Total Pageviews

Sunday, April 15, 2012

வெயில் காலத்திற்கான டிப்ஸ்


வெயில் காலத்தில் பல நோய்களுக்குக் காரணம் தண்ணீர் தான். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து குடிப்பதே நல்லது.

இளநீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பது மிகவும் நல்லது.

வெண்பூசணியும் பாகற்காயும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது இதம் அளிக்கும்.

டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டாவால் முழுக்கூந்தலையும் மூடிச் செல்லவும்.

உருளைக்கிழங்கை அரைத்து, அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் வெம்மை முகத்தைத் தாக்காமல் பளிச்சிடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் வழக்கத்தைவிட விரைவாக எழுந்து, சூரியன் ஹாய்சொல்வதற்குள் சமையலறை வெப்பத்திலிருந்து வெளியே வந்து விடுங்கள்.

உங்களுடைய கைப்பையில் எப்போதும் தொப்பி, குடை, சன் க்ளாஸ் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை தணிக்கும்.

இரவே வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலை வழவழப்பாக மிக்ஸியில் அரைத்து விரல் நுனிகளால் தலையில் மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து குளிக்க, நாள் முழுக்க ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

உடல் சூட்டைத் அதிகரிக்கக்கூடிய புளிக்குப் பதிலாக தக்காளி, எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம். மிளகாய்க்குப் பதிலாக மிளகும், சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் அல்லது தேனும் சேர்க்கலாம்.(இரும்புச்சத்தும் கூடும்).

Thanks to Lankasri.com

Saturday, April 14, 2012

சிந்திக்கும் திறனும்,புத்திசாலித்தனமும் இருந்தால்




நாம் நம்மைவிட அனுபவசாலிகள் கூறும் அறிவுரைபடி நடந்தால் நமக்கும் நல்லதே நடக்கும்.

ஆடைகளில் நிறம் மாறலாம்..
குணத்தில் நிறம் மாறக் கூடாது

எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்..அதை முதலில் முடிக்க வேண்டும். இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே ஏற்படும்.


எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன்,
அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது


சிந்திக்கும் திறனும்,புத்திசாலித்தனமும் இருந்தால் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

நாம் இருக்கும் இடமே உலகம்,,,
நம் கருத்து எதுவாயினும் அதுவே சிறந்தது,
நமக்கு எல்லாம் தெரியும்.. என எண்ணி...
நம் அறிவை வளர்த்துக் கொள்ளாமல் கிணற்றுத் தவளையாய் இருந்து விடக்கூடாது.

வாழ்க்கையில் முன்னேறிச் சென்று வெற்றி பெற்றால் போதும் என்று நில்லாது..    மேலும் மேலும் முயன்றால் வெற்றிமீது வெற்றி நம்மை வந்து சேரும்.

முயற்சி திருவினையாக்கும்....முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்

நன்றி கெட்டவர்களுக்கு உதவி செய்வது நல்லதல்ல..

மேலும்...'பாத்திரமறிந்து பிச்சை இடு'

ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறக்கக்கூடாது.
அதே சமயம் யாரேனும் நமக்கு தீமை செய்தால் அதை மறந்துவிடுவது நல்லது.


நாமும்...நமக்கு கிடைக்கும் பொருளை வைத்து சந்தோஷம் அடைய வேண்டுமேயன்றி பெரும் பொருள் வேண்டி பேராசைப்பட்டால் உள்ளதும் போய்விடும்.

நாம் செய்யும் நல்லது.. கெட்டது எல்லாவற்றையும் இறைவன்    நம்முடன் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் ....  அவன் நம் செயலுக்கு ஏற்ப பின்னாளில் தண்டனையைக் கொடுப்பான்


நாமும் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது.அதே சமயம் யாரும் நமக்கு தீங்கு செய்யக் கூடாது என்பதால்..            அவர்கள் நம்மிடம் அச்சம் கலந்த மரியாதை ஏற்படும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் இளிச்சவாயர்களாக ஆகிவிடுவோம்


மூடர்களை திருத்துவது என்பது மிகவும் கடினம்    நாம் மூடர்களுக்கு அறிவுரை சொல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

Wednesday, April 11, 2012

நிலநடுக்கம் வந்தால் தப்பிப்பது எப்படி?



நிலநடுக்கம் போன்ற இயற்கை மாற்றங்கள் எப்போது நிகழும் என்று தற்போதைய நவீன கால தொழில்நுட்பத்தால் கூட முன்கூட்டியே கண்டறியமுடியாத நிலை இருக்கிறது.

 எனவே,காரை ஓட்டும்போது சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதை கண்காணித்து ஓட்டுவதும் அவசியம்.

நிலநடுக்கம் போன்ற பெரிய இயற்கை சீரழிவுகள் வரும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காரில் செல்லும்போது நிலநடுக்கம் வந்தால் உடனடியாக செய்ய வேண்டியவை குறித்து காணலாம்.

காரை ஓட்டிச் செல்லும்போது ஸ்டீயரிங் வீலில் ஏதாவது வித்தியாசம் தெரிந்தாலும், கார் பேலன்சாக செல்லவில்லை என்றாலும் உடனடியாக காரில் ஹேண்ட் பிரேக் போட்டு விட்டு இறங்கிவிடுங்கள்.

முடிந்தவரை மரங்கள், கட்டிடங்கள் இல்லாத பகுதியிலோ அல்லது சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு வெளியேறிவிடுங்கள்.

மேம்பாலங்கள் மற்றும் மின்சார ஒயர்கள் செல்லும் பகுதிகளுக்கு கீழே நிற்க வேண்டாம். நிலநடுக்கத்தை உணர்ந்தால் மரங்கள் கட்டிடங்கள் இல்லாத சமவெளியான பகுதிகளுக்கு செல்வது பாதுகாப்பானது.

பாலங்களில் செல்லும்போது அசாதாரணமான சூழ்நிலையை உணர்ந்தால் முடிந்தவரை பாலத்திலிருந்து கீழே இறங்கி காரை விட்டு வெளியேறிவிடுங்கள். மேம்பாலங்கள் வழியாக செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

மலைப்பாங்கான சாலைகளில் நிலச்சரிவு ஆபத்து இருக்கும் என்பதால், உடனடியாக அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு செல்ல முயற்சி செய்யுங்கள்.

நிலநடுக்கம் வரும்போது தரைகளில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், தொடர்ந்து காரில் செல்ல முயற்சிக்காதீர்.

நிலநடுக்கம் வந்ததை உணர்ந்தால் கடலோர சாலைகளில் செல்லும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். சுனாமி வரும் ஆபத்து இருப்பதால் கடலோர சாலைகளில் செல்வதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

Thanks to Oneindia.com

உண்ணும் உணவு வீண் விரயம் செய்யக் கூடாது




இறைவனால் உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அவைகளின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறும், அவைகளின் மனம் ஒப்புமாறும் உண்டு வாழ்வதற்குத் தேவையான உணவு வகைகளை தாவரங்கள், கால்நடைப் பிராணிகள் மூலம் இறைவனே ஏற்படுத்திக் கொடுத்தான்.

அனைத்து வகை உயிரினங்களும் தன்னுடையத் தேவைக்குப் போதுமான அளவு உண்டுப்புசித்து தன்னைப் படைத்தவனுக்கு நன்றி செலுத்துகின்றன. மனிதர்களாகிய நாமும் இறைவன் நமக்கு அளித்த பொருள் வளத்திலிருந்து போதுமான அளவு உண்டுப் புசித்து இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன் நிதியை பொருளீட்ட முடியாத வறிய நிலையிலுள்ளோருக்கு மனமுவந்து வழங்குவதுடன் எஞ்சி இருக்கும் பொருளாதாராத்தை வீண் விரயம் செய்யக் கூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும்

தேவைக்கு மீறி சமைப்பதும், மிஞ்சுவதைக் கொட்டுவதும். மனிதனுடைய உள்ளத்தில் இதுப் போதாது, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று சொத்து சேர்ப்பதிலிருந்து நாவுக்கு சுவையானத் தீணிப் போடுவது வரை எல்லா நிலைகளிலும் எல்லை இல்லாத ஆசையை விதைத்து பொருளாதாரத்தை விரயமாக்கச் செய்வது ஷைத்தானின் வேலையாகும்.  இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர்

உள்ளத்திற்கு கடிவாளமிட்டு எந்த தேவைக்கும் குறிப்பிட்ட அளவை நிர்ணயித்தக் கொண்டு போதுமென்ற சிந்தனையை யார் உருவாக்கிக் கொள்வாரோ அவரே இறைவனின் திருப்பொருத்தத்திற்கு உகந்த அடியாராவார் இறைவனின் அடியானின் பக்கம் ஷைத்தான் நெருங்க மாட்டான்
இன்று பார்க்கின்றோம். எதை உண்ணுவது என்றுக் கூட முடிவெடுக்க முடியாத அளவுக்கு பல வகை உணவுகளை பணக்கார வீடுகளில் தயார் செய்து அளவுக்கு மீறிப் பறிமாறுவதும் அதனால் உண்ண முடியாமல் மீதம் வைப்பதை குப்பையில் கொட்டுவதும் அவர்களது அன்றாட வழக்கமாகி விட்டது. யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வேறு வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடிமாமல் கொட்டுவது என்பது வேறு.

இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் அதிகபட்சம் நடந்து வருகிறது.. 

உணவு வகைகளும், அளவும் கூடுதலாக இருக்கிறதென்றுக் கருதி சமையலறையிலேயே சிறிதை பக்கத்து வீட்டாருக்காக ஒதுக்குவதில்லை சமைப்பது அனைத்தும் டைனிங் ஹாலுக்குப் போய் கைகளால் புறட்டப்பட்டு மிஞ்சுவது குப்பைக்குப் போய் விடுகிறது.

விருந்துகளிலும் இதே நிலை.

ஒரு காலத்தில் விருந்துகளில் தயார் செய்யப்படும் பிரியானி உணவில் இறைச்சி இட்டு சமைப்பார்கள். அதனுடன் வெங்காயம் தயிர் கலந்த ஊறுகாய் ஒன்று மட்டும் அதிகமாக சேர்த்து கொள்வார்கள். அது சிறிது காலத்தில் வசதி படைத்தவர்களின் விருந்தில் முன்னேற்றம் அடைந்து முட்டை சேர்க்கப்பட்டது,

சிந்தித்தால் சீர் பெறலாம்

விருந்துகளுக்கு அழைக்கப்படுபவர்களில் ஏழைகளும் இருக்க வேண்டும் என்று ஏற்றத் தாழ்வுகளைக் கலைந்து சமநிலைப படுத்திய வலியுருத்துவதுடன் ஏழைகள் அழைக்கப்படாத விருந்தே விருந்துகளில் வெறுக்கத்தக்கது என்றும் கண்டிக்கிறது  விருந்துகளில் கெட்ட விருந்து பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கனிக்கப்படும் விருந்தாகும்
ஏழைகள் என்பவர்கள் எங்கிருந்தோ தேடிக் கண்டுப் பிடித்து அழைத்து வரப்படுபவர்கள் அல்ல மாறாக ஒவ்வொரு பணக்காரர்களின் குடும்பத்திலும் ஏழைகள் இருக்கின்றனர் அவர்களும் விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதிகபட்சம் உணவுகள் குப்பைக்குப் போகாது. ஆனால் விருந்துகளில் கலந்து கொள்ள வரும் பிரபலங்கள் இந்த ஏழைகளைக் கண்டால் முகம் சுளிக்கலாம் என்றுக் கருதியேப் பெரும்பாலும் இரத்த உறவுகளாகிய ஏழைகள் அழைப்பதில்ல. அழைத்தாலும் இவர்களுடன் அல்லாமல் வேரொறு ஹாலுக்கு அனுப்பப்படுவார்கள் அதனால் அவர்களது உணவுகளை குப்பையில் கொட்ட வைத்து அவர்களை ஷைத்தானின் தோழர்களாக்கி விடுகின்றான்.

நல்ல முன் மாதிரி

சமீபத்தில் ஆஸ்திரேலிய ஸிட்னி நகரில் சர்ரி ஹில்ஸ் என்ற ஊரில் இயங்கும் ஓட்டல் ஒன்றில்

 சாப்பாட்டை மீதம் வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும்,

o முழுமையாக சாப்பிட்டால் 30 சதவிகிதம் விலையில் சலுகை வழங்கப்படும் என்றும் அறிவித்து போர்டு வைத்துள்ளனர். (செய்தி: தினத்தந்தி)

குறிப்பிட்ட இந்த முன் மாதிரியை அனைத்து ஹோட்டல்களிலும் பின்பற்றினால், மீதம் வைக்காத அளவுக்கு போதுமான சாப்பாட்டை வீடுகளில் சமைத்தால், விருந்துகளில் ஏழைகளும் அழைக்கப்பட்டு சமமாக நடத்தப்பட்டால், இறைவனின்  அருட்கொடையாகிய உணவு குப்பைக்கு செல்வதை ஓரளவாவது தடுத்து நிருத்த முடியும். அவ்வாறு தடுத்தால் ஷைத்தான் நுழையும் வழிகளில் ஒன்றை அடைத்து ஷைத்தானின் சூழ்ச்சி முறியடிக்கப்படும்.

இறைவனின் அடியார்களை அவனின் நிணைவிலிருந்து திசை திருப்புவதற்காக ஷைத்தான் வகுத்தப் பலவழிகளில் பொருளாதாரத்தை வீண் விரயம் செய்வதற்காக தூண்டும் வழி முக்கியமான வழியாகும்

o உணவு இறைவனின் அருட் கொடை இந்த அருட் கொடையை வீதியில் வீசி எறியலாமா ?

o வீதியில் வீசி எறியும் அளவுக்கு மிதமிஞ்சி விருந்து செய்யலாமா ?

o இன்று உலகில் எத்தனையோ மக்கள் உணவு கிடைக்காமல் செத்து மடிவதற்கான காரணங்களில் குறிப்பிட்ட ஓரிடத்தில் உணவுகள் சீரழிக்கப்படுவதும் முக்கியக் காரணம் என்பதை ஏன் பலருடைய மனம் ஏற்க மறுக்கின்றது? சிந்தியுங்கள் சீர் பெறுவீர்க

பொன் மொழிகள்




ஆசை இல்லாதவன் அரை மனிதன் !

ஆசைப்படு அளவோடு !

ஆசை ஆறிவிழக்க செய்யும் !

ஆசையே துன்பத்திற்க்கு காரணம் !

கோபத்தோடு எழுந்தவன் நட்டத்தோடு அமருவான்!

பிறருக்கு உதவி செய்யவிட்டாலும், துன்பத்தை உண்டாக்காமல் இருந்தாலே உதவி செய்ததற்க்கு சமம்.

தான் வாழ பிறரைக் கெடுக்காதே!

விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை!

கெட்டுப்போக நினைப்பவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை!

பொது நலம் இல்லாவிடினும் சுய நலம் இல்லாமல் இரு!

மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கின்றோமோ!

அதுபடி தாம் நாம் பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும்.
 
எவன் ஒருவன் மற்று ஓருவருக்கு உடலாலும் உள்ளத்தாலும் தீங்கு செய்யாமல் இருக்கின்றானோ அவனே சிறந்த மனிதன்!

மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்!


தனக்கு தெரிந்தை  மற்றவருககு சரியான தருணத்தில்
அவர் உதவி  கோராமலே, தாமாகவே மனம் உவந்து செய்வதே உதவி

கணினியில் ஆ...... பாசத்தை விடுத்து

ஆன்மீகத்தை, நற் சிந்தனையுள்ளவற்றை  மட்டும்  நாடு, தேடு.

எதுவரை நம்மிடம் ஆசைகள் இருக்குமோ, அதுவரை அவற்றால்

உண்டாகக் கூடிய துன்பம், கவலை, அமைதியின்மை ஆகியவையும்

கூடவே இருக்கும். ஆசைகளை விட்டால்,  பாவசெயல்கள் உடனே

நம்மில் இருந்து அகன்று விடுகின்றன. அமைதி  கிடைக்கிறது.

மண்ணாசை!  பொன்னாசை!   பெண்ணாசை!  விட்டு  விடு

 மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.

 பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.

 பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.

 இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு.

 ஆகவேதான், பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது.

 பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு

ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல!

 “இருப்பது போதும் ;  வருவது வரட்டும்;

போவது போகட்டும் ;  மிஞ்சுவது மிஞ்சட்டும்”

என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே

பற்றற்ற வாழ்க்கையாகும்.

Monday, April 9, 2012

வரதட்சணை


கொடுப்பது குற்றம்-இதைவிட
வாங்குவது மாபெரும் குற்றம்
இதுவே இந்திய   சட்டம்-ஆனால்
கொடுக்காதோர் கொடுமைக்கு ஆளாகிறார்கள்


கொடுப்போர் விரும்பிக் கொடுப்தில்லை
மன வேதனையோடுக் கொடுக்கிறார்கள்
இதையறிந்தும் வாங்கி மகிழ்கிறார்கள்
ஆண்களில் சில அறிவீனர்கள்!

ஆத்திரமடையாதீர் தோழர்களே!
அறிவுப்பூர்வாமாக ஆராய்ந்து பாருங்கள்
ஆணுக்கு பெருமை சேர்பது பெண்களே!
பெண்ணைப் பேதையென நினைப்பது மடமையே!



வாங்கியது போதும் வாலிபர்களே!
இறைவனுக்குப் பயந்து
இம்மை மறுமையை நினைத்து
இன்றே இப்பொழுதே
வரதட்சணையை கைவிடுவீர்!

வெறுக்கக் கூடிய வரதட்சணை
பெண்களை வருத்தக்கூடியது வரதட்சணை!
 
வாழப்போவது மனைவியுடன் தான்!
 
வாங்கிய வரதட்சணையுடன் அல்ல!அல்ல!!

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...