Total Pageviews

Saturday, March 21, 2020

Whatsapp மூலம் இன்டேன் கேஸ் பதிவு செய்து கொள்ளும் வசதி!

இன்டேன் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்!

       இண்டேன்  கேஸ் வாடிக்கையாளர்கள் இனி எந்த சிரமமும் இல்லாமல் இலவசமாக Whatsapp மூலம் கேஸ் பதிவு செய்து கொள்ளும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

          75888 88824 என்ற தொலைபேசி எண்ணை உங்கள் மொபைல் போனில் இன்டேன் கேஸ் வாட்ஸ்அப் புக்கிங்  என சேமித்துக் கொள்ளவும்.

A.  கேஸ் இணைப்பில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து கேஸ் பதிவு செய்யும் வழிமுறை.

REFILL 

என மட்டும் டைப் செய்து அனுப்பினால் உடனே பதிவு ஆனதற்கான விபரங்கள் உடனே உங்கள் வாட்ஸப்பில் வந்துவிடும்.

B. கேஸ் இணைப்பில் பதிவு செய்யாத மொபைல் என்னிலிருந்து கேஸ் பதிவு செய்யும் வழிமுறைகள்

REFILL#<உங்கள் 16 இலக்க LPG ID>
என டைப் செய்து அனுப்பினால் உடனே பதிவு ஆனதற்கான விபரங்கள் உங்கள் வாட்ஸப்பில் வந்துவிடும்.

Example.  : REFILL#7500000051153961

C.    உங்கள் கேஸ் பதிவின் STATUS யை தெரிந்து கொள்ள வழிமுறைகள்.

STATUS#<உங்கள் புக்கிங் Order நம்பர்>
என டைப் செய்து அனுப்பினால் உடனே உங்கள் பதிவின் status தகவல் உங்கள் வாட்ஸப்பில் வந்துவிடும்.

Example :  STATUS#2-000120518460

நாம் நாமாகவே இருப்போம் தன்னம்பிகை வரும்.....




எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.

எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.

எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.

மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.

மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.

*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்வோம்
முதுமை என்று எதுவும் இல்லை.

நோய் என்று எதுவும் இல்லை.

இயலாமை என்று எதுவுமில்லை.

எல்லாம் நமது மனதிலும், அதன் நம்பிக்கையிலும்  தான் இருக்கிறது.

சிந்தனையை மாற்றுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்

நாம் எதை நம்புகிறோமோ அதுவாகவே ஆகிறோம்.

நான்... நான்... நான்...

நான் சம்பாதித்தேன்,

நான் காப்பாற்றினேன்,

நான் தான் வீடு கட்டினேன்,

நான் தான் உதவி  செய்தேன்,

நான் உதவி  செய்யலனா? அவர்  என்ன அவ்வளவுதான்.

நான் பெரியவன்,

நான் தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன்,

நான்  நான்  நான்  நான்  என்று  மார்தட்டி  கொள்ளுகிறோம்

நான் தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  நம்மால் சொல்ல முடியுமா?

நான் தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  நம்மால் சொல்ல முடியுமா?

நான் தான்  என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன்  என்று  நம்மால்  சொல்ல முடியுமா?

நான் தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில்  கலக்குகிறேன் என்று  நம்மால்  சொல்ல முடியுமா??

நான் தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  நம்மால்  சொல்ல முடியுமா ?

இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று  சொல்வதற்கு அதிகாரமும்  உரிமையும்  உண்டு..

ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருப்போம்.

 உலகைப்பற்றிக்கவலைப்பட வேண்டாம் ஏனெனில் அது இறைவனுக்குரியது.

உணவைப்பற்றி கவலைப்பட வேண்டாம் அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.

எதிர்காலம் குறித்தும் கவலைப்பட வேண்டாம் அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது

நமக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்க  வேண்டாம் தாழ்வு மனப்பான்மை வரும்.

நமக்கு கீழே உள்ளவனை  ஏளனமாய் பார்க்க வேண்டாம் தலைக்கனம் வரும்.

நம்மை யாரோடும் ஒப்பிடாமல் நாம் நாமாகவே இருப்போம் தன்னம்பிகை வரும்.....

                                   -படித்ததில் பிடித்தது

Saturday, March 14, 2020

உடலில் உள்ள பிரச்சனை என்ன என்பதையும் தெரிந்துகொள்ள !

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம் !

முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் - கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்....

வயிற்றுவலி இருந்தால் - கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்....

கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் - ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்....

காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் - காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்....

கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால்- கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என்று அர்த்தம்..

உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் - அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்...

கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால் - உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்....

முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால்- உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனைக் குறைக்க வேண்டும் என அர்த்த்ம்...

தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால்- அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகின்றது என அர்த்தம்...

உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால்- உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்பசையும் குறைந்து விட்டது என அர்த்தம்...

தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால்- உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கி உள்ளது என அர்த்தம்!

கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால்- இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்!

இப்படி சில விஷயங்களை வைத்தே நாம் தெரிந்துகொள்ளலாம் என்ன பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது என்றும், தற்போது உடலில் உள்ள பிரச்சனை என்ன என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்....

பயிற்சியும், முயற்சியும் ஒவ்வொருவருக்கும் மூலதனம்!

பயிற்சியும், முயற்சியும்  மூலதனம்!



இந்த உலகின் மிகப் பெரிய சக்தி எது என்று கேட்டால், அறிஞர்களிலிருந்து, ஞானிகள் வரை பல்வேறு விடைகளை அளிக்கின்றனர். நதிநீர், மின்சாரம், காற்று, நெருப்பு, கணினி, இயற்கை, கடவுள் என்று விடைகள்தான் அவை. இவை அனைத்தும் பெரிய சக்திகள் என்பது மறுக்க இயலாத உண்மைதான். எனினும், இவை அனைத்தையும்விட மிகப் பிரம்மாண்டமான சக்தி ஒன்று உள்ளது.

அதுதான் ‘மன ஆற்றல்’ (Mind Power) இதை உருவாக்கி, இயக்குவதுதான், மனிதமூளை. ஒரு மனிதன் வாழ்வதும், அழிவதும் மூளையின் இயக்கத்தினால்தான். மூளையைச் சரியாகப் பயன்படுத்தியவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். சரியாக பயன்படுத்தாதவர்கள் தோல்வியடைகின்றனர்.

அடிப்படையில் அனைத்து மனிதர்களின் மனங்களும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். பயிற்சியும், முயற்சியும்தான் பலருடைய மனங்களை ஆற்றல் பெற்ற மனங்களாக உருவாக்குகின்றன. முயற்சியும், பயிற்சியும் இருந்தால், ஒருவர் தனது மனத்தையே மூலதனமாக்கலாம். வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம். மனதை வளப்படுத்துவதற்கும் மூலதனமாக்குவதற்க்கும் பலவற்றை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

முதலாவதாக ஒரு இலக்கை நிர்மாணித்துக் (Goal Setting) கொள்ள வேண்டும். பிறகு அந்த இலக்கை அடைவதற்கு (Goal Attaining ) பல்வேறு திட்டங்களை தீட்டிக்கொள்ள வேண்டும்.

ஒருவர், ஒரு முக்கியமான கட்டத்தில் எடுக்கும் ஒரு முடிவுதான் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். ஆகவே முடிவெடுக்கும் ( Decision Making) திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.

நேரம் மிகவும் முக்கியமானது. தேவையில்லாதவற்றில் கவனம் செலுத்தி நேரத்தை வீணடிப்பதைவிட, தேவையானதில் கவனம் செலுத்தி நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள (Time Management) வேண்டும். அணிகின்ற உடையில் கவனம் செலுத்தி, உடல் மொழியை (Body Language) வளப்படுத்தி, அனைவரிடமும் பழகும் திறன்களை வளர்த்துக் கொண்டு, இவை அனைத்திலும் புதுமைகளைப் புகுத்துவதில் மனத்தை ஈடுபடுத்த வேண்டும்.

இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தலைமைப் பண்புகளையும் (Leadership Skills) மற்றும் ஆளுமைத் திறனையும் (Personality Development) மிகச் சிறப்பாக அமையும் வண்ணம், தகுதிகளையும், திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது ஒருவரின் மன ஆற்றலால் தான் (Mind Power) இயலும்.

மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு கட்டங்களில், இன்பம், சோகம், பயம், கோபம் ஆகிய பல்வேறு உணர்ச்சிகள் தோன்றும். பயம், கோபம் ஆகிய உணர்ச்சிகள் ஒருவரின் வெற்றியை வெகு சீக்கிரம் அழித்துவிடும். இந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு, பய மேலாண்மை (Fear Management), கோப மேலாண்மை (Anger Management) ஆகிய உத்திகள் மிகவும் பயன்படும்.

இதற்கும் மன ஆற்றல் மிகவும் உதவும். இதைவிட ஒருவருடைய மன அழுத்தம், மன உளைச்சல் (Mental Stress,Mental Agony) ஆகியவற்றால்தான், தற்போதுள்ள வாழ்க்கைச் சூழலில், ஒரு சாதாரண யு.கே .ஜி வகுப்பில் பயிலும் குழந்தை முதல், ஒரு பெரிய தொழில் அதிபர் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

இவர்கள் அனைவருக்கும், இந்த மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியவற்றால் பல்வேறு மன வியாதிகளும், அவைகளைத் தொடர்ந்து தீராத உடல் நோய்களும் வருகின்றன. இவைகள் வராமல் தடுக்கப்பட வேண்டுமானால், இவர்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த (Stress Management) முறையான பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கும் மன ஆற்றல் (Mind Power) தான் மிகவும் உதவும்.

எனவே, ஒருவர் தனது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால், மன அழுத்தம் இன்றி தொடர்ந்து பணியாற்றிட வேண்டுமானால், அவர், அவரது மன ஆற்றலை (Mind Power) வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த மன ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கு முயற்சியும், முறையான பயிற்சிகளும், தன்னம்பிக்கையும் இருந்தால், ஒருவரது மன ஆற்றல் அதிகரித்து, அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது நிச்சயம்!

ஆதாரம் : மன ஆற்றல் வளர்ப்பு மையம்

உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க !

இரத்த அணுக்கள்

 

அனேகமானோரின், உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால், அனீமியா என்னும் மறதி நோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக இரத்தத்தில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதெற்கென கடைகளில் நிறைய மருந்துகள் விற்பனையாகின்றன.

ஆனால் அவற்றை மட்டும் சாப்பிடுவதால் உடலில் இரத்தம் அதிகரிக்காது. ஒரு சில இயற்கையான வழிகளையும் தினமும் செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இரத்தம் சுத்தமாகவும், உடலும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.


உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை செறிவாக இருக்க வேண்டும். இல்லையெனில் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே அனீமியா நோய் வராது தடுத்துக் கொள்ள இரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து, உண்ணும் உணவுகளே. இரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்

மாதுளை

மாதுளைச் சாறு இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை மேலேறச் செய்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ராலைக் குறைத்து, கட்டற்ற மூலக்கூறுகளோடு போராடி, ஆபத்து விளைவிக்கக்கூடிய இரத்த உறைவுகளில் இருந்து காத்து, அருஞ்சேவை புரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவுகளை இவை அதிகப்படுத்துகின்றன.

நன்னாரி வேர்

மூலிகைகளில் ஒன்றான நன்னாரி வேர், உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறந்தது. அதிலும் இந்த வேரில் அதிகமான ஆன்டி-செப்டிக் பொருள் இருக்கிறது. இது இரத்ததில் இருக்கும் கிருமிகளை அழித்து, சுத்தமாக வைக்கிறது.

கற்றாழை

கற்றாழையில் இரத்தத்தில் ஏற்படும் அழற்சியை தடுக்கும் பொருள் அதிக அளவு உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிட்டாலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பீட்ரூட்

இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது. மேலும் இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இது ஒரு சிறந்த இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுப் பொருள். ஆகவே இதனை டயர்ட் இருப்பவர்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் இரத்த அணுக்களும் அதிகரிக்கும். அதிலும் பீட்ரூட்டின் இலைகளில் வைட்டமின் ஏ-வும், அதன் வேர்களில் வைட்டமின் சி-யும் இருக்கின்றன.

கீரைகள்

காய்கறிகளான பசலைக் கீரை, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலிஃபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவை. மேலும் இவை அனைத்தும் உடல் எடையை கட்டுபடுத்துவதுடன், உடலில் இரத்த அணுக்களையும் அதிகரிக்கும். அதிலும் கீரைகள் செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யும்.

இரும்புச்சத்து

இது உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்து. இந்த சத்து எலும்புகளை மட்டும் வலுவாக்குவதில்லை, உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால் அனீமியா நோயானது வரும். ஆகவே அந்த இரும்புச்சத்துக்கள் இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரிச்சம் பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை போன்றவற்றில் இருக்கும்.

பாதாம்

இரும்புச்சத்து மற்ற உணவுப் பொருட்களை விட பாதாம் பருப்பில் அதிகம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 அவுண்ஸ் பாதாம் பருப்பை சாப்பிட்டால், உடலுக்கு 6% இரும்புச்சத்தானது கிடைக்கும்.

பழங்கள்

அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடச் சொல்வார்கள். இவற்றை உண்பதால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவும் அதிகரிக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பழங்களில் தர்பூசணி, ஆப்பிள், திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.

கிவி பழம்

இரத்தத்தில் குருதிச் சிறுதட்டுகள் குறைவாக காணப்படுவோர் கிவி பழங்களை சாப்பிட்டால் அதன் உற்பத்தி அதிகரிக்கும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக மட்டுமில்லாமல், உடலில் உள்ள இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும். மேலும் சுத்தமான ஆக்ஸிஜன் உடற்பயிற்சி செய்யும் போது இரத்ததில் கலக்கிறது. ஆகவே இரத்தமும் சுத்தமாக, சீராக உடலில் இயங்குகிறது. அந்த உடற்பயிற்சியில் வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங், குதித்தல் போன்றவற்றை செய்யலாம்.

மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்பதால் உடலில் இரத்த அணுக்களின் அளவு அதிகரிப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமல், உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக வாழலாம். இவை யாவற்றையும் உங்கள் குடும்ப டாக்டரின் அலோசனியுடன் மேற்கொழ்வதன் மூலம் தேவையற்ற தாக்கங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ஆதாரம் : தமிழ் மருத்துவம்

மருத்துவக் காப்பீடு - Medi Claim Policy

மருத்துவக் காப்பீடு - Medi Claim Policy




பொருளாதாரம் நாளுக்கு நாள் மாறிவரும் நிலையில், நமது வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வசதிகள் அதிகரித்ததால் நாம் உடல் நலத்தில் கவனம் செலுத்தத் தவறி விட்டோம். மருத்துவமனை செலவுகள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில், அந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்ற அனுபவம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கவே செய்கிறது. இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

மருத்துவச் செலவுகளுக்கு என்று பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம்.

யாருக்குக் கிடைக்கும்?

இந்த காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக்கும் சேர்த்து புளோட்டர் (floter) என இரண்டு வகையிலும் கிடைக்கிறது. தனிநபர் பாலிசியில் காப்பீடு செய்பவர் மட்டும் க்ளைம் செய்து கொள்ளலாம். புளோட்டர் பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் க்ளைம் செய்து கொள்ளலாம்.

திருமணத்துக்கு முன்பு தனிநபர் பாலிசி எடுத்திருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டு புளோட்டர் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம். வயதான பெற்றோர்களுக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்பதால் இவர்களை புளோட்டர் பாலிசியில் சேர்க்காமல் தனிதனி தனிநபர் பாலிசி எடுத்துக் கொள்வதும் நல்லது. 3 மாத குழந்தை முதல் 86 வயது வரை இந்த பாலிசி அனுமதிக்கப்படுகிறது.

யாருக்கு எந்த பாலிசி?

நமது மருத்துவ தேவைகளைப் பொறுத்து மருத்துவக் காப்பீட்டை முடிவு செய்ய வேண்டும். பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்கான பாலிசியை தேர்ந்தெடுக்கக் கூடாது. பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

எப்படி க்ளைம் செய்வது

  • பாலிசியின் வரம்புகளுக்கு ஏற்ப க்ளைம் செய்து கொள்ளலாம். மருத்துவக் காப்பீட்டை அனுமதிக்கும் மருத்துவமனைகள் குறித்த விவரம் பாலிசிதாரர்களுக்குக் கொடுக்கப்படும். இந்த மருத்துவமனைகளில் உள்நோயாளியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் காப்பீட்டு தொகையிலிருந்து மருத்துவ செலவுகளை கழித்துக் கொள்வார்கள். புறநோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவை க்ளைம் செய்து கொள்ள முடியாது. ஆனால் பாலிசி அனுமதிக்கும் பட்சத்தில் இதற்கு ஆகும் செலவுகளையும் க்ளைம் செய்து கொள்ளலாம்.
  • சில நோய்களுக்கு புற நோயாளியாக தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்போம். சில நோய்களுக்கன மருத்துவ பரிசோதனை எடுக்க வேண்டியிருக்கும். மேலும் சில நோய்கள் மருத்துவமனையை விட்டு வந்த பிறகும் நீடிக்கும். இது போன்று நிலைமைகளில் பாலிசி அனுமதிக்கும் வரை க்ளைம் செய்து கொள்ள முடியும்.

பாலிசி எடுப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை

பாலிசி எடுப்பதற்கு முன் காப்பீடு நிறுவனத்திடம் சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக பாலிசி எடுப்பதற்கு முன்பே சில நோய்கள் இருந்துவரலாம். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள், நீண்ட காலத்திற்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறக்கூடிய நோய்கள் இவற்றின் உண்மை தன்மைகளை மறைக்காமல் குறிப்பிட வேண்டும். சில பாலிசிகள் மருத்துவ செலவுகளை மட்டும் ஏற்பதாகக் குறிப்பிடும். மருத்துவமனை தங்கும் கட்டணங்கள் அதிகரித்துவரும் நிலையில் அதற்கும் கவரேஜ் கிடைக்க வேண்டும். மேலும் மருத்துவமனை தங்கும் கட்டணங்கள் நாள் ஒன்றுக்கு இவ்வளவுதான் என வரம்பு வைத்திருக்கும். இதில் அதிக பட்சமாக தொகை க்ளைம் ஆவது போல பாலிசி எடுத்துக் கொள்ளுங்கள்.

சில பாலிசிகளில் மருத்துவச் செலவுகளை நாம் செய்த பிறகு, ரசீதுகளை சமர்பித்து க்ளைம் செய்து கொள்வதாக இருக்கலாம். இதற்கான காலம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முக்கிய மருத்துவமனைகள், அல்லது அருகில் உள்ள பெரிய மருத்துவமனைகளுடன் காப்பீடு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் உள்ளதா என்பதையும் தெரிந்து கொண்ட பிறகே காப்பீடு எடுக்க வேண்டும்.

சில தவறுகள்

புளோட்டர் பாலிசியில் வயதான பெற்றோர்களை இணைக்கக்கூடாது. அவர்களுக்கு அடிக்கடி மருத்துவ செலவாகும் என்பதால் தனியாக எடுப்பதே நல்லது. அதுபோல அலுவல கத்தில் குரூப் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இருந்தாலும், தனியாக தனிநபர் அல்லது புளோட்டர் பாலிசியில் இருப்பதே நல்லது. ஒரு நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு விலகிவிட்டால் அந்த காப்பீட்டின் கவரேஜ் காலம்  முடிந்துவிடும். எனவே எப்போதும் தனியாக எடுத்துக் கொள்வது நல்லது.

அதிகரித்துவரும் மருத்துவ செலவுகள் காரணமாக மருத்துவக் காப்பீடு அத்தியாவசிய தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மருத்துவ காப்பீடு - சில தகவல்கள்

  • 3 மாத குழந்தை முதல் 86 வயது வரையானோர் இந்த பாலிசி எடுக்கலாம்.
பயன்கள் -
  1. பிரீமியம் தொகை குறைவு. அதிக பலன்கள்.
  2. எதிர்பாராத விபத்து, திடீர் நோய்கள் போன்றவை, நிச்சயமில்லை என்றாலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் நம்மால் திட்டமிட முடியாது. ஆனால் ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வதன் மூலம் இது போன்ற நேரங்களில் செலவுகளைச் சமாளிக்க முடியும்.
  3. குடும்பத்தில் அனைவரது மருத்துவ செலவுகளையும் மருத்துவக் காப்பீடு மூலம் ஈடு செய்யலாம்.
பிரீமியம் எவ்வளவு

தனிநபர் பாலிசி ரூ. 3 லட்சம் கவரேஜ் தொகைக்கு ஆண்டுக்கு ரூ. 3,000 முதல் பிரீமிய தொகை ஆரம்பமாகிறது. கணவன், மனைவி ஒரு குழந்தை கொண்ட குடும்பத்திற்கான புளோட்டர் பாலிசி ரூ.3 லட்சம் கவரேஜ் என்றால் ஆண்டு பிரீமியம் தோராயமாக ரூ.6,000 வரை செலவாகும். காப்பீடு நிறுவனங்களுக்கு ஏற்ப பிரீமியம் தொகை வித்தியாசப்படும். ரூ.6,000 த்துக்குள் 3 லட்சம் வரையில் மருத்துவ செலவுகளை செய்துகொள்ள முடியும் என்பதுதான் இதன் சிறப்பு. மூத்த குடிமக்கள், சர்க்கரை நோய் மற்றும் மரபு நோய்கள் உள்ளவர்களுக்கான பாலிசிகளுக்கு பிரீமிய தொகை சற்று அதிகமாக இருக்கும்.

உண்மை விவரங்கள்

மருத்துவக் காப்பீடு எடுக்கிறோம் என்றால், காப்பீடு விண்ணப்பத்தில் நமது உடல் நலம் குறித்த உண்மை விவரங்கள் அனைத்தையும் குறிப்பிட வேண்டும். மரபு நோய்கள், நமக்கு ஏற்கனவே இருந்துவரும் நோய்களின் தன்மைக்கு ஏற்ப பிரீமியத்தொகை அதிகரிக்கலாம். ஆனால் உண்மை விவரங்களை மறைப்பதன் மூலம் க்ளைம் பெறுவதில் சிக்கல் ஏற்படும். பாலிசி எடுப்பதற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு அதனை பாலிசி விண்ணப்பத்தில் குறிப்பிடுங்கள்.

ஆதாரம் : நீரை. மகேந்திரன்

மன நிம்மதியாக வாழ ; பதட்டம் இல்லாமல் வாழ வழி என்ன ?

தினந்தோறும்  காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்திடுங்கள் .

ஒரு காகிதத்தை எடுத்து இன்று மேற்கொள்ளவேண்டிய பணிகளை திட்டமிட்டு குறித்துக்  கொள்ளுங்கள்
செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும் எனவே .செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.
                                                                                                                                                                                     
 எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.
                                                                                                                                                                                     
முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.
வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் செருப்புகள் என்றாலும்  கடிகாரம் என்றாலும்  ; தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.
                                                                                                                                                                                         
எந்தவொரு இடத்திற்கும் சற்று முன்கூட்டியே செல்ல பழகிக் கொள்ளுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.
டீ, காபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை, மது ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.
சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை - இதைச் செய்வேன் என்பது போன்றவை.
                                                                                                                                                                                               
இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.
தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.
செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
                                                                                                                                                                                                     
சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.
செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால், மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது என்று சொல்லப்பழகுங்கள்.
உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.
எளிமையாக வாழுங்கள்.

அதிக நேரம் நண்பர்களுடன் உற்சாகமாகப்  பழகுங்கள்.
                                                                                                                                                                                                நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தைத்தரும்.
                                                                                                                                                                                               
 ஆழமாக , நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.
                                                                                                                                                                                                   
பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட  எழுதிப்  பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள்.
                                                                                                                                                                                           
 பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.
                                                                                                                                                                                                   என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.
                                                                                                                                                                                                          வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.

இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.
                                                                                                                                                                                      
 மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள். நீங்கள் வாழ்வீர்கள் ;வளமுடன் வாழ்க,வளமுடன் வெல்க,வளமுடன் செழிக்க,

Monday, March 9, 2020

உலர்திராட்சை !

உலர்திராட்சையை பால் அருந்திய பிறகு சாப்பிட்டதனால் ஏற்பட்ட நல்ல விளைவு

1) மூக்கடைப்பு

( இரவில் சளி மூக்கை அடைப்பதோடு மூச்சும் அடைக்கும்)

2)படிப்பில் கவனமில்லை 

(அதவாது மனதை ஒரு நிலை படித்தி படிக்க முடியவில்லை)

3)சைனஸ்−தலையில் நீர்க்கோர்வை
(ஜஸ் கலந்த குளிரான பொருட்களை சாப்பிட்டால் உடனே சளித்தொல்லை, சுரம்)

4)படப்படப்பு ( சிறிய விஷயமானாலும் டென்சன், அதீத இதயத்துடிப்பு.

5)உடல் பலவீனம்.
உலர்திராட்சையை  சாப்பிட ஆரம்பித்த நாளிலிருந்து ஒரு வாரத்தில் மூக்கடைப்பு சரி ஆனது.

இரண்டு மாதத்தில் படப்படப்பு, இதயத்துடிப்பு சீரானது.

3வது 4வது மாதத்தில் சைனஸ் பிரச்சினை சரி ஆனது. ஜஸ் சாப்பிட்டாலூம் சளி பிடிக்கவில்லை.

5,6 வது மாதத்தில் உடல் பலமானது  தெரிந்தது.

அதே 5வது 6 வது மாதத்தில் உலர்திராட்சையை பாலுடன் சேர்த்து சாப்பிட்டபோது எனது நினைவு த்திறன் 200,300மடங்கு அதிகமானது.

உலர்திராட்சை சாப்பிடுவதால் டெங்கு வராது.

மஞ்சள் காமாலை நோய் வராது.

சளி, காய்ச்சல் வரவே வராது.

உடல்வலி முற்றிலும் சரியாகி புத்துணர்வை தூண்டும்.

இதயத்தை பலப்படுத்துகிறது.

இரத்தத்தை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தும்.

குழந்தைகளை படிக்கவில்லை என்றால் கண்மூடித்தனமாக அடிக்கின்றோமே தவிர ஏன் அவர்கள் சரியாக படிக்கவில்லை என்பதை நாம் சிந்திப்பதில்லை.

எப்படி செல்போனில் 8GB மெமரி கார்டை விட 16GB மெமரி கார்டில் அதிகம் பாட்டு, படங்களை ஏற்ற முடிகிறதோ அதே போல் 8GB மெமரி மனித மூளையை 16GB ஆக 32 GB ஆக மாற்றும் திறன் உலர்திராட்சைக்கு உண்டு.

அதாவது உலர்திராட்சையை பாலுடன் சேர்த்த சாப்பிடும்போது மனித மூளையின் நினைவுத்திறன் பல மடங்கு பெருகுகிறது.

ஆகவே உலர்திராட்சையை தினமும்
ண்போம்!

வாழ்வியலில் உடல்,உள்ள ஆரோக்கியத்தோடு பல்லாண்டு வாழ்வோம்.

நம் சந்ததிகளின் நலம் காப்போம்....

Sunday, March 8, 2020

கொரானாவை விரட்டும் மூலிகைகள் !

கொரானாவை விரட்டும் மூலிகைகள் !

சைனா வின் சீதோஷ்ண நிலை வேறு, நம் நாட்டின் சீதோஷ்ண நிலை வேறு. சைனா போல் லாம் நம் நாட்டில் கொரானா வைரஸ் வேகமாக பரவுவதற்கான வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் பலர் சொல்கிறார்கள். சைனா, பிரான்ஸ் போல் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த ஒரு சிலருக்கு  மட்டுமே இந்த நோய் இருக்கு. சாதாரண சளி, தும்மல் ஆகியவை வந்தாலே கொரானா வைரஸா என்று  பயந்து விடவேண்டாம்.

ஒரு குட்டி கதை சொல்கிறேன்.

ஒரு பாலைவனம் அந்த பாலைவனத்தில் ஒரு ஞானி கண்களை மூடி அமர்ந்தவாறு தியானத்தில் இருந்தார். அப்பொழுது புதிதாக உருவான  ஒரு  அபாயகரமான வைரஸ் கிருமி அவரை கடந்து சென்று கொண்டிருந்ததது. தியானத்தில் இருந்து கண் விழித்த அந்த ஞானி ஏ கிருமியே எங்கே செல்கிறாய் என்று கேட்க  இயற்கை நியதிப்படி ஆயிரம் உயிர்களை காவு  வாங்க நான் பக்கத்து நாட்டுக்கு சென்று கொண்டிருக்கிறேன்  என்று அவருக்கு பதில் சொல்லிவிட்டு அந்த கிருமி மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தது. வந்த வேலையை கச்சிதமாக முடித்த அந்த கிருமி மீண்டும் வந்த அதே வழியில் திரும்பி கொண்டிருந்தது. அப்ப அதே ஞானி அதே இடத்தில் உட்கார்ந்து இருந்தார்.

ஆயிரம் பேரை காவு வாங்க போறேன் ன்னு சொன்ன  ஆனால் 20 ஆயிரம் உயிர்களை கொன்று இருக்கிறாயே  என்று  அவர் கேட்க அதற்கு அந்த கிருமி ஞானியிடம் என்ன பதில் சொன்னது தெரியுமா?

இயற்கை நியதிப்படி நான் கொன்றது ஆயிரம் பேரை தான். ஆனால் பயத்தால் செயற்கையாக செத்தவர்கள்  கூடுதலாக 19 ஆயிரம் பேர். ஆகமொத்தம் 20 ஆயிரம் பேர்.

இந்த பேய் னு ஒன்னு இருக்கோ, இல்லையோ இருக்கு னு ஒரு வாதத்திற்கு வைத்து கொண்டாலும். யாரிடம்  அதிக  பயம் இருக்கோ அந்த பயம் இருப்பவர்களை தான் பேய், பிசாசு, நோய் கிருமி அனைத்தும் முதலில் தாக்கும். இருக்கும் கிருமிகளில் மிக, மிக அபாயகரமானது பயம் தான். உங்களின் அந்த பயத்தை முதலில் கொல்லுங்கள்.

விழிப்புணர்வு தேவை தான். அதே சமயம் இந்த உலகில் பிறந்த அணைத்து உயிர்களும் என்றாவது ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும். மரணம் நமக்கு எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். துணிந்தவனுக்கு ஒருமுறை  மட்டுமே மரணம். பயந்தவனக்கு தினம், தினம் மரணம்.

பயத்தால் தினம், தினம் செத்து பிழைக்கும் ஒரு பிழைப்பு உனக்கு தேவையா? என்று பயம் இருப்பவர்கள் தங்களை தாங்களே இதுபோல் கேட்டு கொள்ளுங்கள். அதாவது ஆட்டோ சஜ்ஜஷன்.

கொரானா போன்ற வைரஸ்களில் இருந்து நம்மை காக்கும் அருமருந்துகள், மூலிகைகள் சிலவற்றை இப்பதிவில் கீழே  தந்துள்ளேன். இப்பதிவில் குறிப்பிட்டிருக்கும்  மூலிகைகளை அளவாக தினமும் உண்டு வந்தால்  அது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு  சக்தியை பன்மடங்கு அதிகரிக்கும்.

1] கற்பூரவல்லி [ Oregano ]

2] தழுதாழை என்கிற வாதமடக்கி இதற்கு முனிவர் மூலிகை என்றும் பெயர் உண்டு  இதன் ஆங்கில பெயர்  [Sage]

3] திருநீற்றுப்பசிலை எனும் [ Basil ]

4]  அனைவர்க்கும் தெரிந்த வில்வம் எனும் [ Bael ] 

வில்வ இலைகள் சிவபெருமானுக்கு உகந்தது. வில்வ மரம் மூலம்  கிடைக்கும் காய், பழம், பட்டை, இலை, பூ என அனைத்தும் மகத்தான மருத்துவ குணங்கள்  வாய்ந்தது.  வில்வப்பூவை தண்ணீரில் போட்டு லேசான சூட்டில் கொதிக்க வைத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் குடித்தாலே  போதும். நம் உடலில் உள்ள விஷத்தை கூட முறிக்கும் ஆற்றல் வில்வப்பூவிற்கு உண்டு.

5] புதினா எனும் மின்ட்.

கற்பூரவல்லி, தழுதாழை கூட புதினா குடும்பத்தை சேர்ந்த மூலிகைகள் தான்.

தினமும் காலை இட்லி, தோசை போன்ற  உணவுகளை உட்கொள்ளும் பொழுது கொஞ்சம் புதினா  சட்னியை, புதினா தொகையலை சேர்த்து கொள்ளுங்கள். உங்கள் நாக்கு ருசிக்கு ஏற்றவாறு வெங்காய சட்னி, சாம்பார் போல் ஏதேனும் தனியாக ஒரு சைடிஷ் இருக்கட்டும். உங்கள் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த, ரத்தத்தை சுத்தப்படுத்த  தினமும்   புதினா கூடுதலாக இருக்கட்டும்.

புதினா சட்னி செய்வதும் எளிது.

இதைதவிர்த்து கீரைகளில் வள்ளலாரால் தெய்வீக மூலிகை என்று அழைக்கப்பட்ட  கரிசலாங்கண்ணி கீரை  மற்றும்  முடக்கத்தான் கீரை இரண்டும் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்கு அதிகரிக்கும்.

மிக முக்கியமாக  நான் மீண்டும்  சொல்கிறேன். பயத்தை காட்டிலும் மோசமான ஒரு நோய்  உலகில் வேறு எதுவும் இல்லை. நம்பள ஏதாவது நோய் தாக்கி விடுமோ என பயந்து, பயந்து முகமூடியோடு சுற்றுபவர்களை தான்  நோய் கிருமிகள் முதலில் தாக்கும். மண்ணில் உருண்டு, பிரண்டு விளையாடும் குழந்தைகளுக்கு  இம்யூனிட்டி  யும் டெவலப் ஆகும், கம்யூனிட்டியும் டெவலப் ஆகும்.

அதனால் உங்களிடம் இருக்கும் பயம் எனும் கிருமியை முதலில் கொல்லுங்கள்.

வாழ்க வளமுடன்!

கொரோனா வைரஸ் பற்றி!

கொரோனா வைரஸ் பற்றி!


நம்ம தகுந்த தகவல் யுனிசெஃப்லிருந்து தமிழ் மொழி பெயர்ப்பு.

1.கொரோனா வைரஸ் அளவில் பெரியது அதன் விட்டம் 400_500 மைக்ரான் அதனால் நாம் உபயோகிக்கும்  மாஸ்க் வழியாக உடம்பில் செல்லாது.


2.இந்த வைரஸ் காற்றில் படியாது அதனால் காற்றின் மூலமாக பரவாது.


3.கொரோனா வைரஸ் திடப்பொருளின் மேல் உட்காரும் பொழுது 12 மணி நேரம் உயிருடன் இருக்கும் அதனால் கையை சோப் போட்டு தண்ணீரில் கழுவினால் போதுமானது.


4.வைரஸ் பேபரிக் மேல் உட்காரும் பொழுது 9 மணி நேரம் உயிருடன் இருக்கும் அதனால் துணியை துவைக்க வேண்டும் அல்லது இரண்டு மணி நேரம் சூரிய ஒளியில் பட வேண்டும்.

5.காரோனா வைரஸ் கை மேல் 10 நிமிடம் உயிருடன் இருக்கும் அதனால் ஆல்கஹால் கிருமி நீக்கியை ஊபயோகித்தால் தடுக்கலாம்.


6.இந்த வைரஸ் 26_27 டிகிரி வெப்பம் படும் பொழுது இறந்து விடும்  அதனால் அதிக வெப்பநிலையில் உயிர் வாழாது அதனுடன் காய்ச்சிய தண்ணீர் மற்றும் சூரிய ஒளி நமது உடலில் பட்டால் இந்த நோய் வராது அதனுடன் ஐய்ஸ்கிரீம் குளிர் பானம் இவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.


7 சூடான உப்பு தண்ணீரில் கொப்பளிக்கும் பொழுது நமது தொண்டையில் டான்சிலில் உள்ள கிருமியை அழிப்பதன் மூலமாக அந்த கிருமி நுரையீரலுக்கு செல்வதை தடுக்கிறது. மேலே சொல்லியிருக்கிற உத்திகளை கடைபிடித்தால் இந்த நோய் வராமல் தடுக்கலாம்.


நன்றி யுனிசெஃப்.


உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது.

இந்த தொற்று என்னும் பதத்தை தற்போது உலக சுகாதார நிறுவனம் மாறுபட்ட பொருளிலேயே பயன்படுத்துகிறது.

Pandemic என்றால் என்ன?

Pandemic என்பது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்றாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் நிலையின் ஆபத்தை விவரிக்கவே இந்த பதம் இப்போது பயன்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார். 


கொரோனாவிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்ளலாம்?

கொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி நன்றாக கைகளை சுத்தம் செய்வது. சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.

கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்பும்போது, அந்த வைரஸ் காற்றில் கலக்கலாம். இதை சுவாசித்தாலோ அல்லது அந்த வைரஸ் துகள்கள் பட்ட இடத்தை தொட்டு பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொட்டாலோ தொற்று ஏற்படலாம்.

இருமும் போதோ அல்லது தும்மலின் போதோ டிஷ்யூ வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தை தொடக்கூடாது. மேலும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து தள்ளி இருத்தல் வேண்டும்.
 
கொரோனா தொற்று நுரையீரலை பாதிக்கும். அதன் அறிகுறி முதலில் காய்ச்சலாக தொடங்கும், பின் வறட்டு இருமல் ஏற்படும் அதன்பின் சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும்.

சராசரியாக கொரோனா அறிகுறிகள் வெளியே தெரிய ஐந்து நாட்கள் ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

சிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென் படுவதற்கு முன்னரே அவர் தொற்றை பரவலாம் என்றும் கூறப்படுகிறது.

56,000 நோயாளிகளிடம் உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்தது; அதில் கண்டறிந்தவை: 

6% பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு - நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.

14% பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. - சுவாப்பதில் சிரம்ம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமை

80% பேருக்கு மிதமான அறிகுறிகள் - காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.

வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம்

சிகிச்சையும் மருந்தும்…

இதற்கான சிகிச்சை என்பது நோயுற்றவர்களின், நோய் எதிர்ப்பு சக்தி வைரஸ் தொற்றை எதிர்த்து போராடும் வரையில் உடலை தொடர்ந்து இயங்க செய்வதாகும். சுவாசக் கருவிகள் கொண்டு ஆதரவு வழங்க வேண்டும். 

கொரோனா தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Thanks to BBC Tamil.com

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...