Total Pageviews

Friday, June 7, 2024

வாழ்க்கையின் நோக்கம் !

 வாழ்க்கையின் நோக்கம் என்ன?

புகழும் பெருமையும் பெறுவதா?

அன்பையும் காதலையும் அனுபவிப்பதா?

வளத்தையும் வசதிகளையும் பெருக்கிக் கொள்வதா?

மதத்தையும் கடவுளையும் மதிப்பதா

 இல்லை உங்கள் வாழ்க்கையின் அடிப்படை நோக்கமே எல்லை இல்லாமல் போகவேண்டும் என்பதுதான். ஆனால் உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் படிப்பு, பதவி, பணம், குழந்தைகள், சொத்து என்று ஏதேதோ குறுக்கிட்டுள்ளன.

உங்கள் நோக்கத்தின் கவனத்தைத் திசை திருப்பியதில் அவற்றுக்கும் பங்கு உண்டு. அவை வாழ்க்கைக்கு நிறைவு தரும் தீர்வுகள் அல்ல என்பதால், எல்லாம் கிடைத்தும் அடுத்து என்ன என்று பதின் வயதில் ஏற்படும் தடுமாற்றம் உங்களுக்கு அறுபதில் வந்துவிட்டது.

வாழ்க்கையைக் கவனிக்கவே நேரம் இல்லாமல், எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருநாள் புஸ் என்று போய்விடுவது சாதனை இல்லை, வேதனை.

வாழ்க்கையின் முழு ஆழத்தையும் அகலத்தையும் வேர்வரை ஊடுருவி மனித மனம் எப்போதும் புரிந்துகொண்டது இல்லை. அதனால்தான், வாழ்க்கைக்கு மேலோட்டமான ஏதாவது நோக்கத்தை அது தேடிக்கொண்டே இருக்கிறது.

'முழுமையான நிறைவு இல்லாமல், உள்ளுக்குள் ஓர் ஆசைத் தீ எப்போதுமே எரிந்துகொண்டு இருப்பதற்கு என்ன காரணம்?'

இந்தக் கேள்வி கேட்கும் மனதை சிறிது காலத்திற்குச் சமாதானம் செய்துவைக்க, மகான்களின் தத்துவங்கள், மதக் கோட்பாடுகள், புராண விளக்கங்கள், மறைநூல்களின் சொல்லாக்கம் எல்லாம் பயன்படலாம். ஆனால் அடிப்படைக் கேள்வி காணாமல் போய்விடாது. விரைவிலேயே மீண்டும் தலை நிமிர்த்தி தவிப்பு ஏற்படுத்தும்.

வாழ்க்கையின் உண்மையான நோக்கம் முழுமையாக வாழ்வதுதான். அதை ஒழுங்காகச் செய்யவிடாமல், அதற்குப் பெரும் தடையாக இருப்பது நீங்கள் மட்டும்தான். உங்களை கரைத்துவிட்டால், வாழ்க்கை அதன் முழுமையை நோக்கித் தானாகவே மலரும்.

இந்தப் பிரபஞ்சமும் நீங்களும் ஒன்றே என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்ததும் ஆசை சட்டென்று அதன் தவிப்பை விட்டுவிடும்.

இந்த அறியாமையை எப்படிக் களைவது?

முறையான யோகாவின் மூலம் குறுகிய எல்லைகளை உடைக்க முடியும். பேரானந்தத்தை ருசிக்க முடியும். உங்கள் உச்சபட்ச சக்தியை உயிர்ப்பித்துவிட்டால், அப்புறம் இந்த உலகில்  வாழ்க்கையை ஆனந்தமாக வாழ முடியும்.

தடைகள் தான் உங்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரும்!

 


வாழ்க்கை என்னும் பாதையில் பெரிய குழியில் தடுக்கி விழுந்தாலும், "இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல், குழியில் இருந்து மேலே வருவது எப்படி என்று எண்ண வேண்டும்...

இடையூறுகள், அய்யப்பாடுகள், துன்ப துயரங்கள் போன்றவை எல்லா மனித வாழ்விலும் வருவது இயல்பானதுதான். ஆனால்!, சிலர் அதிலே துவண்டு வாடி விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தோல்வியைத் தழுவுவது தவிர்க்க முடியாதது...

ஆனால்!, வெற்றியாளர்கள் எத்தகைய இக்கட்டான சூழலையும் கடந்து போய்விடுகிறார்கள்...

எதையாவது சாதிக்கும் முயற்சியில் இறங்கினால், தடைகள் உறுதியாக குறுக்கிடத்தான் செய்யும். எல்லோருக்கும் இப்படி நேர்ந்திருக்கும். ஆனால்!, அந்தத் தடைகள் நம் பயணத்தை நிறுத்தி விடக்கூடாது...

பாதையில் சுவர் குறுக்கிட்டால், ஓட்டத்தை நிறுத்திவிட்டு திரும்பிப் போகக்கூடாது, அதைத் தாண்டிப்போவது எப்படி என கண்டுபிடிக்க வேண்டும்...

வெற்றி எல்லாம் எடுத்தவுடன் கிடைத்து விடுவதில்லை. இடையிடையே தடைகள், மனச் சோர்வை உண்டாக்கக் கூடிய நிகழ்ச்சிகள், இன்னபிற சிக்கல்களெல்லாம் ஏற்படும்...

அதனால் தளர்ச்சி கொள்ளக் கூடாது. நமக்கு ஏற்படும் தடைகள்தான் நம்மை நின்று நிதானித்துச் சிந்திக்கச் செய்கின்றன...

அடுத்த அடியை எப்படி எவ்வளவு அழுத்தத்தோடு எடுத்து வைக்க வேண்டும் என்பதற்கு அத்தகைய தடைகள்கூட நமக்குத் தேவைதான்...

வெற்றி பெற்றவர்களைக் கேட்டுப் பாருங்கள். அப்பப்பா!, என்னுடைய முன்னேற்றத்துக்குத் தான் எத்தனை தடைகள்...? இருந்தாலும் நான் மனம் தளரவில்லை. சளைக்காமல் முயன்றேன். அதனால் தான் இன்று இந்த நிலையில் வாழ்கிறேன் என்பார்கள்...

பயணம் செய்யும்போது வழியில் கல்லும் முள்ளும் இருக்கத்தான் செய்யும். நாம்தான் பார்த்து நடக்க வேண்டும். தவறிப்போய் முள் குத்தினாலும் அதைப் பிடுங்கி எறிந்துவிட்டு பயணத்தை தொடரவேண்டியதுதான்...

அதற்காக அங்கேயே அமர்ந்துவிடுகிறோமா...? என்ன...!?

ஆம் தோழர்களே...!

நம்மை தொல்லைகள், துன்பங்கள், தடைகள் குறுக்கிடும்போது துவண்டு விடாதீர்கள். அதுதான் வாழ்க்கை என்று உங்கள் திறமைகளுக்கு நீங்களே முற்றுப் புள்ளி வைக்காதீர்கள்...!

அதையும் மீறி நம்மால் முடியும், எதிர்கொள்ள முடியும் என்ற மனவுறுதியுடன் சிகரத்தினை நோக்கி சலிப்பின்றி பயணம் செய்யுங்கள்...!!

எந்தத் தடைகளுக்கும் அஞ்சாதீர்கள். அவற்றை வரவேற்று கொண்டாடுங்கள். ஏனெனில்!, தடைகள்தான் உங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும். நெருக்கடியான காலகட்டம்தான் மிகச் சிறந்த மனிதனை அடையாளம் காட்டுகின்றன...!!!✍🏼🌹

Thursday, June 6, 2024

இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளர விடுவதே ஆரோக்கியமானது"

 சமீபத்தில் கோவிலுக்கு போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம். 


எங்களை அழைத்த வனத்துறை அதிகாரி, "குரங்குகளுக்கு மனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது"- என்றார்.

ஆச்சர்யமாய் இருந்தது..

விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டோம் ...

அதற்கு அவர் சொன்னார்

"சுற்றிப் பார்ப்பதற்காக வரும் மனிதர்கள் ஒரு பிரியத்தில் தான் குரங்குகளுக்கு உணவிடுகிறார்கள்.

ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால்

இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன..


இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்த பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக் குரங்குகள் மாறி விடுகின்றன...

வரிசையில் உட்கார்ந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சை எடுக்கும் ஜீவன்களாக மாறி விடுகின்றன...

எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளர விடுவதே அவற்றுக்கு ஆரோக்கியமானது" என்று பதில் சொன்னார்...

கேக்கும்போதே மனசு திக்கென்றது நிறைய யோசிக்க வைத்தது...! -

இலவச பஸ்ஸில் பயணம் செய்து


இலவச அரிசி வாங்கி, 


இலவச கிரைண்டரில் 


இட்லிக்கு மாவாட்டி, 


இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து,


இலவச மின்விசிறியைப் போட்டு 


இளைப்பாறி, இலவச டிவியில் படமும் சீரியல்களும் பார்க்கும் நம்ம ஊர் மக்களுக்கும்,  இது தான் நடக்கிறது! உழைக்கவே மனம் வருவதில்லை!"

மேட்டர்" என்னவோ குரங்கு பற்றித்தான். ஆனால் அது நம் மக்களுக்கும் அப்படியே பொருந்துகிறது!


Ponkarthikeyan

Sunday, June 2, 2024

பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் !

 பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களைப் படிப்போம்... 🦜

1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை 🦜
 

2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை🦜
 

3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன.🦜
 

4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு  கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை.🦜
 

5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.🦜
 

6. தனது உணவுகளை அவை மாற்றுவதில்லை 🦜
 

7. தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை.🦜
 

8. நோய் வந்தால் உண்ணுவதில்லை. சுகமான பின் உணவு எடுத்துக்கொள்கிறது.🦜
 

9. தன் குழந்தைகளுக்கு உண்மையான அன்பை கொடுத்து வளர்க்கின்றன.🦜
 

10. கடுமையான உழைப்பாளிகளாயிருப்பதால், இதயம், கல்லீரல், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை.🦜
 

11. இயற்கைக்கு எதிராக ஒருபோதும் செயலாற்றுவதில்லை. தனது தேவைக்கு மட்டும் இயற்கையிலிருந்து பெற்று கொள்கின்றன.🦜
 

12. தனது கூடு மற்றும் சுற்று சூழல்களை அனுசரனையோடு பாதுகாக்கின்றன.🦜
 

13. ஒருபோதும் தனது மொழியினை மாற்றி வேற்று மொழி கலந்து பேசுவதில்லை.🦚
 

14.பறவைகள் கூடுதலாக கூடுகள் கட்டி வாடகைக்கு விடுவதில்லை.                                             
 

இதில் சில படிப்பினைகளையாவது நாம் பாடமாக எடுத்துக்கொண்டால் வாழ்வு சிறப்பது திண்ணம். 🦉🦜

🦢.    அதோ அந்தப்பறவை போல வாழ வேண்டும். என்று தான் ஆசை....

வாய்ப்பு கிடைத்தால் அடுத்த முறை....

அன்புடன், தீர காதலுடன், நட்புடன்... அனைத்து உண்மையான உறவுகளுடன் சந்திக்கலாம்....

வாழ்க மகிழ்ச்சியுடன்....

Friday, May 31, 2024

வாழ்க்கை என்பது !

 

வாழ்க்கை என்பது !

 

 
தன்னிடம் உள்ள திறமையைச் சரியாகக்  கண்டு பிடித்து , தனக்கும் ,தன் குடும்பத்துக்கும் ,தன்னைச் சார்ந்த சமுதாயத்திற்கும் உபயோகமாக வாழ்வது தான் வாழ்க்கை!

 ற்றற்ற வாழ்க்கை!

⭐இருப்பது போதும் !

⭐வருவது வரட்டும் !

⭐போவது போகட்டும் !;

⭐மிஞ்சுவது மிஞ்சட்டும் !

என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.

பற்றை துறக்க சந்நியாசம் போக வேண்டு மென்பதில்லை. இந்த நாலுவரியை கடைபிடித்தாலே கரையேறிவிடலாம்!

இன்பம் வந்தாலும் சிரி; துன்பம் வந்தாலும் சிரி!

இன்பங்களும் துன்பங்களும் கலந்தது தான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது இன்பம் மற்றும் துன்பமா?

• சிலர் இங்கு பாசத்துக்காக ஏங்குகின்றனர்

• சிலர் பணத்திற்காக ஏங்குகின்றனர்.

• சிலர் பதவி, பொன், பொருள் ஆகியவதிற்காக ஏங்குகின்றனர்.

• சிலர் உடுத்த உடை இன்றி ஏங்குகின்றனர்.

• சிலர் உண்ண உணவின்றி ஏங்குகின்றனர்.

இப்படி ஏங்கி ஏங்கியே சிலரின் வாழ்கை முடிந்து விடுகின்றது. வாழ்கை என்பது ஏக்கமா?

• பணக்காரனோ பணம் இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்று ஓடுகிறான்.

• ஏழையோ பணமே தம்மிடம் இல்லை என்று பணத்தை தேடி ஓடுகிறான்…

வாழ்கை என்பது பணமா?

• சிலர் வாழ்க்கையில் எதையேனும் சாதிக்கவேண்டும் என்று ஓடுகின்றனர்.  

வாழ்க்கை என்பது சாதனை செய்வதா?

• சிலர் வாழ்க்கைக்கு நல்ல கல்வி, அறிவு வேண்டும்(அவசியம் ) என்கின்றனர்.  

வாழ்க்கை என்பது கல்வியும் அறிவும் மட்டும் தான?

• சிலர் மீது நம்பிக்கை வைத்தே ஏமாந்து போகின்றோம் நம்மில் சிலர். வாழ்கை என்பது ஏமாற்றமா?

• சென்றவர்களை எண்ணியே மனமுடைந்து கண்ணீர் விடுகின்றோம்.  

வாழ்க்கை என்பது கண்ணீர் வடிப்பது மட்டும்தானா?

• இங்கு நாம் சந்திக்கும் ஒவ்வருவரும் நமக்கு ஒரு பாடத்தினை காப்பிக்கின்றனர். வாழ்க்கை என்பது பாடம் கற்பதா?

• சிலர் கனவுகளை துரத்தி செல்ல இயலாமல் இருக்கின்றனர். வாழ்க்கை என்பது கனவு மட்டும் தான?

ஓடி ஆடி முடித்த பின்பு இங்கு ஓய்வெடுக்க மிஞ்சுவது கல்லறையே !!

• இருபதிலும் வாழ்க்கையை தொலைத்தவர் இங்கு உண்டு, அறுபதிலும் இங்கு வாழ்க்கையை பெற்றவரும் உண்டு…

கல்லறையிலும் இங்கு புதைந்த வாழ்க்கையை தேடுபவர் யாரோ !!

வெற்றி பெற ஒருவருக்கு என்ன மனநிலை வேண்டும்?

 

1.முதலில் இலக்கைச் சரியாக முடிவு செய்ய வேண்டும்.

2.அது குறித்த அனைத்துத் தகவல்களையும் திரட்டி ஒரு தீர்க்கமான.. சரியான முடிவுக்கு வர வேண்டும்.

3.கால நிர்ணயம் (time limit) செய்து கொள்ள வேண்டும்.

4.அதற்கு உரிய நிதி தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்து கொள்ள வேண்டும்.

5.கண் துஞ்சாமல்.. பசி நோக்காமல் அதை அடைய இடைவிடாது உழைக்க வேண்டும்.(smart work)

6.எந்தத் தடைகளையும் தாண்டும் மனப் பக்குவம் கட்டாயம் வேண்டும்.

அப்புறம் என்ன ?

வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும்.. அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்கள் அர்ப்பணிப்பு நிறைந்த உழைப்பைச் சேரும் !

வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள்.. அன்றாட வாழ்க்கையில் தினமும் ஒரு மணி நேரமாவது உங்கள் உடலுக்கென ஒதுக்கி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்று உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய செயலில் ஈடுபடுங்கள். அவை உங்கள் உடலை சீராய் வைப்பதோடு மட்டுமல்லாமல் மனதையும் புத்துணர்ச்சியாய் வைக்க உதவும்.

 நல்வாழ்த்துகள் அன்பு நண்பரே !

மனிதன் உடம்பில் கடைசியாக என்னென்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன ?

 


மனிதன் உடம்பில் கடைசியாக என்னென்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன ?

1.பசி உணர்வு நின்றுவிடுவது.

2.நீர் குடிப்பதை நிறுத்திவிடுவது. முடியாதது.

3.நீண்டநேர உறக்கம். நினைவின்மை.

4. உடம்பு செயல்பாடு முடியாமை.

5. பேசவிருப்பமின்மை. இயலாமை.

6. சிறுநீர், மலம் வெளியேற முடியாமை.

இது போக சில மனிதர்கள் கடைசி காலங்களில் மனக்கோளாறு புத்திகோளாறு ஆகி விடுவதும் உண்டு.

அபரீத சப்தங்கள், பேய் பிசாசு போன்ற பயங்கர உருவங்கள் தோன்றுவதாக அலறுவார்கள்.

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...