Total Pageviews

Friday, November 1, 2019

கீரீன் டீ அருந்துவதனால் உண்டாகும் நன்மைகளும் தீமைகளும் !



கிரீன் டீ ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாகும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியது. உடல் எடை இழப்புக்கு பெரும்பாலான மக்கள் கிரீன் டீயை குடிக்கிறார்கள். அவ்வகையில் அண்மைக் காலங்களில் கிரீன் டீக்கு மவுசு அதிகம் ஏற்பட்டுள்ளது. மேலும் கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளது, இது உங்கள் உடலில் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உடல் பலவீனத்தை எதிர்த்துப் போராடவும் உதவும். 

கிரீன் டீயின் உள்ள சில கூறுகள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இந்த டீயை தொடர்ந்து குடித்து வந்தால் சிலவகைப் புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிரீன் டீயின் ஆரோக்கிய நன்மைகள் இப்படி அனேகம் உள்ளன. இது இதய நோய்கள் வருவதற்குரிய அபாயங்களைத் தடுக்கவும் உதவுகிறது. உடல் எடை இழப்பு என்பது கிரீன் டீ குடிப்பது மிகவும் பிரபலமானது.  கிரீன் டீ வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தி, உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க, பெரும்பாலான மக்கள் தேவையானதை விட கிரீன் டீயை அதிகம் உட்கொள்கிறார்கள். ஆனால் அதிக கப் கிரீன் டீ குடிப்பது ஆரோக்கியமானதா?

கிரீன் டீயின் பக்க விளைவுகள்

கிரீன் டீ ஆரோக்கியத்துக்கு நல்லதுதான், ஆனால் அதிக அளவில் அதை உட்கொண்டால், சில உடல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். நீண்ட காலத்திற்கு க்ரீன் டீயை அதிகமாக உட்கொண்டால் சில பக்க விளைவுகள் உள்ளன. அவை
1. ஆசிட் ரிஃப்ளக்ஸ்
அதிக கிரீன் டீ குடிப்பது அதிலும் வெறும் வயிற்றில் குடிப்பது உங்கள் வயிற்றை எதிர்மறையாக பாதிக்கும். இது நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு தொடர்பான பிற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இது போன்ற ஏதேனும் சிக்கல்களை நீங்கள் எதிர்கொண்டால், வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். கிரீன் டீயை அதிகமாக உட்கொள்வது குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு வயிற்றுப் பிரச்னைகளை ஏற்படுத்தும்

2. இரும்பு உறிஞ்சுதலைக் குறைக்கிறது

கிரீன் டீயின் மற்றொரு பக்க விளைவு என்னவென்றால், இதை அதிக அளவில் குடிப்பதால் உடலில் இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதை குறைத்துவிடும். இரும்பு உடலுக்கு மிகவும் அத்யாவசியம். கிரீன் டீயில் இருக்கும் கேடசின்கள் எனும் வேதிப்பொருள் உணவில் இருந்து இரும்புச் சத்து உறிஞ்சுதலுக்கு பங்களிக்கின்றன. எனவே, அதிகப்படியான கிரீன் டீயை கண்டிப்பாக தவிர்த்துவிட வேண்டும்.

3. அதிகப்படியான காஃபின்

அதிகப்படியான காஃபின் உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும். கிரீன் டீ குடிப்பதால் உங்கள் காஃபின் அளவு அதிகரிக்கும். இது உங்கள் தூக்க முறையைத் தொந்தரவு செய்யலாம் கவலை அல்லது வயிற்று வலியைக் கூட ஏற்படுத்தும். நாள் முழுவதும் காஃபின் உட்கொள்வதைக் கட்டுப்படுத்த நீங்கள் பழக வேண்டும். 

4. தலைவலி ஏற்படலாம்

அதிக கிரீன் டீ குடிப்பதும் தலைவலியும் ஒன்றுக்கு ஒன்றுடன் தொடர்புடையது. அதிகப்படியான காஃபின் உட்கொள்வதால் தலைவலி மற்றும் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி போன்ற பிற பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

ஒரு நாளில் எவ்வளவு கிரீன் டீ குடிக்க வேண்டும்?

க்ரீன் டீயை அதிக அளவு குடிப்பதால் இப்படி பல பக்க விளைவுகள் உள்ளதால், நீங்கள் கிரீன் டீயை குறிப்பிட்ட அளவில் மட்டுமே அருந்த வேண்டும். நீங்கள் ஒரு நாளில் 2- 3 கப் வரை கிரீன் டீ குடிக்கலாம். நிச்சயம் ஒரு நாளில் 3 கப் தாண்டக் கூடாது.

Thanks to Dinamani.com

1 comment:

  1. நான்காவது கவனிக்க வேண்டியது...

    நன்றி...

    ReplyDelete

முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய போறீங்களா!ஒரு நிமிடம் இதை படியுங்கள்!

 ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு. அந்த சம...