Total Pageviews

Sunday, February 7, 2016

அல்சர் பிரச்சனைக்கான சில எளிய கிராமத்து வைத்தியங்கள்!


அல்சர் என்பது இரைப்பையின் சுவற்றில் ஏற்படும் புண்கள். இந்த புண்கள் உணவைத் தவிர்த்து வருவோருக்கு வரும். எப்படியெனில் சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பதால், இரைப்பையில் உள்ள அமிலத்தின் அளவு அதிகரித்து, இரைப்பையின் சுவற்றில் புண்கள் உண்டாகி, அதன் மூலம் கடுமையான வயிற்று வலியை சந்திக்க நேரிடும்.

உங்களுக்கு அல்சர் தீவிரமாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!!

வயிற்று அல்சர் அதிகமாக வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்தாலும் வரும். இந்த அல்சர் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், அதனால் தீவிரமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

அல்சர் இருந்தால் எப்படி குணப்படுத்துவது?

உங்களுக்கு அல்சர் உள்ளதா? அதை சரிசெய்ய கிராமப்புறங்களில் ஒருசில வைத்தியங்கள் பின்பற்றப்படும். இந்த வைத்தியங்கள் மிகவும் எளிமையானவை. இங்கு அல்சர் பிரச்சனைக்கான சில எளிய கிராமத்து வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அல்சர் இருக்குதா? கவனமா இருங்க புற்றுநோய் வந்துவிடும்...

தேங்காய் பால்

அல்சர் இருப்பவர்கள், தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டு வர, விரைவில் வயிற்றில் உள்ள புண் குணமாகும்.

பிரட் மற்றும் வெண்ணெய்

காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் உட்கொண்டு வர, அல்சர் மூலம் ஏற்படும் வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஆப்பிள் ஜூஸ்

தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜூஸ் குடித்து வருவதன் மூலம், அல்சரால் ஏற்படும் கடுமையான வலியைக் குறைக்கலாம்.

வேப்பிலை

கொளுந்து வேப்பிலையை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வர, அல்சர் மட்டுமின்றி, வயிற்று பிரச்சனைகளும் நீங்கும்.

முட்டைக்கோஸ்

அல்சர் உள்ளவர்கள், தினமும் முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால், விரைவில் அல்சரை குணமாக்கலாம்.

அகத்திக்கீரை

அல்சருக்கு அகத்திக்கீரை நல்லது. தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சமைத்து உட்கொண்டு வர அல்சர் சீக்கிரம் நீங்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு என்றதும் சந்தோஷப்பட வேண்டாம். உருளைக்கிழங்கை வேக வைக்காமல் பச்சையாக உட்கொண்டால் அல்சர் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

வெங்காயம்

அல்சரால் கடுமையான வயிற்று வலியை சந்தித்தால், பச்சை வெங்காயத்தை உப்பில் தொட்டு உட்கொள்ளுங்கள். இதன் மூலம் அல்சரால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் கூட அல்சருக்கு நல்ல நிவாரணம் தரும். அதற்கு பீட்ரூட்டை ஜூஸ் செய்து தேன் சேர்த்து கலந்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.

பாகற்காய்

பாகற்காயை அல்சர் இருப்பவர்கள் தினமும் உணவில் சேர்த்து வர, விரைவில் அல்சரில் இருந்து விடுபடலாம். அதிலும் பாகற்காயை துண்டுகளாக்கி நன்கு காய வைத்து பொடி செய்து, தினமும் 1 டீஸ்பூன் பாகற்காய் பொடியை சுடுநீரில் கலந்து குடித்து வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

நெல்லிக்காய்

வயிற்று அல்சருக்கு மற்றொரு சிறப்பான தீர்வு நெல்லிக்காய். அதிலும் நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து கலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மணத்தக்காளி கீரை

மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் அல்சருக்கு மிகவும் நல்லது. எனவே அந்த கீரையை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு 3 முறை உட்கொண்டு வர விரைவில் அல்சர் குணமாகும்.

Thanks to Dhivya Dhana

உணவே மருந்தாக இருக்க வேண்டும் !



உணவு பழக்கம்" பழமொழி வடிவில்

காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.


* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே


* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா


* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.


* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல


* தன் காயம் காக்க வெங்காயம் போதும்


* வாழை வாழ வைக்கும்


* அவசர சோறு ஆபத்து


* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்


* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு


* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை


*இருமலை போக்கும் வெந்தயக் கீரை


* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.


* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி


* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்


* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை


* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை


* சித்தம் தெளிய வில்வம்


* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி


* சூட்டை தணிக்க கருணை கிழங்கு


* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்


* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு


* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை


* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி


* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு


* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி


* வாத நோய் தடுக்க அரைக் கீரை


* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்


* பருமன் குறைய முட்டைக்கோஸ்


* பித்தம் தணிக்க நெல்லிக்காய்


உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு 


உணவாகும் நிலைமை உருவாகும் ”.

நலம் உடன் வாழ்வோம்


Thanks to Neelavathy Neela

செல் போன் வெடித்து சிதறாமல் இருக்க செய்ய வேண்டியது என்ன?


♈சார்ஜ் போட்டபடி பேசியதால்,போன் வெடித்து சிறுவனின் கண்கள் பாதிக்கப்பட்டன.

♈சார்ஜ் போட்டபடி பேசியதால், போன் வெடித்து இளைஞர் உயிரிழப்பு

♈இரவில் சார்ஜ் போட்ட போன் வெடித்து குடிசை தீப்பிடித்து இருவர் பலி

♈இது போல் நாம் அடிக்கடி பல செய்திகளை பார்த்திருப்போம்.

♈ஆனால் நாம் முறையாக செல்போன் பற்றிய தகவல்கள் தெரியாதால் தான் இது போல் சம்பவங்கள் தற்போது அடிக்கடி
நடக்கின்றன.

♈சமீப காலங்களாக மொபைல் போன் வெடித்து சிதறுவது வாடிக்கையாக அரங்கேறி வருகின்றது.

♈உலகம் முழுவதும் பலரது மொபைல் போன்கள் அடிக்கடி வெடிக்கின்றது,

♈சில இடங்களில் போன் வெடித்து பலருக்கும் அதிகளவு காயங்கள் ஏற்படுகின்றன.

♈மொபைல் போன்கள் வெடிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்

மொபைல் போன் வெடித்து சிதறாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் :

1⃣எப்பொழுதும் ஒரிஜினல் பேட்டரிக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

2⃣மொபைல் போன் சார்ஜரும் ஒரிஜினலாக தான் இருக்க வேண்டும்,

3⃣போலி சார்ஜர்கள் போனிற்கு அதிகளவில் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் இதனால் சில நேரங்களில் போன் வெடிக்கும்.

4⃣மொபைல் போன், பேட்டரி மற்றும் சார்ஜர் என அனைத்தும் ஒரே நிறுவனத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும்.

5⃣போன் சார்ஜரில் இருக்கும் போது அழைப்புகளை மேற்கொள்ள கூடாது.

6⃣ போன் ஈரமாக இருக்கும் போது உடனடியாக சார்ஜ் செய்ய கூடாது

7⃣பேட்டரி சேதமடைந்தால் உடனடியாக அதனை மாற்ற வேண்டும்.

8⃣போன் பேட்டரி சார்ஜ் செய்து முடித்த பின் உடனடியாக போனினை சார்ஜரில் இருந்து எடுத்து விட வேண்டும்.

9⃣பேட்டரி அதிகளவு சூடாக அனுமதிக்காதீர்கள்

சார்ஜ் போட்டப்படி கேம் விளையாடுவது, படம் பார்ப்பது போன்றவைகள் செய்யாதீர்கள்.

1⃣1⃣ஈரக்கையுடன் மொபைல் போன் உபயோகிக்காதீர்கள்

1⃣2⃣கழிவறை மற்றும் குளியல் அறைகளில் மொபைல் போன் பயன்படுத்தாதீர்கள்.

1⃣3⃣மொபைல் போன் சார்ஜ்ஜில் இருக்கும் போது தலையணை க்கு கீழே வைக்க கூடாது ஏனெனில் சூடு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

1⃣4⃣மழைகாலத்தில் வெளியே செல்லும் போது
செல்போன் ஈரம் ஆகாமல் பார்த்து கொள்ளுங்கள்.

1⃣5⃣சார்ஜ் போட்டு கேம் விளையாட யாரும் முயற்சிக்க கூடாது அப்படி செய்தால் விபரீதம் ஏற்படும் என்று நமக்கு தெரிந்தும் தொடர்ந்து பலர் இதுபோன்ற தவறுகளை செய்வதால் விபத்து ஏற்படுகிறது.

1⃣6⃣ சிறுவர்களை முடிந்தவரை சார்ஜ் ஏறும்போது போனை எடுக்க அனுமதிக்க வேண்டாம் என நாம் சொல்லி வைக்கவேண்டும்.

1⃣7⃣ செல்போன் ஈரம் ஆகிவிட்டால் உடனடியாக கடையில் கொடுத்து சரி செய்து விடுங்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை சரியாக பின்பற்றுங்கள்.

அதிகமாக போன்கள் வெடித்து சிதற காரணமாக இருப்பது நீங்கள் விலைகம்மியாக இருக்கு என்று வாங்கும் போலியான தரமற்ற சாதனங்கள் தான்,

எனவே விலைகுறைவாக உள்ளதே என்று கண்ட பொருட்களை வாங்கி உங்கள் உயிரோடும் உங்கள் குடும்பத்தினரின் உயிரோடும் விளையாடாதீர்கள! ் விலை குறைவான போலியான பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

Thanks to Sridhar parasuram

Thursday, February 4, 2016

ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்!!!

ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்!!!

குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பில் உள்ள துவாரத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும். இத்தகைய குடலிறக்கம் தொப்புள், அடிவயிறு போன்ற இடங்களில் உள்ள தசைப்பகுதிகளில் ஏற்படக்கூடியது. மேலும் இந்த பிரச்சனை சிறுவர் முதல் பெரியவர் வரை என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்த ஹெர்னியா என்னும் குடலியக்கம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன.

மேலும் குடலிறக்கம் வந்தால், வயிற்றில் புடைத்த நிலையில் கட்டி உண்டாவதோடு, கடுமையான வலியையும் சந்திக்க நேரிடும். சில நேரங்களில் இந்த புடைப்பால் குடலானது நகர முடியாமல் மாட்டிக் கொண்டு, குடல் அடைப்பு அல்லது குடலானது அழுகிப் போகும் வாய்ப்பும் உள்ளது. இந்த ஹெர்னியா என்னும் குடலிறக்கத்தில் நிறைய வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். இத்தகைய ஹெர்னியா இருந்தால், உடல் எடை அதிகரிப்பது, கல்லீரல் நோய், தொடர்ச்சியான இருமல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.

இப்போது அந்த குடலிறக்கத்தை சரிசெய்யும் சில இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போம்.

ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்!!!

அதிமதுரம்

குடலிறக்கத்திற்கு அதிமதுரம் ஒரு சிறந்த நிவாரணி. அதற்கு ஒரு ஸ்பூன் அதிமதுர பொடியை 1/2 கப் பாலில் போட்டு கலந்து, வாரத்திற்கு ஒரு முறை குடிக்க வேண்டும். இதனால் அது பாதிப்படைந்த பகுதியில் உள்ள புடைப்பை நீக்கிவிடும்.
இஞ்சி

இஞ்சி கூட குடலிறக்கத்தை சரிசெய்யப் பயன்படும். அதிலும் குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த, ஒரு கப் இஞ்சி டீயை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இருப்பினும் இதனை அளவாக குடிப்பது நல்லது. இல்லாவிட்டதது அது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

சீமைச் சாமந்தி டீ

வெதுவெதுப்பான டீயை, அதிலும் சீமைச்சாமந்தி டீயை அவ்வப்போது குடித்து வந்தால், குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இல்லாவிட்டால் ப்ளாக் டீ குடித்தாலும், ஹெர்னியாவை பிரச்சனையை சரிசெய்யலாம்.

மோர்

ஹெர்னியா இருந்தால், ஒரு நாளைக்கு மூன்று முமுறை மோரைக் குடித்து வந்தால், நிச்சயம் குடலியக்கத்தால் ஏற்படும் வலியை தடுக்கலாம். இது டீ பிடிக்காதவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக விளங்கும்.

தண்ணீர்

ஹெர்னியா பிரச்சனை இருப்பவர்கள், அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருக வேண்டும். இதனால் குடலிறக்கத்தால் ஏற்படும் வலி குறைந்துவிடும்.

Thanks to Neelavathi Neela !

Thursday, January 21, 2016

கல்வித்தகுதி படிவம் -Resume

போட்டி நிறைந்த இந்த வேலை உலகில், வேலை தருபவர்களின் கவனம் ஈர்க்கும் வகையில் திறமைகள் பெற்றிருப்பது முக்கியமானதாகும். அதற்கு என்ன வழி? இதோ சில டிப்ஸ்... 



நேர்த்தியான கல்வித்தகுதி படிவம் -Resume : 

உங்களைப் பற்றிய சுய விவர குறிப்பான ‘ரெஸ்யூம்’ மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறை, நிதித்துறை, மார்க்கெட்டிங் துறை என ஒவ்வொரு துறைக்கும் ஏற்ற வகையில் பயோடேட்டா தயார் செய்யப்பட வேண்டும். கலைப் படிப்புகளை முடித்தவர்கள் தாங்கள் நுழைய முயற்சிக்கும் துறைக்கு என்னென்ன திறமைகள் அவசியமோ, அதை முன்னிலைப்படுத்தி சுயவிவரப் பட்டியல் தயாரிக்க வேண்டும். எடுத்ததும் பெயர், முகவரி, பள்ளிப்படிப்பு என்று வழக்கமான பாணியில் பட்டியல் இருக்க வேண்டியது இல்லை. உங்களது தனித்திறமைகள் உடனே அதிகாரியின் கவனம் ஈர்க்கும் வகையில் தனியே தெரியும்படி, ரெஸ்யூம் தயாரிக்கப்பட வேண்டும். 

காலத்திற்கு ஏற்றபடி...: 

இப்போதெல்லாம் வேலை தேடுபவர்களின் திறமைகளை, கணினியின் மூலமாக தரம் பிரிக்கிறார்கள். அதாவது நீங்கள் கல்வித்தகுதி படிவம் - Resume மில் குறிப்பிட்டுள்ள திறமைகள், தங்களுக்கு ஏற்றதாக இருக்கிறதா? என்பதை அந்த நிறுவனத்திற்கான கணினியே அலசி ஆராய்ந்து தகுதியானவர்களின் பட்டியலை தனியே பிரித்து காண்பித்துவிடும். எனவே நேர்காணலில் திறமையை நிரூபிக்கலாம் என காத்துக் கொண்டிராமல், ரெஸ்யூமிலேயே எல்லா திறமைகளையும் சுருக்கமாகவும், தெளிவாகவும் குறிப்பிட்டுவிடுங்கள். 

இணைய உலகில்: 

வலைத்தளங்கள் தற்காலத்திற்கான, உலகளாவிய முன்னணி வேலைத் தொடர்பு தளமாக விளங்குகின்றன. இவை வேலைதேடுபவர் மற்றும் வேலை வழங்குபவர்களுக்கான இணைப்பு பாலமாக இருப்பதால், பல்வேறு நிறுவனங்கள், தங்கள் பணிக்கான தகுதி உள்ளவர்களை ‘வலைத்தளத்தின் எளிமையாக தனியே தேடி கண்டுபிடித்துவிடுகிறார்கள். எனவே வேலை தேடுபவர்கள், அத்தகைய இணைய தளங்களில் தங்களது விவரங்களை பதிந்து வைப்பதுடன் நில்லாமல் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகும் தகவல்களை கவனித்து வர வேண்டியது அவசியம். இதேபோல ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு இணையதளங்கள், வேலைதேடுனரின் பட்டியல்களையும், வேலை வழங்குபவர்களின் பட்டியலையும் ஒருங்கிணைத்து சேவையாற்றுகின்றன. இவற்றிலும் திறமைகளை, முக்கியமான விவரங்களை பதிவதன் மூலம், வேலை வழங்குபவரின் கவனத்தை ஈர்க்கலாம். 

முன்னுரை கடிதம்:

கல்வித்தகுதி படிவம் -Resume உங்களது அனைத்து விவரங்களையும் பட்டியலிடலாம். ஆனால் சிறந்த எழுத்தாற்றலுடன், வலிமையாக உருவாக்கப்பட்ட அறிமுகக் கடிதம் வேலை தருபவரின் கவனத்தை எளிதில் கவர்ந்துவிடும். கடிதம் உங்கள் மதிப்பை உயர்த்துவதாக அமைய வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற பொருத்தமான நபர் நீங்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 

எச்.ஆர்.(மனிதவளம்): 

அலுவலக நிர்வாகத்திற்கு கல்வித்தகுதி படிவம் அனுப்பி, வேலைக்கான அழைப்பை பெற்றாலும். அந்த நிறுவனத்தின் எச்.ஆர். பிரிவுக்கு தனியே ஒரு கடிதம் அனுப்பி வைப்பது சிறந்ததாகும். 

ஈர்க்கும் இமெயில் முகவரி: 

எல்லா கம்பெனிகளுக்கும் ஒரே இமெயில் முகவரியை கொடுப்பது உங்களுக்கு எளிதாக தோன்றலாம். ஆனால் அவர்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் கவர்ச்சியான இமெயில் முகவரி வைத்திருப்பது நல்லது. உதாரணமாக உங்கள் பெயரையும், அந்த நிறுவனத்தின் பெயரையும் இணைத்து ஒரு இமெயில் முகவரி உருவாக்கி, அந்த நிறுவனத்திற்கான விண்ணப்பத்துடன் இணைத்து இருந்தால் அதுவே அதிகாரிகளின் கவனத்தை கவர்ந்துவிடும். தகவல் தொடர்புக்கும் எளிதாக இருக்கும். மெயில்கள் வந்த உடனே, எந்த நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது என்பதை அறியலாம். 

விண்ணப்பங்களை அனுப்ப...: 

விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பும்போது அந்த நிறுவனங்களின் நிபந்தனைகளை கவனியுங்கள். தவறாமல் சரியான நேரத்திற்கு பட்டுவாடா செய்யும் முன்னணி நிறுவனங்களின் வழியாக விண்ணப்பங்களை அனுப்பி வையுங்கள்.

தற்கொலை முயற்சி - காரணங்கள்


தற்கொலைக்கு முயற்சிக்கும் நபர்களில் மூன்றில் ஒரு பங்கினர், வளர்இளம் பருவத்தினர் என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம். புள்ளிவிவரங்களின்படி தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக்கொள்வதில் ஆண்களும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதில் பெண்களும் முதலிடம் பெறுகின்றனர்.  

வளர்இளம் பருவத்தினரின் பெரும்பாலான தற்கொலை முயற்சிகளுக்கு, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளே முக்கிய காரணம். பெற்றோர் திட்டுவதால் உணர்ச்சிவசப்பட்டுவிடுவது, தாங்கள் கேட்பதை பெற்றோர் வாங்கித்தராத காரணங்கள், கருத்து வேறுபாடு என பல காரணங்கள் இருக்கலாம். அதிலும் வளர்இளம் பருவத்தில் வீட்டில் உள்ளவர்கள் சொல்லும் அறிவுரைகள், எட்டிக்காயாகக் கசப்பதால் எளிதில் வாக்குவாதம் வெடித்துவிடும். பின்னர் அது முற்றி, தற்கொலை முயற்சியாக மாறிவிடும். 

நண்பர்களுடன் ஏற்படும் மனத்தாங்கல், ஒரு தலைக்காதல், காதல் தோல்வி, படிப்பில் நாட்டமின்மை, தேர்வில் தோல்வி, வாழ்க்கையை வெறுமையாக உணர்வது போன்ற தனிப்பட்ட காரணங்களும் தற்கொலையில் முடியலாம். எளிதில் உணர்ச்சிவசப்படுதல், அவசரப்பட்டு முடிவெடுக்கும் தன்மை, ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமை போன்ற குணரீதியான காரணங்களும் உண்டு. விடலைப்பருவத்தினரின் தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில், மனநோய்கள் முக்கிய பங்குவகிக்கின்றன.

ஆனால், ஒருவர் தற்கொலைக்கு முயற்சிக்கும்வரை இந்த மனநோய் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதே உண்மை. தற்கொலை முயற்சி மனநோயின் முதல் அறிகுறியாகக்கூட இருக்கலாம் அல்லது மனநோய் பாதிப்பால் நிகழலாம். மன அழுத்த (Depression) நோயின் முக்கிய அறிகுறி, காரணமே இல்லாமல் தற்கொலை எண்ணங்கள் உருவாவதுதான். வளர்இளம் பருவத்தினரின் மரணங்களுக்கு முக்கிய காரணங்களுள் இதுவும் ஒன்று.

Thanks to Malaimalar.com

Monday, January 11, 2016

100 க்கு 100




1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.



2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.



3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.



4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட,புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.



5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.



6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.எலும்புகள்



7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.



8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.



9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.



பெண்களுக்காக…



10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.



11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.பெண்



12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.



13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.



கர்ப்பக் கால கவனிப்பு..!



14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…!



15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.



16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.கர்ப்பம்



17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.



18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.



19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.



20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான்இப்படி என்று சொல்வது தவறு.



21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.



22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.



23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.



24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.



25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.



26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.



27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். 
விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.



28. தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.



29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.



30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.



31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.உணவே மருந்து….!



32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!



33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.



உணவே மருந்து



34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.




36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.



37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.



38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.



39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.



40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.



41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.



42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.



43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்



44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.



45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.



46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.



47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.மருந்தே வேண்டாம்….!




49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.



50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.
மருந்தே வேண்டாம்




51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.



52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது.



லப்… டப்..!



53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.



54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.



55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.



56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.இதயம்



57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

கிட்னியைக் கவனியுங்கள்….



58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம்மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.



59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!



60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.



61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.
பல்லுக்கு உறுதி…!




62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.



63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.



64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.



65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.



கிட்னி



66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.



67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது.அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.



68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.



69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.



70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.



71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.



72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.



73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.



74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்



75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.



ஜெனரல் வார்டு..!



76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.



77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.வைத்தியசாலை



78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.



79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.



80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.



81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா..? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.



82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.



83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.



84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.



85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.நில்… கவனி… செல்…!



86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.



நோயாளிகள் தங்கும் இடம்



87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குஅழைத்துச் செல்லக் கூடாது.



88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.



89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.



90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.



91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.



92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.



93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.



94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.



எச்சரிக்கை



95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்

.

96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.



97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப்பதிலாகக் கெடுதலையே தரும்.



98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்

.

99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.



100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும், ஆகவே பச்சை குத்துவதை தவிர்ப்பது சிறந்தது
...
பயனுள்ளதாக  இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Thanks to 

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...