Total Pageviews

Friday, April 24, 2026

உயிர் உடலை விட்டு பிரியும் 11 வாசல்கள்!

உடலை விட்டு உயிர் பிரியும் 11 வாசல்கள்!


மரணம் என்பது மீளா துயில். அவ்வளவுதான். உங்கள் உடம்பு எதோ ஒரு காரணத்திற்காக செயல் இழந்துவிட்டது. 

அவ்வளவுதான் இப்போது சொல்லுங்கள் உயிர் என்பது என்ன. இப்போது நீங்கள் உயிரோட இருக்கிறீர்கள். ஆகவே உங்கள் உயிர் உங்கள் உடம்பில் எங்கே இருக்கிறது.

மனிதன் மரணிப்பது என்பது சுவாசம் இல்லாத காரணத்தை வைத்து தான் உறுதி செய்யப்படுகிறது. ஆகவே சுவாசம் முதலில் நின்றவுடன் உடலுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவானது குறைகிறது. இதன் காரணமாக உறுப்புகளுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதில்லை. 

இதயத்தின் வேலையானது ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்துவது மட்டுமல்லாமல் ரத்தத்தோடு சேர்த்து ஆக்சிஜனையும் உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அனுப்புகிறது. இவ்வாறு ஆக்சிஜன் குறையும் பட்சத்தில் உறுப்புகளின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. எனவே முதலில் நுரையீரல் பாதிப்பு அடையும் பின்னர் இதன் மூலம் ரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் செல்ல முடியாத காரணத்தினால் பின் ஒவ்வொரு உறுப்பாக செயல் இழக்க ஆரம்பிக்கும் மூளையின் செயல்பாட்டிற்கு முக்கியமாக ஆக்சிஜன் அவசியமாகிறது.

மூளையில் ஆக்சிஜனின் பற்றாக்குறை ஏற்படும்போது மூளையின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக மற்ற உறுப்புகளுக்கு கட்டளைகளை தொடர்ந்து அனுப்ப முடிவதில்லை. 

மேலும் மற்ற உறுப்புகள் ஒவ்வொன்றும் ஆக்சிஜனை எரிசக்தியாக பயன்படுத்திக் கொள்வதால் அவைகளின் செயல்பாடுகளும் முடிவை எட்டுகின்றன. எனவே முதலில் நுரையீரல், மூளை, இதயம் போன்றவை செயல் இழந்த உடன் உடலின் ஒவ்வொரு உறுப்புகளாக தொடர்ந்து கல்லீரல் கணையம் போன்ற உறுப்புகளும் மேலும் உள் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்குகிறது.

 1. பழி பாவம் செய்தவர்களுக்கு மலத்துடன் மல                  வாசல் வழியாக உயிர்  பிரியும்.

இவை நேரே நரகத்திற்கு செல்லும் திரும்ப நாளாகும் வந்தாலும் நல்ல பிறவி கிடையாது.

2. பாவஞ் செய்தவர்களுக்கு நீர்வாயில் வழியாக உயிர் பிரியும். இந்த உயிர்கள் மறுபிறப்பில் காமியாய் திரியும்.

3. பாவம் நிறையவும், புண்ணியம் குறைவாகவும் செய்த உயிர்கள் நாபி வழியே பிரியும்.

4. பாவம் புண்ணியம் சமமாக செய்தவர்களின் உயிர்கள் வாய் வழியாகப் பிரியும்.

5, 6. இடது, வலது நாசிகள் வழிய தனித்தனியாக பிரிந்த உயிர்கள் அதிக பாவம் செய்யாத உயிர்கள்.

7, 8. இடது, வலது செவிகள் வழியாக பிரிந்த உயிர்கள் மிகவும் சிறிதளவே பாவம் செய்த உயிர்கள். இவை மறுபிறப்பில் கேள்விச் செல்வம் உடையதாக பிறக்கும். முக்தி தேடி முயற்சிக்கும்.

9,10. இடது, வலது கண்கள் வழியாக பிரிந்த உயிர்கள் மிகவும் புண்ணியம் செய்த உயிர்கள். இவை மறுபிறப்பில் கல்வி-செல்வம் முதலியன பெற்று உயர்வுடன் வாழும். இவைகளும் முக்தி தேடி முயற்சிக்கும். பழி பாவத்தைக் கண்டு அஞ்சி வாழும். குருபக்தி கடவுள் பக்தியுடன் வாழும்.

11. சிவயோக நெறியில் இருக்கும் உயிர்கள் பிராரப்த கர்மங்களை தனக்கு கொடுக்கப்பட்ட உடல் கொண்டு கழித்து, பல காலங்கலாகப் பழகிய யோகப் பயிற்சியைின் துணை கொண்டு சுழுமுனை நாடிவழியாக பிராணனை மேல் எழுப்பி, பிரமாந்திர வழியை திறந்து கபால வழியாக ஔிமயமாக உச்சி வாசலூடாக செல்லும். அவ்வாறு சென்ற உயிர் மீண்டும் பிறவாது.

- அகத்தியரின் கர்ம காண்டம் நூலில் இருந்து.

நன்றி

No comments:

Post a Comment

பொண்ணுங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே அவசியம் கத்துக்கொடுக்க வேண்டியது !

கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு சில விஷயங்கள பொண்ணுங்களுக்கு கத்துக்கொடுக்க வேண்டியது அவசியம்!!  தினமும் வீட்ட கூட்டு!!  பாத்திரத்த சுத்தமா கழ...