உடல் உபாதைகள் நன்மைகளே. காய்ச்சல் என்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஒரு நிகழ்வு. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட நபரை ஓய்வில் இருக்க சொல்லுகிறது உடல்.
தலைவலி வருவதற்கான காரணங்கள் - அதிகம் உழைப்பு; வெயிலில் அலைதல்; மலச்சிக்கல் போன்றவை - இவையெல்லாம் நமக்கு உடல் தரும் எச்சரிக்கைகள். இவற்றை உணர்ந்து அதற்கு சரியான உணவு முறை போன்றவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டியது நமது கடமை.
வாயு தொந்தரவு - நமது உடலில் 60 விதமான வாயு நிலைகள் உள்ளன. தனி தனி கடமைகளை அவை செய்கின்றன. இருந்தாலும், அவை சமநிலையில் இருக்கவேண்டும். உண்ட உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தாலும், வெளியேறவேண்டிய கழிவுகள் வெளியேராகாமல் இருந்தாலும், வாயு உற்பத்தியாகும். அனைவருக்கும் நடக்கும் நிகழுவு இது.
சரியாக மலம் கழியவில்லை என்றால், கழிவுகள் வாயுக்களை வெளியேற்றும். வாயு அதிகம் நாற்றம் எடுக்கும் நேரத்தில் டாய்லெட் சென்றால், மலம் கழியும். இதற்காக நாம் காத்திருக்கத்தேவையில்லை. வாயு தொந்தரவு என்றால், மருந்து வகைகளை எடுப்பதால் நன்மை இல்லை.
01. நார் சத்து மிகுந்த வாழைப்பழம், பப்பாளி, கொய்யா போன்ற பழங்களை இரவு உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக உண்ணும் வழக்கத்தை கொண்டு வாருங்கள். மறுநாள் காலையில் இயல்பாக மலம் வெளியேறும்.
02. அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். குறிப்பாக வெந்நீர் குடிக்கவேண்டும். இரவு உறங்கப்போகும் முன்பாக வெந்நீர் குடித்து விட்டு உறங்க செல்வது நல்லது.
03. நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகள் செய்வதால், உள்ளுறுப்புகள் நெகிழ்வடையும். இதன் காரணமாக குடல் விரிவடைந்து மலம் வெளியேறும்.
தீராத மலச்சிக்கல் இருந்தால், மனதை சமன்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். மனச்சிக்கல் = மலச்சிக்கல்.
04. குடல் இறக்கம் உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் உருவாகும். இதற்கு மேல் சொன்ன வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.
05. கண்டிப்பாக ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலை மலம் கழித்துவிடவேண்டும். வயிறு காலியாக இருப்பது போன்ற உணர்வு வந்தாலே வாயு தொந்தரவு நீங்குகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment