க வாழ்ந்தா அவனை மாதிரி வாழணும்னு சொல்லணும். அதுக்கு
முன்னுதாரணமா நாம வாழ்ந்து காட்டணும். நாம இந்;த மண்ணில் இல்லாத போதும்
அதுதான், அந்தப் பேருதான் என்னைக்கும் நிலைத்து நிற்கும். சரி இனி
விஷயத்துக்கு வருவோம். நம்ம கவியரசர் கண்ணதாசன் ஐயா வாழ்க்கையை புட்டு
புட்டு வச்சிட்டுப் போயிட்டாரு. இறந்தவங்களோட அஸ்தியை ஏன் ஆற்றுல, கடல்ல
கரைக்கிறாங்கன்னு ஒரு விளக்கம் கொடுத்துருக்காரு. வாங்க பார்க்கலாம்.
வாழாமல்
இறந்து போன குழந்தைகளை - வாலிபர்களை- கன்னிப் பெண்களை இந்துக்கள்
புதைக்கிறார்கள். கொஞ்ச நாளாவது வாழ்ந்து இறந்தவர்களை எரிக்கிறார்கள்.
வாழாத உடம்பு மண்ணிலே கலந்து நிம்மதி அடையவும், வாழ்ந்த உடம்பு விண்ணிலே
கலந்து ஐக்கியமாகவும் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். சாம்பலை ஏன் நதியில்
கரைக்கிறார்கள்? ஆறு போல உன் ஆத்மா ஓடி கடல் போலிருக்கும் இறைவனோடு
கலக்கட்டும் என்பதற்கு.
இந்துக்களின்
ஒவ்வொரு நடவடிக்கையும் பழக்க வழக்கங்களையும் கூர்ந்து நோக்குங்கள்.
அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் பொருள் விரித்துப் பாருங்கள்.
இயற்கையாகவே மங்கலம் அமங்கலம் தெரிந்துவிடும்.
மங்கல
சொற்கள் , மங்கல அணி, மங்கலவிழா இந்த வார்த்தைகள் இந்துக்களின் பண்பாட்டு
உணர்ச்சியை அறிவுறுத்தும். அடுத்தவர் வீட்டில் சாப்பிடும்போது சாப்பாடு
மட்டமாக இருந்தாலும் அற்புதமாக இருக்கிறது என்று சொல்லுவது இந்துக்கள்
வலியுறுத்தும் நாகரிகம். 'பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம்
வேண்டு பவர்' என்றான் வள்ளுவன்.
உலகத்தில்
நாகரீகம் என்பது இருபதாம் நூற்றாண்டின் பழக்க வழக்கங்களை குறிக்கிறது.
நமது நாகரிகமோ 2000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது.