Total Pageviews

Friday, February 8, 2013

துணிச்சல் உள்ளவனே உயர்நிலை அடைகிறான்."




1 துணிச்சல் உள்ளவனே உயர்நிலை அடைகிறான்."

2 மனிதனை மிருக நிலையில் இருந்து மாற்றி மனிதனாக்குவது கல்வி ஒன்றுதான்.

3 மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

4 ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

5 எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

6 மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

7 கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

8 நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். ஏனெனில் அவன் துரோகம் செய்ய மாட்டான்.-ஸ்பெயின்

9 தகுதி இல்லாதவர்களே பிறரை அவதூறு செய்து பொழுது போக்குகின்றனர்.

10 பொய் சொல்லி ரெம்ப நாள் வாழ்க்கைய ஓட்ட முடியாது உண்மைய சொன்னா வாழுற வரைக்கும் பிரச்சனை இல்லை..

11 உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும்..

12 நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன. (சுவாமி ராமகிருஷ்ணானந்தர்)

13 அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்(காந்தியடிகள்)

14 அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.

15இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். (அரவிந்தர்)

16 கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும்(கிளெண்டல்)

17 என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும்.(டொரோதி தெலூசி)

18 நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை. (எமர்சன்)

19 மனிதனின் வாழ்க்கை பிறருக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.வாரியார் சுவாமிகள்)

20 உண்மையிடம் அடைக்கலம் தேடியவன் பலத்தோடும் சுகத்தோடும் இருக்கிறாள்.ஜேம்ஸ் ஆலன்)


No comments:

Post a Comment

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...