நடிகர் சாந்தனுவின் மனைவியான கீர்த்தியின் விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அதில் தோழி ஒருவரிடம் இப்படி சொல்கிறார்.
"நான் உனக்கு ஒரு App சொல்றேன். அதை டவுன்லோட் பண்ணி உன்னோட பேர், பிறந்த நாள் மட்டும் சொல்லு. உன்னை பற்றி புட்டு புட்டு அந்த App சொல்லும்" என்கிறார்.
தோழி அந்த App-ஐ டவுன்லோட் செய்துவிட்டு சில நிமிடங்களுக்கு பின்னர்...
"அடிப்பாவி....இந்த ரகசியம் எல்லாம் என் லவ்வருக்கு கூட தெரியாதே...இந்த App எப்படி இவ்வளவு accurate-ஆ சொல்லுது..."? என ஆச்சர்யமாக கீர்த்தியை பாராட்டுகிறார்.
"நான் தான் சொன்னேன்ல...உன்னைப் பற்றி இன்னும் நிறைய தகவல்களை அந்த App உடனே சொல்லிடும்..."
(இப்போது கேமராவை பார்த்து...)
"மக்களே...நீங்களும் உங்களை பற்றியும் உங்க எதிர்காலத்தை பற்றியும் துள்ளியமா தெரிஞ்சிக்கனும்னா, இந்த App-ஐ உடனே டவுன்லோட் பண்ணுங்க..." என்கிறார். விளம்பரம் முடிகிறது.
'அட...இதென்னடா ஆச்சர்யமா இருக்கு...இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லையே...அப்படி என்ன App அது' என நினைத்துக் கொண்டு பார்த்தால்....
அது ஒரு ஜோசியம் கூறும் App. பெயர் வேண்டாம்.
எனக்கு ஜோசியம் மேல் துளியும் நம்பிக்கை கிடையாது. இந்த App மூலமாக ஏமாற்றும் வேலை தான் நடக்கும். ஆனா, என்ன மாதிரியான பித்தலாட்டம் என தெரிந்துக் கொள்ள அதை டவுன்லோட் செய்தேன்.
என்னுடைய பெயர், பிறந்த தேதி எல்லாம் கேட்டப் பிறகு...
"ஓம் நமோ நாராயணாய Prakasam.." என கூறிக்கொண்டு ரேவதி என்கிற பெண் வந்தார். AI chat என நினைக்கிறேன்.
"உங்களுடைய ஜாதகம் தயாராகி கொண்டுள்ளது..."
சில வினாடிகளில்...
"உங்கள் ராசி 'கடகம்'" என்றது.
இதுவரை ராசி பற்றியெல்லாம் பார்த்தது இல்லை என்பதால் எனக்கே அது இப்ப தான் தெரியும்.
"நீங்கள் உங்கள் கேள்விகளை கேட்கலாம்..."
நான் உடனே..."என்னோட ஜாதகப்படி எனக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா..."?
"........................."
சில வினாடிகளில்..
To proceed this chat, please recharge for 26 rupees என்றது.
வாங்கடா சாம்பு மவன்களா...என நினைத்து உள்ளே Proceed கொடுத்து பார்த்தால்..
இந்த App வழியாக ஜாதகம் பார்க்க..
1 நிமிடத்திற்கு - 26 ரூபாய்
5 நிமிடத்திற்கு - 130 ரூபாய் என அடுத்தடுத்து 3,000 ரூபாய் வரை லிஸ்ட் செல்கிறது.
ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் காசு செலவு பண்ணி பார்ப்பார்கள். ஒவ்வொரு 5 நிமிஷமும் 130 ரூபாய் ரீசார்ஜ் பண்ணிக்கிட்டே இருக்கனும்.
பாவம்...எத்தனை பேர் ஏமாந்துக்கிட்டு இருக்காங்களோ தெரியல. இவங்கள விடுங்க...
இந்த App-ஐ புரமோட் செய்யும் கீர்த்தியை தான் கண்டிக்கனும். அதுவும், 'என் லவ்வருக்கு தெரியாத விஷயம் கூட இந்த App-க்கு தெரியுது'னு அந்த புள்ள சொன்னதை தான் தாங்கிக்க முடியல 🤧🤧🤧
Prakasam P.Palani
No comments:
Post a Comment