Total Pageviews

Friday, October 23, 2026

விழிப்புணர்வு ! #பாதுகாப்பு ! தங்க நகைகளை அணிந்து வெளியே செல்வதில் எவ்வளவு ஆபத்துகள் இருக்கின்றன !

 

நேரம் ஐந்து மணி இருக்கும். பள்ளிக்கூடம் முடிந்து மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் வீடு திரும்பும் நேரம் அது!

எனக்கு உட்கார இருக்கை கிடைக்காததால் பேருந்தில் நின்றுகொண்டே பயணம் செய்தேன்!

 ஒரு பேருந்து நிலையத்தில் மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் பேருந்தில் ஏறினார்கள். அப்போது ஒரு பெண் ஆசிரியரின் கழுத்தில் இருந்த பெரிய தங்கத் தாலிச் சங்கிலி என் கவனத்தை ஈர்த்தது.

இன்றைய காலகட்டத்தில் தங்க நகைகளை அணிந்து வெளியே செல்வதில் எவ்வளவு ஆபத்துகள் இருக்கின்றன என்பதை நாம் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நகை என்பது அவரவர் விருப்பம். அவரவர் உழைப்பில் வாங்கிய சொத்து. அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால், நகை அணிவதிலும் சூழ்நிலைக்கு ஏற்ற பாதுகாப்பு உணர்வு அவசியம் அல்லவா?

குறிப்பாக, தினமும் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் பெண்கள் தங்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது பெரிய  நகைகளை  அணிவது  அவரவர்  விருப்பம்.       ஆனால், அன்றாடப்  பயணங்களின் போது  அவ்வளவு  விலை   உயர்ந்த நகைகளை அணிந்துசெல்வது அவசியம்தானா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஆசிரியர்கள் என்பவர்கள் பாடம் நடத்துபவர்கள் மட்டுமல்ல மாணவர்களுக்கு நல்ல பழக்கங்களையும் வாழ்க்கை விழிப்புணர்வையும்   கற்றுக்  கொடுப்பவர்கள்.


எனவே நம்முடைய செயல்களிலும் சமூக அக்கறை இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

ஒருவேளை நகைப் பறிப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடந்துவிட்டால், பாதிக்கப்படுபவர்களின் வேதனையோடு காவல்  துறையினருக்கும் கூடுதல் வேலைப்பளு ஏற்படுகிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் காவல்துறையினர் அதிக நேரத்தையும் உழைப்பையும்   செல விட   வேண்டியிருக்கிறது.

ஒரு சிறிய முன்னெச்சரிக்கை பல பெரிய ஆபத்துகளைத் தவிர்க்க உதவும்.

நகை அணிவது தவறு என்று சொல்லவில்லை. நம்முடைய பாதுகாப்பையும், நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்.

ஆடம்பரத்தைக் காட்டிலும் பாதுகாப்பு முக்கியம்! அழகுக்காக அணியும் நகை, ஆபத்துக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பது என்னுடைய கருத்து நான் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்..🙏🏾🙏🏾🙏🏾

#விழிப்புணர்வு ! #பாதுகாப்பு

No comments:

Post a Comment

விழிப்புணர்வு ! #பாதுகாப்பு ! தங்க நகைகளை அணிந்து வெளியே செல்வதில் எவ்வளவு ஆபத்துகள் இருக்கின்றன !

  நேரம் ஐந்து மணி இருக்கும். பள்ளிக்கூடம் முடிந்து மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் வீடு திரும்பும் நேரம் அது! எனக்கு உட்கார இருக்கை கிடைக்காத...