Total Pageviews

Thursday, November 14, 2019

தீக்காயங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் !


  தீக்காயங்கள்

        காயங்கள் ஏற்படும் முறை

        முக்கியமாகச் செய்யக்கூடாதவைகள்

        பொதுவான சிகிச்சை

        பராமரிப்பு

        சிறப்பு சிகிச்சை தேவைப்படும் தருணங்கள்

        அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தீப்புண்கள் மற்றும் வெப்ப காயங்கள் முதலியவை சருமத்தில் தழும்புகள், உடல் பகுதிகளில் உருமாற்றம்,மனச்சோர்வு மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்ற பாதிப்புகளை விளைவிக்கும். இப்படிப்பட்ட விளைவுகள் நீண்டநாட்கள் கழித்து மறையலாம்.சில சமயங்களில் நிரந்தரமானவைகளாக இருக்கும். எனவே தீவிர பாதிப்புகளுக்கு உட்பட்ட புண்களுக்கு சரியான, ஜாக்கிரதையான மற்றும் தகுந்த சிகிச்சை அவசியம். உடலானது சுட்டெரிக்கும் அனல் மற்றும் சக்திவாய்ந்த வேதிப்பொருட்களுடன் படும்போது / மிக நெருக்கமாக தொடர்புகொள்ளும்போது புண்கள் ஏற்படுகின்றன. கீழ்க்கண்ட நிகழ்வுகள் மூலம் இவை பெரும்பாலும் நடக்கின்றன.
காயங்கள் ஏற்படும் முறை

பாத்திரங்களை சூடுபடுத்தும் போது,

    கடாய் மற்றும் பாத்திரங்களின் கைப்பிடிகள்,அடுப்பு,சமையல் பாத்திரங்கள் போன்ற சமையலறை சாமான்கள் பராமரிப்பின் போது...
    தண்ணீர் கொதிக்கவைக்கும் பாத்திரங்கள்,கருவிகள்,ஹீட்டர்,துணி தேய்க்கும் அயர்ன்பாக்ஸ் உள்ளிட்ட நவீன மின்சாதனங்கள் பயன்படுத்தும் போது.

    திறந்த வெளியில் சமைக்கும் பொழுதும், எரிவாயுக்கள் மற்றும் மின்சாரம் போன்றவற்றாலும் எதிர்பாராமல் நிகழும் தீ விபத்துகள்.

    ஆடைகள் மற்றும் பிற பொருட்கள் தற்செயலாக தீப்பற்றிக்கொள்ளுதல்
    வெளுப்பான்கள் மற்றும் வீரியம் மிக்க கிரிமிநாசினிகள் உபயோகப்படுத்தும் போது
    சுட்டெரிக்கும் சூரிய வெப்பம் மற்றும் அனல் காற்றின் போது,
    கயிறைக் கைகளால் பற்றிக்கொண்டு அதி வேகத்தில் இறங்கும் பொழுது ஏற்படும் வெப்பத்தால் உருவாகும் காயங்கள்.

    மேலும், பெரும்பாலான தீப்புண்கள் வீடுகளில் ஏற்படுகின்றன. எனவே வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கப்படலாம். பெரும்பாலான வீடுகளில் நடக்கும் விபத்துக்கள் சமயலறையில்தான் ஏற்படுகின்றன. எனவே, இங்கு பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

    விபத்துக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க சமையலறையே சிறந்த இடமாகும். இனிமேல் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்கும்வண்ணம், பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்த வேண்டும். வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், குழந்தைகள் (குறிப்பாக தளர்நடை குழந்தைகள்) ஆகியோர்தான் அதிகளவில் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் அனைத்து தீப்புண்களையும் அலட்சியம் செய்யாமல் அதிக கவனம் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

முக்கியமாகச் செய்யக்கூடாதவைகள்

காயம் ஏற்பட்டதும் உடலில் எந்த விதமான தீப்புண்கள் ஏற்பட்டுள்ளது? நீங்கள் என்ன உதவிகள் செய்யலாம்? என்பதனை அறியும் முன் நீங்கள் கண்டிப்பாக செய்யக்கூடாத சில காரியங்களும் உண்டு. அவை பின்வருமாறு:

    ஒருபோதும் தீப்புண்களின் மீது வெண்ணெய், மாவுகள் அல்லது சமையல் சோடா முதலியவற்றைப் போடாதீர்கள்

    ஒருபோதும் ஆயின்மென்ட், லோஷன் மற்றும் எண்ணெய்களை சிகிச்சையளிக்கப் பயன்படுத்தாதீர்கள்.

    ஒருபோதும் புண் மற்றும் கொப்புளங்களைக் கிழிக்கவோ, கிள்ளவோ அல்லது உடைக்கவோ செய்யாதீர்கள்

    தேவையின்றி தீப்புண்களைத் தொடவோ அல்லது கையாளவோ செய்யாதீர்

    தீக்காயத்தில் ஒட்டியுள்ள துணிகளை ஒருபோதும் அகற்ற முயற்சிக்காதீர்.

    தீக்காயங்களுக்கு மருத்துவரின்றி சிகிச்சை அளிக்காதீர்.

இன்றைய நாட்களில் மக்கள் உடுத்தும் பெரும்பாலான ஆடைகள் சிந்தடிக் பொருட்களால் ஆனவை. அவை தீயினால் உருகி மிட்டாய்கள் போன்று சருமத்துடன் ஒட்டிக்கொள்ளும். இதுபோன்று ஒட்டிக்கொண்ட துணிகளை அகற்ற முயற்சிப்பீர்கள் என்றால் அது தேவையில்லாமல் சருமத்தில் வலியையும் புண்ணின் பாதிப்பையும் அதிகரிக்கும். 

அப்படிப்பட்ட துணிகளை கிருமித்தொற்று இல்லாமல் முறையாக அகற்ற மருத்துவர் மூலமே சிகிச்சை அளிக்க வேண்டும்.எனவே அத்துணியினை அப்படியே விட்டுவிடுவது நல்லது.

பொதுவான சிகிச்சை

சில குறிப்பிட்ட வகை தீக்காயங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து தீக்காயங்களுக்கும் பொதுவான சிகிச்சை முறைகள் உண்டு.மிகச் சிறிய காயங்களைத் தவிர, இதர காயங்கள் ஆபத்தானவை, அதிக வலியுள்ளவை மற்றும் உளைச்சலை ஏற்படுத்தும். வீடுகளில் ஏற்படும் தீ விபத்து,சாலைகளில் பெட்ரோலியப் பொருட்களால் உருவாகும் தீ விபத்து போன்றவை பெரும்பாலான சமயங்களில் நிகழக்கூடியவை.இவைகளின் அவசர நிலை மற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.உதவி செய்வதற்கான முதற்கட்ட செயல்பாடுகள் அதிக முக்கியத்துவம் 

வாய்ந்தவை.விபத்துக்குள்ளானவரை அமைதிப்படுத்தி, ஆறுதல் படுத்தி தேற்ற வேண்டும் என்பதை அவசியம் ஞாபகத்தில் வைக்கவும். 
அவர்களிடம் கனிவாக இருங்கள்.அதே சமயம் அவரை மருத்துவமனை கொண்டு செல்ல விரைவாக செயல்படுங்கள்.செய்ய வேண்டியவகளை முறையாகவும் வரிசைப்படியும் செய்யுங்கள்.

சருமம் மற்றும் அதில் உள்ள திசுக்களில் தீக்காயம் ஏற்பட்டதும் அவற்றிலிருந்து அதிகளவு ரத்தம் மற்றும் ஒரு வகையான திரவம் வெளியேறும். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள திசுக்கள் அதிக வெப்பத்தினைத் வெகு நேரம் தாங்கிக்கொள்ளக்கூடியவை.இது அதிக வலி மற்றும் பாதிப்புக்கு வழிவகுக்கும். வெப்பத்தை முடிந்த அளவு போக்கவேண்டும் என்பதே முதற்கட்ட சிகிச்சையின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். முதலுதவி சிகிச்சை மூலம் அவசியம் சிதைவுற்ற திசுக்களில் உள்ள வெப்பத்தினைக் குறைக்க வேண்டும்.

    பக்கெட் அல்லது சமயலறை தண்ணீர் தொட்டி/சிங்கில் குளிர்ந்த நீரை நிரப்பி அதில் காயப்பட்ட பகுதியை அமிழ்ந்திருக்கும் வண்ணம் செய்யுங்கள்.அதிக வேகமாக இல்லாமல் மிதமான வேகத்தில் குளிர்ந்த தண்ணீர் வரும் குழாயின் கீழ் தீக்காயமடைந்த பகுதியைக் காட்டி தண்ணீர் படும்படியும் செய்யலாம்.
    தீப்புண்ணை சுமார் 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் அமிழ்ந்த வண்ணம் அவசியம் வைக்கவேண்டும். அப்படி வைப்பது சிரமமாக( முகத்தில் உள்ள தீக்காயம் போன்றவற்றுக்கு )இருந்தால், ஏதாவது மென்மையான மற்றும் தூய்மையான துணியைக் குளிர்ந்த தண்ணீரில் நனைத்து அந்த காயத்தின் மீது வைக்கவுமஇவ்வாறு அடிக்கடி மீண்டும் குளிர்ந்த தண்ணீரில் நனைத்து மாற்றி மாற்றி போடவும். ஆனால் தீக்காயத்தைத் துணியைக் கொண்டு தேய்க்காதீர்கள். இந்த சிகிச்சைகள் தீக்காயமடைந்த திசுவிலுள்ள வெப்பத்தினை ஓரளவுக்கு வெளியேற்றவும் மற்றும் மென்மேலும் ஏற்படும் சிதைவு, சிவத்தல், கொப்புளம் வருதல்,வலியின் அளவு மற்றும் தன்மையைக் குறைக்கவும் தடுக்கவும் உதவும்.

    காயம் ஏற்பட்டவுடன் மோதிரம், வளையல், ஷூ மற்றும் அணிந்துள்ள அனைத்து ஆபரணங்களையும் சீக்கிரமாக நீக்க வேண்டும். ஏனெனில் காயத்தின் காரணமாக வீக்கம் ஏற்படலாம். அப்படி வீக்கம் ஏற்பட்டால் மேற்கூறிய பொருட்களை நீக்குவது பின்னர் கடினமாகிவிடும்.

    சிறிய மேலான தீக்காயங்களாக இருந்தால் வலிநீங்கியவுடன் ஜாக்கிரதையாக புண்ணை உலரச் செய்யவும். பின்னர் அதை சுத்தம் செய்து பக்குவமாக கட்டு (ட்ரஸ்ஸிங்) போடவும். பெரிய காயங்கள் அல்லது ஆழ்ந்த தீக்காயங்களை குளிர்ந்த தண்ணீரிலிருந்து எடுத்தவுடன் அவசியம் அவற்றை சுத்தமான,கந்தல் இல்லாத மற்றும் பஞ்சு ஒட்டாத துணியை வைத்து இலகுவாக மூடவேண்டும் ( கை,கால்களை மூட சுத்தமான பைகள், நீளமான காலுறைகள் பொருத்தமானவை)
    மருத்துவரை அழைக்க ஆள் அனுப்புங்கள் அல்லது ஆம்புலன்ஸை அழையுங்கள்
    தபால் தலை அளவைவிடப் ( 2 x 2 1/2 செ மீ ) பெரியதாக உள்ள எந்த தீப்புண்ணும் அவசியம் ஒரு மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். நீங்கள் குளிர்ச்சி வைத்தியம் கொடுத்தவுடன் மருத்துவரை அழைக்க வேண்டும்.

    பெரிய அளவில் பலத்த காயம் இருப்பின் மருத்துவமனை பராமரிப்பு தேவை.அப்படி அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது, ஐஸ் கட்டிகளை டவல்களில் வைத்துக்கட்டி அதைக் காயத்தின் மேல் வைத்துக் கொண்டே செல்ல வேண்டும்.

    தீக்காயமடைந்த பகுதியை நோய்த்தொற்று ஏற்படாமல் மூடிவைப்பது அவசியம். அப்படி செய்வது விபத்துக்குள்ளானவர் காயத்தின் அளவையும்,கொடூரத்தையும் பார்ப்பதைக் குறைக்கும்.அதனால் அவரின் பதற்றம் மற்றும் பயம் சற்றே குறையும். நைலான் அல்லாத மேசை விரிப்புத்துணி,துண்டு,சால்வை உள்ளிட்டவை உடலை மூடுவதற்கு மிகவும் உகந்தவை. உடலின் மேல் லேசாக மற்றும் அழுந்தாமல் மூட/போர்த்த வேண்டும்.

    மருத்துவர் அல்லது ஆம்புலன்ஸிற்காகக் காத்திருக்கும் போது விபத்துக்குள்ளானவரை மீண்டும் தேற்றுங்கள்,ஆறுதல் கூறுங்கள். குழந்தையாக இருப்பின் அரவணைத்து எடுத்துச்செல்லுங்கள். அப்படி செய்வது மிகமுக்கியம். ஆனால் அப்படி செய்யும்போது பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

சிறப்பு சிகிச்சை தேவைப்படும் தருணங்கள்

துணிகளில் ஏற்படும் தீ

    துணிகளில் தீ பற்றியெரியும் போது, தீயைத் தண்ணீர் ஊற்றி அணைக்கவும். விபத்துக்குள்ளானவரின் மீது கெட்டித்துணி,போர்வை,கோட்,சாக்கு/கோணி போன்றவற்றால் சுற்றி அணைக்கலாம்.நீங்கள் விபத்துக்குள்ளானவரை போர்வை கொண்டு சுற்றும் போது தீயானது உங்களைத் தாக்காதவாறு போர்வையை உங்களுக்கு முன் இருக்கும் வண்ணம் வைத்துக்கொள்ளுங்கள்

    ஒருவன் தீயில் பயங்கரமாக பற்றியெரியும் போது, வலி தாங்க முடியாமல் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு ஓடலாம்.இதனால் தீயானது வேகமாகப் பரவும்.அவர் காற்றோட்டமான பகுதிக்கும் ஓடலாம். அப்படி காற்றோட்டமான பகுதிக்கு செல்லும் போது தீ அதிகமாகப் பற்றியெரியும். எனவே விபத்துக்குள்ளானவரை ஒரே இடத்தில் இருக்கும்படி செய்யவேண்டும்.

    தீ அணைந்துவிட்டால்,ஏற்கெனவே கூறியுள்ள பொதுவான சிகிச்சைகளைத் தொடர்ந்து அளிக்கவேண்டும்.

கண்களில் வேதிப்பொருள் தெளிப்பு

இது நிரந்தரமான பாதிப்பு மற்றும் பார்வை இழப்பையும்கூட ஏற்படுத்தும். எனவே சிகிச்சை அளிப்பதில் அதி வேகமாக செயல்பட வேண்டும். அவ்வேதிப்பொருளின் வீரியத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.


    விபத்துக்குள்ளானவரை மல்லாக்காக படுக்கவைத்து, அவரின் கண்ணிமைகளை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரலைக்கொண்டு கண்களை திறந்த வண்ணம் வைத்து, கண்ணில் தொடர்ந்து குளிர்ந்த நீரை மூக்குப்பக்கமாக இருந்து ஊற்றவும் ( அவ்வாறு செய்வது வேதிப்பொருள் மற்றொரு கண்ணை பாதிக்காமல் பாதுகாக்கிறது)

    
கண்ணிமைகளுக்குள் வேதிப்பொருட்கள் தங்காமல் இருக்க, கண்ணிமைகளை பல முறை மூடி மூடி திறக்குமாறு செய்யுங்கள்.
    இப்படி கண்களைக் கழுவும் செயலைக் குறைந்தது 10 நிமிடங்களாவது தொடர்ந்து செய்யுங்கள்.

    சிகிச்சைக்கு பின் கண் இமைகளை மூடி அதன் மேல், துணியை வைக்கவும் (கண்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் இலகுவாக இருக்கும்படி வைக்கவேண்டும்)

    விபத்துக்குள்ளானவரை தேற்றி, ஆம்புலன்ஸை அழையுங்கள் அல்லது அவரை மருத்துவரிடம் கொண்டுசெல்லுங்கள்.

மின்சார தீக்காயங்கள்

இவை பொரும்பாலும் சிறிய அளவில் இருக்கும் ஆனால் ஆழமானதாகவும், அதிக பாதிப்புகளுடனும் இருக்கும். மின்சாரம் தாக்கப்பட்ட இடங்களில் காயங்கள் காணப்படும்.

    விபத்துக்குள்ளானவருக்கு சிகிச்சை அளிக்கும் முன் மின் இணைப்பைத் துண்டிக்கவேண்டும்.

    மின்சார விபத்துக்குள்ளானவர் தண்ணீருக்குள் கிடந்தால், நீங்கள் தண்ணீரிலிருந்து சற்றே விலகி நின்று செயல்படுங்கள்.ஏனெனில் தண்ணீர் ஒரு நல்ல மின் கடத்தி. எனவே விபத்துக்குள்ளானவரின் அக்குள் பகுதியைப் பிடித்துத் தூக்காதீர்கள்.

    விபத்துக்குள்ளானவரின் சுவாசத்தை சரிபாருங்கள். மின்சாரம் மார்பு வழியாக பாய்ந்திருக்கலாம்.அதனால் இதயத்துடிப்பு மற்றும் சுவாச மூச்சை நிறுத்திவிடக்கூடும். அப்படி இருப்பின் கிஸ் ஆஃப் லைஃப் (வாய் மீது வாய் வைத்து மூச்சு அளிக்கும் முறை)என்ற முறையினையும் மற்றும் மார்பு பகுதியில் கைகளால் அழுத்தமான இயக்கம் கொடுத்து மசாஜ் செய்தலையும் உடனடியாக ஆரம்பிக்கவும்.

    தீக்காயங்களுக்கான பொதுவான சிகிச்சையைத் தொடர்ந்து செய்யுங்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. தீப்புண்ணைக் குளிர்விக்கப் பனிக்கட்டியைப் பயன்படுத்தலாமா?

கூடாது. தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பனிக்கட்டி தோலை மேலும் சிதைவடையச் செய்யும்

2. தீப்புண்ணில் தொற்று பரவாமல் இருக்கக் கட்டு இடலாமா?

ஒட்டும் கட்டுகளைப் புண்ணின் மேல் இட்டால் தோலுக்கு மேலும் சேதாரம் ஏற்படும். தொற்று பரவாமல் தடுக்க ஒரு பிளாஸ்டிக் மென்படலம் அல்லது பையை பயன்படுத்தலாம்.

3. தீப்புண்ணில் துணித்துண்டுகள்  சிக்கி இருந்தால் எடுக்க முனையலாமா?

கூடாது. தீய்ந்த பகுதிக்கு அருகில் உள்ள துணி அல்லது நகை போன்றவற்றை அகற்றலாமே தவிர தீக்காயத்தில் ஒட்டி இருக்கும் எதையும் அகற்ற முயற்சி செய்யக் கூடாது. ஏனெனில் மேலும் சேதாரம் ஏற்படலாம்.

4. தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியவை

    காயம் கடுமையாக இருந்தால் மருத்துவ ஊர்தியை அழைக்கவும். குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டிருந்தாலும், மின்சாரத்தினால் அல்லது வேதிப்பொருட்களினால் தீக்காயம் ஏற்பட்டிருந்தாலும், காயம் முகம் அல்லது பிறப்புறுப்புகளில் இருந்தாலும் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

    காயம் பட்டவர் இயல்பாக சுவாசிக்கவில்லை என்றால் செயற்கை சுவாசம் அளிக்கவும்.

    காயம் பட்ட இடத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை என்றால் மட்டுமே நகைகளையும் துணிகளையும் அகற்ற முயற்சி செய்ய வேண்டும்.

    10 நிமிடத்தில் இருந்து அரைமணி நேரம் வரை  தீக்காயத்தை மென்மையாப் பாயும் தன்ணீரில் காட்டவும்.

வேதிப் பொருட்களால் காயம் ஏற்பட்டிருந்தால் விழித்திரை பாதிக்கப்படாமல் இருக்க தண்ணீர் அல்லது உப்பு நீரால் உடனடியாகக் கழுவவும்.    அவயவங்களில் இரண்டாம் நிலை தீப்புண் இருந்தால் அவற்றை இதயத்தை விட உயர்ந்த நிலையில் வைக்கவும்.

அதிர்ச்சியைக் குறைக்கவும், உடல் வெப்ப இழப்பைத் தவிர்க்கவும், சுத்தமான, உலர்ந்த, பஞ்சு போல் அல்லாதத் துணியை புண் மேல் மென்மையாக இடவும்.

    மருத்துவ ஊர்திக்காக காத்திருக்கும் போதும் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் போதும் காயம் பட்டவரை, குளிர்ச்சியான, ஈரமான, பஞ்சுத்ததன்மையற்ற துணியால் மூடவும்.

5. தீக்காயம் பட்டால் செய்யக் கூடாதவை

 தீக்காயத்தின் மேல் தைலம், வெண்ணெய், கிரீஸ், எண்ணெய் போன்றவற்றைத் தடவுதல்

    ஐஸ் பயன்படுத்துதல் (பனிக்கடுப்பு உண்டாக்கும்

No comments:

Post a Comment

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...