Total Pageviews
Wednesday, April 29, 2026
கடைசி_சவாரி ஆட்டோ டிரைவர் பாண்டி !
Monday, April 27, 2026
"இறந்துபோனவங்க நிச்சயமா கடவுளுக்குச் சமம்தான்! 'ஸ்ரீ மாருதி காபி பார்' ! ஹரி !
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் 'ஸ்ரீ மாருதி காபி பார்' என்ற பெயரில் ஒரு கடை நடத்தி வந்து கொண்டிருந்த ஹரி. ஒரு காலை வேளை.
பரபரப்பான கூட்டம். வந்தவர்களுக்கு தேனீர், காப்பி என்று தன் கையாலேயே ஆற்றி விரைந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஹரி.
ஒரு வயதான அம்மா தயங்கித் தயங்கி ஹரியை நெருங்கி அவர் டீ ஆற்றிக் கொண்டிருந்த மேஜை மீது ஒரு ஜோடிக் கொலுசுகளை வைத்தார்.
"என்னம்மா கொலுசை வைக்கிறீங்க?" என்று டீ ஆற்றுவதை நிறுத்திவிட்டுக் கேட்டார் ஹரி."தம்பி..எதிரே உள்ள சவக்கிடங்கில் மகன் உடல் கிடக்கிறது. அடக்கம் செய்ய காசு இல்ல.
அதான் கொலுசை அடகு வைத்து.."என்று இழுக்கிறார் அந்த வயதான அம்மா.
"சவ அடக்கம் செய்ய இந்தக் கொலுசை அடகு வைத்து அதில் கிடைக்கும் பணத்தில் எதுவும் செய்யமுடியாதே அம்மா..இந்த நேரத்தில் அடகுக் கடையும் திறந்து இருக்காதே" என்ற ஹரி, டீக் கடையில் வேலை பார்க்கும் ஒருவரிடம் கடையை ஒப்படைத்து விட்டு கிளம்பிவிட்டார்...
'எப்படியும் அந்த வயதான தாய்க்கு உதவி விட வேண்டும்' என்ற வைராக்கியம் அவர் மனதில் குடிகொண்ட நாள் அது!
இந்த சம்பவம் ஹரியை பாதிக்க, அதன் விளைவு? இன்று நேதாஜி ஆம்புலன்ஸ் என்ற பெயரில் 6 ஆம்புலன்ஸ்களை அவர் வாங்கி, இயக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
ஹரியின் சொந்த ஊர் திருச்சி. மணமானதும் மனைவி ஜெயந்தி ஊரான மதுரை வந்து, ஸ்ரீ மாருதி காபி பார் என்ற பெயரில் ஒரு டீக்கடையை ராஜாஜி அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் நடத்த ஆரம்பித்தார்.
அங்கே தினசரி வரும் பலர் பணமில்லாத ஏழைகளாக இருந்தார்கள். அடக்கம் செய்யக் காசில்லாமல் அவர்கள் அங்கிருந்து வீட்டுக்குச் சவத்தை எடுத்துச் செல்லக்கூட முடியாமல் தவித்த தவிப்பு ஹரி மனதை உலுக்கியது. இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தன் மனைவியிடம் ஆலோசனை செய்தார்.
இருவரும் ஆம்புலன்ஸ் வாங்கி இப்படிப்பட்ட ஏழைகளுக்கு உதவலாம் என்று முடிவு செய்தார்கள். பணம்?
இருந்த சொற்ப நிலத்தை விற்று அதில் ஆம்புலன்ஸ்களை வாங்கினார்கள்.
இப்போது ஆம்புலன்ஸ்கள் ஆறும் மதுரை நகரை சுற்றிச் சுற்றி வருகிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஹரிக்குப் பிடித்தத் தலைவர். எனவே ஆம்புலன்ஸுக்கு நேதாஜி என்ற பெயரைச் சூட்டி இருக்கிறார்.
பணம் இல்லாதவர்களின் சடலங்களை ஏற்றிச் செல்வதோடு மேற்கொண்டு அவர்களுக்கு ஆகும் செலவுகளுக்கும் பணம் கொடுத்து உதவி வருகிறார் ஹரி!
108 இலவச ஆம்புலன்ஸ் சேவை தமிழகத்தில் அறிமுகம் ஆகும் முன்பே, மதுரையில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை முதலில் ஆரம்பித்தவர் ஹரி.
அசாதாரண நிலையில் மரணம் நிகழல் மற்றும் சாலை விபத்து எங்கு நடந்தாலும் உடனே அந்த இடத்திற்கு விரைந்து செல்லும் ஹரியின் ஆம்புலன்ஸ், உடனே ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்க்கிறது.
"இறந்துபோனவங்க நிச்சயமா கடவுளுக்குச் சமம்தான்! அதனாலதான், இன்னைக்கும் பிணத்தை தூக்குறதுக்கு முன்னாடி, அதைத் தொட்டுக் கும்பிட்டுட்டு நாங்க தூக்குறோம்!"என்று சொல்லும் 48 வயது ஹரி, தானே களத்தில் இறங்கி கூச்சப்படாமல், அச்சப்படாமல் பிணங்களைத் தூக்கி இறக்க அனைவருக்கும் உதவி செய்கிறார்.
உடல் வாங்கக் காத்திருக்கும் உறவுகளின் களைப்பைப் போக்க தேநீர் விற்பனை செய்பவர், பிணவறையில் கூறுபோட்டு எடுத்துச் செல்லப்படும் உடல்களை அலங்கரிக்க காடாத்துணி, பஞ்சு, சந்தனம், மாலை, ஊதுவத்தி உள்ளிட்டவைகளையும் கடை நிறைய அடுக்கியிருக்கிறார். 'பணம் கொடுத்தால் வசதி படைத்தவர்களுக்குப் பொருள்!
வசதி இல்லாதவர்களுக்கு, அவர்கள் கேட்பதற்கு முன்னர் இலவசமாகப் பொருள்!' இதுதான் இவரது கொள்கை!
" 'பிணத்துக்கான பொருளுக்கு பணம் கேட்குறது தப்போ?'ன்னு, எனக்குள்ளே ஏற்பட்ட ஒரு குற்ற உணர்ச்சிதான் நான் செய்ற இந்த உதவிகளுக்கான தொடக்கம்!" எளிமையாய் பேசும் ஹரி, சத்தமில்லாமல் இன்னொரு காரியமும் செய்து வருகிறார்.
அனாதைப் பிணங்களை எடுத்து வந்து, முறையாக பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி, நல்லடக்கம் செய்வதை கடந்த 19 வருடங்களாகத் தொடர்கிறார்.
தென்மாவட்டங்களில் எங்கு விபத்து என்றாலும், காவல்துறையிடம் இருந்து உடனடியாக ஹரிக்குத்தான் தகவல் வருகிறது. உடல் எந்த நிலையில் இருந்தாலும், சற்றும் அருவருப்பு கொள்ளாமல் தொட்டுத் தூக்குவது இவரது வழக்கம்! இதுவரை, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை இப்படி மீட்டிருக்கிறார்.
" 'பிணம் தூக்குறது ஒரு வேலையா?' என்று உறவுக்காரங்க எல்லாரும் என்கிட்டே இருந்து ஒதுங்கிட்டாங்க. இதுல பெருசா எதுவும் எனக்கு வருத்தமில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும், நாம சேர்த்து வைக்கிற புண்ணியங்கள்தான், வாழ்ற நாட்களை சந்தோஷமாக்கும். எல்லாத்துக்கும் மேல, சவத்துக்கு செய்யும் தொண்டு, சிவனுக்கு செய்யும் தொண்டு என்று சொல்லும் ஹரி.....
Saturday, April 25, 2026
மனிதன் உயிருடன் இருக்கும் வரை 5 % இன்பம் 95 % வேதனையுடன் தான் வாழ முடிகிறது . ஏன் ? எப்படி ?
மனிதன் உயிருடன் இருக்கும் வரை 5 % இன்பம் 95 % வேதனையுடன் தான் வாழ முடிகிறது . ஏன் ? எப்படி ?
மனித வாழ்க்கை பெரும்பாலும் இன்பத்தை விடத் துன்பம் (வேதனை) அதிகமாகக் கொண்டதாகவே உணரப்படுகிறது. இது "5% இன்பம், 95% வேதனை" என்ற விகிதத்தில் இல்லாவிட்டாலும், துன்பம் அதிக காலம் நீடிப்பதாகவும், இன்பம் தற்காலிகமானது என்றும் உணர்வதற்குப் பல உளவியல் மற்றும் தத்துவ காரணங்கள் உள்ளன.
நித்தியமற்ற இன்பம் (Fleeting Pleasure): மனிதன் அனுபவிக்கும் பெரும்பாலான இன்பங்கள் தற்காலிகமானவை. ஒரு மகிழ்ச்சியான தருணம் முடிந்தவுடன், அந்த இன்பம் மறைந்துவிடுகிறது, ஆனால் வேதனை அல்லது ஏக்கத்தின் உணர்வு நீண்ட காலம் நிலைத்திருக்கும்.
அதிகப்படியான ஆசைகள் (Constant Desires): பௌத்த தத்துவம் கூறுவது போல், ஆசைகளே துன்பத்திற்கு காரணம். ஒரு ஆசை நிறைவேறினால், அடுத்த ஆசை பிறக்கிறது. இந்த இடைவிடாத ஆசை, நிறைவேறாதபோது வேதனையாக மாறுகிறது.
எதிர்பார்ப்புகள் vs யதார்த்தம் : நாம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அப்படி இருப்பதில்லை. எதிர்பார்ப்பு பொய்யாகும் போதும், மனிதர்கள் மாறும் போது ஏற்படும் ஏமாற்றம் வேதனையைத் தருகிறது.
பயணம், இலக்கு அல்ல: வெற்றியை அடைவதில் உள்ள போராட்டமே 95% ஆகவும், அடைந்தவுடன் கிடைக்கும் மகிழ்ச்சி 5% ஆகவும் அமைகிறது.
உடலியல் மற்றும் மன வேதனைகள்: பிறப்பு, மூப்பு, நோய், மரணம், நேசிப்பவர்களைப் பிரிதல் போன்ற இயற்கை நிகழ்வுகள் தவிர்க்க முடியாத வேதனைகளைத் தருகின்றன.
உளவியல் காரணம்: மனித மூளை எப்போதும் ஒரு விஷயத்தில் திருப்தி அடைவதில்லை. அது எப்போதும் "இன்னும் வேண்டும்" என்று தேடுவதால், இருக்கும் மகிழ்ச்சியை முழுமையாக உணர்வதில்லை.
சுருக்கமாகச் சொன்னால், மனிதனின் "பற்றுதல்" (Attachment) மற்றும் "எதிர்பார்ப்பு" (Expectation) தான் இந்த 95% வேதனைக்கு அடிப்படையான காரணங்களாகக் கருதப்படுகிறது.
குறிப்பு: இது ஒரு பொதுவான தத்துவக் பார்வை. வாழ்க்கை என்பது இன்ப துன்பங்களின் கலவை, அதை அணுகும் முறையைப் பொறுத்து இந்த சதவீதம் மாறலாம்.
Friday, April 24, 2026
உயிர் உடலை விட்டு பிரியும் 11 வாசல்கள்!
அவ்வளவுதான் இப்போது சொல்லுங்கள் உயிர் என்பது என்ன. இப்போது நீங்கள் உயிரோட இருக்கிறீர்கள். ஆகவே உங்கள் உயிர் உங்கள் உடம்பில் எங்கே இருக்கிறது.
மனிதன் மரணிப்பது என்பது சுவாசம் இல்லாத காரணத்தை வைத்து தான் உறுதி செய்யப்படுகிறது. ஆகவே சுவாசம் முதலில் நின்றவுடன் உடலுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவானது குறைகிறது. இதன் காரணமாக உறுப்புகளுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதில்லை.
இதயத்தின் வேலையானது ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்துவது மட்டுமல்லாமல் ரத்தத்தோடு சேர்த்து ஆக்சிஜனையும் உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அனுப்புகிறது. இவ்வாறு ஆக்சிஜன் குறையும் பட்சத்தில் உறுப்புகளின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. எனவே முதலில் நுரையீரல் பாதிப்பு அடையும் பின்னர் இதன் மூலம் ரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் செல்ல முடியாத காரணத்தினால் பின் ஒவ்வொரு உறுப்பாக செயல் இழக்க ஆரம்பிக்கும் மூளையின் செயல்பாட்டிற்கு முக்கியமாக ஆக்சிஜன் அவசியமாகிறது.
மூளையில் ஆக்சிஜனின் பற்றாக்குறை ஏற்படும்போது மூளையின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக மற்ற உறுப்புகளுக்கு கட்டளைகளை தொடர்ந்து அனுப்ப முடிவதில்லை.
மேலும் மற்ற உறுப்புகள் ஒவ்வொன்றும் ஆக்சிஜனை எரிசக்தியாக பயன்படுத்திக் கொள்வதால் அவைகளின் செயல்பாடுகளும் முடிவை எட்டுகின்றன. எனவே முதலில் நுரையீரல், மூளை, இதயம் போன்றவை செயல் இழந்த உடன் உடலின் ஒவ்வொரு உறுப்புகளாக தொடர்ந்து கல்லீரல் கணையம் போன்ற உறுப்புகளும் மேலும் உள் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்குகிறது.
1. பழி பாவம் செய்தவர்களுக்கு மலத்துடன் மல வாசல் வழியாக உயிர் பிரியும்.
இவை நேரே நரகத்திற்கு செல்லும் திரும்ப நாளாகும் வந்தாலும் நல்ல பிறவி கிடையாது.
2. பாவஞ் செய்தவர்களுக்கு நீர்வாயில் வழியாக உயிர் பிரியும். இந்த உயிர்கள் மறுபிறப்பில் காமியாய் திரியும்.
3. பாவம் நிறையவும், புண்ணியம் குறைவாகவும் செய்த உயிர்கள் நாபி வழியே பிரியும்.
4. பாவம் புண்ணியம் சமமாக செய்தவர்களின் உயிர்கள் வாய் வழியாகப் பிரியும்.
5, 6. இடது, வலது நாசிகள் வழிய தனித்தனியாக பிரிந்த உயிர்கள் அதிக பாவம் செய்யாத உயிர்கள்.
7, 8. இடது, வலது செவிகள் வழியாக பிரிந்த உயிர்கள் மிகவும் சிறிதளவே பாவம் செய்த உயிர்கள். இவை மறுபிறப்பில் கேள்விச் செல்வம் உடையதாக பிறக்கும். முக்தி தேடி முயற்சிக்கும்.
9,10. இடது, வலது கண்கள் வழியாக பிரிந்த உயிர்கள் மிகவும் புண்ணியம் செய்த உயிர்கள். இவை மறுபிறப்பில் கல்வி-செல்வம் முதலியன பெற்று உயர்வுடன் வாழும். இவைகளும் முக்தி தேடி முயற்சிக்கும். பழி பாவத்தைக் கண்டு அஞ்சி வாழும். குருபக்தி கடவுள் பக்தியுடன் வாழும்.
11. சிவயோக நெறியில் இருக்கும் உயிர்கள் பிராரப்த கர்மங்களை தனக்கு கொடுக்கப்பட்ட உடல் கொண்டு கழித்து, பல காலங்கலாகப் பழகிய யோகப் பயிற்சியைின் துணை கொண்டு சுழுமுனை நாடிவழியாக பிராணனை மேல் எழுப்பி, பிரமாந்திர வழியை திறந்து கபால வழியாக ஔிமயமாக உச்சி வாசலூடாக செல்லும். அவ்வாறு சென்ற உயிர் மீண்டும் பிறவாது.
- அகத்தியரின் கர்ம காண்டம் நூலில் இருந்து.
நன்றி
Wednesday, April 22, 2026
நாம் செய்ய கூடாத செயல்கள்!
Tuesday, April 21, 2026
தேர்ந்தெடுக்கும் திறன்!
*தெரு நாய் ஒன்றை சிறிது நேரம் ஊன்றி கவனித்தேன். அது உறங்குவதற்கு தேர்ந்தெடுக்கும் இடங்களே ஆபத்து நிறைந்தவைகளாகவே இருந்தன.*
"அரசு வாத்தியார் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி".
என் பேரு தமிழரசன். ஊருக்கே நான் ‘அரசு வாத்தியார்’. அரசு பள்ளிக்கூடத்துல தமிழ் வாத்தியார். 35 வருஷ சர்வீஸ். கல்யாணம் ஆகல. ஏன் தெரியுமா? என் பசங்க தான் என் குடும்பம் 😊
1989-ல வேலைக்கு சேர்ந்தேன். கிராமத்து பள்ளிக்கூடம். ஓலை கூரை. 40 பசங்க. செருப்பு இல்ல. சீருடை கிழிசல். சோத்துக்கு வழி இல்ல. ஆனா கண்ணுல கனவு இருந்துச்சு. "சார், நான் போலீஸ் ஆவேன்", "நான் டாக்டர்", "நான் கலெக்டர்". கேட்கும் போதே நெஞ்சு நிறையும்.
சம்பளம் 1200 ரூபாய். அதுல 800 ரூபாய்க்கு பசங்களுக்கு நோட்டு, பேனா, சாக்ஸ் வாங்குவேன். மதியம் சத்துணவு பத்தலன்னா என் வீட்டுல இருந்து தயிர் சாதம் கொண்டு வந்து கொடுப்பேன். "சார் நீங்க சாப்பிடலையா?"னு கேப்பாங்க. "நீங்க சாப்பிடுறத பார்த்தாலே எனக்கு வயிறு நிறையும்"னு சொல்வேன்.
என் கிட்ட படிச்ச பையன் பேரு முத்து. ரொம்ப சுட்டி. ஆனா படிப்புல புலி. "சார், நான் ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணி உங்கள கார்ல கூட்டிட்டு போவேன்"னு சொல்வான். நான் சிரிப்பேன். "முதல்ல 10-வது பாஸ் பண்ணுடா"னு.
10-வது ரிசல்ட். முத்து ஸ்கூல் ஃபர்ஸ்ட். ஆனா +1 சேர்க்க வழியில்ல. அப்பா குடிகாரன். "படிப்பெல்லாம் வேணாம். மாடு மேய்க்க போ"னு அடிச்சாரு. முத்து ராத்திரி 12 மணிக்கு என் வீட்டு கதவை தட்டினான். கண்ணெல்லாம் வீங்கி. "சார், என்னால படிக்காம இருக்க முடியாது சார்"னு அழுதான்.
அன்னைக்கு முடிவு பண்ணினேன். இவன படிக்க வைக்கணும். என் கல்யாணத்துக்காக சேர்த்து வச்சிருந்த 50,000 ரூபாய எடுத்தேன். அவன டவுன் ஸ்கூல்ல சேர்த்தேன். ஹாஸ்டல் ஃபீஸ் நான் கட்டினேன். மாசா மாசம் மணியார்டர் அனுப்பினேன்.
"சார், எதுக்கு எனக்காக இவ்வளவு பண்றீங்க?" லெட்டர் போட்டான்.
"நீ கலெக்டர் ஆனா தான்டா என் சம்பளத்துக்கு மரியாதை"னு பதில் எழுதினேன் 😊
12 வருஷம் ஓடிடுச்சு. நான் ரிடையர் ஆகிட்டேன். யாருக்கும் சொல்லல. சின்ன வாடகை வீடு. பென்ஷன் 18,000. பாதி காசுல இப்பவும் ஸ்கூல் பசங்களுக்கு புக் வாங்கி கொடுப்பேன். தனியா தான் இருக்கேன். யாரும் இல்ல.
கடந்த மாசம். காலைல 6 மணி. வீட்டு வாசல்ல 3 கார் வந்து நின்னுச்சு. காக்கி சட்டை போட்ட போலீஸ் இறங்கினாங்க. பயந்துட்டேன். "என்ன ஆச்சு?"னு.
கார்ல இருந்து ஒருத்தர் இறங்கினாரு. வெள்ளை வேட்டி சட்டை. கம்பீரம். நேரா வந்து என் கால்ல விழுந்தாரு. "சார்"னு. தூக்கி நிறுத்தினேன். யாருன்னு தெரியல. "தம்பி யாருப்பா நீ?" அவர் கண்ணுல தண்ணி. "சார், என்ன தெரியலையா? நான் தான் சார் முத்து. உங்க முத்து."
உறைஞ்சு போய்டேன். என் முத்து. கிழிஞ்ச டவுசரோட வந்த பையன். இன்னைக்கு கலெக்டர். மாவட்ட ஆட்சியர். நம்ப முடியல.
"சார், 12 வருஷம் முன்னாடி நீங்க சொன்னீங்க. கலெக்டர் ஆகி கார்ல கூட்டிட்டு போவேன்னு. இன்னைக்கு வந்திருக்கேன் சார். ஏறுங்க"னான்.
ஊரே திரண்டு வந்துடுச்சு. நான் அழுதேன். 35 வருஷமா அழுததில்ல. அன்னைக்கு அழுதேன் 😭
கார்ல ஏத்திக்கிட்டு போனான். எங்க தெரியுமா? நான் வேலை பார்த்த அதே ஓலை கூரை பள்ளிக்கூடத்துக்கு. இப்ப அது 3 மாடி கட்டிடம். பேரு என்ன தெரியுமா? "அரசு வாத்தியார் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி".
உள்ள போனேன். 1000 பசங்க. எல்லாரும் எழுந்து நின்னாங்க. "வணக்கம் ஐயா"னு. முத்து மைக் பிடிச்சான்.
"இவர் தான் என் வாத்தியார். இவர் இல்லனா நான் இல்ல. இன்னைக்கு இந்த மாவட்டத்துல ஒரு பையன் கூட படிக்காம இருக்க கூடாது. அதுக்கு என் சொந்த சம்பளத்துல இருந்து 50 லட்சம் நிதி. இதுக்கு பேரு 'அரசு வாத்தியார் கல்வி அறக்கட்டளை'."
நான் பேச முடியாம நின்னேன். பசங்க எல்லாரும் ஓடி வந்து என் கால்ல விழுந்தாங்க. "தாத்தா"னு.
சாயங்காலம் முத்து என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போனான். பெரிய பங்களா. "இனி இது தான் உங்க வீடு சார். நீங்க தனியா இருக்க கூடாது"னான்.
"வேணாம் தம்பி. எனக்கு என் வாடகை வீடு போதும்."
"அப்போ நானும் உங்க கூட அங்க வந்து இருக்கேன்"னான் பிடிவாதமா.
இன்னைக்கு என் வாடகை வீட்டுல நான், முத்து, அவன் மனைவி, 2 குழந்தைங்க. காலைல எழுந்தா "தாத்தா காபி"னு பேரன் கொண்டு வருவான்.
35 வருஷம் நான் விதைச்ச விதை. இன்னைக்கு மரமா நிக்குது. நிழல் கொடுக்குது. கனி கொடுக்குது 💙
கல்யாணம் பண்ணலனு வருத்தப்பட்டேன். இன்னைக்கு 1000 பிள்ளைங்க என்ன "ஐயா"னு கூப்பிடுது. ஒரு கலெக்டர் என்ன "அப்பா"னு கூப்பிடுறான்.
வாத்தியார் வேலை சம்பளத்துக்கான வேலை இல்ல. அது சமூகத்துக்கான சேவை. நீ போடுற பிச்சை இல்ல. நீ கொடுக்குற பிச்சை தான் நாளைக்கு உனக்கு சோறு போடும்.
நீயும் யாருக்காவது விளக்கேத்து. அந்த வெளிச்சம் ஒருநாள் உன் வீட்டுக்கே வழி காட்டும் 🚀😊 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பந்திகளில்தான் பின்னால் வரிசைக்கட்டி நிற்கும் அவலம் இருக்கிறது!
அசைவ உணவுகள் இலைகளில் வரிசைக்கட்டும் பந்திகளில்தான் பின்னால் வரிசைக்கட்டி நிற்கும் அவலம் இருக்கிறது. சைவபந்திகளில் முந்திக்கொள்வார்களேத் ...
-
Old Age Homes Madurai Christian Seva Sangam Trust kennet garden, Alagapan nagar, Paandiyan nagar Madurai Cell :098430 52242 ...
-
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர...
-
நான் இறந்து விட்டேனா! இறைவா எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு.. please காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித்தாளை எட...


