Total Pageviews

Sunday, June 21, 2026

ஜோசியம் கூறும் ONLINE APPLICATION பெயர் வேண்டாம்! ஏமாறாதீர்கள்' 'மோசம் போக வேண்டாம்'

 

நடிகர் சாந்தனுவின் மனைவியான கீர்த்தியின் விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அதில் தோழி ஒருவரிடம் இப்படி சொல்கிறார்.

"நான் உனக்கு ஒரு App சொல்றேன். அதை டவுன்லோட் பண்ணி உன்னோட பேர், பிறந்த நாள் மட்டும் சொல்லு. உன்னை பற்றி புட்டு புட்டு அந்த App சொல்லும்" என்கிறார்.

தோழி அந்த App-ஐ டவுன்லோட் செய்துவிட்டு சில நிமிடங்களுக்கு பின்னர்...

"அடிப்பாவி....இந்த ரகசியம் எல்லாம் என் லவ்வருக்கு கூட தெரியாதே...இந்த App எப்படி இவ்வளவு accurate-ஆ சொல்லுது..."? என ஆச்சர்யமாக கீர்த்தியை பாராட்டுகிறார்.

"நான் தான் சொன்னேன்ல...உன்னைப் பற்றி இன்னும் நிறைய தகவல்களை அந்த App உடனே சொல்லிடும்..."

(இப்போது கேமராவை பார்த்து...)

"மக்களே...நீங்களும் உங்களை பற்றியும் உங்க எதிர்காலத்தை பற்றியும் துள்ளியமா தெரிஞ்சிக்கனும்னா, இந்த App-ஐ உடனே டவுன்லோட் பண்ணுங்க..." என்கிறார். விளம்பரம் முடிகிறது.

'அட...இதென்னடா ஆச்சர்யமா இருக்கு...இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லையே...அப்படி என்ன App அது' என நினைத்துக் கொண்டு பார்த்தால்....

அது ஒரு ஜோசியம் கூறும் App. பெயர் வேண்டாம்.

எனக்கு ஜோசியம் மேல் துளியும் நம்பிக்கை கிடையாது. இந்த App மூலமாக ஏமாற்றும் வேலை தான் நடக்கும். ஆனா, என்ன மாதிரியான பித்தலாட்டம் என தெரிந்துக் கொள்ள அதை டவுன்லோட் செய்தேன்.

என்னுடைய பெயர், பிறந்த தேதி எல்லாம் கேட்டப் பிறகு...

"ஓம் நமோ நாராயணாய Prakasam.." என கூறிக்கொண்டு ரேவதி என்கிற பெண் வந்தார். AI chat என நினைக்கிறேன்.

"உங்களுடைய ஜாதகம் தயாராகி கொண்டுள்ளது..."

சில வினாடிகளில்...

"உங்கள் ராசி 'கடகம்'" என்றது.

இதுவரை ராசி பற்றியெல்லாம் பார்த்தது இல்லை என்பதால் எனக்கே அது இப்ப தான் தெரியும்.

"நீங்கள் உங்கள் கேள்விகளை கேட்கலாம்..."

நான் உடனே..."என்னோட ஜாதகப்படி எனக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா..."?

"........................."

சில வினாடிகளில்..

To proceed this chat, please recharge for 26 rupees என்றது.

வாங்கடா சாம்பு மவன்களா...என நினைத்து உள்ளே Proceed கொடுத்து பார்த்தால்..

இந்த App வழியாக ஜாதகம் பார்க்க..

1 நிமிடத்திற்கு - 26 ரூபாய்

5 நிமிடத்திற்கு - 130 ரூபாய் என அடுத்தடுத்து 3,000 ரூபாய் வரை லிஸ்ட் செல்கிறது.

ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் காசு செலவு பண்ணி பார்ப்பார்கள். ஒவ்வொரு 5 நிமிஷமும் 130 ரூபாய் ரீசார்ஜ் பண்ணிக்கிட்டே இருக்கனும்.

பாவம்...எத்தனை பேர் ஏமாந்துக்கிட்டு இருக்காங்களோ தெரியல. இவங்கள விடுங்க...

இந்த App-ஐ புரமோட் செய்யும் கீர்த்தியை தான் கண்டிக்கனும். அதுவும், 'என் லவ்வருக்கு தெரியாத விஷயம் கூட இந்த App-க்கு தெரியுது'னு அந்த புள்ள சொன்னதை தான் தாங்கிக்க முடியல 🤧🤧🤧

Prakasam P.Palani

Sunday, June 7, 2026

*தொழிலாளியின் ஒரே பாதுகாப்பு — மற்ற தொழிலாளிகள்தான்* .

 நீங்கள் இன்னும் “எனக்கு டிஏ வந்தாச்சு” என்று நிம்மதியாக இருந்தால்,வரலாறு உங்களை மிகவும் கொடூரமாக எழுப்பும்.

ஆகவே இப்போது மிகவும் அவசரமாக தேவைப்படுவது — *ஒற்றுமை.* 

 



தனித்தனியாக இருந்தால் ஒவ்வொருவரையும் எளிதாக உடைத்துவிடுவார்கள்.


ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் சக்தியை அவர்கள் அஞ்சுகிறார்கள்.

அதனால்தான் சங்கங்களை பலவீனப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.


*சங்கத்தில் இருப்பவர்களை கேலி செய்கிறார்கள்* .


*போராட்டங்களை அவதூறு செய்கிறார்கள்* .

ஏனெனில் முதலாளித்துவம் மிகவும் நன்றாக அறிந்திருக்கிறது:


*தொழிலாளியின் ஒரே பாதுகாப்பு — மற்ற தொழிலாளிகள்தான்* .

*எனவே தோழர்களே,*


*இன்னும் குறுகிய நேரம் இருக்கும்போதே விழித்துக்கொள்ளுங்கள்.*

*சங்கத்தில் இணையுங்கள்.*


*ஒற்றுமையாக அமைப்பாகுங்கள்.*


*உரிமைக்காக பேசுங்கள்.*


*போராட கற்றுக்கொள்ளுங்கள்..*

*இல்லையெனில் நாளை நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக அழிக்கப்படுவோம்;*

*பிறகு நம்முடைய பிள்ளைகள் “நிரந்தர வேலை” என்ற வார்த்தையையே வரலாற்று புத்தகங்களில் மட்டும் படிப்பார்கள்.

கச்சிதமான வடிவமைப்பு பல்நோக்கு மற்றும் இடத்தைச் சேமிக்கும் தளபாடங்கள் !

 


சிறிய வீடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகள், பன்முகப் பயன்பாடு, செங்குத்து சேமிப்பு மற்றும் கச்சிதமான வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம் இடத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. இந்தக் கட்டுரையின் அடிப்படையில், முக்கிய வகைகள் பின்வருமாறு

பல்நோக்கு மற்றும் இடத்தைச் சேமிக்கும் தளபாடங்கள்

  • மடிக்கக்கூடிய சுவர் மேசைகள்: வேலை செய்வதற்கான இடத்தை வழங்குவதோடு, சுவரோடு ஒட்டித் தட்டையாக மடித்துக் கொள்ளும்.
  •  
  • மர்ஃபி படுக்கைகள் / சுவர் படுக்கைகள்: படுக்கைகளை மேசைகள் அல்லது சேமிப்பு அலமாரிகளுடன் இணைத்துப் பயன் படுத்தலாம்.
  •  
  • சேமிப்புப் படுக்கைகள்: ஸ்பேசியோ படுக்கையைப் போன்ற, அடியில் ஆழமான இழுப்பறைகளைக் கொண்ட படுக்கைகள்.
  •  
  • விரிவாக்கக்கூடிய மேசைகள்: மேசை களாகவும் பயன்படும் சாப்பாட்டு மேசைகள், அல்லது பரப்பளவை மும்மடங்காக்கும் மேசைகள்.
  •  
  • படிக்கட்டு சேமிப்பு: படிகளின் கீழ் பிரத்யேக இழுப்பறைகள் பொருத்தப்பட்டுள்ளன.
  •  
  • மாடுலர் இருக்கை அமைப்பு: ஒன்றாக இணைக்கக்கூடிய மெத்தையிட்ட ஸ்டூல்கள் அல்லது சோபா படுக்கைகள்

சமையலறை மற்றும் ஒழுங்கமைப்புக் கருவிகள்

  • கச்சிதமான சமையலறைத் தீவுகள்: ரோஸ் மேரி தீவு போன்ற அம்சங்கள், நகரும் இழுப்பறைகள் மற்றும் மடிக்கக்கூடிய மேசைப் பலகைகளை வழங்குகின்றன.
  •  
  • செங்குத்து சேமிப்பு: காந்த மசாலாப் பொருட்கள் அடுக்குகள், அலமாரிக்குக் கீழுள்ள அமைப்பான்கள், மற்றும் தொங்க
  • விடும் அமைப்பான்கள்.
  •  
  • சிறு சாதனங்களுக்கான தீர்வுகள்:பிஜியன் ஹேண்டி சாப்பர் போன்ற கச்சிதமான நறுக்கும் கருவிகள் , மற்றும் மின்சாரம் தேவைப்படாத பல்நோக்குக் கருவிகள்
  •  

ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்பம் (சிறிய இடங்கள்)

  • ஸ்மார்ட் ஹப்கள்/சைம்கள்: பாதுகாப்பு மற்றும் தானியக்கத்திற்கான TP-Link Tapo H100 போன்ற சாதனங்கள்
  •  
  • இயக்க உணர்விகள்: தானியங்கி, ஆற்றல் சேமிப்பு விளக்குகளுக்கானடாபோ T100 .
  •  
  • குரல்வழி கட்டுப்படுத்தப்படும் விளக்குகள்: இடத்தைச் சேமிக்கவும் வசதியை மேம்படுத்தவும் அலெக்ஸா / கூகுள் அசிஸ்டண்டுடன் இணைந்து செயல்படும் ஸ்மார்ட் பல்புகள்

அலங்காரம் மற்றும் காட்சி விரிவாக்கம்

  • அலங்காரக்  ண்ணாடிகள் / சட்டங்கள்: ஆழத்தைச் சேர்த்து, இடத்தின் பிரம்மாண்டம் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன.
  •  
  • தொங்கும் அலங்காரங்கள்: சுவர் ஓவியங்கள், கனவுப் பிடிப்பான்கள், மற்றும் சிறிய மிதக்கும் அடுக்குகள்

சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அல்லது குறைந்த இடவசதி உள்ளவர்களுக்கு, இந்தப் பொருட்கள் பெரும்பாலும் அமேசான் இந்தியா போன்ற முக்கிய தளங்களில் கிடைக்கின்றன

கணவன் & மனைவி: வாழ்வின் இறுதித் தோழர்கள் !

*கணவன் & மனைவி: வாழ்வின் இறுதித் தோழர்கள் - ஜி.வெங்கடேஷ்.* திருமணம் என்பது புகைப்படங்களில் புன்னகைக்கும் இரண்டு முகங்களின் கதை அல்ல. அது...