Total Pageviews

Monday, March 19, 2012

மனிதன் மகிழ்ச்சியாக இருக்க தூக்கம் அவசியம்.


உணவு, தண்ணீர் மற்றும் காற்று ஆகியவற்றைப்போல தூக்கமும் முக்கியம் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வி. கனகசபை கூறினார்.


 தூக்கம் குறித்த பொதுமக்களுக்கான மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் திங்கள்கிழமை நடந்தது. இதில் டாக்டர் கனகசபை கூறியது:


 ஒரு மனிதன் தினமும் சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். தூங்கும்போதுதான் மூளைக்கு அதிகளவில் ரத்தம் செல்கிறது.

 புத்துணர்வுடன் இருக்கவும் மகிழ்ச்சியாக இருக்கவும் தூக்கம் அவசியம். உணவு, தண்ணீர் மற்றும் காற்று போல தூக்கமும் முக்கியம்.

தூங்கும்போது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. சரியாகத் தூங்கினால் மருந்துகளே தேவைப்படாது.


 உடல் உழைப்பு குறைவு, அதிகநேரம் கணினி முன் வேலை செய்வது போன்ற காரணங்களால் தூக்கமின்மை ஏற்படுகிறது. உடல் உழைப்பை அதிகரித்து நன்றாகத் தூங்கினால் நலமுடன் வாழலாம் என்றார் டாக்டர் கனகசபை.


 நரம்பியல் துறைப் பேராசிரியர் டாக்டர் ஆர்.எம். பூபதி கூறியது: அமைதியான மனநிலை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெற தூக்கம் இன்றியமையாதது. பெண்கள் குறைந்தபட்சம் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். ஆண்களைவிட பெண்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகின்றனர்.

 இதற்கு காரணம் ஹார்மோன் குறைபாடு. தூங்காமல் இருப்பதால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவை உண்டாகும். அதேபோல அதிக நேரம் தூங்குவதும் தவறு.


 இயற்கையோடு இணைந்த வாழ்வை மனிதர்கள் மறந்துவிட்டனர். அதன் காரணமாக உடல் உழைப்பு குறைந்து தூக்கமின்மை ஏற்படுகிறது. மன அமைதி, உடல் நலம் ஆகியவற்றுக்கு தூக்கம் அவசியம் என்றார் அவர்.

 மனநல மருத்துவப் பேராசிரியர் டாக்டர் கலைச்செல்வன், நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் வி. சுந்தர் ஆகியோர் தூக்கமின்மை குறித்த பொது மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.

No comments:

Post a Comment

அரசு பள்ளியில் படிப்போம் ! 👍 ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம் !

  வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்ட...