Total Pageviews
Tuesday, May 28, 2024
வங்கியில் செக் பவுன்ஸ் ஆகிவிட்டதா? கவலையை விடுங்க! கொடுத்த கடனை திரும்ப பெற ஈஸி வழி இருக்கு!
Tuesday, May 21, 2024
மாரடைப்பை (HEART ATTACK ) மூன்றுமணி நேரம் முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது மூளையாகும்!
மாரடைப்புக்கு மூன்றுமணி நேரம் முன் தோன்றும் அறிகுறிகள். - பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் . ♥️
♥️ *விழிபுணர்வு_பதிவு . ♥️
♥️ **பிரபல இதயநோய் மருத்துவர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவலின்படி:-
♥️ அவருக்கு மாரடைப்பு (HEART ATTACK ) இருக்கக்கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டால், அவர் நடக்க அனுமதிக்கக்கூடாது; மாடி படிக்கட்டில் ஏறவோ அல்லது இறங்கவோ அனுமதிக்கக்கூடாது; மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டுசெல்லக்கூடாது. இந்த தவறில் ஏதேனும் ஒன்றை செய்தாலும் அந்த நோயாளி உயிர் பிழைப்பது கடினம்.
♥️ மாரடைப்பை (HEART ATTACK ) மூன்றுமணி நேரம் முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது மூளையாகும். மூளை உடனே நமது உடலில், செயலில் சிறு தடுமாற்றம் ஏற்படுத்தி நம்மை முன்னெச்சரிக்கை செய்யும். இந்த முன்னெச்சரிக்கையை சக்கரை நோயாளிகள் உணர்வது கடினம்.
♥️ ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
♥️ ஆனால், அவர் நம்மிடம் தனக்கு ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடக்கூடாது.*
♥️ மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையை பார்த்தவுடன் அவர் உடல்நிலையை தெளிவாக அறிந்துகொள்ள நாம் அவரை
S T R அதாவது,
SMILE (சிரிக்க சொல்வது 😄),
TALK (பேச சொல்வது😲),
RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது🙌🏻)
இது போன்ற செயல்களை செய்யச் சொல்லவேண்டும்.
இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்! இதில் ஏதேனும் ஒன்றை அவர் சரியாகச் செய்ய வில்லை என்றாலும் பிரச்சனை பெரிதுதான்! உடனடியாக, மருத்துவ மனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
♥️ இந்த அறிகுறி தெரிந்த , 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் பெரும்பாலும் உயிர் இழப்பை தடுத்து விடலாம், என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
♥️ இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.
♥️ அவருடை 👅நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,
அவர் தனது நாக்கை👅 நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.
♥️ இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.
♥️ மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம் என்றும் சொல்கிறார்!!
♥️ நண்பர்கள் இந்தப் பதிவை ஷேர் செய்து அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்....
மானுடம் காப்போம் மனிதம் வெல்லும்
அன்புடன் உங்கள் ஆஸ்கார் முத்து-தங்கம் ஸ்ரீதர் மாநில கெளரவ ஆலோசகர் தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு
Thursday, May 2, 2024
தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !
தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !
நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்களின் கனிவான கவனத்திற்கு சிறு பதிவு !
தமிழ் நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்கள்:- 37.
நகராட்சிகள்:-148.
பஞ்சாயத்து யூனியன்கள்:-385.
டவுன் பஞ்சாயத்துகள்:- 528.
கிராம பஞ்சாயத்துகள்:- 12,618.
ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் குறைந்தது 5 குக்கிராமங்கள் இருக்கும்.
அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும்
"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டம்"
நடைமுறையில் உள்ளது.
இந்த 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணிபுரிவோர் மூலம், மாதம் ஒரு செடி மட்டுமே நட்டு பராமரித்து வந்தால் போதும் !
நம் கிராமங்கள் பசுமையான கிராமங்களாக மாறிவிடும். !
For example :-
12,618 கிராம பஞ்சாயத்துகளில்,100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் 50 பேர் பணிபுரிகிறார்கள் எனில்:-12,618×50= 6,30,900 நபர்கள் மாதம் ஒரு செடி நடவு எனில் 6,30,900 எனில் 12 மாதங்களுக்கு 6,30,900×12= 75,70,800. செடிகள்.
கற்பனை செய்ய முடியாத எண்ணிக்கை !
தமிழ்நாட்டை பொறுத்த வரை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் மழைக்காலங்கள் !
இந்த காலங்களில் செடி நடவு செய்து ஒரு வருட காலம் பராமரித்தால் போதும் !
பின்னால் மரங்கள் வேர்களில் சேமித்து வைத்துள்ள ஈரத்தன்மையால் தானாக வளர்ந்து விடும்.
இதனால் நிலத்தடி நீர் உயர்ந்து, நமக்கும்,கால்நடைகளுக்கும் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம்.
100 நாள் வேலைவாய்ப்புத்திட்டத்தில் செடிகள் நடவு செய்ய தேவைப்படும் செடிகள், வனத்துறை, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகியோர் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
இந்த பதிவை காணும் மேற்குறிப்பிட்ட மூன்று துறை அலுவலர்கள், கிராமங்களில் நடைபெறும் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்ட பணியாளர்களை பயன்படுத்தி,(ஒரு பஞ்சாயத்திற்கு, வருடத்திற்கு 500 செடிகள் எனக் கணக்கிட்டு)
கிராமங்களில் மரம் வளர்ப்பு குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்து, உண்மை நிலையை தெரிவித்து, ஒப்புதல் பெற்றால்...
இத்திட்டம் நூறு சதவிகிதம் வெற்றி பெற்று, நம் நாட்டை வறட்சியிலிருந்து காப்பாற்றலாம் !
இந்தப் பதிவினை படிக்கும் ஊடக நண்பர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் இவற்றை அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
VSSubramaniyan, JUNGLE -NGO, Sathyamangalam, Erode Dist.
***
Saturday, April 27, 2024
எது கெடும் ? கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......
எது கெடும் ?
அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......
(01) பாராத பயிரும் கெடும்.
(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
(03) கேளாத கடனும் கெடும்.
(04) கேட்கும்போது உறவு கெடும்.
(05) தேடாத செல்வம் கெடும்.
(06) தெகிட்டினால் விருந்து கெடும்.
(07) ஓதாத கல்வி கெடும்.
(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
(09) சேராத உறவும் கெடும்.
(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
(11) நாடாத நட்பும் கெடும்.
(12) நயமில்லா சொல்லும் கெடும்.
(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
(15) பிரிவால் இன்பம் கெடும்.
(16) பணத்தால் அமைதி கெடும்.
(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
(18) சிந்திக்காத செயலும் கெடும்.
(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
(20) சுயமில்லா வேலை கெடும்.
(21) மோகித்தால் முறைமை கெடும்.
(22) முறையற்ற உறவும் கெடும்.
(23) அச்சத்தால் வீரம் கெடும்.
(24) அறியாமையால் முடிவு கெடும்.
(25) உழுவாத நிலமும் கெடும்.
(26)உழைக்காத உடலும் கெடும்.
(27) இறைக்காத கிணறும் கெடும்.
(28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
(29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
(30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
(31) தோகையினால் துறவு கெடும்.
(32) துணையில்லா வாழ்வு கெடும்.
(33) ஓய்வில்லா முதுமை கெடும்.
(34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
(35) அளவில்லா ஆசை கெடும்.
(36) அச்சப்படும் கோழை கெடும்.
(37) இலக்கில்லா பயணம் கெடும்.
(38) இச்சையினால் உள்ளம் கெடும்.
(39) உண்மையில்லா காதல் கெடும்.
(40) உணர்வில்லாத இனமும் கெடும்.
(41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.
(42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
(43) தூண்டாத திரியும் கெடும்.
(44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
(45) காய்க்காத மரமும் கெடும்.
(46) காடழிந்தால் மழையும் கெடும்.
(47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
(48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
(49) வசிக்காத வீடும் கெடும்.
(50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்.
(51) குளிக்காத மேனி கெடும்.
(52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.
(53) பொய்யான அழகும் கெடும்.
(54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
(55) துடிப்பில்லா இளமை கெடும்.
(56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
(57) தூங்காத இரவு கெடும்.
(58) தூங்கினால் பகலும் கெடும்.
(59) கவனமில்லா செயலும் கெடும்.
(60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு...✍🏼🌹
Thursday, April 25, 2024
அரசு பள்ளியில் படிப்போம் ! 👍 ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம் !
வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள்.
கடினமாக உழைத்து சம்பாதித்த பெரும் பணத்தை அறியாமையால் வீணடிப்பது சரி தானா?
CBSC பள்ளி அல்லது Matriculation பள்ளி போன்ற
தனியார் பள்ளியில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறீர்களே அது எதற்கு?
நல்ல வேலைக்குப் போகவா?
ஆங்கிலம் சரளமாகப் பேசவா?
குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?
ஏன்?
எதற்கு? ....என்று சிந்தித்ததுண்டா?
Pre kg 25,000 இல் தொடங்குகிறது
Lkg 40,000
Ukg 50,000
1st 60,000
2nd 70,000
3rd 80,000
4th 90,000
5th 1,00,000
6to8 1,20,000
9to10. 1,50,000
11to12 2,00,000 இலட்சம்....
ஆக மொத்தம்
9,85,000 ரூபாய்.
இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்பு தான்.
நகரத்தில் இருக்கின்ற பெரிய பள்ளிகளில் 20 இலட்சத்தில் இருந்து 40 இலட்சம் வரை வாங்குறாங்க.
சரி!
இதெல்லாம் இருக்கட்டும், இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?
உங்கள் பிள்ளை படிக்கும் பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளியில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும்.
அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்ய முடியும் உங்களால்.?
ஒன்றை நினைவில் வையுங்கள்..... உங்கள் பிள்ளை 1000 மதிப்பெண்களுக்குக் கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள் இவ்வளவு பணம் செலவழித்து?
தமிழகத்தில் 9 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அத்தனை பேரும் மருத்துவராகவோ, பொறியாளராகவோ வர முடியுமா?
சரி!
இப்போது அவர்களால் மருத்துவராகவோ, பொறியாளராகவோ படிக்க இயவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்கு சேர்ப்பீர்கள்?
CBSE கல்லூரியிலா?
அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே !?
அடுத்த உங்களின் தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தான், இல்லையா?
இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE,
மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா?
இல்லை!
இல்லவேஇல்லை!
இப்போது உங்கள் பிள்ளைகளோடு, அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களும் சேர்ந்தே படிப்பார்கள் என்பதை உணருங்கள்.?
பத்து இலட்சத்திற்கு மேல் செலவளித்துப் படிக்க வைத்த உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியைப் பணமே செலவளிக்காமல் அரசுப்பள்ளி மாணவர்கள் படிக்கவில்லையா ?
இப்போது சொல்லுங்கள் காசு பணத்தைக் கொட்டி, கடைசியில் ஏமாளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா?
உங்கள் பிள்ளை சாதனையாளனா?
இல்லை.. பணமே இல்லாமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா?
உங்களுக்குத் தெரியுமா.....
TNPSC தேர்வில் தேர்வாகும் 99 விழுக்காட்டினர் அரசுப்பள்ளியில், தமிழில் படித்தவர்கள் என்று?
TET தேர்வில் வெற்றி பெற்று அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் என்று?
இன்றைக்கு இருக்கும் அரசு ஊழியர்கள் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று?
ஏன் நீங்கள் கூட அரசுப்பள்ளியில் படித்த அரசு ஊழியர்களாக இருக்கலாம்?
உங்களால் ஆணித்தரமாக எடுத்துக் கூற முடியுமா... CBSE , மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று?
அந்தப் பள்ளிகளைப் பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்கலாம் ?
இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள் அன்புப் பெற்றோர்களே?
அரசுப்பள்ளியை வெறுக்கும் நீங்கள், அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்?
*வாருங்கள் குரல் கொடுப்போம் .....
👍ஆங்கில வழியில் கல்வி என்ற மோகம் தற்போது அரசு பள்ளியிலும் ஆங்கில வழி கல்வி உள்ளது
👍 வெட்டி கௌரவத்தை விடுவோம்
👍 அரசு
பள்ளியில் படிப்போம்
👍 ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம்
👍 அரசின் அனைத்து சலுகைகளையும் பெறுவோம்
👍 இதனால்
நம் செலவுகள் குறைக்கப்பட்டு, நம் எதிர்காலத்திற்காகபணம் சேமிக்கப்படும்.
சிந்திப்போம்! மற்றவரின் சிந்தனையைத் தூண்டுவோம்!
🌱🌱🌱🌱🌱🌱🌱🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌴🌴🌴🌴🎋🎋🎋🎋🎋
சூரிய வெப்ப அலைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மரம் நடுவோம் இயற்கையை காப்போம்
இன்னும் பத்து வருடத்தில் வெயில் இப்போ உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும் அப்போ நம்மால் தாங்க இயலாது குழந்தைகள் காப்பாற்றுவதற்கு சிரமம் !
இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் வெயிலால் கோடை கொப்பலம் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது,
நம்ம வீட்டை சுற்றி இடமிருப்பின் முடிந்த அளவிற்கு மரங்களை நடுங்கள்,
மரம் நடுவோம் இயற்கையை காப்போம்
வரும் ஆவணி மாதம் மழை காலம் துவங்கும். அப்போது தமிழகத்தில் 10 கோடி மர கன்றுகள் நட இப்போதே திட்டமிடுவோம்
மர கன்றுகள் உற்பத்தியாளர்கள்,
வன துறை,
பள்ளி தாளாளர்கள்,
உயர் பதவிகளில் இருப்போர்,
பிரபலங்கள்,
ஆன்மீக தலைவர்கள்,
அனைத்து மதங்களின் குருமார்கள்,
கிராம தலைவர்கள்,
ஊர் தலைவர்கள்,
அனைத்து கட்சி தலைவர்கள் ஒன்று கூடி செயல்படுவோம்.
அதற்கு இப்போதிருந்தே தயார் ஆகி கொள்ளுங்கள். உங்களுக்கான ஒரு குழுவை இப்போதே உருவாக்கி கொள்ளுங்கள்
1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு சாதிக்க முடியும். ஒவ்வொரு மர கன்றிற்கும் அடுத்த 1 வருடம் தினமும் 1 லிட்டர் நீர் விட்டால் போதும்.
இதே போல் சில வருடங்கள் செய்தால், 2030 ககுள் தமிழகமும் குளிர்ந்து போகும்
அவரவர் ஊர்களில் சிறு சிறு குழுக்களாக இன்றே ஆயத்தம் ஆகுங்கள். கிராமங்களில் இன்னும் அதிக மர கன்றுகள் நடுவதற்கு திட்டமிடுங்கள்.
இதற்கான வாட்ஸ்அப் குழுக்கள் அந்தந்த ஊர்களில், கிராமங்களில் இன்றே துவங்குங்கள்.
மர கன்றுகள் நடுங்கள்
அல்லது மர கன்றுகள் வாங்கி கொடுங்கள் அல்லது மர கன்றுகள் நட உதவுங்கள்.
மர கன்றுகள் தேவைக்கு உங்களுக்கு அருகில் உள்ள நாற்று பண்ணைகளில், நர்சரிகளில் இப்போதே முன் பதிவு செய்யுங்கள்
பொது இடங்களில் -
1,புங்கன் மரம்
2,வெப்ப மரம்
3,ஆவி மரம்
4,அரச மரம்
5,குருவி பழம் என்ற சர்க்கரை பழம், லட்டு பழம்
இவைகளை வளர்ந்த கன்றுகளாக பார்த்து வாங்கி நடுவது நன்று. இதில் புங்கன் மரத்தை ஆடு மாடுகள் கடிக்காது
நீர் வழி தடங்கள் அருகில்
1,பூவரசு மரம்
2,பனை மரம்
பாதுகாப்பு உள்ள வீட்டு அருகில் உள்ள இடங்களில் அவரவர் விருப்ப மர கன்றுகள் நடலாம்.
1,கறிவேப்பிலை
2,லட்ச கொட்டை கீரை
3,தேக்கு
4,நாட்டு மா மரம்
5,நாட்டு பலா
6,நாட்டு அத்தி
7,குமிழ்
8,மகா கனி
9,மலை வேம்பு
போன்ற மரங்கள் நடலாம்
வழிபாட்டு தலங்கள் -
1,மர மல்லி
2,மகிழம் மரம்
3,மனோரஞ்சிதம்
4,பாரிஜாதம்
5,புன்னை மரம்
6,செண்பக மரம்
7,மருதாணி போன்றவற்றை நடலாம்
2030 இல் பச்சை பசேல் என்ற தமிழகம் உருவாக்குவோம்
இனி வரும் காலங்களில் உண்டாக இருக்கும் கோடை கால கடும் சூரிய வெப்ப அலைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.
மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். விழிப்புணர்வு செய்யுங்கள்.
மர கன்றுகள் நடுவதற்கு ஆவணி மாதத்தில் முதல் மழை பெய்ததும் 1 நாள் பொது விடுமுறை அறிவிக்க வேண்டுகிறோம்
வெப்ப அலைகளுக்கேதிரான ஒரு போர் போல் தான் இதுவும்
ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்
நன்றே செய்வோம்
அதனை இன்றே துவங்குவோம்
பிடித்திருந்தால் காப்பி செய்து பதிவிட்டு இயற்கையை காக்க உதவுங்கள்...
🌱🌱🌱🌱🌱🌱🌱🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌴🌴🌴🌴🎋🎋🎋🎋🎋
Wednesday, April 24, 2024
முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய போறீங்களா!ஒரு நிமிடம் இதை படியுங்கள்!
எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு.
அந்த சமயத்தில் அங்கு வந்த ஒரு நன்கொடையாளர், தன் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வேளைக்கு மட்டும் அன்னதானம் அளிக்க விரும்புவதாகக் கூறினார்.
மேலும் "குறித்தநாளில் பகல் 12 மணிக்கு வாழைப்பழம், Sweet, பீடா, வடை, பாயாசத்தோடு சாப்பாடு முதியோர் இல்லத்துக்கு வந்துவிடும்.
உணப்பொருட்களை கொண்டு வந்த பாத்திரங்களை திரும்பவும் ஓட்டலுக்கு கொடுக்கும் போது மிகவும் சுத்தமாக துலக்கி கொடுக்கவேண்டும்." என்றார்.
அவர் குறிப்பிட்ட அந்த ஓட்டல் மிகவும் காஸ்ட்லி.
ஒரு Special Meals க்கு ரூ. 150/- வாங்குகிறார்கள்.
அவர் போனதும் அந்த முதியோர் இல்ல நிர்வாகி சில விஷயங்களை சொன்னார்.
பெரும்பாலான முதியோர் இல்லங்களில் சொந்தமாக சமையல் கூடமும், சமைப்பதற்க்கு ஆட்களும் உண்டு.
முதியோர்களின் உடலுக்கு ஏற்றவகையில் எளிதில் ஜீரணமாகும் மற்றும் எந்த அலர்ஜியும் ஏற்ப்படுத்தாத உணவைத் தான் இங்கு சமைக்கிறோம்.
நம் மக்களின் ஆர்வக்கோளாறு மிகுதியால், புண்ணியம் சம்பாரிக்கும் வெறியில் ஒரு நல்லநாள், விஷேசம் என்றால் அன்னதானம் செய்கிறேன் என்கின்ற பெயரில் புரோட்டா, சில்லி பரோட்டா, கொத்து புரோட்டா, தந்தூரி உணவுகள், Sweet, நூடுல்ஸ், Fried Rice என்று வாங்கி அன்னதான மளிக்க வந்து விடுகிறார்கள். (70 வயது பாட்டிக்கு இங்கு சாம்பாரில் போடும் பருப்பே ஜீரணம் ஆகாமல் Acidity பிரச்சனை ஆகிறது.)
குழைந்து போன சாதமும், இட்லியை சாம்பாரில் உறப்போட்டு கரைத்து குடிக்கும் பெரியவர்களுக்கு புரோட்டாவும், சிக்கன் குருமாவும் குடுத்தால் என்ன ஆகும்❓
குறிப்பாக நாம் வழக்கமாக ஓட்டலில் சாப்பிடும் சாம்பார், வத்தக்குழம்பே இவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது.
ஓட்டல் சாப்பாடு எல்லாம் 40 வயசு வரை உள்ள ஆட்களுக்குத்தான்.
இவ்வளவு உப்பும், காரமும் தொடர்ந்து 2 நாள் சாப்பிட்டால் 4-5 நாட்களுக்கு இந்த முதியோர்கள் எதுவுமே சாப்பிடமுடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.
போன மாதமெல்லாம் ஒருத்தர் சாப்பாட்டுடன் ஐஸ்கிரீமை நல்ல குளிர்காலத்தில் வந்து முதியோர் இல்லத்தில் குடுத்துவிட்டு போகிறார். (இதற்க்கும் அவர் ஒரு Software கம்பெனியின் மேலாளர். 1 இலட்சத்துக்கும் மேல் மாத சம்பளம் வாங்குகிறார்.)
ஆரம்பகாலங்களில் இப்படி அன்னதானம் செய்ய வந்தவர்களிடம், எங்களிடம் பணமாக கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிப் பார்த்தோம்...
சிலர் மளிகை பொருட்களாக வாங்கிக்கொடுத்தார்கள்.
ஆனால் பலரும் அவர்கள் கண்முன்னே எல்லாம் நடக்கவேண்டும், அவர்கள் கையால் 4 பேருக்கு உணவு பரிமாற வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். (பணமாக நேரடியாக கொடுக்கவோ, அல்லது மளிகை பொருட்களை நாங்கள் வெளியில் விற்று விடுவோம் என்று தவறாக எண்ணி பலரும் முன்வருவதில்லை.)
ஒரு முதியோர் இல்லத்தில் சாப்பாட்டு செலவுக்கு நிகராக மருத்துவ செலவு உண்டு...
கட்டணமே இல்லாமல் ஒரு சேவை போல் இங்குள்ள முதியோர்களுக்கு அடிப்படை பரிசோதனைகள் செய்ய சில நல்ல மருத்துவர்கள் இருப்பதால்தான் கொஞ்சமாவது சமாளிக்கமுடிகிறது...
ஓட்டலில் ஒரு நபருக்கு ரூ. 100/- க்கு மேல் ஒரு சாப்பாட்டுக்கு செலவு ஆகிறது.
ஆனால் நாங்களே இங்கு சமைக்கும் போது ஒரு நபருக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கு அதிகபட்சம் 45/- ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது.
அதுவும் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத முதியோர்களுக்கான சாப்பாடு.
ஒருவர் முதியோர் இல்லத்துக்கு கொடுக்கும் பணம் என்பது பல செலவுகளுக்கு உதவும் மருத்துவம், போர்வை, சோப்பு, எண்ணெய், பல்பொடி, கிருமிநாசினி, உடை, கட்டிடம் / தோட்ட பராமரிப்பு, ஊழியர்கள் சம்பளம், முடி திருத்துவோர் சம்பளம்... என்று.
ஒருவன் பசியில் இருப்பதை விட கொடுமையான விஷயம், நாம் குடுத்த உணவு செரிக்காமல் / சாப்பிட்ட உணவு வெளியெற முடியாமல் அவஸ்தை படுவதுதான்...
ஆர்வக் கோளாரில் புண்ணியம் சம்பாரிக்க ஆசைப்பட்டு, பெரும்பாவத்தை தேடாதீர்கள்.
நம்பிக்கை தான் வாழ்க்கை•
நாம் செய்யும் உதவி மற்றவருக்கு பயனுள்ளதாக அமையட்டும்!
வாழ்க்கையில் உன் சாதனை என்பது !
வாழ்க்கையில் உன் சாதனை என்பது ! 4 வயதில் உன் சாதனை என்பது உன் கட்டிலில் நீ சிறுநீர் கழிக்காமல் இருக்கப் பழகிக்கொள்வதாகும்! 8 வயதில் உன...
-
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர...
-
பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். ஆபத்தான உயிரினமான பாம்புகளுக்கு புதர்செடிகள் மிகவும் பிடித்தமானவை. வீட்டுத் தோட்டங்களி...
-
பெண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரம் பெண் நட்சத்திரத்திரத்திற்கான ஆண் நட்சத்திரங்கள் எவை பொருந்தும் என இங்கு ...