Total Pageviews

Thursday, July 12, 2018

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

  • ·         அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும்.
  •   எனவே வயிறு புடைக்க மூச்சு
  •  
  •   முட்ட உண்ணக் கூடாது
  •  
  • பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.

  • ·         மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.
  • உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.
  •  
  • வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.
  • கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.
  •   இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.
  •  ள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.
  •  
  •  இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.
  • உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.
  • காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
  • உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது.
  •  வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.
  • காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.
  • சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
  • உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
  • இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.
  • சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக் கூடாது.
  • அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.
  • சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது.
  • தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.
  • ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.
  •  வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.
  • வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.
  • இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.
  •  புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.
  • உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறி களோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.
  • அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது.
  • அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.
  • நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங் களையோ மூடி வைக்கக் கூடாது.
  • உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.

ஏன் சாப்பிடும் போது பேசக்கூடாது தெரியுமா? - தெரிந்துகொள்வோம்



ஏன் சாப்பிடும் போது பேசக்கூடாது தெரியுமா? - தெரிந்துகொள்வோம்
உணவுக் குழாய்க்குள் காற்றோ, சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருளோ போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.
மனித முகத்தில் மண்டை ஓட்டின் அதாவது கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல் வளையின் கீழ் பகுதி வரை தொண்டை என்கிறது, மருத்துவம். இந்த தொண்டையை மேலும் மூன்று பகுதிகளாக பிரிக்கிறார்கள். அவை: முகத்தோடு இணைந்த தொண்டை, வாயோடு இணைந்த தொண்டை, குரல் வளையோடு இணைந்த தொண்டை.
வாயிலிருந்து உணவுக் குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதேபோல் மூக்கிலிருந்து சுவாசக்குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது. இது கிட்டத்தட்ட ஒரு லெவல் கிராசிங் போன்றது.
சுவாசப் பாதையை சாலை என்று வைத்துக்கொண்டால் உணவுப் பாதைதான் ரெயில்வே பாதை. சாலை எப்போதும் திறந்தே இருக்கும். காற்று வந்து போய்க் கொண்டிருக்கும். உணவுப் பாதையில் உணவு வரும்போது அதாவது நாம் சாப்பிடும்போது சுவாசப்பாதை மூடிக் கொள்ளும். உணவு போனதும் மீண்டும் திறந்து கொள்ளும்.
இதில் எதற்கு கதவு போன்ற அமைப்பு என்றால் உணவுக் குழாய்க்குள் காற்றோ, சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருளோ போய்விடக்கூடாது என்பதற்காகத்தான். பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது என்கிறார்கள். அப்படி சாப்பிடும்போது சுவாசக் குழாய் திறக்கும்.
சுவாசக் குழாய் திறந்தால்தான் பேசமுடியும். இப்படி திறக்கும் சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருள் தவறாக நுழைந்து விடும். இதை வெளியேற்றும் முயற்சியில் சுவாசக் குழாய் உள்ளே நுழைந்த உணவை வெளியே தள்ளும். இதைத்தான் புரை ஏறுதல் என்கிறார்கள். மருத்துவத்துறையில் இதை ‘வாட்ச் டாக் மெக்கானிசம்‘ என்று கூறுகிறார்கள்.
சிலருக்கு தூங்கும் போது புரையேறும். அசந்து தூங்கும் போது அவரையும் அறியாமல் உமிழ்நீர் வழிந்து சுவாசக் குழாய்க்குள் நுழைந்து விடும். மனிதர் தூக்கத்தில்தானே செய்கிறார் என்று சுவாசக் குழாய் விட்டுவிடாது. உடனே அந்த உமிழ்நீரை வெளியே தள்ளும். இதைத்தான் தூக்கத்திலேயே புரையேறுதல் என்கிறார்கள்.
தூங்கும்போது நடக்கும் மற்றொரு முக்கியமான நிகழ்வு குறட்டை. விழித்திருக்கும்போது தாடை சதைகள் கெட்டியாக இருக்கும். தூங்கும்போது இந்த கெட்டித் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து விடும். ஆழ்ந்த தூக்கத்தில் முழுமையாக கட்டுப்பாடு இழந்து சுவாசக் குழாயின் மேல் விழுந்து அழுத்தும். இதனால் தடங்கல்கள் உண்டாகி காற்று போகும் முயற்சி தடைபடும். அப்போது ஏற்படுகிற கொர்... கொர்.. சத்தம்தான் குறட்டை விடுதல் என்கிறார்கள்.
குறட்டை விடுதல் சில சமயம் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும் கூறுகிறார்கள் மருத்துவர்கள். குறட்டையைத் தடுக்க 500 வழிகள் இருப்பதாகவும், இதில் எது ஒத்துவருமோ அதன் மூலம் குறட்டையை கட்டுப்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள். அதிகமாக குறட்டை விடுபவர்கள் கண்டிப்பாக காது, மூக்கு, தொண்டை மருத்துவரை பார்க்க வேண்டும்.

Tuesday, July 10, 2018

ஆராேக்கியத்துடன் வாழ நம் முன்னாேர்களின் எளிய வழிமுறை...!!!




1.உணவிடை நீரை பருகாதே!

2.கண்ணில் தூசி கசக்காதே!

3.கத்தி பிடித்து துள்ளாதே!

4.கழிக்கும் இரண்டை அடக்காதே!

5.கண்ட இடத்தில் உமிழாதே!

6.காதை குத்தி குடையாதே!

7.காெதிக்க காெதிக்க குடிக்காதே!

8.நகத்தை நீட்டி வளர்க்காதே!

9.நாக்கை நீட்டிக் குதிக்காதே!

10.பல்லில் குச்சிக் குத்தாதே!

11.பசிக்காவிட்டால் புசிக்காதே!

12.பசித்தால் நேரம் கடத்தாதே! 

13.வயிறு புடைக்க உண்ணாதே!

14.வாயைத் திறந்து மெல்லாதே!

15.வில்லின் வடிவில் அமராதே!

16.வெற்றுத் தரையில் உறங்காதே!

இவைப் பதினாறையும் கடைபிடித்தாலே பாேதும் உடல் ஆராேக்கியத்துடன் வாழ நம் முன்னாேர்களின் எளிய வழிமுறை...!!!

Thursday, June 21, 2018

முன்னோர்கள் மூடர்கள் அல்ல!



1. "வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது"

வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.

2. "நகத்தைக் கடித்தால் தரித்திரம்"

நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.

3. "உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது"

கிணற்றுக்குள்  பல்வேறு விஷ வாயுக்கள் உற்பத்தியாகும். உச்சி வெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.

4. "இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால் லட்சுமி வெளியே போய்விடுவாள்"

வீட்டுக்குள் பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில் அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும் சிரமம்.

5. "வீட்டில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடும்"

புறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. அதனால் அதைத் தேடி விஷப்பாம்புகள் வரும்.

6. "இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால்... எமனுக்கு அழைப்பு வைப்பதுபோல"

கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.

7. "புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்"

புளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்றுகூட சொல்வார்கள்.

8. "முருங்கை மரம் வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது"

மரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால்கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். தவிர, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்.

9. "தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது"

சமைக்கும்போதும்... பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக.

10. "வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது"

பூமியின் காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும் தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.

11. "வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது"

இந்த இலையில் 'பினாலிக்ஸ்' எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.

Thursday, May 24, 2018

காதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள்!!!

காதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள்!!!

உடலின் முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருக்கும் காதை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். காதுகளுக்கென்று தனியான பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லை. எனவே, சிறு சிறு துகள்களாக அழுக்குகள் காதுகளுக்குள் சேர்ந்து விட வாய்ப்புகள் உள்ளன. மெழுகு போன்று அந்த அழுக்குகள் சேர்வதால் காது அடைத்துக் கொள்ளவும் கூடும். அழுக்குகளும், குப்பையும் காதை ஆக்கிரமித்துக் கொள்ளும் அபாயமும் உண்டு.

அதிகபட்சமாக உள்ள மெழுகு மற்றும் அழுக்குகளிலிருந்து காதை சுத்தமாக பராமரிக்க வேண்டும். மெழுகு உருவாவதால் காதின் கேட்கும் திறன் பாதிக்கக் கூடும். சுத்தம் செய்யப்படாமல் தேங்கியிருக்கும் அழுக்குகள் மற்றும் குப்பைகளால் பாக்டீரியா தொற்றுகள் அல்லது காது தொடர்பான நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன. காதை சுத்தம் செய்ய சில அடிப்படையான வழிமுறைகள் உள்ளன. அவ்வகையான வழிமுறைகளைப் பற்றி இங்கு காண்போம்.
Effective Tips To Clean Your Ear
மெழுகு கரைப்பான்கள்

காதில் அழுக்காக சேர்ந்துள்ள மெழுகை மென்மையாக்கவும் மற்றும் கரைக்கவும் கூடிய பல இயற்கையான மற்றும் வீட்டிலேயே செய்யக்கூடிய பொருட்கள் உள்ளன. வீட்டிலேயே செய்யக்கூடிய மெழுகு கரைப்பான்களில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு, கிளிசரின் மற்றும் தாது எண்ணெய்கள் உள்ளன. இந்த பொருட்களை கலந்து செய்யப்படும் கலவைகள் மெழுகு கரைப்பான்களை உருவாக்குகின்றன. இந்த பொருட்களை 1-2 தேக்கரண்டிகள் கலந்து, காதில் 2-3 துளிகள் விடவும். இரவு முழுக்க இவ்வாறு வைத்திருந்து, பின் காலையில் காதை மென்மையான பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.

சூடான எண்ணெய்

தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சூடாக காய்ச்சி, அதை பயன்படுத்தி காதில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய முடியும். தேங்காய் எண்ணெயை சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்குமாறு காய்ச்சத் தொடங்கவும். வெதுவெதுப்பாக இருக்கும் எண்ணெயில் 3-4 துளிகளை காதில் விடவும். இந்த வெதுவெதுப்பான எண்ணெய் கரைப்பானாக செயல்பட்டு காதில் உள்ள மெழுகை கரைத்து, எளிதில் வெளியேறச் செய்யும். இவ்வாறு எண்ணெயை காதுக்குள் விடும் போது, தலையை எதிர்ப்புறமாக திருப்பி வைத்தால், எண்ணெய் காதுக்குள் ஆழமாக உள்ளே செல்லும். இரவு முழுவதும் எண்ணெயை காதுக்குள் வைத்திருக்கும் பொருட்டாக பஞ்சை கொண்டு காதை அடைத்து விடுங்கள். அடுத்த நாள் காலையில் தண்ணீரை விட்டு காதை சுத்தம் செய்யுங்கள் மற்றும் அதிகபட்சமாக இருக்கும் எண்ணெயையும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.

பட்ஸ்

மென்மையான பட்ஸ்களைக் கொண்டு காதுகளை தொடர்ந்து சுத்தம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த முயற்சியின் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் - மென்மையான பட்ஸ்களை தேர்ந்தெடுப்பது தான். காதையோ அல்லது அதன் உட்பகுதிகளையோ சேதப்படுத்தக் கூடிய பட்ஸ்கள் அல்லது கருவிகளை பயன்படுத்த வேண்டாம். நல்ல தரமான மற்றும் மென்மையான பட்ஸ்கள் மருந்தகங்களில் கிடைக்கின்றன.

மருந்து தடவிய கரைப்பான்கள்

காதுகளை சுத்தம் செய்வதில் மருந்து தடவிய மெழுகு கரைப்பான்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இவற்றிற்கான கெமிக்கல் டோஸேஜ்கள் மருந்தகங்களில் கிடைக்கின்றன. பயனாளிகளுக்கான கையாளும் வழிமுறைகள் இந்த பாட்டில்களுடன் சேர்ந்து கிடைக்கின்றன. இவற்றை சொட்டு சொட்டாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த கரைப்பான்களை வாரத்திற்கு ஒரு முறையாவது பயன்படுத்த வேண்டும். இந்த வழிமுறையில் காதுகளை எளிதில் சுத்தம் செய்ய முடியும். எனினும், நிறைய வேதிப்பொருட்களை பயன்படுத்தி காதுகளை சுத்தம் செய்வதை தவிர்ப்பது நலம். ஏனெனில், உடலின் மிகவும் அழகிய, முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருப்பவை காதுகளாகும்.

மருத்துவ ஆலோசனை

இந்த வழிமுறைகளை எல்லாம் பயன்படுத்திய பின்னரும் உங்கள் காதுகளில் உள்ள அடைப்புகள் நீங்காவிடில், இது நீங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரமாகும். காது வலி மற்றும் மெழுகு உருவாகி கிடத்தல் ஆகியவை காது தொடர்பான நோய்களுக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். காதுகளில் தொடர்ந்து மற்றும் அடிக்கடி வலி ஏற்பட்டால் அது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கும். மேலும், மருத்துவர்கள் அவர்களிடமுள்ள கருவிகளைக் கொண்டு உங்கள் காதுகளை சுத்தம் செய்து விடுவார்கள். காதுகளில் உள்ள அழுக்குகளை எளிதில் சுத்தம் செய்ய முடியாது. அதற்கு தொடர்ந்த கவனிப்பும், பராமரிப்பும் அவசியம். உடலின் மற்ற பாகங்களைப் போலவே காதுகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

Thanks to One india tamil.com

காது கேட்கும் திறன் குறைகிறது எனில் !

இன்று நம்மில் பெரும்பாலானோர் காதுகளில் ஹெட்போன் மாட்டிக் கொண்டே திரிகிறோம். வேலைபளுவை குறிக்கிறோம் என்பதற்காக, 24 மணிநேரமும் ஹெட்போன் வழியாக பாடல் கேட்பது நமது பொழுதுப்போக்காக மாறிவிட்டது. இதன் காரணத்தால் இன்று காது கேட்கும் திறனும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
Preventing Hearing Loss In 8 Easy Ways
நம்மில் எத்தனை பேர் டிவியில் 10 - 15 சப்த அளவில் ஒலி வைத்து கேட்கிறோம். கேட்டால் 5.1, 7.1 ஸ்பீக்கர் வைத்துக் கொண்டு வேறென்ன செய்வது என கேள்வி கேட்பார்கள். காது கேட்கும் திறன் போனால் கூட பரவாயில்லை, ஸ்பீக்கர் பயன்பாடு தான் முக்கியமாகிவிட்டதா என்ன?

இந்த எட்டு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாக காது கேட்கும் திறனை அதிகரிக்க முடியும்.

வழி #1

வழி #1

புகைக்க வேண்டாம்! புகையிலை பழக்கம் அந்நபரின் காது கேட்கும் திறனை மெல்ல, மெல்ல குறைய செய்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே, புகைக்கும் பழக்கத்தை கைவிட்டுவிடவும்.
வழி #2

வழி #2

காதுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக தினமும் கண்டத்தைவிட்டு காதை நோண்ட வேண்டாம்.

மேற்புறமாக தினமும் குளித்து முடித்த பிறகு காதுகளை சுத்தம் செய்யுங்கள். அடிக்கடி ஏதேனும் பிரச்சனை போன்று உணர்ந்தால் மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

காது குடையும் போது நீங்கள் செய்யும் ஐந்து மிகப்பெரிய தவறுகள்!
வழி #3

வழி #3

ஆன்டி-பயாடிக், புற்றுநோய் மருந்துகள் என 200க்கும் மேற்பட்ட மருந்துகள் காத்து கேட்கும் திறனை குறைக்கும் தன்மை கொண்டவை. அதிகமாக ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வது கூட காத்து கேட்கும் திறனை பாதிக்கும். எனவே, நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்து ஏதுனும், காதுக்கு பிரச்சனை தருவது போன்று உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் அதை பற்றி கூறுங்கள்.
வழி #4

வழி #4

அதிக சப்த இரைச்சல் இருக்கும் இடங்களில் இருக்க வேண்டாம். இருக்க வேண்டிய கட்டாயம் நேரிடும் பட்சத்தில், காதுகளின் நலன் மீது அக்கறை எடுத்துக் கொண்டு, பஞ்சு அல்லது காதை பொத்தியபடி துணி கட்டிக் கொள்வது நல்லது.
வழி #5

வழி #5

அமைதி அவசியம். நாள் முழுக்க நான் ஓடிக் கொண்டே இருந்தால் நாம் சோர்வடைவதை போல, நாள் முழுக்க சத்தத்தை கேட்டுக் கொண்டே இருந்தால் காதுகளும் சோர்வடைந்துவிடும். எனவே, தினமும் ஓரிரு மணிநேரம் அமைதியான இடத்தில் அமர்ந்து செவிகளுக்கு ஓய்வளிக்க வேண்டும்.
வழி #6

வழி #6

ஹெட்போன், டிவி, கேம் ஆடும் போது அதிக சப்தம் வைத்து கேட்க வேண்டாம். உங்கள் காதை குறைந்த சப்தத்தை கேட்டுணர பழக்குங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சப்தத்தை குறைத்து கேட்கும் போது, உங்கள் காதுகள் தானாக அதற்கு ஏற்ப பழகிவிடும்.
வழி #7

வழி #7

காதுகளை பாதுகாக்க வேண்டும். காதுகளின் வெளிப்புறத்தில் பஞ்சு வைத்துக் கொள்வதால் சப்தம் குறைவாக கேட்க முடியும். இதற்கென சந்தையில் Earplug-குகள் கூட விற்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்துவதால் 15-30 டெசிபல் சப்தம் குறைவாக கேட்க முடியும்.
வழி #8

வழி #8

  • கேட்கும் திறன் குறைகிறது எனில்,
  • உங்களை சுற்றி எப்போதும் அதிக சப்தம் இருக்கிறது எனில்,
  • காதில் ஏதோ ரிங் அடிப்பது போன்ற சப்தம் கேட்கிறது எனில்..,
நீங்கள் உங்கள் காதை பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

Thanks to Oneindia.tamil

Thursday, March 29, 2018

வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது மனம் தளராமல் இருக்க சில வழிகள் !

வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது மனம் தளராமல் இருக்க சில சொற்களை நாம் நினைவில் நிறுத்தி, சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி அவற்றை உபயோகித்துக் கொள்ளலாம்.

மனம் சக்தி பெறும். புதிய தெம்போடு செயல்படலாம்.

1. போனது போச்சு, இனி ஆக வேண்டியதை யோசிப்போம்.

2. நல்ல வேளை. இதோடு போச்சு.

3. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

4. பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல

5. பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல.

6. சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

7. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

8. கஷ்டம் தான் … ஆனா முடியும்.

9. நஷ்டம் தான் … ஆனா மீண்டு வந்திடலாம்.

10. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

11. இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?

12. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

13. இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

14. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.

15. முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.

16. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.

17. திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.

18. ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே ஜாக்ரதையா இருக்கணும்.

19. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

20. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

21. அடடே, தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிக்கலாம்.

வீழ்வது கேவலமல்ல நண்பர்களே.....,வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்.

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...