Total Pageviews

Thursday, April 26, 2012

ATM - நூதன திருடர்கள் - ATM திருட்டை தடுப்பது எப்படி?"கிரெடிட், டெபிட்" கார்டுகளை பயன்படுதுவரா நீங்கள் ? 

உங்களுக்குக்கான பகுதி தான் இது.அறிவியல் கண்டு பிடிப்புகள் பாமர மக்களுக்கு உதவியது போய், இப்போது பரம்பரை திருடர்களுக்கும் பயன் படுகிறது என்று நினைக்கும் போது வயிற்றில் புளியை கரைக்கிறது.புகை போட்டு நகை திருடும் காலம் மலையேறிவிட்டது. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இவர்கள் கொள்ளை யடிப்பதாலும், மேலும் பல புகார் இருப்பதாலும் பொது மக்கள் உஷாராக  இருக்க வேண்டும்.


இப்போதெல்லாம் பணத்தை கொண்டுசென்று பொருட்களை வாங்கி வருவதில்லை மாறாக  கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்தம் பழக்கம் அதிகரித்து வருகிறது.கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை கண் இமைக்கும் நேரத்தில் காணமல் போனால் அதை விட பெரிய வேதனை என்னவாக இருக்கமுடியும். எப்படி திருடுகிறார்கள்?


 “கார்டுகளை'   பயன் படுத்தும் போது,  அதில்  இருக்கும் விவரங்களை திருட நினைப்பவர்கள், கூடவே கையில் சிறியதாக வைத்திருக்கும், "ஸ்கிம்மர்' என்ற கையடக்க மிஷினிலும் தேய்த்து விட்டு திருப்பிக் கொடுத்து விடுவர்.அந்த மிஷினை போலி கிரெடிட் கார்டு தயாரிக்கும் கும்பல், ஊழியருக்கு பணம் கொடுத்து வாங்கிச் செல்லும். இவ்வாறு சேகரித்த தகவல்களை, பழைய கார்டுகளில் புகுத்தி பணம் கொள்ளையடிக்கப் படுகிறது.சில நிறுவன உழியர்களே இச்செயலில் ஈடுபடுவதால் கார்டை பயன்படுத்துவர்கள், உஷாராக இருப்பது நல்லது.


கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுதுவர்கள்   கவனமாக இருந்தால், நூதன திருடர்கள் மக்கள் பணத்தில் குளிர் காயமாட்டார்கள்.

இதிலிருந்து எப்படி நம் பணத்தைபாதுகாப்பது என்பதை பார்ப்போம்.

ஸ்கிம்மர் கருவி

சென்னை மேடவாக்கம் கூட்ரோடில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டிஎ.ம் மையத்தை சுத்தம் செய்வதற்காக வந்த நபர் ஏ.டி.எம் இயந்திரத்தின் முன்  கதவை திறக்க முயற்சி செய்து முடியாததால் டெக்னீசியனை அழைத்துள்ளார்.  கதவை திறந்த டெக்னீசியன் பணம் வெளிவரும் ஓட்டையின் பின் பகுதி அருகாமையில் சோப்பு பெட்டியுடன் (ஸ்கிம்மர்) ஒரு புளுடூத் வசதி உள்ள மொபைல் இணைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ந்து போனார். வெடிக்குண்டு ஆக இருக்கும்  என பயந்து வங்கி அதிகாரிகளை அழைத்துள்ளார்.


வங்கி ஊழியர்கள் எங்களை  அழைத்தனர் என்றார் திரு.ஆர்.வேதரத்தினம், அசிஸ்டண்ட் கமிஷ்னர் ஆப்போலிஸ், மடிப்பாக்கம்.


தகவல் திருடுதல்

ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க வருபவர்கள்கார்டை நுழைத்து, பின் (PIN) நம்பரை பதிவு செய்தவுடன்,ஏ.டி.எம்- 

இயந்திரத்தின் உள்ளே இணைக்கப்பட்டுள்ள மொபைல்-க்கு ஸ்கிம்மர் மூலம் தகவல் சென்றடைகிறது. ஏ.டி.எம் அருகில் நின்று  இருக்கும் கொள்ளையன் வேறு  ஒரு  பொபைல்  உதவியுடன், ஏ.டி.எம் இயந்திரத்தின் உள்ளிருக்கும் பொபைலை புளுடூத் வசதி மூலம் இணைத்து தகவலை திருடுகிறான். திருடிய தகவல்களை டம்மி கார்டில் புகுத்தி பணத்தை கொள்ளையடிக்கப்படுகிறது.


தகவல் திருடுவதை எப்படி தடுக்கலாம் ?

காவல்பணியாளர்கள் இல்லாத,ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுப்பதை தவிர்க்கவும்.

வெளியிடங்களுக்கு செல்லும் போது பணத்திற்குபதிலாக கிரெடிட் அல்லது டெபிட் கார்டைகொடுக்க நேர்ந்தால், நம் முழுக் கவனத்தையும் கார்டின்  மீது  வைத்துக்  கொள்ளவும்.  நம்முடைய விவரங்களை  திருட  நினைப்பவர்கள்,  கூட வேகையில் சிறியதாக வைத்திருக்கும்,

 "ஸ்கிம்மர்'என்ற கையடக்க மிஷினிலும் தேய்த்து விட்டு திருப்பிக் கொடுத்து விடுவர். கார்டைகொடுத்த பின், ஊழியர்கள்  பேச்சு  கொடுத்து  நம் கவனத்தை  திசை  திருப்ப  வாய்ப்பு  இருப்பதால் கவனமாக இருப்பது  நல்லது.

 ATM திருட்டை தடுப்பது எப்படி?

இதுஒருமுக்கியமான டிப்ஸ்: நீங்கள் ஒரு ATM ல் பணம்  எடுக்க  செல்லும் போது  எதிர்பாராத விதமாக உங்களை ஒரு திருடன் மிரட்டி பணத்தை எடுக்க சொன்னால் என்ன செய்ய  வேண்டும்.

 நீங்கள் அவனுடன் எந்த விவாதமும்,கெஞ்சலும் செய்ய வேண்டாம். மிகவும் எளிதாக உங்களுடைய ATM PIN Number -இய் தலைகீழ் மார்க்கமாகEnterசெய்யுங்கள். 
எடுத்துகாட்டாக:உங்களுடைய  PINNumber 1234 என்றால் 4321 என்று Enter  செய்யுங்கள்.

இவ்வாறு உங்கள் PIN Number type செய்தால் ATM மிஷன்-ல் இருந்து பணம் வெளியில் வரும்.ஆனால் பாதியிலேயே பணம் சிக்கி கொள்ளும். அதோடு  மட்டுமில்லாமல்  ஓசைபடாமல் போலீஸ்-க்கும்  தகவல்  அளித்துவிடும் . அனைத்து ATM -ம் இந்த வசதியை கொண்டுள்ளது.ஆனால் இந்த வசதி இருப்பது பெரும்பாலானவருக்கு தெரியாத ஒன்று.


தயது செய்து இதை சோதித்து பார்க்க முயலாதீர்.நீங்கள் ஆபத்தில் இருக்கும் போது மட்டுமே பயன்படுத்துங்கள் .

Wednesday, April 25, 2012

மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம்

 

 
சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் 
மத்திய அரசு திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதன் படி மது 
அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவருக்கு அதிகபட்சம் 4 ஆண்டு சிறையும், 
செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவருக்கு ரூ.500 அபராதமும் 
விதிக்கப்படும். இதேபோல் மத்திய அரசு கொண்டு வரும் சட்ட 
திருத்தத்தில் 43 வகையான சாலை விதிமீறல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
1. சிவப்பு சிக்னலை மீறி வாகனம் ஓட்டுவது.

2. இன்டிகேட்டர் போடாமல் இடதுபுறம் நோக்கி வாகனத்தை ஓட்டிச்செல்வது.

3. அனுமதி இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்துவது.

4. மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்வது.

5 ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.

6. நம்பர் பிளேட் இல்லாமை.

7. பயணிகளிடம் கார் ஓட்டுனர் தவறாக நடந்து கொள்வது.

8.வாடகை கார்-ஆட்டோ டிரைவர் அதிக கட்டணம் வசூலிப்பது.

9. வாடகை கார் டிரைவர், பயணி அழைக்கும்போது வரமறுப்பது.

10.இரவில் லைட் போடாமல் செல்வது.

11.ஹாரன் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.

12. சைலன்சர் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.

13.எண் சரியாக தெரியாத நம்பர் பிளேட்டுடன் வண்டி ஓட்டுவது.

14.சாலையில் வாகன நிறுத்தகோட்டை கடந்து சென்று நிற்பது.

15. சட்டத்திற்கு உட்பட்ட திசையில் வாகனம் ஓட்ட மறுப்பது.

16 வாகனம் ஓட்ட அனுமதி பெறாதவரை வண்டி ஓட்டச் செய்வது.

17.உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.

18.18 வயதுக்குட்பட்ட மைனர்கள் வாகனம் ஓட்டுவது.

19.அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது (முதல் குற்றம்)

20.அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது (அடுத்தடுத்து செய்யும் குற்றம்)

21.வேகமாக வாகனம் ஓட்டுவதற்கு உடந்தையாக இருப்பது

22.ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது (முதல் குற்றம்)

23.ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது (2-வது குற்றம்)

24.பதிவு செய்யாத வாக னங்களை ஓட்டிச் செல்வது.

25.மஞ்சள் கோட்டை கடப்பது.

26. சில சாலைகளில் அமல்படுத்தப்படும் போக்குவரத்து 
   தடை நேரத்தை மீறுவது

 27. ஒரு வழிப்பாதை, இடதுபுறம்-வலதுபுறம் செல்ல தடை,
    ஹாரன்அடிக்கத் தடை போன்றவற்றை மீறுவது.

28. வாகனங்களில் அதிக புகை வெளியேறுவது.

29. அதிக ஒலியுடன் ஹாரன் ஒலிப்பது.

30. நடத்துனர் சீருடை அணியாமல் இருப்பது

31. ஓட்டுநர் சீருடை அணியாமல் இருப்பது.

32. நடத்துனர் ‘பேட்ஜ் அணியாமல் இருப்பது

33 சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது.

34. பயணிகள் வாகனத்தில் சரக்குகளை ஏற்றி செல்வது.

35. வாகனங்களில் அமர்ந்து புகை பிடிப்பது.

36. வாகனங்களில் வண்ண விளக்குகளை பயன்படுத்துவது

37. வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவது.

38. தவறான முறையில் முன்புறம் செல்லும் வாகனத்தை முந்துவது.

39. மது அருந்தி விட்டு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது.

40.வாடகைக்கு பயன்படுத்த அனுமதி பெறாமல் வாகனம் ஓட்டுவது.

41.ஓடும் வாகனத்தில் டிரைவர் ஏறுவது.

42.ஓடும் வாகனத்தில் பயணிகள் ஏறுவது.

43.சட்டப் பிரிவு 192 (1) 2 அல்லது அதற்கும் மேற்பட்ட தடவை குற்றம் வது)

44. இனி ஸ்டைலா வண்டியில உட்கார்ந்துகிட்டு புகை பிடிபீங்களா? 

கொஞ்சம் வேகமாக போன்னு பின்னாடி உட்கார்ந்துகிட்டு 
கலாய்ப்பீங்களா? எல்லாத்துக்குமே தண்டனைதான் 

 
 Thanks to One India

Sunday, April 22, 2012

தலைவலி ஏற்பட காரணம் என்ன?

உடலில் பிரச்சினை ஏற்பட்டாலே அது மனதையும் பாதிக்கிறது. இதனால் டென்சனும், மன அழுத்தமும் தீராத தலைவலியை ஏற்படுத்துவதோடு உடலையும் பலமிழக்கச் செய்கிறது. தலைவலியும், பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள் அந்த அளவிற்கு படுத்தி எடுத்துவிடும். தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் கொடூரம் தெரியும்.


மூளை நரம்புகளில் சரியான ரத்த ஓட்டம் இல்லாமல் தடை படுவதனாலேயே தலைவலிக்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள். ஆழமாக மூச்சை இழுத்து விட்டால் தலைவலிக்கு ரிலீப் கிடைக்கும். அதேபோல் தலையை முன்னும் பின்னும் அசைத்து எக்ஸ்சசைஸ் செய்யலாம்.


கண்களின் சோர்வு


கண்களுக்கு அதிக வேலை கொடுத்தாலும் சோர்வினால் தலைவலி ஏற்படும். எனவே இரவு நேரங்களில் கணினியில் அதிக வேலை பார்க்காமல் நன்றாக தூங்குங்கள். தலைவலி ரிலீப் ஆகும். அதேபோல் கண்களை டைட்டாக மூடி மெதுவாக திறந்து பயிற்சி எடுங்கள்.

மன அழுத்தம் தான் டென்சன் தலைவலிக்கு முக்கிய காரணம் எனவே மன அழுத்தம் தரும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பலாம். தலைவலிக்கும் போது வெது வெதுப்பான நீரில் முகம் கழுவுங்கள் மன அழுத்தம் நீங்கும் டென்சன் ரிலீப் ஆகும்.

நேர்மறை எண்ணங்கள்

நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்வதும் தலைவலி ஏற்படுவதை தடுக்கும். யோகாசனம் செய்வதும் டென்சன் தலைவலியை நீக்கும். சவாசனா செய்வதால் உடனடி ரிலீப் கிடைக்கும்.

தலைவலிக்கும் இடத்தில் ஐஸ் பேக் வைத்தால் சரியாகும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால் 20 நிமிடத்திற்கு மேல் ஐஸ் பேக் வைப்பது தவறான செயல் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

நோய்களால் மன அழுத்தம்

சத்தான உணவுகளை தவிர்த்து அதிக கொழுப்பு, பல்வேறு ரசாயனங்கள் உள்ள பாஸ்ட் புட் வகைகளை உட்கொள்வதால் சோர்வு, நினைவாற்றல் குறைவு, படபடப்பு, உடல் எடை கூடுவது மற்றும் ரத்த கொதிப்பு, ஹார்ட் அட்டாக் என இளம்வயதிலேயே உடலானது நோய்களின் கூடாரமாகிறது.

உடலில் பிரச்னைகள் ஏற்படுவதால் டென்ஷன் அதிகரித்து அது மன அழுத்தத்தில் கொண்டுபோய் விடுகிறது. இதனை தவிர்க்க சிறு வயது முதல் சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

பாரம்பரிய உணவுகள்

நமது பாரம்பரிய உணவுகளுக்கு முதலிடம் தர வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகள், இட்லி, கம்பு, ராகிக் களி, சோள மாவு தோசை, கீரை கலந்து செய்யப்படும் அடை வகைகள் என மூன்று வேளை உணவிலும் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். 

அதேபோல் பச்சைப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகளை கலவையாக முளைக் கட்டி சாலடாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கிறது. சத்தான உணவுகள் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும்.

Monday, April 16, 2012

நீரிழிவு மருந்துகள் கல்லீரல் புற்றுநோயை குணமாக்கும்


டைப் 2 நீரிழிவிற்காக உட்கொள்ளப்படும் மருந்துகள் ஆரம்ப கட்டத்தில் உள்ள கல்லீரல் புற்றுநோயை குணமாக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோய்க்காக உட்கொள்ளப்படும் மருந்தான மெட்பார்மின் ஆரம்பகட்டத்தில் உள்ள கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்துவதோடு கல்லீரல் புற்றுக்கட்டி அதிகம் வளர்ச்சியடையாமல் தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் கல்லீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இந்த புற்றுநோயை தடுப்பது குறித்து மேரிலாண்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

50 சதவிகிதத்திற்கு மேல் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு டைப் 2 நீரிழிவுக்கு உட்கொள்ளப்படும் மெட்டாபார்மின் மருந்துகளை கொடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எலிகளுக்கு இருந்த புற்றுநோய் 37 சதவிகிதம் குணமடைந்தது கண்டறியப்பட்டது. டைப் 2 நீரிழிவு நோய்க்காக உட்கொள்ளப்படும் மருந்தான மெட்பார்மின் ஆரம்பகட்டத்தில் உள்ள கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்துவதோடு கல்லீரல் புற்றுக்கட்டி அதிகம் வளர்ச்சியடையாமல் தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உடலில் குளுக்கோசானது கொழுப்பு அமிலமாக மாற்றப்படுகிறது. இது கல்லீரல் மூலமாக லிப்போகெனிசிஸ் ஆக மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தில் பிரச்சினை எழும்போதுதான் மனிதர்களுக்கு நீரிழிவு, மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்று போன்றவை ஏற்படுகின்றன. அதேசமயம் டைப் 2 நீரிழிவுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மெட்டோபார்மின் மருந்து குளுக்கோஸ் அளவை குறைக்கிறது. அதோடு கல்லீரல் புற்றுநோயையும் படிப்படியாக கட்டுப்படுத்துகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Thanks to One India

உடல் எடை குறைய


உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

குறைந்த கலோரி உணவுகள்

கண்டதையும் சாப்பிட்டு உடலின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்வதை விட குறைந்த கலோரி உள்ள உணவுகளையே உட்கொள்ளவேண்டும். அதேசமயம் பட்டினி கிடந்து உடலை வருத்த வேண்டாம். இதனால் உடல் பலகீனமடைந்துவிடும். எக்காரணத்தைக் கொண்டும் உணவுகளை தவிர்க்க வேண்டாம் என்பது உணவியல் நிபுணர்களின் அறிவுரை.

பருவநிலை பழங்கள்

தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

அந்தந்த கால நிலைகளில் கிடைக்கும் பழங்கள் காய்கறிகளை தவறாமல் உட்கொள்ளவேண்டும். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகளை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

இஞ்சி சாறு

இஞ்சியை இடித்து சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி, சாறு சற்று சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.

வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில், ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.

பலன் தரும் பப்பாளி

முள்ளங்கியை சாம்பார், கூட்டு செய்து உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பப்பாளிக் காயை கூட்டு, சாம்பார் செய்தும் சாப்பிடலாம்.

உடல் பருமனை தடுக்க

மூன்று நேரமும் அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்வதை விட ஆறுவேளை குறைந்த அளவு உணவுகளை எடுத்துக்கொள்ளவும். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தவும். இது அதிக அளவு உணவு எடுத்துக்கொள்வதை தவிர்க்க உதவும்.

உங்களுக்கு பிடித்த உணவு என்பதற்காக அதிக அளவில் சாப்பிட வேண்டாம். இதுவே உடலை குண்டாக்கும். நாவை கட்டுப்படுத்தினால் உடல் ஆரோக்கியத்தை பேணலாம் என்பதே உணவியல் நிபுணர்களின் அறிவுரையாகும்.

Thanks to One India

Sunday, April 15, 2012

வெயில் காலத்திற்கான டிப்ஸ்


வெயில் காலத்தில் பல நோய்களுக்குக் காரணம் தண்ணீர் தான். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து குடிப்பதே நல்லது.

இளநீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பது மிகவும் நல்லது.

வெண்பூசணியும் பாகற்காயும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது இதம் அளிக்கும்.

டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டாவால் முழுக்கூந்தலையும் மூடிச் செல்லவும்.

உருளைக்கிழங்கை அரைத்து, அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் வெம்மை முகத்தைத் தாக்காமல் பளிச்சிடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் வழக்கத்தைவிட விரைவாக எழுந்து, சூரியன் ஹாய்சொல்வதற்குள் சமையலறை வெப்பத்திலிருந்து வெளியே வந்து விடுங்கள்.

உங்களுடைய கைப்பையில் எப்போதும் தொப்பி, குடை, சன் க்ளாஸ் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை தணிக்கும்.

இரவே வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலை வழவழப்பாக மிக்ஸியில் அரைத்து விரல் நுனிகளால் தலையில் மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து குளிக்க, நாள் முழுக்க ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

உடல் சூட்டைத் அதிகரிக்கக்கூடிய புளிக்குப் பதிலாக தக்காளி, எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம். மிளகாய்க்குப் பதிலாக மிளகும், சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் அல்லது தேனும் சேர்க்கலாம்.(இரும்புச்சத்தும் கூடும்).

Thanks to Lankasri.com

Saturday, April 14, 2012

சிந்திக்கும் திறனும்,புத்திசாலித்தனமும் இருந்தால்
நாம் நம்மைவிட அனுபவசாலிகள் கூறும் அறிவுரைபடி நடந்தால் நமக்கும் நல்லதே நடக்கும்.

ஆடைகளில் நிறம் மாறலாம்..
குணத்தில் நிறம் மாறக் கூடாது

எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்..அதை முதலில் முடிக்க வேண்டும். இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே ஏற்படும்.


எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன்,
அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது


சிந்திக்கும் திறனும்,புத்திசாலித்தனமும் இருந்தால் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

நாம் இருக்கும் இடமே உலகம்,,,
நம் கருத்து எதுவாயினும் அதுவே சிறந்தது,
நமக்கு எல்லாம் தெரியும்.. என எண்ணி...
நம் அறிவை வளர்த்துக் கொள்ளாமல் கிணற்றுத் தவளையாய் இருந்து விடக்கூடாது.

வாழ்க்கையில் முன்னேறிச் சென்று வெற்றி பெற்றால் போதும் என்று நில்லாது..    மேலும் மேலும் முயன்றால் வெற்றிமீது வெற்றி நம்மை வந்து சேரும்.

முயற்சி திருவினையாக்கும்....முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்

நன்றி கெட்டவர்களுக்கு உதவி செய்வது நல்லதல்ல..

மேலும்...'பாத்திரமறிந்து பிச்சை இடு'

ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறக்கக்கூடாது.
அதே சமயம் யாரேனும் நமக்கு தீமை செய்தால் அதை மறந்துவிடுவது நல்லது.


நாமும்...நமக்கு கிடைக்கும் பொருளை வைத்து சந்தோஷம் அடைய வேண்டுமேயன்றி பெரும் பொருள் வேண்டி பேராசைப்பட்டால் உள்ளதும் போய்விடும்.

நாம் செய்யும் நல்லது.. கெட்டது எல்லாவற்றையும் இறைவன்    நம்முடன் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் ....  அவன் நம் செயலுக்கு ஏற்ப பின்னாளில் தண்டனையைக் கொடுப்பான்


நாமும் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது.அதே சமயம் யாரும் நமக்கு தீங்கு செய்யக் கூடாது என்பதால்..            அவர்கள் நம்மிடம் அச்சம் கலந்த மரியாதை ஏற்படும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் இளிச்சவாயர்களாக ஆகிவிடுவோம்


மூடர்களை திருத்துவது என்பது மிகவும் கடினம்    நாம் மூடர்களுக்கு அறிவுரை சொல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

Wednesday, April 11, 2012

நிலநடுக்கம் வந்தால் தப்பிப்பது எப்படி?நிலநடுக்கம் போன்ற இயற்கை மாற்றங்கள் எப்போது நிகழும் என்று தற்போதைய நவீன கால தொழில்நுட்பத்தால் கூட முன்கூட்டியே கண்டறியமுடியாத நிலை இருக்கிறது.

 எனவே,காரை ஓட்டும்போது சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதை கண்காணித்து ஓட்டுவதும் அவசியம்.

நிலநடுக்கம் போன்ற பெரிய இயற்கை சீரழிவுகள் வரும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காரில் செல்லும்போது நிலநடுக்கம் வந்தால் உடனடியாக செய்ய வேண்டியவை குறித்து காணலாம்.

காரை ஓட்டிச் செல்லும்போது ஸ்டீயரிங் வீலில் ஏதாவது வித்தியாசம் தெரிந்தாலும், கார் பேலன்சாக செல்லவில்லை என்றாலும் உடனடியாக காரில் ஹேண்ட் பிரேக் போட்டு விட்டு இறங்கிவிடுங்கள்.

முடிந்தவரை மரங்கள், கட்டிடங்கள் இல்லாத பகுதியிலோ அல்லது சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு வெளியேறிவிடுங்கள்.

மேம்பாலங்கள் மற்றும் மின்சார ஒயர்கள் செல்லும் பகுதிகளுக்கு கீழே நிற்க வேண்டாம். நிலநடுக்கத்தை உணர்ந்தால் மரங்கள் கட்டிடங்கள் இல்லாத சமவெளியான பகுதிகளுக்கு செல்வது பாதுகாப்பானது.

பாலங்களில் செல்லும்போது அசாதாரணமான சூழ்நிலையை உணர்ந்தால் முடிந்தவரை பாலத்திலிருந்து கீழே இறங்கி காரை விட்டு வெளியேறிவிடுங்கள். மேம்பாலங்கள் வழியாக செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

மலைப்பாங்கான சாலைகளில் நிலச்சரிவு ஆபத்து இருக்கும் என்பதால், உடனடியாக அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு செல்ல முயற்சி செய்யுங்கள்.

நிலநடுக்கம் வரும்போது தரைகளில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், தொடர்ந்து காரில் செல்ல முயற்சிக்காதீர்.

நிலநடுக்கம் வந்ததை உணர்ந்தால் கடலோர சாலைகளில் செல்லும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். சுனாமி வரும் ஆபத்து இருப்பதால் கடலோர சாலைகளில் செல்வதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

Thanks to Oneindia.com

உண்ணும் உணவு வீண் விரயம் செய்யக் கூடாது
இறைவனால் உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அவைகளின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறும், அவைகளின் மனம் ஒப்புமாறும் உண்டு வாழ்வதற்குத் தேவையான உணவு வகைகளை தாவரங்கள், கால்நடைப் பிராணிகள் மூலம் இறைவனே ஏற்படுத்திக் கொடுத்தான்.

அனைத்து வகை உயிரினங்களும் தன்னுடையத் தேவைக்குப் போதுமான அளவு உண்டுப்புசித்து தன்னைப் படைத்தவனுக்கு நன்றி செலுத்துகின்றன. மனிதர்களாகிய நாமும் இறைவன் நமக்கு அளித்த பொருள் வளத்திலிருந்து போதுமான அளவு உண்டுப் புசித்து இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன் நிதியை பொருளீட்ட முடியாத வறிய நிலையிலுள்ளோருக்கு மனமுவந்து வழங்குவதுடன் எஞ்சி இருக்கும் பொருளாதாராத்தை வீண் விரயம் செய்யக் கூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும்

தேவைக்கு மீறி சமைப்பதும், மிஞ்சுவதைக் கொட்டுவதும். மனிதனுடைய உள்ளத்தில் இதுப் போதாது, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று சொத்து சேர்ப்பதிலிருந்து நாவுக்கு சுவையானத் தீணிப் போடுவது வரை எல்லா நிலைகளிலும் எல்லை இல்லாத ஆசையை விதைத்து பொருளாதாரத்தை விரயமாக்கச் செய்வது ஷைத்தானின் வேலையாகும்.  இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர்

உள்ளத்திற்கு கடிவாளமிட்டு எந்த தேவைக்கும் குறிப்பிட்ட அளவை நிர்ணயித்தக் கொண்டு போதுமென்ற சிந்தனையை யார் உருவாக்கிக் கொள்வாரோ அவரே இறைவனின் திருப்பொருத்தத்திற்கு உகந்த அடியாராவார் இறைவனின் அடியானின் பக்கம் ஷைத்தான் நெருங்க மாட்டான்
இன்று பார்க்கின்றோம். எதை உண்ணுவது என்றுக் கூட முடிவெடுக்க முடியாத அளவுக்கு பல வகை உணவுகளை பணக்கார வீடுகளில் தயார் செய்து அளவுக்கு மீறிப் பறிமாறுவதும் அதனால் உண்ண முடியாமல் மீதம் வைப்பதை குப்பையில் கொட்டுவதும் அவர்களது அன்றாட வழக்கமாகி விட்டது. யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வேறு வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடிமாமல் கொட்டுவது என்பது வேறு.

இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் அதிகபட்சம் நடந்து வருகிறது.. 

உணவு வகைகளும், அளவும் கூடுதலாக இருக்கிறதென்றுக் கருதி சமையலறையிலேயே சிறிதை பக்கத்து வீட்டாருக்காக ஒதுக்குவதில்லை சமைப்பது அனைத்தும் டைனிங் ஹாலுக்குப் போய் கைகளால் புறட்டப்பட்டு மிஞ்சுவது குப்பைக்குப் போய் விடுகிறது.

விருந்துகளிலும் இதே நிலை.

ஒரு காலத்தில் விருந்துகளில் தயார் செய்யப்படும் பிரியானி உணவில் இறைச்சி இட்டு சமைப்பார்கள். அதனுடன் வெங்காயம் தயிர் கலந்த ஊறுகாய் ஒன்று மட்டும் அதிகமாக சேர்த்து கொள்வார்கள். அது சிறிது காலத்தில் வசதி படைத்தவர்களின் விருந்தில் முன்னேற்றம் அடைந்து முட்டை சேர்க்கப்பட்டது,

சிந்தித்தால் சீர் பெறலாம்

விருந்துகளுக்கு அழைக்கப்படுபவர்களில் ஏழைகளும் இருக்க வேண்டும் என்று ஏற்றத் தாழ்வுகளைக் கலைந்து சமநிலைப படுத்திய வலியுருத்துவதுடன் ஏழைகள் அழைக்கப்படாத விருந்தே விருந்துகளில் வெறுக்கத்தக்கது என்றும் கண்டிக்கிறது  விருந்துகளில் கெட்ட விருந்து பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கனிக்கப்படும் விருந்தாகும்
ஏழைகள் என்பவர்கள் எங்கிருந்தோ தேடிக் கண்டுப் பிடித்து அழைத்து வரப்படுபவர்கள் அல்ல மாறாக ஒவ்வொரு பணக்காரர்களின் குடும்பத்திலும் ஏழைகள் இருக்கின்றனர் அவர்களும் விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதிகபட்சம் உணவுகள் குப்பைக்குப் போகாது. ஆனால் விருந்துகளில் கலந்து கொள்ள வரும் பிரபலங்கள் இந்த ஏழைகளைக் கண்டால் முகம் சுளிக்கலாம் என்றுக் கருதியேப் பெரும்பாலும் இரத்த உறவுகளாகிய ஏழைகள் அழைப்பதில்ல. அழைத்தாலும் இவர்களுடன் அல்லாமல் வேரொறு ஹாலுக்கு அனுப்பப்படுவார்கள் அதனால் அவர்களது உணவுகளை குப்பையில் கொட்ட வைத்து அவர்களை ஷைத்தானின் தோழர்களாக்கி விடுகின்றான்.

நல்ல முன் மாதிரி

சமீபத்தில் ஆஸ்திரேலிய ஸிட்னி நகரில் சர்ரி ஹில்ஸ் என்ற ஊரில் இயங்கும் ஓட்டல் ஒன்றில்

 சாப்பாட்டை மீதம் வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும்,

o முழுமையாக சாப்பிட்டால் 30 சதவிகிதம் விலையில் சலுகை வழங்கப்படும் என்றும் அறிவித்து போர்டு வைத்துள்ளனர். (செய்தி: தினத்தந்தி)

குறிப்பிட்ட இந்த முன் மாதிரியை அனைத்து ஹோட்டல்களிலும் பின்பற்றினால், மீதம் வைக்காத அளவுக்கு போதுமான சாப்பாட்டை வீடுகளில் சமைத்தால், விருந்துகளில் ஏழைகளும் அழைக்கப்பட்டு சமமாக நடத்தப்பட்டால், இறைவனின்  அருட்கொடையாகிய உணவு குப்பைக்கு செல்வதை ஓரளவாவது தடுத்து நிருத்த முடியும். அவ்வாறு தடுத்தால் ஷைத்தான் நுழையும் வழிகளில் ஒன்றை அடைத்து ஷைத்தானின் சூழ்ச்சி முறியடிக்கப்படும்.

இறைவனின் அடியார்களை அவனின் நிணைவிலிருந்து திசை திருப்புவதற்காக ஷைத்தான் வகுத்தப் பலவழிகளில் பொருளாதாரத்தை வீண் விரயம் செய்வதற்காக தூண்டும் வழி முக்கியமான வழியாகும்

o உணவு இறைவனின் அருட் கொடை இந்த அருட் கொடையை வீதியில் வீசி எறியலாமா ?

o வீதியில் வீசி எறியும் அளவுக்கு மிதமிஞ்சி விருந்து செய்யலாமா ?

o இன்று உலகில் எத்தனையோ மக்கள் உணவு கிடைக்காமல் செத்து மடிவதற்கான காரணங்களில் குறிப்பிட்ட ஓரிடத்தில் உணவுகள் சீரழிக்கப்படுவதும் முக்கியக் காரணம் என்பதை ஏன் பலருடைய மனம் ஏற்க மறுக்கின்றது? சிந்தியுங்கள் சீர் பெறுவீர்க

பொன் மொழிகள்
ஆசை இல்லாதவன் அரை மனிதன் !

ஆசைப்படு அளவோடு !

ஆசை ஆறிவிழக்க செய்யும் !

ஆசையே துன்பத்திற்க்கு காரணம் !

கோபத்தோடு எழுந்தவன் நட்டத்தோடு அமருவான்!

பிறருக்கு உதவி செய்யவிட்டாலும், துன்பத்தை உண்டாக்காமல் இருந்தாலே உதவி செய்ததற்க்கு சமம்.

தான் வாழ பிறரைக் கெடுக்காதே!

விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை!

கெட்டுப்போக நினைப்பவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை!

பொது நலம் இல்லாவிடினும் சுய நலம் இல்லாமல் இரு!

மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கின்றோமோ!

அதுபடி தாம் நாம் பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும்.
 
எவன் ஒருவன் மற்று ஓருவருக்கு உடலாலும் உள்ளத்தாலும் தீங்கு செய்யாமல் இருக்கின்றானோ அவனே சிறந்த மனிதன்!

மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்!


தனக்கு தெரிந்தை  மற்றவருககு சரியான தருணத்தில்
அவர் உதவி  கோராமலே, தாமாகவே மனம் உவந்து செய்வதே உதவி

கணினியில் ஆ...... பாசத்தை விடுத்து

ஆன்மீகத்தை, நற் சிந்தனையுள்ளவற்றை  மட்டும்  நாடு, தேடு.

எதுவரை நம்மிடம் ஆசைகள் இருக்குமோ, அதுவரை அவற்றால்

உண்டாகக் கூடிய துன்பம், கவலை, அமைதியின்மை ஆகியவையும்

கூடவே இருக்கும். ஆசைகளை விட்டால்,  பாவசெயல்கள் உடனே

நம்மில் இருந்து அகன்று விடுகின்றன. அமைதி  கிடைக்கிறது.

மண்ணாசை!  பொன்னாசை!   பெண்ணாசை!  விட்டு  விடு

 மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.

 பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.

 பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.

 இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு.

 ஆகவேதான், பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது.

 பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு

ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல!

 “இருப்பது போதும் ;  வருவது வரட்டும்;

போவது போகட்டும் ;  மிஞ்சுவது மிஞ்சட்டும்”

என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே

பற்றற்ற வாழ்க்கையாகும்.

Monday, April 9, 2012

வரதட்சணை


கொடுப்பது குற்றம்-இதைவிட
வாங்குவது மாபெரும் குற்றம்
இதுவே இந்திய   சட்டம்-ஆனால்
கொடுக்காதோர் கொடுமைக்கு ஆளாகிறார்கள்


கொடுப்போர் விரும்பிக் கொடுப்தில்லை
மன வேதனையோடுக் கொடுக்கிறார்கள்
இதையறிந்தும் வாங்கி மகிழ்கிறார்கள்
ஆண்களில் சில அறிவீனர்கள்!

ஆத்திரமடையாதீர் தோழர்களே!
அறிவுப்பூர்வாமாக ஆராய்ந்து பாருங்கள்
ஆணுக்கு பெருமை சேர்பது பெண்களே!
பெண்ணைப் பேதையென நினைப்பது மடமையே!வாங்கியது போதும் வாலிபர்களே!
இறைவனுக்குப் பயந்து
இம்மை மறுமையை நினைத்து
இன்றே இப்பொழுதே
வரதட்சணையை கைவிடுவீர்!

வெறுக்கக் கூடிய வரதட்சணை
பெண்களை வருத்தக்கூடியது வரதட்சணை!
 
வாழப்போவது மனைவியுடன் தான்!
 
வாங்கிய வரதட்சணையுடன் அல்ல!அல்ல!!

பெண்களின் மத்தியில் கையடக்க காமிராக்கள் பற்றிய விழிப்புணர்வு / கவனம் தேவை.கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
குறிப்பாக தன் கணவன்  மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக் கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள நம் சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, நம் சமுதாய பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொது இடங்களில் காமிராக்கள்
 :
பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.

பள்ளி,கல்லூரி,விடுதிகளில் :

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும் சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. இதிலும் பர்தாவைப் பேணும் மாணவிகள் தப்பித்தார்கள் என்று சொல்லலாம் மற்றவர்கள் கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள்:

பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.

மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை:

மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது, மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள், காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
.
 இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும்:

நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும்.

நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர் நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம் சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு எச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும்.

நன்றி: இஸ்லாம்குரல்.காம்

Friday, April 6, 2012

தயிர் - உடல் பருமனைக் குறையும்


குண்டானவர்களை ஒல்லியாக்கும் நறுமணத்தயிர் – ஆய்வில் தகவல்

உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய பிரச்சினை உடல் பருமன். கண்ட நேரத்தில் சாப்பிடுவது. நொறுக்குத் தீனிகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் என சாப்பிடுவதால் உடல் பருமனாகிறது. இதனால் இதயநோய் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில் யோகர்ட் சாப்பிடுவதன் மூலம் உடல் பருமன் குறையும் என்று தெரியவந்துள்ளது.

யோகர்ட் என்பது கொழுப்பு நீக்கப்பட்டு நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்ட தயிர். இதில் உடல் பருமனை குறைக்கும் பாக்டீரியாக்கள் உள்ளனவாம்.

பொதுவாக தயிரில் புரதச் சத்து, கால்சியம், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி6, வைட்டமின் பி12 ஆகியவை காணப்படுகின்றன.

மாரடைப்பை தடுக்கும்

தயிர் எளிதாக செரிக்கக் கூடிய உணவாகும். தையாமின் உயிர்ச்சத்து தயிரில் அதிகமாக உள்ளது. கல்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களை தயிர் அதிகமாக வழங்குவது மட்டுமின்றி, குடல்களிலிருந்து இரத்தத்தில் உணவை கிரகிக்கவும் உதவுகிறது. இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய் களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.

நறுமணத் தயிரிலுள்ள நுண்ணுயிர்கள் அபாயகரமான நோய்க் கிருமி களை அழிக்கும் ஆற்றல் வாய்ந்தவை. இதனால் வயிற்றுப் போக்கு மலச்சிக்கல் போன்றவைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். இரத்தத்தில் கொழுப்பு உயர்வதையும், அதனால் ஏற்படும் மாரடைப் பையும் தடுக்கின்றது.

உடல் பருமன் குறையும்

அமெரிக்காவின் மிசௌரியில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் உடல் பருமன் குறித்தும் அதை குறைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நொறுக்குத் தீனி அதிக அளவில் சாப்பிடுவதால், உடல் பருமனை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உருவாவது நிரூபிக்கப்பட்டது. உடல் பருமனுக்கு காரணமாக இந்த பாக்டீரிக்களை கொல்லும் சக்தி, யோகர்ட்டில் உள்ளது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே, உடல் பருமனை தவிர்க்க விரும்புகிறவர்கள் தினமும் யோகர்ட் சாப்பிடலாம் என்று ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உடல் பருமன் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆய்வு உடல் பருமனைக் கட்டுப்படுத்த உதவும் என ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் உடல் பருமன் நிபுணர் ஜெப்ரே பிளையர் கூறியுள்ளார். உடல் பருமன் கட்டுப்படுத்தப்பட்டாலே இதயநோய்கள், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் எட்டிப்பார்க்காது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகளுக்கு அறிவைக் கொடுப்பதை விட அன்பைக் கொடுப்பது முக்கியம் !

எனது மன்றத்தில் எத்தனையோ வழக்குகள் வந்திருக்கின்றன, அதில் ஒரு வழக்கு என்னை மிகவும் உணர்ச்சிவசப்படவைத்தது" முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து...