Total Pageviews
Thursday, July 17, 2025
எது நிஜம்?
Monday, June 30, 2025
ராஜராஜ சோழன் நான்!
20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975)
போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்...
இது எப்படி சாத்தியம்..???
ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி???
அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்..
ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்..... அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்.
வெற்றி கிடைத்தது என்றார்.
யாரந்த மாவீரன்... பேரரசன்..
என பத்திரிகையாளர் வினவ...
வேறு யாருமில்லை..
கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்...
வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும் என்றார்.
சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்.
அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்...
""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்...""
இப்பொழுதும் அங்கே சென்றால் அதை நீங்கள் காணலாம்...
சில வருடங்கள் கழித்து வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வர நேரிட்டது..
நம்மாட்களும் வழக்கம் போல இந்த காந்தி சமாதி..சக்தி ஸ்தல்.. செங்கோட்டை... அது இதுனு சுத்தி காட்ட....
அலுத்து போன அமைச்சர்..ராஜராஜன் பிறந்த ஊர், அரண்மனை,சிலை எங்கே உள்ளது என அதிகாரிகளை கேட்க
அவர்கள் ஆச்சரியத்துடன் அது தமிழ் நாடு தஞ்சாவூர்ல இருக்கு என்றனர்...
உடனே தஞ்சாவூர் போக வேண்டும் என வியட்நாம் அமைச்சர் கூற ...
படை தஞ்சாவூருக்கு பறந்தது..
அங்கு சென்று தஞ்சை பெரிய கோவிலில் அவர்கள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு...கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும்... வாஞ்சையுடனும்... தன் பையில் சேமித்து கொண்டார்.
இதைக்கண்ட பத்திரிகைகள் வழக்கம் போல வினா எழுப்பின...
இந்த மண்..வீரமும்.. வெற்றியும்.. நிறைந்த ராஜராஜன் பிறந்து வளர்ந்த மண்..
வியட்நாம் சென்றடைந்ததும் என் தேச மண்ணில் இந்த மண்ணை கலந்து விடுவேன்...
இனி வியட்நாம் மண்ணில் பல்லாயிரம் ராஜராஜ சோழன் பிறக்கட்டும் என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக..
இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் எங்கும் படிக்க நேர்ந்திருக்காது,காரணம் 400 ஆண்டுகளாக நம்மை ஆண்ட இஸ்லாமிய ஆங்கிலயே ஆட்சியாளர்களின் பெருமைகளை மட்டும் நமக்கு பள்ளி பாடப் புத்தகங்கள் மூலம் சிறுவயதிலேயே சொல்லித் தரப்பட்டு பல நூறு ஆண்டுகள் ஆண்ட நம்முடைய முன்னோர்களின் வீர வரலாறும் பெருமைகளும் மறைக்கப்பட்டு விட்டன காரணம்
.இப்படி பாடபுத்தகத்தில் படித்து வீரம் மிக்க தலைமுறை ஏற்பட்டுவிட்டால்...
என்னாவது...???
ஆனாலும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்.. நம் சந்ததிக்கு.... ....
Monday, June 23, 2025
திருமணம் விரைவாக சுமுகமகா நடை பெறுவதற்க்கான வழிமுறைகள் !
திருமணம் விரைவாக சுமுகமகா நடை பெறுவதற்க்கான வழிமுறைகள் !
தங்களது ஜாதகம் மற்றும் "சுயவிவரம் பெற்று கொண்டோம். ஒரு வாரத்தில் அல்லது 10 நாடகளில் தங்களுக்கு தகவல் / பதில் தெரிவிக்கின்றோம் என்பதை தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன். 100க்கு 10 பேர் கூட சரியாக பதில் சொல்லுவதில்லை.
தாங்கள் அனுப்பிய ஜாதகம் மற்றும் "சுயவிவரம்" குறிப்புகளை பார்த்தார்களா அல்லது பார்க்காமல் விட்டுவிடார்களா என்பது கூட தெரிவது இல்லை !
தங்களுக்கு அவர்களை பிடித்து இருந்தாலும் அல்லது அவர்களை உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் ஜாதக பொருத்தம் சரியாக இருந்தாலும் அல்லது ஜாதக பொருத்தம் சரியாக இல்லா விட் டாலும் நாசூக்காக அதனை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறேன் . அப்போது அனுப்பியவருக்கும் கிடைக்கப் பெற்றவருக்கும் ஒரு மன நிறைவு கிடைக்கும் !
வாழ்க நலமுடன்! வளமுடன்! நன்றி!
Tuesday, June 10, 2025
மனிதம் பற்றிய உளவியல் தகவல் !
மனிதம் பற்றிய உளவியல் தகவல்!
1. ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம்.
2. அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.
3. எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ 'மிஸ்' பண்றீங்களாம்.
4. குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர்.
5. நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம்.
6. உங்கள் மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம்.
7. சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம்.
8. மிக விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள் தானாம்.
9. முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் - ஒன்று, அவர்களுக்குள் காதல் இருக்கிறது. இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை.
10. இது கொஞ்சம் சங்கடமான விஷயம் - யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம்.
11. ஒருவர் ஒரு விடயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக்கூறி விவாதிப்பவரானால் அதை அவர் செய்திருக்கலாம் என்று
உளவியல் கூறுகிறது.
12. ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் (ஆரம்ப உளவியல் பிரச்சினைக்கு உள்ளாக போகின்றார்) என்று அர்த்தம்.
13. ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருதமுடியும். அவர் அந்த பதற்றத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும்.
14. ஒருவர் அதிகாலையில் எழும்புபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விடயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விடயங்களும் காத்திருக்கும்.
15. ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாரானவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
16. ஒருவர் அடிக்கடி Mobile phone யை பார்த்துக் கொண்டிருப்பது or Mobile சத்தம் *(Notification tones) கேட்டால் உடனடியாக அதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படிருக்கின்றார். என்று அர்த்தம்.
17. ஒரு மனிதன் ஆகக்குறைந்தது 6மணித்தியாளங்கள் ஆழ்நிலையில் உறங்க வேண்டும். (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்) இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது.
18. ஒருவர் அதிகமாக Negative Thoughts ( முடியாது/கிடைக்காது/இயலாது) கதைப்பவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுப்பட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். இவர்களே அதிகம் Negative Thoughts கதைப்பவராக இருப்பார்.
நம் முன்னோர்களே நமது அடையாளம்!
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது. இது இந்தியாவின் உண்மை. அடுத்த 10/15 ஆண்டுகளில் இந்தியாவின் ஒரு தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது...
-
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர...
-
Old Age Homes Madurai Christian Seva Sangam Trust kennet garden, Alagapan nagar, Paandiyan nagar Madurai Cell :098430 52242 ...
-
நான் இறந்து விட்டேனா! இறைவா எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு.. please காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித்தாளை எட...


