மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த 2013-2014-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வருமான வரி வரையளவுகள் சென்ற வருடத்தின் அளவுகளிலிருந்து எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இடம்பெற்றுள்ளன. 2013-2014ம் நிதியாண்டில் உங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படலாம் என்று தோராயமாக நீங்கள் கணக்கிட உதவும் வகையில் வருமான வரி விதிப்புப் பிரிவுகள் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன.
நிதியாண்டு
Financial Year (எஃப்ஒய்) - நிதி தொடர்பான அனைத்து தகவல்களும் அறிவிக்கப்படும், ஏப்ரல் 1
முதல் மார்ச் 31 வரையிலான ஒரு வருட காலமே, நிதியாண்டு என்று
வழங்கப்படுகிறது.
வரி விதிப்பு ஆண்டு [Assessment Year] (ஏஒய்) - ஒரு குறிப்பிட்ட
நிதியாண்டின் வருமானம் கணக்கிடப்படும், அந்நிதியாண்டை தொடர்ந்து வரும்
ஆண்டை, வரி விதிப்பு ஆண்டு என்று கூறுகின்றனர். நடப்பு நிதியாண்டுக்குரிய
வரி விதிப்பு ஆண்டு 2014-2015 ஆகும்.
பெண்கள் மற்றும் வரி செலுத்தும் பொதுப் பிரிவினருக்கான வருமான வரி விதிப்புப் பிரிவுகள்:
0-லிருந்து ரூ. 2,00,000 வரை - வரி கிடையாது
ரூ. 2,00,001-லிருந்து ரூ. 5,00,000 வரை - 10% (2000 ரூபாய் தள்ளுபடி தற்போது அனுமதிக்கப்படுகிறது)
ரூ. 5,00,001-லிருந்து ரூ. 10,00,000 வரை - 20%
ரூ. 10,00,000-க்கும் மேல் - 30% (ஆண்டு வருமானம் ரூ. 1 கோடிக்கு மேல் இருப்பின் 10 சதவீதத்திற்கு மேல் வரி விதிக்கப்படும்)
மூத்த குடிமக்களுக்கான (60 வயதுக்கு மேற்பட்ட ஆனால் 80 வயதுக்குட்பட்ட வயதினர்) வருமான வரி விதிப்புப் பிரிவுகள்:
0-லிருந்து ரூ. 2,50,000 வரை - வரி கிடையாது
ரூ. 2,50,001-லிருந்து ரூ. 5,00,000 வரை - 10%
ரூ.5,00,001-லிருந்து ரூ. 10,00,000 வரை - 20%
ரூ. 10,00,000-க்கும் மேல் - 30%
மிக மூத்த குடிமக்களுக்கான (80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்) வருமான வரி விதிப்புப் பிரிவுகள்:
0-லிருந்து ரூ. 5,00,000 வரை - வரி கிடையாது
ரூ. 5,00,001-லிருந்து ரூ. 10,00,000 வரை - 20%
ரூ. 10,00,000-க்கும் மேல் - 30%
மேலும்,
ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு, சுமார் 2000
ரூபாய் வரை தள்ளுபடி அமலில் உள்ளது. வருடத்திற்கு ரூ. 1 கோடிக்கு மேல்
வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதத்திற்கு மேல் வரி விதிக்கப்படுகிறது.
இவ்விதிமுறை, இதே அளவு வரி விதிப்புடைய தனி நபர்கள், ஹெச்யூஎஃப்-கள்,
நிறுவனங்கள் ஆகிய அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்தும்.
குறிப்பு:
மேல்வரி 2%, 1%கல்வித் தீர்வைகள், மற்றும் நடுநிலை மற்றும் உயர்நிலைக் கல்வித்
தீர்வைகள் ஆகியவை வட்டி விகிதங்களில் சேர்க்கப்படவில்லை.