பிள்ளைகள் உங்களை கவனித்து கொள்ள என்ன செய்ய வேண்டும் !
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக. பிள்ளைகளுக்கு நல்ல நடத்தையை வளர்த்து கொள்ள வேண்டும். , நேர்மறையான பழக்கங்களை கற்றுகொள்ளவும் பெற்றோர்கள் உதவ வேண்டும்.
பெற்றோர்கள் என்பதே சக்தி வாய்ந்த மந்திரம் தான். குழந்தைகளுக்கு அன்பு, அரவணைப்பு இரக்கத்தை காட்டுவதோடு குழந்தைகளிடமும் இதை ஊக்குவிப்பதன் மூலம் விரும்பும் வழியில் செயல்பட வழிகாட்டும் அற்புதமான வளர்ப்பு முறை ஆகும். இதனால் குழந்தைக்கும் பெற்றோருக்கும் அற்புதமான பிணைப்பு ஏற்படும். இதன் மூலம் குழந்தைகளின் உலகில் நீங்கள் முக்கியமானவர்களாக இருப்பீர்கள். நல்லவர்களாக இருப்பீர்கள்.
வாழ்க்கை முறை வழிகாட்டுதல்
· கற்பித்தல்
· கவனமாக பார்த்துகொள்வது
· குழந்தைகளின் தேவைகளை அளிப்பது
· வன்முறையற்றது
· பாசத்தை அளிப்பது
· உணர்ச்சி பாதுகாப்பை வழங்குவது
· நிபந்தனையற்ற அன்பை வழங்குவது
· நேர்மறையை அளிப்பது
· குழந்தையின் வளர்ச்சி கட்டத்துகேற்ப கவனிப்பு
· எல்லைகள் வரையறுப்பது
· குழந்தையின் சிறந்த நலன்களை ஆதரிப்பது
· குழந்தைக்கு சுயமரியாதை வளர்க்கும் விகிதத்தில் ஒழுக்கத்தை கற்பிப்பது
· குழந்தையின் மனநிலையை சீர்குலையாமல் பாதுகாப்பது
· போன்ற அனைத்துமே இருக்க வேண்டும்.
குழந்தைகள் பெரியவர்களாகி ,பெற்றோர்களுக்கு கட்டளை போடாதீர்கள். இதை தான் செய்ய வேண்டும். இந்த செயல்கள் செய்ய கூடாது என்று சொல்லாதீர்கள். சுதந்திரமாக இருக்க விடுங்கள்.
ஆலோசனை:
நீங்கள் இந்த விஷயம் செய்வது நல்லதா, கெட்டதா என்று பெற்றோர்களிடம் கேளுங்கள். நீங்கள் எடுக்கும் செயல்களின் முடிவை பெற்றோரிடம் கலந்துரையாடுங்கள். அவர்கள் சொல்வதும் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.
பணம்:
பெற்றோர்கள், உங்களின் தேவைக்காக நீங்கள் கேட்கும் முன் பணத்தை கொடுப்பார்கள். அது போல் அவர்க்ளின் தேவைகளை அறிந்து தேவைக்கு முன் பணத்தை கொடுங்கள்!
அன்பு:
பெற்றோர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அவர்களிடம் கோபமாக பேசாதீர்கள். அவர்கள் சோர்ந்து போகும் நேரத்தில் நான் இருக்கிறேன் என்று அவர்களிடம் ஆறுதலாக இருங்கள்.
மேல் கூறப்பட்டுள்ளது போல் உங்கள் பெற்றோர்களை கவனித்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு சேர்க்காதீர்கள். ஏனென்றால் நீங்களும் அந்த இடத்திற்கு வருவீர்கள்.!

No comments:
Post a Comment