Total Pageviews

Sunday, June 7, 2026

கச்சிதமான வடிவமைப்பு பல்நோக்கு மற்றும் இடத்தைச் சேமிக்கும் தளபாடங்கள் !

 


சிறிய வீடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகள், பன்முகப் பயன்பாடு, செங்குத்து சேமிப்பு மற்றும் கச்சிதமான வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம் இடத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. இந்தக் கட்டுரையின் அடிப்படையில், முக்கிய வகைகள் பின்வருமாறு

பல்நோக்கு மற்றும் இடத்தைச் சேமிக்கும் தளபாடங்கள்

  • மடிக்கக்கூடிய சுவர் மேசைகள்: வேலை செய்வதற்கான இடத்தை வழங்குவதோடு, சுவரோடு ஒட்டித் தட்டையாக மடித்துக் கொள்ளும்.
  •  
  • மர்ஃபி படுக்கைகள் / சுவர் படுக்கைகள்: படுக்கைகளை மேசைகள் அல்லது சேமிப்பு அலமாரிகளுடன் இணைத்துப் பயன் படுத்தலாம்.
  •  
  • சேமிப்புப் படுக்கைகள்: ஸ்பேசியோ படுக்கையைப் போன்ற, அடியில் ஆழமான இழுப்பறைகளைக் கொண்ட படுக்கைகள்.
  •  
  • விரிவாக்கக்கூடிய மேசைகள்: மேசை களாகவும் பயன்படும் சாப்பாட்டு மேசைகள், அல்லது பரப்பளவை மும்மடங்காக்கும் மேசைகள்.
  •  
  • படிக்கட்டு சேமிப்பு: படிகளின் கீழ் பிரத்யேக இழுப்பறைகள் பொருத்தப்பட்டுள்ளன.
  •  
  • மாடுலர் இருக்கை அமைப்பு: ஒன்றாக இணைக்கக்கூடிய மெத்தையிட்ட ஸ்டூல்கள் அல்லது சோபா படுக்கைகள்

சமையலறை மற்றும் ஒழுங்கமைப்புக் கருவிகள்

  • கச்சிதமான சமையலறைத் தீவுகள்: ரோஸ் மேரி தீவு போன்ற அம்சங்கள், நகரும் இழுப்பறைகள் மற்றும் மடிக்கக்கூடிய மேசைப் பலகைகளை வழங்குகின்றன.
  •  
  • செங்குத்து சேமிப்பு: காந்த மசாலாப் பொருட்கள் அடுக்குகள், அலமாரிக்குக் கீழுள்ள அமைப்பான்கள், மற்றும் தொங்க
  • விடும் அமைப்பான்கள்.
  •  
  • சிறு சாதனங்களுக்கான தீர்வுகள்:பிஜியன் ஹேண்டி சாப்பர் போன்ற கச்சிதமான நறுக்கும் கருவிகள் , மற்றும் மின்சாரம் தேவைப்படாத பல்நோக்குக் கருவிகள்
  •  

ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்பம் (சிறிய இடங்கள்)

  • ஸ்மார்ட் ஹப்கள்/சைம்கள்: பாதுகாப்பு மற்றும் தானியக்கத்திற்கான TP-Link Tapo H100 போன்ற சாதனங்கள்
  •  
  • இயக்க உணர்விகள்: தானியங்கி, ஆற்றல் சேமிப்பு விளக்குகளுக்கானடாபோ T100 .
  •  
  • குரல்வழி கட்டுப்படுத்தப்படும் விளக்குகள்: இடத்தைச் சேமிக்கவும் வசதியை மேம்படுத்தவும் அலெக்ஸா / கூகுள் அசிஸ்டண்டுடன் இணைந்து செயல்படும் ஸ்மார்ட் பல்புகள்

அலங்காரம் மற்றும் காட்சி விரிவாக்கம்

  • அலங்காரக்  ண்ணாடிகள் / சட்டங்கள்: ஆழத்தைச் சேர்த்து, இடத்தின் பிரம்மாண்டம் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன.
  •  
  • தொங்கும் அலங்காரங்கள்: சுவர் ஓவியங்கள், கனவுப் பிடிப்பான்கள், மற்றும் சிறிய மிதக்கும் அடுக்குகள்

சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அல்லது குறைந்த இடவசதி உள்ளவர்களுக்கு, இந்தப் பொருட்கள் பெரும்பாலும் அமேசான் இந்தியா போன்ற முக்கிய தளங்களில் கிடைக்கின்றன

Saturday, June 6, 2026

மரணம் எவ்வாறு உண்டாகிறது ?

 

மரணம் எவ்வாறு உண்டாகிறது என்பதை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் வேதாத்திரி மகரிஷி என்ன சொல்லி இருக்கிறார்னு பாருங்க.

நமது உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு, இனிமையான உறவு இருக்கும் வரையில் தான் உடல் நலம், மன நலம் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும்.

அளவிலே, முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியக்கம், நட்பு, உறவு சீராக இருக்கும். எந்தக் காரணத்தினாலோ ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இந்த மூன்றிலே ஒன்று தடுக்கப்பட்டாலும், திசைமாறினாலும், வெளியேறினாலும், அளவிலே குறைந்தாலும், ஓட்டத்திலே குழப்பம் அடைந்தாலும், அந்த ஓட்டத்தில் அணு அடுக்குச் சீர்குலைவு ஏற்படும்.

அது ரத்த ஓட்டத்திலோ, வெப்ப ஓட்டத்திலோ, காற்று ஓட்டத்திலோ எதனாலே வந்தாலும் சரி, மற்ற இரண்டும் கூட ஓட்டத்திலே தடையாகி விடும். அந்தக் குழப்பத்தை நீக்குவதற்கு அங்கே இருக்கக் கூடிய மின்சக்தி போதாது. அதனாலே அதிகமான மின்சக்தி அங்கே சேர வேண்டியதாகின்றது.

அவ்வாறு அங்கே சேரும் போது ஏற்கனவே அங்கு துளை ஆகி இருக்கிறது. அளவுக்கு மேலாகக் காந்த சக்தி மின் சக்தியாக மாறும் போது அந்த இடத்தில் நிச்சயமாக மின்குறுக்கு உண்டாகும். அதுதான் வலியாக வரும்.

இந்த மின்குறுக்கு சிறிது நேரம் இருந்தால் அது வலி என்றும், அது இடத்தாலே விரிந்தும் காலத்தாலே நீடித்தும் இருந்தால் அது நோய் அல்லது வியாதி என்றும் கூறப்படுகிறது. அதற்கும் மேலாக உடலில் உள்ள ஜீவகாந்தசக்தி எல்லாம் அதிகமாகச் செலவாகி, வருவதற்கும் போவதற்கும் மத்தியில் உள்ள இருப்பை ஜீவகாந்தம் வெகுவாகக் குறைக்குமானால் அதனை ஈடு செய்ய முடியாமல் போகும்.

ஈடு செய்யும் முயற்சியில் உயிராற்றல் தோல்வியடையும். உடலை நிர்வாகம் செய்வதற்குப் போதிய காந்த சக்தி, ஜீவகாந்த சக்தி, உற்பத்தி செய்யமுடியாமல் தோல்வியடையும்.

அந்தத் தோல்வியிலே தானே குறைவுபட்டு அது தன்னாலே ஏற்படக்கூடிய வெப்பத்தினாலே அதனுடைய மின்கலம் என்று சொல்லக்கூடிய விந்து நாளத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு அதைத் தாங்கி நிற்கக் கூடிய விந்துவையே அல்லது நாளத்தையே உடைத்துக் கொண்டு வெளியேறிய பின்னர் அதைத் தாங்கி நிற்கும் உயிர் உடலில் இருந்து பிரிந்து விடும். இதுவே மரணம். இதுதான் உடலியக்கத்தில் உள்ள நுட்பம்.

Tuesday, June 2, 2026

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வலி மிகுந்த நாட்கள் வரும்!

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வலி மிகுந்த நாட்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் வரும்.

அந்த காலகட்டம் நெருப்புத்துண்டை உள்ளங்கையில் அழுத்தி பிடிச்சிட்டு வாழற ஃபீல் வரும்..

நிச்சயம் வரும்.

வராமா இருக்காது..

அந்த சூழல்ல ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோங்க..

'எப்படி வாழனும்னு தெரியாம வாழ்ந்துருப்பீங்க..

பகட்டு வாழ்க்கை வாழ்ந்திருப்பீங்க.

எப்படி வாழனும்னு கத்து கொடுக்க வந்தது தான் இந்த வலி மிகுந்த காலம் .

நிறைய பட்டுருப்பீங்க.

வலியைக் கூட வெளியே சொல்ல முடியாத அளவுக்கு வலியைத் தாங்கி முழுங்கி சுமந்து அவ்வளவு

அனுபவிச்சு பட்டுருப்பீங்க..

ஒவ்வொரு ஆட்களையும் புரிஞ்சிக்கற வசதி வந்திருக்கும் இந்த காலத்துல..

இனி இந்த

போலி வாழ்க்கை

போலி மனுஷங்க

போலி நட்புங்க

போலி வசதி

போலி வறட்டு கௌரவம்

போலி இமேஜ்

போலி பகட்டு வாழ்வு இல்லாம 'எனக்குனு' ஒரு நல்ல வாழ்க்கையை நல்லா வாழுவீங்க..

வாழுவீங்க‌.

கஷ்டப்படாதீங்க...'

பிள்ளைகள் உங்களை கவனித்து கொள்ள என்ன செய்ய வேண்டும் !

பிள்ளைகள் உங்களை கவனித்து கொள்ள என்ன செய்ய வேண்டும் !

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக. பிள்ளைகளுக்கு நல்ல நடத்தையை வளர்த்து கொள்ள வேண்டும் , நேர்மறையான பழக்கங்களை கற்றுகொள்ளவும் பெற்றோர்கள் உதவ வேண்டும்

பெற்றோர்கள் என்பதே சக்தி வாய்ந்த மந்திரம் தான். குழந்தைகளுக்கு அன்பு, அரவணைப்பு இரக்கத்தை காட்டுவதோடு குழந்தைகளிடமும் இதை ஊக்குவிப்பதன் மூலம் விரும்பும் வழியில் செயல்பட வழிகாட்டும் அற்புதமான வளர்ப்பு முறை ஆகும்இதனால் குழந்தைக்கும் பெற்றோருக்கும் அற்புதமான பிணைப்பு ஏற்படும். இதன் மூலம் குழந்தைகளின் உலகில் நீங்கள் முக்கியமானவர்களாக இருப்பீர்கள். நல்லவர்களாக இருப்பீர்கள்.

   வாழ்க்கை முறை வழிகாட்டுதல்

·         கற்பித்தல்

·         கவனமாக பார்த்துகொள்வது

·         குழந்தைகளின் தேவைகளை அளிப்பது

·         வன்முறையற்றது

·         பாசத்தை அளிப்பது

·         உணர்ச்சி பாதுகாப்பை வழங்குவது

·         நிபந்தனையற்ற அன்பை வழங்குவது

·         நேர்மறையை அளிப்பது

·         குழந்தையின் வளர்ச்சி கட்டத்துகேற்ப கவனிப்பு

·         எல்லைகள் வரையறுப்பது

·         குழந்தையின் சிறந்த நலன்களை ஆதரிப்பது

·         குழந்தைக்கு சுயமரியாதை வளர்க்கும் விகிதத்தில் ஒழுக்கத்தை கற்பிப்பது

·         குழந்தையின் மனநிலையை சீர்குலையாமல் பாதுகாப்பது

·         போன்ற அனைத்துமே இருக்க வேண்டும்.

குழந்தைகள் பெரியவர்களாகி ,பெற்றோர்களுக்கு கட்டளை போடாதீர்கள். இதை தான் செய்ய வேண்டும். இந்த செயல்கள் செய்ய கூடாது என்று சொல்லாதீர்கள். சுதந்திரமாக இருக்க விடுங்கள்.

ஆலோசனை: 

நீங்கள் இந்த விஷயம் செய்வது நல்லதா, கெட்டதா என்று பெற்றோர்களிடம் கேளுங்கள். நீங்கள் எடுக்கும் செயல்களின் முடிவை பெற்றோரிடம் கலந்துரையாடுங்கள். அவர்கள் சொல்வதும் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.

பணம்:

 பெற்றோர்கள்,  உங்களின் தேவைக்காக நீங்கள் கேட்கும் முன் பணத்தை கொடுப்பார்கள். அது போல் அவர்க்ளின் தேவைகளை அறிந்து தேவைக்கு முன் பணத்தை கொடுங்கள்!

அன்பு:

பெற்றோர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அவர்களிடம் கோபமாக பேசாதீர்கள். அவர்கள் சோர்ந்து போகும் நேரத்தில் நான் இருக்கிறேன் என்று அவர்களிடம் ஆறுதலாக இருங்கள்.

மேல் கூறப்பட்டுள்ளது போல் உங்கள் பெற்றோர்களை கவனித்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு சேர்க்காதீர்கள். ஏனென்றால் நீங்களும் அந்த இடத்திற்கு வருவீர்கள்.!

Monday, June 1, 2026

மரணம் வந்துவிட வேண்டும் !

 

கட்டிய மனைவி சலிப்படைந்து,
எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்!

பெற்ற பிள்ளை சனியனே! என்று சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும் !

சொத்து சேர்த்த தகப்பனை தவிக்க விட்டு !
சொத்துக்கு மக்கள் அடித்துக் கொள்ளும் நிலை வருவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும் !

இழுத்துக் கொண்டிருப்பதை பார்த்து நாளை போக வேண்டும்! என்று கடவுளை மகள் வணங்குவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும் !

மூன்று வேளை உணவில், ஒருவேளை உணவை கொடுத்து, தின்னு தொலை சனியனே! என்று சொல்லும் நிலை வருவதற்க்கு முன் மரணம் வந்து விட வேண்டும்!

உறவுகள் எல்லாம் கூடி அறியாமல் செய்த பாவத்தை எடுத்துரைத்து கைத்தட்டி சிரிப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்!

நோயில்லாத  உடல் ஆரோக்கியமாக இருக்கும் நேரத்தில் மரணம் வந்துவிட வேண்டும்!

பெற்ற பிள்ளைகள் ! கட்டிய மனைவி ! எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்!

நீ எல்லாம் இருந்து என்ன பயன் என்று மனைவியும் ! மக்களும்! சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்!

இதற்கு அந்த ஈசன்  தான் அருள் புரிய வேண்டும்! 

பல *நோய்கள்* உண்மையில் நோய்கள் அல்ல; அவை *வயது முதிர்வின் இயல்பான மாற்றங்கள்*.

பல *நோய்கள்* உண்மையில் நோய்கள் அல்ல; அவை *வயது முதிர்வின் இயல்பான மாற்றங்கள்*.  ஒரு மருத்துவமனை இயக்குநர் முதியவர்களுக்குக் கூறிய சில அற்புத...