நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்:
* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது
ஆங்கிலமோ,
ஹிந்தியோ, பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய
வேண்டும்.
* புரியாமல் எதையும் படிக்க கூடாது. ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும்
பரவாயில்லை.
* முழு கவனம் மிக அவசியம்.
*நினைவுக் குறியீடுகள் வைத்து படிப்பது ஒரு கலை. அதை உங்கள் குழந்தைக்கு கற்று
கொடுங்கள்.
உதாரணம்: news - north, east, west, south
*படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஹோம் வொர்க் என்ற
பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.
* படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். பட விளக்கங்களை திரும்ப திரும்ப
வரைந்து பார்க்கச் சொல்லவேண்டும்
* நல்ல உறக்கம் அவசியம். குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை.
* இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும்.
*தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு
படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின்
சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல்களை ஷார்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங்
டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி
ஆகும்.
* மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும், எனவே புரதம் நிறைந்த
எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது.
No comments:
Post a Comment