Total Pageviews

Saturday, February 2, 2013

பெற்றோர்-ஆசிரியர்கள் வழிகாட்டுதல்படி கடுமையாக உழைத்தால் நினைத்த இடத்தை அடையலாம்: கலெக்டர் அன்சுல்மிஸ்ரா பேச்சு

மதுரை ஒத்தக்கடையிலுள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பொன் விழா, நூலக கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் அவர் பேசிய தாவது:-

.
இன்றைக்கு இந்த பள்ளியின் பொன் விழா ஆண்டு கொண்டாடப்படுவது நல்ல விஷயம்.                                    50 வருடங்களாக நல்ல முறையில் நிர்வாகத்தை நடத்தி மாணவர்கள் வெற்றி பெற்று பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருவது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் இந்த பள்ளியில் பயின்ற 2 பேரும் இந்திய ஆட்சிப்பணியில் பணியாற்றி வருகிறார்கள். இது இந்தப்பள்ளிக்கு பெருமை சேர்ப்பதாகவும் முன் உதாரணமாகவும் திகழ்கிறது.

மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் படித்து முடித்த பின்பு என்னவாக ஆக வேண்டும் என்பது பற்றி முடிவு எடுத்து அதற்காக தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி கடுமையாக உழைக்க வேண்டும். அப்பொழுது தான் நாம் நினைக்கும் இடத்தை பிடிக்க முடியும்.

சமுதாயத்தில் நாம் தனி மனிதராக இல்லை என்பதை உணர்ந்து மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். நல்ல மனிதர்களாக, நேர்மையானவர்களாக, இருந்தால்தான் சமூகத்தில் அமைதி இருக்கும். என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய போகிறோம், என்பதை உணர்ந்து தைரியத்துடன் செயல்பட வேண்டும். நமக்கு இருக்கும் உரிமை மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதை உணர்ந்து மற்றவர்களின் உரிமையை மதிக்க வேண்டும். நமக்கு கிடைக்கும் உரிமை மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்கள் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் படிப்பில் கவனம் செலுத்த முடியும். இதை மனதில் உறுதி எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சோம்பேறியானவன் இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம்; அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை. - கவுப்பர்.
Thanks to Malaimalar

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...