Total Pageviews
Monday, May 18, 2020
மண்ணின் மக்கள் " வேலை வழங்கு வாரியம்' அமைத்திடுக!
Sunday, May 17, 2020
சுத்தம் வேண்டும் நித்தம்!
சுத்தம் வேண்டும் நித்தம்!
குளிக்கும் பழக்கம்
நாமும் தினமும் குளித்து குளிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும். என்னதான் அவசரமாக இருந்தாலும், முகம்-கை-கால் மட்டுமே கழுவிக்கொண்டு செல்லக்கூடாது. காது மடல்கள், மூக்கு மற்றும் உடல் முழுவதும் சோப் மற்றும் பிரத்யேகக் குளியல் நாரினால் தேய்த்து நிறையத் தண்ணீர் விட்டுக் குளிக்கக் கற்றுக்கொடுங்கள். தினமும் இரண்டு வேளை குளித்தால் மிகவும் நல்லது. ஈரத் துணியில் பாக்டீரியா வேகமாக வளரும். குளித்ததும் ஈரம் போகத் துடைத்து, துவைத்த உள்ளாடைகளை அணிவியுங்கள்.. வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு போட்டுக் குளிக்கவைக்கவும்.
கை சுத்தம்
சாப்பிடும்போதும், உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கைகளில் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி ஜெல் போட்டு குறைந்தது 20 விநாடிகள் கழித்து கையைக் கழுவக் கற்றுக்கொடுங்கள். மூக்கில் சளித் தொந்தரவு இருந்தால் மூக்கைத் தொட்டதும், மருந்துகளைத் தொடுவதற்கு முன்பும் பின்பும், கைகளை நிச்சயம் கழுவ வேண்டும் என்று வலியுறுத்துங்கள். நக இடுக்குகள் தான் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற இடம். ஆதலால் நகங்களை எப்போதும் வெட்டி, தூய்மையாக வைத்திருக்கக் கற்றுக்கொடுங்கள்.
பல் சுத்தம்
சொத்தை பல் பிரச்சனை குழந்தைகள் மத்தியில் மிகவும் அதிகரித்திருக்கிறது. தினமும் இரண்டு முறை பல் துலக்கக் கற்றுக்கொடுக்காததே இதற்குக் காரணம். தூங்கப்போகும் முன்பு கட்டாயமாக பல்லை சுத்தம் செய்ய கற்றுகொடுங்கள். குழந்தைகளை பல் துலக்கச் செய்வதே பெற்றோர்களுக்கு மிகப் பெரிய சவால்தான். பள்ளிக்குப் புறப்படும் கடைசி நேரத்தில் அரக்கப்பரக்க குழந்தைகளை எழுப்பி, பரபரவென, பற்களைத் துலக்கி அனுப்பிவிடுகின்றனர். குழந்தைகளை சீக்கிரத்திலேயே எழுந்திருக்கவைத்து, நிதானமாகப் பல் துலக்கவையுங்கள். பல்லின் முன், பின், மேல், கீழ் என எல்லாப் பக்கங்களிலும் துலக்கச் செய்வதால் பெப்பர்மின்ட் வாசம் தூக்கும். பளிச் எனப் பற்களும் பிரகாசிக்கும்.
காயங்களை மூட வேண்டும்
காய்ந்துவரும் புண்ணை பிய்க்கும் பழக்கமும் குழந்தைகளுக்கு இருக்கும். காயங்கள் மூலம் கிருமிகள் உடலுக்குள் மிக எளிதில் புகுந்துவிடும். இதைத் தவிர்க்க, காயம்பட்டவுடன் முதலில் ஆன்டிசெப்ட்டிக் திரவத்தால் காயத்தை சுத்தம்செய்து, காயங்களை பேன்டேஜ் போட்டு மூட வேண்டும். காயங்கள் மீது கைகள் படக் கூடாது என்று அறிவுறுத்துங்கள். பள்ளிக்கூடம், வெளி இடங்களில் குழந்தைக்கு எந்த சிறிய காயம் பட்டாலும், உடனடியாகத் தெரிவிக்கும்படி குழந்தைக்கு சொல்லி கொடுங்கள்
தும்மல் வந்தால் மூடிக்கொள்ளுங்கள்
தும்மல், இருமல் வந்தால், நன்கு உலர்ந்த துணி, அல்லது டிஷ்யூவால் மூக்கு, வாயை மூடிக்கொள்ளும் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். ஒருவேளை தும்மல் ஏற்படும்போது கையில் துணி ஏதும் இல்லை என்றால், முழங்கையின் முன்புறத்தால் மூடிக்கொள்ளச் சொல்லலாம். ஏனெனில், கையில் தும்மல் பட்டால், அதில் கிருமிகள் பரவி, மற்ற குழந்தைகளைத் தொடுவதன் மூலம் இந்த கிருமி மற்றவர்களுக்கும் பரவும். ஆனால், முழங்கையால் மூடித் தும்மும்போது கிருமியானது குறிப்பிட்ட சிறிய பகுதியில் மட்டுமே இருக்கும். வீட்டுக்குச் சென்றதும் குளித்தால் அந்தக் கிருமிகளும் இல்லாமல் போய்விடும். குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதற்கு முன்னர், கைக்குட்டை ஒன்றை அவர்களது உடையின் மேல் 'பின்’ செய்து அனுப்புவது நல்லது.
Saturday, March 21, 2020
Whatsapp மூலம் இன்டேன் கேஸ் பதிவு செய்து கொள்ளும் வசதி!
இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் இனி எந்த சிரமமும் இல்லாமல் இலவசமாக Whatsapp மூலம் கேஸ் பதிவு செய்து கொள்ளும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
75888 88824 என்ற தொலைபேசி எண்ணை உங்கள் மொபைல் போனில் இன்டேன் கேஸ் வாட்ஸ்அப் புக்கிங் என சேமித்துக் கொள்ளவும்.
A. கேஸ் இணைப்பில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து கேஸ் பதிவு செய்யும் வழிமுறை.
REFILL
என மட்டும் டைப் செய்து அனுப்பினால் உடனே பதிவு ஆனதற்கான விபரங்கள் உடனே உங்கள் வாட்ஸப்பில் வந்துவிடும்.
B. கேஸ் இணைப்பில் பதிவு செய்யாத மொபைல் என்னிலிருந்து கேஸ் பதிவு செய்யும் வழிமுறைகள்
REFILL#<உங்கள் 16 இலக்க LPG ID>
என டைப் செய்து அனுப்பினால் உடனே பதிவு ஆனதற்கான விபரங்கள் உங்கள் வாட்ஸப்பில் வந்துவிடும்.
Example. : REFILL#7500000051153961
C. உங்கள் கேஸ் பதிவின் STATUS யை தெரிந்து கொள்ள வழிமுறைகள்.
STATUS#<உங்கள் புக்கிங் Order நம்பர்>
என டைப் செய்து அனுப்பினால் உடனே உங்கள் பதிவின் status தகவல் உங்கள் வாட்ஸப்பில் வந்துவிடும்.
Example : STATUS#2-000120518460
நாம் நாமாகவே இருப்போம் தன்னம்பிகை வரும்.....
எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.
எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.
மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.
மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்வோம்
முதுமை என்று எதுவும் இல்லை.
நோய் என்று எதுவும் இல்லை.
இயலாமை என்று எதுவுமில்லை.
எல்லாம் நமது மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.
சிந்தனையை மாற்றுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்
நாம் எதை நம்புகிறோமோ அதுவாகவே ஆகிறோம்.
நான்... நான்... நான்...
நான் சம்பாதித்தேன்,
நான் காப்பாற்றினேன்,
நான் தான் வீடு கட்டினேன்,
நான் தான் உதவி செய்தேன்,
நான் உதவி செய்யலனா? அவர் என்ன அவ்வளவுதான்.
நான் பெரியவன்,
நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன்,
நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளுகிறோம்
நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?
நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?
நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?
நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா??
நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா ?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..
ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருப்போம்.
உலகைப்பற்றிக்கவலைப்பட வேண்டாம் ஏனெனில் அது இறைவனுக்குரியது.
உணவைப்பற்றி கவலைப்பட வேண்டாம் அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.
எதிர்காலம் குறித்தும் கவலைப்பட வேண்டாம் அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது
நமக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்க வேண்டாம் தாழ்வு மனப்பான்மை வரும்.
நமக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்க வேண்டாம் தலைக்கனம் வரும்.
நம்மை யாரோடும் ஒப்பிடாமல் நாம் நாமாகவே இருப்போம் தன்னம்பிகை வரும்.....
-படித்ததில் பிடித்தது
Saturday, March 14, 2020
உடலில் உள்ள பிரச்சனை என்ன என்பதையும் தெரிந்துகொள்ள !
பயிற்சியும், முயற்சியும் ஒவ்வொருவருக்கும் மூலதனம்!
பயிற்சியும், முயற்சியும் மூலதனம்!
உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க !
இரத்த அணுக்கள்
இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்
உடற்பயிற்சி
டாக்டர் கோபி ! இந்தக் காலத்தில் இப்படியும் சில டாக்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.!
இ ந்தக் காலத்தில் இப்படியும் சில டாக்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். டாக்டர் கோபி. அவரது மனைவி டாக்டர் ஹேமப்பிரியா. மதுரையில் மருத்து...
-
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர...
-
Old Age Homes Madurai Christian Seva Sangam Trust kennet garden, Alagapan nagar, Paandiyan nagar Madurai Cell :098430 52242 ...
-
பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். ஆபத்தான உயிரினமான பாம்புகளுக்கு புதர்செடிகள் மிகவும் பிடித்தமானவை. வீட்டுத் தோட்டங்களி...