பெரும்பாலான மனிதர்கள் கனவு உலகிலேயே வாழ்கின்றனர்.
விழித்துப் பார்த்தால் தான் உண்மையான வாழ்க்கை புரியும்.
சந்தோஷத்தை நிராகரிப்பவர்கள் எவரும் இல்லை.
அதே சமயம் துக்கத்தை ஏற்பவர்களும் எவரும் இல்லை.
கர்மம் என்பது பந்தப் படுத்துவதும், பந்தத்திலிருந்து விடுவிப்பதும் ஆகும்.
கர்மம் என்பது பந்தப் படுத்துவதும், பந்தத்திலிருந்து விடுவிப்பதும் ஆகும்.
கர்மத்தை விடாமல் ஞானத்தை பெற முடியாது.
அர்ப் பணிப்புகள் இருந்தால்தான் உயர்ந்த பலனைப் பெற முடியும்.
குறிப்பாக அகங்காரங்களை அர்ப் பணிக்க வேண்டும். ஒவ்வொருவரும் சுய நலத்தை விடுத்து கொஞ்சம், கொஞ்சம் பொது நலத்தில் ஈடுபட வேண்டும்.
எதுவெல்லாம் அழியக்கூடியதோ அதைப் பற்றி கவலைப்படக் கூடாது.
உடலைப் பற்றி கவலைப்படாதவர்கள் வாழத் தெரிந்தவர்கள் ! மற்றவர்கள் வாழத் தெரியாதவர்கள்! வாழ்வை விரையம் செய்கின்றனர் என்று அர்த்தம்!
அருமையான கருத்நு.
ReplyDeleteஉண்மை
ReplyDeleteநல்வழிகாட்டல்
ReplyDelete