Total Pageviews

Tuesday, March 13, 2012

108 இலவச ஆம்புலன்ஸ் சேவை


மதுரை :அரசின் இலவச ஆம்புலன்ஸ் 108க்கு தகவல் கூறி, நோயாளிகளை காப்பாற்றிய 42 பேர் நேற்று கவுரவிக்கப்பட்டனர்.

சாலை விபத்தில் உயிருக்கு போராடுபவர்கள் குறித்து, 108க்கு தகவல் கூறி, காப்பாற்றியவர்களை கவுரவிக்கும் விழா மதுரையில் நடந்தது. இலவச ஆம்புலன்ஸ்களை பராமரிக்கும் இ.எம்.ஆர்.ஐ. நிறுவன மாவட்ட மேலாளர் தணிகை வேல் முருகன் வரவேற்றார். மண்டல மேலாளர் லட்சுமணன் பேசியதாவது : விபத்து குறித்து தகவல் தெரிவித்தால், நமக்கு ஏதும் சிக்கல்  வந்துடுமோ என தயக்கம் உள்ளது. அதை தவிர்க்க இந்நிகழ்ச்சி. மதுரையில் 15 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. அதிகமாக சாலை விபத்துகள்,  பிரசவத்திற்கு சேவை செய்தோம்.

கடந்தாண்டு ஏப்., முதல் இதுவரை நடந்த 15,873 சேவைகளில் பிரசவம் 4573, சாலைவிபத்து 4869 நடந்தன. கடந்த 2010ல் ஒப்பிடும்போது, சாலை விபத்து 4553 ஆக இருந்தது, என்றார்.

மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் மீனா கூறுகையில், விபத்தில் ரத்தப்போக்கு அதிகம் வெளியேறும். உள்உறுப்புகளுக்கு குளூகோஸ், ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, உடனடியாக 108க்கு தகவல்  தெரிவிக்க வேண்டும், என்றார். மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் ஸ்ரீதரன் பேசியதாவது : 2007ல் சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவில், சாலை விபத்து, அடிதடியில் காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் முதலுதவி சிகிச்சை அளித்து, தேவைப்பட்டால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும். அதன் பிறகே சிகிச்சைக்கான கட்டணத்தை பெற வேண்டும். ஆஸ்பத்திரியில் நோயாளியை சேர்ப்பதுடன், தகவல் கூறியவரின் பொறுப்பு முடிந்துவிடுகிறது, என தெரிவித்தது. தைரியமாக 108ஐ கூப்பிடலாம். விபத்தில் காயம்பட்டவருக்கு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிகிச்சை அளிக்க தயங்குகின்றனர். இது அரசியலமைப்பு  சட்டத்திற்கு விரோதமானது, என்றார்.

Thanks to Dinamalar 

No comments:

Post a Comment

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...